வெள்ளி, 15 அக்டோபர், 2010

மன்மோகன் சிங்- ராஜபட்ச இன்று சந்திப்பு


புது தில்லி, அக். 14: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க தில்லி வந்துள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, பிரதமர் மன்மோகன் சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.  பிரதமர் அளிக்கும் மதிய விருந்தில் அவர் பங்கேற்கிறார். அவருடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், வெளியுறவுச் செயலர் சி.ஆர்.ஜெயசிங்கே உள்ளிட்டோரும் விருந்தில் கலந்து கொள்கின்றனர். அப்போது இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.  
கருத்துக்கள்

தமிழின அழிப்பிற்கான பாராட்டு விருந்தின் பொழுது எஞ்சிய தமிழர்களை எவ்வாறு எப்பொழுது அழிப்பது என்பது குறித்துக் கண்டிப்பாகப் பேச்சு நடைபெறும். என்றாலும் காலம் ஒரு நாள் மாறும். அப்பொழுது இனப்படுகொலைகாரர்களை எவ்வாறு தண்டிப்பது? எங்கே தண்டிப்பது என்ற பேச்சு நடைபெறும். விருந்துண்ணுபவர்கள் அப்பொழுது சிறைக்கம்பிகளுக்குள் இருப்பர்.
விரைவில் நிலைமாறும் என்ற நம்பிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2010 3:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக