ஞாயிறு, 24 மே, 2009

இலங்கைச் சிக்கலுக்குத தீர்வு தமிழ் ஈழமே!

இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்:
வெளியுறவு அமைச்சர் எசு.எம். கிருட்டி்ணா வலியுறுத்தல்

தினமணி
First Published : 24 May 2009 01:25:00 AM IST


புது தில்லி, மே 24: ஈழத் தமிழர்களின் பிரச்னைகள் என்னவென்று கண்டறித்து அவற்றை இலங்கை அரசு தீர்க்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சராக அறிவிக்கப்பட்ட பின் தில்லியில் சனிக்கிழமை முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: இலங்கையில் எந்தக் காரணத்தால் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்களின் பிரச்னைகளின் மூல காரணம் என்ன என்பதையும் கண்டறித்து தீர்க்க வேண்டும். அந்நாட்டின் அரசியல் சாசனத்துக்கு உள்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் சமஉரிமை அளிக்க வேண்டும். இலங்கை தங்கள் நாடு என்ற உணர்வு அங்குள்ள தமிழர்களுக்கு ஏற்படும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது. போரினால் இடம் பெயர்ந்துள்ள தமிழர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்டை நாடுகளுடன் அமைதியான நட்புறவையே இந்தியா விரும்புகிறது. பாகிஸ்தானுடனான உறவுக்கு அந்நாட்டில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்பே பெரும் தடையாகவுள்ளது. பாகிஸ்தானுடன் நட்புறவுடன் செயல்பட இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் முதலில் அங்குள்ள பயங்கரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அனைத்து அண்டைநாடுகளும் நிம்மதி அடையும் என்றார் அவர்.
கருத்துகள்

ஈழச்சிக்கல் குறித்துப் பேசியதற்கு வாழ்த்துகள்! சிங்கள அரசிற்குரிய ஒரே சிக்கல் இலங்கையில் தமிழர்கள் வாழ்வதுதான்! எனவே அறிவுரை கூறுவது ஒப்புக்குப் பேசுவதாகத்தான் அமையும். தமிழ் ஈழச் சிக்கல் என்ன என்பதை முதலில் நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். அதன்பின்பு சிங்கள அரசிற்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தச் செய்யுங்கள்! தமிழ் ஈழத்தை அமைக்க முன்வரும் உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேருங்கள். தமிழர்களின் தாயகமான தமிழ் ஈழத்தை அமைத்துத் தாருங்கள். இல்லையேல் உங்கள் பேச்சு வெற்றுரையாகப் போகும்! அன்புடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/24/2009 4:54:00 AM

EVACUATE Tamils from Sri Lanka AND Let Sinhala people only live there. Enough killing Tamils from 1958.....Today. Why EELAM TAMILS need a country let Sinhala budhist only live there. no more fight. ENOUGH KILLING TAMILS. WHOLE WORLD IGNORED TAMILS. WE ASKED WORLD STOP KILLING TAMILS NO BODY LISTEN US. WORLD IS IGNORED EELAM TAMILS. WORLD IS IGNORED EELAMTAMILS NO GOD THIS WORLD. I HATE GOD.

By Looser
5/24/2009 4:17:00 AM

Don't take this man seriously. When he was Karnataka's CM he stubbornly refused to give TN's water share in Kavery river. He didn't even care about Supreme Court's direction to follow Tribunal's instruction. I think he got this fortfolio because of his strong anti-tamil acts. (The worst thing was none of "national" parties leaders condemned him including then PM Vajpayee.) This is a blow for Tamils.I think Sonia's fury is still not satisfied.

By Raj
5/24/2009 3:49:00 AM

Please let them solve their problem in their way India should not interface their problem. Enough killing Tamils enough. All outside Eelam Tamils alredy decided they will sponcer all EELAM TAMILS FROM SRI LANKA. I ALSO DECIDED I WILL SPONCER MORE THAN 4 EELAM KIDS. WE DON'T WANT LOOSING TAMILS ANY MORE. LET THEM GO OUT OF SRI LANKA AND SRI LANKA ONLY SINHALA BUDHIST COUNTRY. ALL TAMILS AGREE ALL TAMILS ARE SLAVE IN THIS WORLD THAT IS THIS WORLD WANT IT. OK ONE TWO NIGHTS WE LOST MORE THAN 100000 OUR LOVES ONE ANY BODY CARE ABOUT THAT NOOOOOO. TAHT TIME YOU AND YOUR COUNTRY CELEBERATING YOUR VICTORY ON OUR PEOPLES DEAD BODIES. WE DON'T WANT ANYTHING LET US LEAVE ALIVE. ALL TAMILS ARE EVERY ONES SLAVES. THATS ALL. ALL TAMILS ARE SLAVE in THIS WORLD.

By Tamilan
5/24/2009 2:29:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக