வெள்ளி, 29 மே, 2009

பிரபாகரன் தலைமையிலான போர் தொடரும்: திருமாவளவன்

தினமணி
First Published : 29 May 2009 01:32:00 AM IST


இலங்கையில் நடத்தப்பட்ட படுகொலையைக் கண்டித்து சென்னையில் வியாழக்கிழமை தமது கட்சித் தொண்டர்களுடன் அமைதி பேரணி மேற்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவ
சென்னை, மே 28: ""இலங்கையில் தனித் தமிழ் ஈழத்தை அடைவதற்கான போர் பிரபாகரன் தலைமையில் தொடரும்'' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் வியாழக்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது. மன்றோ சிலையில் தொடங்கிய பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே முடிவடைந்தது. பேரணியின் முடிவில் திருமாவளவன் பேசியது: ""பிரபாகரனை சுட்டுக் கொன்றதாக இலங்கை அரசு பொய்ச் செய்திகளை பரப்புகிறது. உலக நாடுகள் துணையோடு, சிங்கள ராணுவம் 5 முனைகளிலிருந்து தாக்கியபோதும், தான் நேசித்த மக்களை, மண்ணை பாதுகாப்பதற்காக உறுதியுடன் போராடியவர் பிரபாகரன். தனி ஈழத்தை அடைவதற்கான பிரபாகரன் தலைமையிலான போர் தொடரும். அவர்கள் தங்களின் 5-ம் கட்ட போராட்டத்தை தொடங்குவது நிச்சயம். தமிழகத்தில் தனி ஈழப் போராட்டத்துக்கு ஆதரவான கட்சிகளையெல்லாம் ஒருங்கிணைத்து, தனி அணி அமைத்து தேர்தலில் போட்டியிடலாம் என முயற்சித்தேன். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை'' என்றார் திருமாவளவன்.தீர்மானங்கள்: அமைதி முயற்சிக்காக சிங்கள ராணுவத்தை நெருங்கிய நடேசன், பூலித்தேவன் உள்ளிட்ட தமிழர் தலைவர்கள் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இலங்கையில் கடத்தப்பட்ட இளம் பெண்கள், ஆண்களின் நிலை என்னவெனத் தெரியவில்லை. போர்க் களத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்ட 3 டாக்டர்கள், புலிகளின் கடற்பிரிவு தலைவர் சூசையின் மனைவி, குழந்தைகள் சிங்கள ராணுவத்தால் கடத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுகின்றனர். கடத்தப்பட்டவர்களை மீட்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகள் அனைத்தும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைபெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துக்கள்

மீண்டும் போர் தொடங்கப்படும சூழலைத் தவிர்க்க உலக நாடுகள் தமிழ் ஈழத்திற்கு உடனே ஏற்பிசைவு வழங்க வேண்டும்! அதற்கு முதற்கட்டமாகத் திருமா. காங்.கூடாரத்தை விட்டு வெளியேறி இந்திய மக்களைத் தமிழ் ஈழததின்பால் திரட்டவேண்டும். அனைத்து அரசியல் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து உண்மையின்பால்- ஈழத்தமிழர்களின் தாயகம் முழு உரிமைகளுடன் அவர்களாலேயே ஆளப்பட வேண்டும் என்ற மக்களாட்சித் தத்துவத்தை உணரும் வகையில் - கருத்துப புரட்சியை ஏற்படுத்த வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வாய்ப்பை இனி அதற்காகச் செலவழிக்கட்டும்.

வேண்டுகோளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/29/2009 3:59:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக