வியாழன், 28 மே, 2009

சரணடைய மாட்டோம்: விடுதலைப் புலிகள்

தினமணி
First Published : 27 May 2009 02:56:28 PM IST


இலங்கை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளபடி சரணடையப் போவதில்லை என விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பொறுப்பாளர் தயா மோகன் பிபிசி தமிழோசை செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கை சண்டையில் பெருமளவு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் அருகேயுள்ள காவல் நிலையத்தில் சரணடைய வேண்டும் என அந்நாட்டு காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் குணதிலக நேற்று கேட்டுக் கொண்டார்.இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ள தயா மோகன், கிழக்கிலும் வடக்கிலும் விடுதலைப் புலிகள் இன்னும் சிறுசிறு குழுக்களாக இருப்பதாகத் தெரிவித்தார். மக்களின் தேவைக்காக அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் பங்குபெறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு இன்னும் அப்படியே உள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


1/2) சிவா கூறிய செய்தியை நானும் படித்துள்ளேன். இங்கு கவனிக்கத்தக்கது சிங்கள அரசின் நிலைப்பாடுதான். மக்களாட்சிப் பாதையில் புலிகள் திரும்புவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம எனச் சிங்கள அரசு அறிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களும் மடிந்தது போதாது என்று மேலும 100 ஆயிரம் வீரர்களை நியமித்துப் புலிகளை அடியோடு ஒழிப்போம் என்கிறது. 'சரணடைந்தாலும் சாவு' என்னும் பொழுது போரிட்டால் ' வெற்றி அல்லது வீர மரணம்' எனச் சிறப்புறலாம் அல்லவா? ஆனால், அதே நேரம் சிங்கள அரசு இலங்கையைத் தாயகமாகக் கொண்ட ஈழத் தமிழர்களுக்கும் இலங்கையை வளமாக்கிய மலையகத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் சம உரிமை அளித்து அதன் அடையாளமாக ஈழத் தமிழர் ஒருவர் நாட்டுத் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பை நல்கினால் ஆயுதம் தாங்கும் முறை தானாகவே காணாமல் போய்விடும். எனவே, சரணடையுமாறு கூக்குரலிட்டு, அவர்களைக் கொல்லத் துடிக்காமல் உடனே சம உரிமை வழங்கி, தனித்தனி ஆட்சி உரிமை கொண்ட இலங்கை-ஈழக் குடியரசுக் கூட்டமைப்பாக நாட்டை மாற்றுக! மனித நேயத்தை மலரச் செய்க! (தொடர்ச்சி காண்க)


இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 3:59:00 AM

2/2) (தொடர்ச்சி) இலங்கையும் ஈழமும் தனித்தினி உரிமைஆட்சியுடன் ஒன்று பட்டுச் செயல்பட்டால் அயல் நாடுகளுக்கு அங்கு வேலை இல்லை. போர்ச் செலவுகளைப் பெருமளவு குறைத்து ஆக்க வழிகளில் செலவழித்து திறமையான இளைஞரகளின் உழைப்பைப் பயன்படுத்தி உலகில் முதல் இடத்தைப பெற இயலும்! ஆனால், சிங்கள அரசின் இனவெளி ஒழிந்தாலதான் இவற்றிற்கு வழி பிறக்கும். அன்பான வேண்டுதலுடன்

இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 4:00:00 AM

சிவா! எப்போது மனித உரிமை கழகம் இப்படி சொன்னது? தயவு செய்து எந்த website/newspapers தேதி எல்லாம் அறிவிக்கவும். இது உண்மை என்றால் விடவே கூடாது. urgent please!

By sekaran
5/27/2009 11:57:00 PM

(North) India need more organs! They removed from all possible ones from TN tamilians(remember few years back in TN) and now they are taking from Eelam tamils! Why are the tamils' organs are in high demand? What is special? Are they cheaper or very high quality? May be they survive in harsh conditions! or may be something else?

By Joseph
5/27/2009 11:45:00 PM

Regrouping can be done in more efficient and smart ways. It is time now to wait and watch what is going on around.

By Shiva
5/27/2009 10:45:00 PM

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் இருக்கும் அப்பாவி தமிழர்களின் உண்மைநிலையைக் கண்டறிய நடுநிலையான தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகையாளர்களை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். போரில் காயமடைந்த தமிழர்களின் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புகளை வெட்டி எடுத்து அவற்றை இலங்கை அரசு வெளிநாட்டுக்கு விற்கப்பதாக மனித உரிமைக் கழகம் புகார் தெரிவித்துள்ளது. இச்செயல்களை இந்தியா கண்டிக்க வேண்டும். அவற்றை உடனடியாக தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ வசதிகள் அளிக்க இந்திய அரசு உடனடியாக இலங்கைக்கு மருத்துவர்களை அனுப்ப வேண்டும் என்றார் தா.பாண்டியன்.

By siva
5/27/2009 8:39:00 PM

good

By SSD
5/27/2009 7:38:00 PM

ஆமாம் ஆமாம் சரணடைந்து விடாதீர்கள்.அப்படி சரணடைந்தால் நம் வீரம் என்னாவது.நம்மை நம்பி புலி இயக்கத்தை விட்டு விட்டு பிரபாகரன் செத்து போய்விட்டான்.நாமும் சரணடைந்தால் யார் இருக்கா இனிமேல் சாவதற்கு.கூடாது கூடாது நங்கள் இருக்கிறோம் அகதிகளாக வெளிநாட்டில் குட்டிகளோடும் புட்டிகலோடும் உங்களுக்கு வேண்டிய எல்லாம் நங்கள் இணையதளங்களில் எழுதுகிறோம் நீங்கள் வீரமாக செத்து மடியுங்கள்.நங்கள் இருக்கிறோம் ஹாய்யாக.

By velinadu val ilangai tamilan
5/27/2009 6:56:00 PM

சரணடைந்தாலும் சாவடிப்பான், சரணடையாவிட்டாலும் சாவடிப்பான்.

By SHAHUL
5/27/2009 6:51:00 PM

you could have done this wise move 15 years ago and then you should have waited for 20 years before asking for a separate nation, you did the most silliy thing making innocent tamils as fodders and human shields and now blame others.

By dermarasa
5/27/2009 6:42:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக