வெள்ளி, 29 மே, 2009

டி.ஆர்.பாலுவுக்கு ஏமாற்றம் ஏன்?

தினமணி

First Published : 29 May 2009 01:31:00 AM IST


சென்னை, மே 28: மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படாதது ஏன் என மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி: கடந்த 5 ஆண்டுகளாக மத்திய தரை வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக சிறப்பாகப் பணியாற்றிய டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததற்கு காங்கிரஸ் கட்சி காரணம் அல்ல. மத்திய அமைச்சரவையில் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வுக்கு 3 கேபினட் இடங்களை மட்டுமே காங்கிரஸ் அளித்தது. இதனால்தான் மத்திய அமைச்சரவையில் டி.ஆர். பாலு மீண்டும் இடம்பெறவில்லை என்றார் தயாநிதி மாறன்.
கருத்துக்கள்

உண்மைதான். ஆனால் அந்த 3 இடங்களில் ஒன்றைக் கொடுப்பதற்கு அவர் கலைஞரின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இல்லாமல் போய்விட்டார். கலைஞர் அவர்களே குடும்பததினருடன் கலந்து பேசித்தானே அமைச்சர் பதவிக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தார். குடும்பத்தினர் எவ்வாறு குடும்பத்தினர் அலலாதவரைப் பரிந்துரைக்க முடியும்? தனக்கு மிஞ்சிததான் தானதருமம்! கலைஞரின் குடும்பத்தினருக்குப் போகத்தான் எஞ்சியோருக்குப் பதவிகள்! இந்த உண்மையை நன்கு அறிந்த டி.ஆர்.பாலு தொகுதி மக்களுக்குத் தொண்டாற்றுவாராக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/29/2009 4:08:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக