செவ்வாய், 12 அக்டோபர், 2010

இந்தியர்கள் என்று சொல்லும பொழுது மலையாளிகள் முதலிடம் பெறுவர். தமிழர்கள் கடைசி இடம்கூடப் பெறமாட்டார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என வயலார் இரவி  இந்தியத்தின் கொள்கையைச்  சொல்லாமலே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

வெளிநாடுகளில் இந்தியர் தாக்கப்பட்டால் பொறுக்க மாட்டோம்: வயலார் ரவி
பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010,23:42 IST
மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 12,2010,00:42 IST

  பொள்ளாச்சி : ""வெளிநாடுகளில், இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்தியர்கள் தாக்கப்பட்டால், அதை இந்தியா பொறுத்து கொள்ளாது,'' என, மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறினார்.
பொள்ளாச்சியில், "ஓணோற்சவம் -10' விழா நடந்தது. இதில் மத்திய வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி பங்கேற்றார்.

பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு, அந்நாட்டு அரசும், தூதரகமும் மன்னிப்பு கேட்டுள்ளது. அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தியதில், ஆஸ்திரேலியாவுக்கு வரும் இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.அந்நாட்டு அரசும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. இந்தியாவும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

உலகின் எந்த பகுதியிலும் இந்தியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இப்பிரச்னைக்கு முக்கிய காரணம், ஓரே ஆண்டில் 50 ஆயிரம் பேர் வீதம் இரண்டு ஆண்டுகளில், ஒரு லட்சம் பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், அனைவரும் மாணவர்கள் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால், அவர்களில் 70 சதவீதம் பேருக்கு ஆங்கிலம், இந்தி என எந்த மொழியும் தெரிவதில்லை. வெளிநாடுகளில், வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனங்கள் மாணவர்கள் என்ற பெயரில் அழைத்து செல்கின்றனர். இங்கிருந்து செல்பவர்களுக்கு சரிவர பாதுகாப்பு கிடைப்பதில்லை. இந்த நிலையை தவிர்க்க, ஆஸ்திரேலிய அரசு விசா வழங்கும் முறையை கட்டுபடுத்தியுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி இந்தியர்கள் தாக்கப்பட்டால், இந்தியா அதை பொறுத்து கொள்ளாது.தமிழகம், கேரள ஆகிய இரு மாநிலங்களும் நட்புறவுடன் பழகி வருவதால், நதிநீர் பிரச்னையில் அரசியல் கட்சிகள் தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதையும், சண்டையிட்டு கொள்வதையும் நிறுத்த வேண்டும். இரு மாநிலங்களுக்கும் தண்ணீர் தேவை. இதை உணர்ந்து, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போல், இரு தரப்பிற்கும் பாதிப்பு இல்லாமல் பேசி தீர்த்து கொள்ள வேண்டும். சுமூக பேச்சின் மூலமாகவே தீர்வு ஏற்படுத்த முடியும் என்பது மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் எண்ணமாக உள்ளது.இவ்வாறு, மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக