வெள்ளி, 17 ஜூன், 2011

Lunar Eclipse : Photos by dinamani


Kural and kalaignar : wrong statement

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதைத் தான் எழுதிய சொல் என்கிறார் கலைஞர். தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அடி அல்லவா இது? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்!


வியாழன், 16 ஜூன், 2011

Veera velu nachiyar - drama: ''வீரவேலுநாச்சியார்” நாடகம்

''வேலுநாச்சியாருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் பத்தொன்பது ஒற்றுமைகள்” – ஈழத்தை நினைவுபடுத்தும் ''வீரவேலுநாச்சியார்” நாடகம்

யூகி
பதிவு செய்த நாள் : June 15, 2011

சென்னை மையத்தில் உள்ள நாரத கானசபா.   தமிழ் உணர்வாளர்களும், பழ.நெடுமாறன்,  தமிழருவி மணியன்,  வீர.சந்தானம்,  சத்யராஜ் போன்ற பலரும் திரண்ட நிலையில் நிறைந்திருந்தது அரங்கம்.
வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார் வைகோ. அவருடைய தயாரிப்பிலும், ஊக்கத்திலும் உருவாகியிருந்தது ”வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகம்.
கி.பி.1730 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போட்டியிட்ட வேலுநாச்சியார் வரலாற்றின் ஒரு பகுதியைப் பின்னணியாகக் கொண்ட நாடகம். துவங்கியதில் இருந்து பல தகவல்களை விவரித்தபடி ஒரு ”வாய்ஸ் ஓவர்”
”ஆறுமொழிகளை அறிந்த நாச்சியார் தளராத ஊக்கத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்தவர். தமிழ் மண்ணை மீட்டவர். சிவகங்கை பூமிக்குச் செல்வோம்” என்று குரல் ஓய்ந்ததும் துவங்குகிறது நாடகம்.
பிரிட்டிஷாருடன் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்த சிவகங்கைச் சீமையில் மன்னரான முத்துவடுக நாதரை தந்திரமாக கோவிலில் வைத்துக் கொல்கிறார்கள் ஆங்கிலேயர். அவரது மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறார் மனைவியான வேலுநாச்சியார். அவருக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள் மருது சகோதரர்கள்.
ஆங்கிலேயப்படை விரட்டுகிறது. கண்காணித்துத் துரத்துகிறது. வேலுநாச்சியார் தப்பித்து மக்கள் ஒத்துழைப்புடன் திண்டுக்கல் சென்று திப்புசுல்தானின் உதவியுடன் சிவகங்கையை மறுபடியும் மீட்கிறார். மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். இதைத்தான் நாடகமாக்கியிருந்தார் இயக்குநரான ஸ்ரீராம் சர்மா. எண்பதுக்கும் மேற்பட்ட நடனக் குழுவினரின் நடனங்கள்,  ரகுநாதனின் இசை, மாறும் காட்சிகள் என்றிருந்தாலும் – காட்சி மாறும்போது இடையில் ஏற்படும் இடைவெளியைக் குறைத்திருக்கலாம்.
அத்துடன் வேலுநாச்சியாரை பிரிட்டிஷ்படை தேடும்போது அவருக்கு உதவியதற்காக பலியான உடையாள் என்கிற தாழ்த்தப்பட்ட பெண்ணைப் பற்றிய காட்சியில் – அவரை ஆங்கிலேயர் வந்து விசாரிப்பதும்,  அவள் சொல்ல மறுத்ததும் கொல்லப்படுகிற காட்சியை ஏன் இணைக்காமல் விட்டுவிட்டார்கள்?
வேலுநாச்சியாராக நடித்த மணிமேகலை சர்மாவின் நடிப்பும், விரைவான நடனமும் நாடகத்திற்கு வலுவான அம்சம். இன்னும் ராம்ஜி, பிரியதர்ஷிணி என்று பலருடைய பங்களிப்பு நாடகத்தைக் கவனிக்கத்தக்க ஒன்றாக மாற்றியிருக்கிறது. இஸ்லாமியப் பாடலையும் தகுந்த விதத்தில் பரத நாட்டிய மரபை அடிப்படையாகக் கொண்ட நாடகத்தில் இணைத்திருக்கிறார்கள்.
எதை இழந்தாலும் கால இடைவெளியில் தகுந்த துணை, மக்களின் ஒத்துழைப்புடன் நாட்டை மீட்டெடுக்க முடியும் என்பதைக் காட்சிமொழியில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். எத்தனையோ புராணங்களை முன்வைத்து நாட்டிய நாடகங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் – தமிழகத்தின் வரலாற்றை மட்டுமல்ல ஈழம் சார்ந்த நம்பிக்கையையும் புத்துணர்வோடு சொல்கிறது நாடகம். நாடகத்தின் இறுதியில் வரும் ”ஈழ மின்னல் சூழ மின்னுதே” என்கிற வரிகள் அந்த நம்பிக்கையைத் தான் புலப்படுத்துகின்றன.
எந்த நாட்டிய மரபாக இருந்தாலும் அதை அரசியல் உள்ளடக்கத்திற்கும் பொருத்தமாகப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்த இந்த நாடகத்திற்குத் தலைமை தாங்கியவர் நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமணியம்.
”வேலுநாச்சியார் ஜான்சிராணிக்கு முன்பே வாழ்ந்து போராடியிருந்தாலும் அவரை சரித்திரப் புத்தகங்களில் காண முடியாதிருப்பது வருத்தமான விஷயம்.
அப்படி இதுவரை காட்டப்படாத சரித்திரத்தை வைகோ மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இந்த நாடகம் ஒவ்வொரு பள்ளியிலும் நடக்க
வேண்டும். பெண்மைக்குப் பெருமை தரக்கூடிய இந்த நாடகத்தை தமிழகம் எங்கும் நடத்த வேண்டும். இந்தக் கதையைப் பார்க்கும் போது நாட்டுக்காக நாம் உயிரையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
இந்த மண்ணில் பிறந்த நடன அசைவுகளை நாம் கண்டோம். நல்ல விஷயங்கள் மக்களிடம் போய்ச்சேர வேண்டும்”  என்றார் பத்மா சுப்ரமணியம்.
நிறைவாகப் பேசினார் நாடகத்தைத் தயாரித்த வைகோ. ”இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய கலை. இனியொரு வீர சரித்திரத்திற்குத் தயாராக வேண்டும். இளைய தலைமுறைக்கு உணர்த்துவதற்காக இந்த நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது. ஜான்சிராணி வாழ்ந்த 77 ஆண்டுகளுக்கு முன்னால் வாளேந்திப் போராடியவர் வேலுநாச்சியார். இந்த வரலாற்றைச் சொல்லும் நாடகம் என்பதால் இதைத் தயாரிப்பதற்கான பொருட்செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றேன்.
“வேலுநாச்சியாருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் 19 ஒற்றுமைகள் இருக்கின்றன. இத்தகைய வீரம் பொருந்திய நாடகத்தை உயிரோட்டத்துடன் நடத்தியிருக்கிறார்கள். வீரமும், மானமும் தமிழர் மரபோடு வந்தவை. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்த நாடகம் நிகழ்த்தப்பட வேண்டும். ஈழம் அமைய வேண்டும், அமையும் என்பதை இதன் மூலம் உணர்த்தியிருக்கிறோம்.” என்று பேசிய வைகோ இந்த நாடக உருவாக்கத்திற்காகச் செலவழித்த காலம் – நான்கு மாதங்கள்.

Safeguard the journalists: பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு தேவை

உண்மைதான். ஆனால், ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தும் செய்திகள் அரசின் குற்றங்களையும் குற்ற உடந்தைகளையும்  கடமைகளில் இருந்து நழுவும் செயல்பாடின்மைகளையும் உணர்த்துவதாக உள்ளமையால் அரசு அவர்களுக்கு எதிராகவே நடந்து கொள்ளும். நல்லாட்சி நடைபெறும் பொழுதுதான் அனைத்துப் பிரிவினருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு தேவை

First Published : 16 Jun 2011 01:44:04 AM IST


விடுதலை பெற்று நாட்டின் அரசாங்கத்தை அமைக்கத் தேவைப்படும் அரசமைப்புச் சட்டம், அந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய விதிமுறைகளைத் தெளிவுபட வரையறுப்பதுடன், அவற்றை நேர்மையாக, திறமையாக, நிறைவேற்றுவதற்கான முறையில் அந்த நாட்டின் சட்ட - நீதிமன்ற - நிர்வாக அமைப்புகள் செயல்பட வேண்டும்.அடிப்படை உரிமைகள் என்று கூறும்பொழுது, முதலாவதாக, கருத்து உரிமை, மற்றவர்களுடைய உரிமைகளைப் பாதிக்காத அளவுக்கு தனது கருத்துகளை வெளியிடும் உரிமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. மேலும் மற்றவர்களுடைய கருத்துகளை - அறிக்கைகளைச் சேகரித்து எழுத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தருவதற்கான பணியைப் பத்திரிகையாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பகுதியில், அடிப்படை உரிமைகள் பற்றிய தொகுப்புத் தரப்பட்டுள்ளது. அதில் 19-வது பிரிவின் கீழ், "பேச்சு - கருத்து வெளியிடும், உரிமை' என்பதற்கு முதலிடம் தரப்பட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமைகள் பற்றிய பட்டியலில், பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய குறிப்பு வெளிப்படையாகத் தரப்படவில்லை.இதுபற்றிய கேள்வி இந்திய அரசியல் நிர்ணய சபையில் 1948 டிசம்பர் 2-ம் நாள் அன்று எழுந்தபொழுது, டாக்டர் அம்பேத்கர் பதிலளித்தார்: ""ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள "பேச்சு - கருத்து வெளியிடும், உரிமை' செய்தியாளர்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்களுக்கும், நிச்சயமாக இருக்கிறது. அதனால், தனிப்பட்ட பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய குறிப்பு தரவேண்டிய அவசியம் இல்லை''.இந்த வகையில், மக்களாட்சி முறையில் உள்ள பல்வேறு நாடுகளுடன், இந்தியாவிலும், செய்தி வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது.2011, ஜூன் 11-ம் நாள் அன்று மும்பை நகரின் மத்திய வணிக வளாகம் ஒன்றில், ஜோதிர்மய தேவ் என்னும் பிரபல செய்தியாளர் பட்டப்பகலில் நான்கு தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்தார். "மிட்-டே' என்ற நாளிதழின் தலைமைச் செய்தியாளராகக் கடந்த 20 ஆண்டுகளாகத் திறம்படப் பணியாற்றிய இவர், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் ஆகிய பல்வேறு பாதக வன்முறைச் செயல்களை நடத்திவரும் தீவிரவாதிகள் கூட்டம் பற்றிய விவரங்களை அவர் சேகரித்து வந்தார் என்பதால், அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று தெரிய வருகிறது.நாட்டின் சுதந்திரத்தையும், சட்டம் - அமைதி நிலைமைகளையும் பாதுகாக்க, தனது உயிரையே பணயம் வைக்கும் போர்வீரனைப்போல செய்தியாளர் ஜோதிர்மய தேவ், தமது உயிரையே நாட்டின் நலனுக்காகப் பணயம் வைத்த மாவீரர் ஆவார். அவருக்கு அஞ்சலி செலுத்த நாட்டு மக்களும், அரசாங்கத்தினரும் கடமைப்பட்டுள்ளனர்.செய்திகளைச் சேகரிக்கவும், வெளியிடுவதற்கும் ஆன சுதந்திரமான உரிமை இருந்தபோதிலும், அவ்வாறு சேகரிக்கும், செய்தியாளர் உயிரோடு வாழ்வதற்குமான பாதுகாப்பும் இருக்க வேண்டும் என்ற நிலைமை இந்தியாவில் ஏற்பட்டு இருக்கிறது.மும்பை மாநகரில், மும்முரமான வணிக வளாகத்தில், செய்தியாளர் ஜோதிர்மயதேவை நான்கு தீவிரவாதிகள் சூழ்ந்துகொண்டு சுட்டுத் தள்ளியதுடன், உடனடியாகத் தப்பிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.அந்தப் பயங்கரவாதிகள் பற்றிய விவரங்களை மும்பைப் போலீஸôர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.சட்டத்துக்கும், அரசாங்கத்துக்கும் விரோதமாக உள்ள தீவிரவாதிகளின் செயல்பாட்டு முறைகளை ஒரு செய்தியாளர் அறிந்து வைத்திருந்தார் என்பதற்காக ஜோதிர்மய தேவ் சுடப்பட்டார் என்றால், அத்தகைய நிலைமைகளை மத்திய - மாநில அரசுகளின் காவல்துறையினரும், புலனாய்வுக் குழுவினரும் இதுவரை அறியாமல் இருக்கின்றனர் என்பது ஆச்சரியப்படத்தக்க பலவீனமாகும். தனிப்பட்ட ஒரு செய்தியாளருக்கு இருந்த திறமைகூட மத்திய - மாநில அரசுகளுக்கு இல்லை என்பது வெளிப்படுகிறது.பொதுவாக, மும்பை நகரில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளின் படையெடுப்புகள் அடிக்கடி நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. 2008 நவம்பர் மாதத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலால், தாஜ் ஹோட்டல் உள்பட பல மையங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு, மும்பை நகரம் ரணகளமாக ஆக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இன்னமும் நீதி முறைப்படி தண்டிக்கப்படவில்லை. அதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது.மக்களின் குறைபாடுகளை அறிந்து அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அரசாங்கத்துக்குத் தெரிவிப்பதற்கு, செய்தித்துறை முக்கியத் தொடர்பாக இருக்கிறது.அதேபோன்று, அரசாங்கத்தில் நிகழும் குறைபாடுகளை, ஊழல் - ஊதாரித்தனங்களை மக்களுக்குத் தெரிவிக்கப் பத்திரிகைகள் முன்வருகின்றன. இதனால் ஏற்படும் சங்கடங்களை வைத்து பத்திரிகைகளே தேவையில்லை என்று ஒரு சர்வாதிகார ஆட்சி திட்டமிட்டுவிடும்.அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திர அறிவிப்பை 1776-ல் எழுதிய அரசியல் மேதை தாமஸ் ஜெபர்ஸன், ஒரு நாட்டின் வளர்ச்சிக்குச் செய்தித்தாள்கள் மிகவும் தேவை என்பதை உணர்ந்திருந்தார். அவருடைய அயராத முயற்சிகளின் விளைவாகத்தான், அந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில், அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் 10 பிரிவுகளைச் சேர்ப்பதில் வெற்றிபெற்றார். அந்த உரிமைகளின் பட்டியலில் வைக்கப்பட்ட முதலாவது பிரிவு கூறுவதாவது: ""மக்களின் குறைபாடுகளை வெளிப்படுத்துவதற்கோ, தங்கள் உரிமைகளை அவர்கள் நிலைநாட்ட அமைதியாகக் கூடுவதற்கோ, சுதந்திரமான முறையில் பேசவோ - செய்திகளைத் தரவோ, தேவைப்படும் வழிமுறைகள் எதனையும் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டின் அரசாங்கம் முற்படக் கூடாது''.இதனை வலியுறுத்தும் வகையில் அவர் ஒருமுறை கூறினார்: ""ஒரு நாட்டில் செய்தித்தாள்கள்'' இல்லாமல் அரசாங்கம் இருக்கலாமா? அல்லது அரசாங்கம் இல்லாமல் செய்தித்தாள்கள் இருக்கலாமா? என்ற கேள்வி எழுந்தால், அரசாங்கம் இல்லாவிட்டாலும் செய்தித்தாள்கள்தான் தேவை என்ற முடிவுக்குத் தயக்கம் எதுவும் இல்லாமல் நான் வருவேன்''.இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற அமைப்பில் பிரபுக்கள் சபை, மக்கள் சபை என்ற இரு பிரிவுகள் இருக்கின்றன. பிரபுக்கள் சபையில், பாரம்பரியமாக இருக்கும் பிரபுக்கள், அவர்களுடன் மத குருமார்களாக உள்ளவர்கள் இடம்பெற்றனர்.இந்த இரு பிரிவினரைத் தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் சபையில் இருந்தனர். இந்த மூன்று பிரிவினரைத் தவிர, அந்த நாட்டின் அரசாங்கம் செம்மையாகச் செயல்பட செய்தியாளர்கள் உதவினர்.அனைவராலும் பாராட்டப்படும் அரசியல் மேதையாக, நாடாளுமன்ற உறுப்பினராக, ஆற்றல்மிக்க பேச்சாளராக விளங்கிய எட்மண்ட் பர்க், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒருமுறை சொன்னார்: ""அரசாங்கத்தைக் கண்காணிக்கப் பிரபுக்கள் சபையில் இருவகைப் பிரிவினரும், மக்கள் சபையில் மூன்றாவது பிரிவினரும் இருக்கின்றனர். ஆனால், இந்த மூன்று பிரிவினர்களைவிட மிகவும் முக்கியமாக நான்காவது பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள்தான், அதோ மேல் மாடத்தில் அமர்ந்திருக்கும் செய்தியாளர்கள்!'' இவ்வாறு அவர் பேசிய பிறகுதான், அரசாங்கம் செம்மையாக நடைபெற, செய்தித்துறை நான்காவது அடிப்படை என்ற தத்துவம் ஏற்பட்டது.இவ்வாறு மக்களாட்சி முறையில் சிறந்து விளங்கும், நாடுகளில் பத்திரிகையாளர்களுக்குத் தரப்படும், மதிப்பும், முக்கியத்துவமும் இந்தியாவில் ஏற்பட வேண்டும்.குற்றம் கண்டவிடத்து எடுத்துக் கூறுபவர்கள்தாம் ஆட்சியாளர்களுக்கு நல்ல நண்பர்கள். அத்தகைய நண்பர்களை ஏற்றுக்கொள்ளும் பண்புடையவர்களாக இருக்கும் ஆட்சியாளர்களை யாராலும் வென்றுவிட முடியாது! இதைத் திருவள்ளுவர் செம்மைப்பட எழுதி வைத்தார்:""இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரேகெடுக்கும் தகைமை யவர்'' மக்களின் உரிமைகளுக்கும், அரசாங்கத்தின் நல்லாட்சிக்கும், நாட்டின் மேலான வளர்ச்சிக்கும், அடிப்படையாக இருக்கும் பத்திரிகையாளர்களுக்குத் தக்க பாதுகாப்பையும், மதிப்பையும் இந்தியா தரவேண்டும்.

Brittan shocked about genocide activities of srilanga: இலங்கைப் போர்க்குற்றக் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கிறது: பிரிட்டன் அமைச்சர்

அதிர்ச்சி அடைந்தாலும் குற்றஅரசையே விசாரிக்கச் சொல்லும் அறியாமை பற்றி என்ன சொல்வது? அரசிற்குத் தெரியாமல் படைத்துறையினர் செய்யும் எல்லை மீறல்களை அரசு விசாரிக்கலாம். அரசே தலைமை தாங்கி நடத்தும் இனப்படுகொலைகளை அந்த அரசையே கொண்டு விசாரிப்பது எந்த வகையில் நியாயம்? போர்க்குற்றம் என்று குறிப்பிடாமல்  இனப்படுகொலைகள் என்றே சொல்ல வேண்டும். துயரத்துடன் அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கை போர்க்குற்ற காட்சிகள் அதிர்ச்சி அளிக்கிறது: பிரிட்டன் அமைச்சர்
First Published : 15 Jun 2011 05:11:15 PM IST

Last Updated : 15 Jun 2011 05:16:05 PM IST
லண்டன், ஜூன் 15- இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து "சேனல் 4" தொலைக்காட்சி ஒளிபரப்பிய விடியோ காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கூறியுள்ளார்.இலங்கையின் போர்க்குற்றம் குறித்த விடியோ காட்சிகளின் முழு தொகுப்பை "இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற பெயரில் "சேனல் 4" ஒளிபரப்பியது. இதில், பெண்களின் கைகளை கட்டி அவர்களது தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, முன்னாள் புலி ஒருவரை கத்தியை வைத்து மிரட்டுவது, பாலியல் துன்புறுத்தலுக்குப் பின்னர் பெண் புலிகள் கொல்லப்பட்டு கிடப்பது உட்பட பல கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்த காட்சிகளை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் மீது இலங்கை அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரிட்டன் அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கருத்து தெரிவித்தார்.இதனிடையே, சேனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் "யு டியூப்" உட்பட பல்வேறு இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை இலங்கை மீறியிருப்பதற்கு, சேனல் 4 முன்பு ஒளிபரப்பிய காட்சிகள் ஆதாரமாக உள்ளது என்று ஏற்கெனவே ஐநா நிபுணர் குழு கூறியிருந்தது. இந்நிலையில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து முழுமையான விடியோ வெளியாகியுள்ளதால், அதிபர் ராஜபட்ச அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்

பிரிட்டன் அமைச்சருக்கு தெரிந்தது இந்திய அமைச்சர்களுக்கும் , பிரதமர் , குடியரசுத் தலைவர் மற்றும் தமிழகத்தின் மதிப்பிற்குரியவர்கள் என்று கூறப்படும் தமிழகத்தின் முதலமைச்சர் அம்மா அவர்களுக்கும் தெரியவில்லையே.....
By உதயம்
6/15/2011 7:07:00 PM
சோனியாவிற்க்கு காட்டுங்கள் ஐயா. புலிகள் கணவரை கொன்றதற்காக நாற்பதாயிரம் பேரின் உயிர் அவரிட்க்கு தேவைபட்டதா? குழந்தைகளுமா? இவர்களில் எத்தனை பேர் புலிகள்? பாரத நாட்டில் பிறந்திருந்தால் இந்த கொலை வெறி வந்திருக்குமா? முசோலினி பரம்பரை அல்லவா?
By Sriram
6/15/2011 7:06:00 PM
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தாக்குதலை விட 1000 மடங்கு கொடூரம் நிறைந்தது
By Raj
6/15/2011 7:05:00 PM
இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து "சேனல் 4" தொலைக்காட்சி ஒளிபரப்பிய விடியோ காட்சிகளை கண்டு, ''போர்க் குற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் மீது இலங்கைஅரசு உரிய விசாரணை நடத்தவேண்டும்'' என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கூறி உள்ளார். விசாரணை நடத்தப்பட வேண்டும்! ஆனால் இலங்கையோ இந்தியாவோ, பாகிஸ்தானோ, இரஷ்யாவோ, சீனாவோ போர் குற்றம் குறித்து விசாரணை நடத்தி பயன் இல்லை! இந்நாடுகள் தவிர்த்த ஒரு சர்வதேச குழு விசாரணை நடத்த வேண்டும்! அப்பொழுதுதான் உண்மைகள் வெளிவரும்! குற்றவாளிகளை தண்டிக்க முடியும்!
By பொன்மலை ராஜா
6/15/2011 7:03:00 PM
எங்க நாட்டு தலைவர்களுக்கு அதிர்ச்சியே வரமாட்டுது கொலையாளிக்கு உள்ள தண்டனை உடன்தையானவனும்க்கும் உண்டு
By raja
6/15/2011 6:57:00 PM
உலகமே கண்டனம் செய்யும் போது இந்திய இலங்கைக்கு கப்பல் விடுவது கேவலமானது ! வெட்கபவேண்டியது !!
By M.Gunasekaran
6/15/2011 6:42:00 PM
THE BUTCHERS WHO CARRIED OUT KILLINGS OF TAMIL PEOPLE SHOULD BE PUNISHED. THE INTERNATIONAL COURT OF JUSTICE SHOULD BRING ALL TO TRIAL AND PUNISH THEM. TO PREVENT TAMILS BEEING KILLED IN THE FUTUT A SEPRATE NATION TAMIL ELLAM SHOULD CREATED.
By Paris EJILAN
6/15/2011 6:24:00 PM
வேடிக்கை பாருங்கள் இந்தியரே தமிழரே நீங்கள் எந்த அளவில் அளக்கிறீர்களோ அதே அளவை உங்களுக்கு காத்திருக்கிறது
By பிரவீன்
6/15/2011 6:23:00 PM
இந்தியா திரும்பவும் ராசபக்ச அரசுக்கு முண்டு கொடுக்கும், ஏனெனில் சர்வ தேச விசாரணை நடந்தால், சிங் அரசின் உதவி தெரியவரும்.
By Suresh M
6/15/2011 6:12:00 PM
மூடர்கள்கள் ஆளும் நாட்டில் நேர்மை,ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
By வேந்தன்
6/15/2011 5:58:00 PM
sonia gandhi and karunanithi is responsible for the human rights violation
By v.sampathu
6/15/2011 5:31:00 PM

செவ்வாய், 14 ஜூன், 2011

Jaya instists to take action against singhalam : இலங்கைப் போர்க்குற்றம் மீது நடவடிக்கை தேவை: மன்மோகன் சிங்கிடம் செயலலிதா வலியுறுத்தல்


துடிப்பான நடவடிக்கைக்குப் பாராட்டுகள். ஆனால், அரசியல் நெறிப்படியான சமஉரிமை என்பது தமிழ் ஈழம்தான் என்பதை மறக்கக் கூடாது. இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டாலும் சிங்களத்திற்கு ஆதரவான நிலை எடுக்காமல் இருந்தாலே போதும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

இலங்கை போர்க்குற்றம் மீது நடவடிக்கை தேவை: மன்மோகன் சிங்கிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்
First Published : 14 Jun 2011 02:09:38 PM IST

புதுதில்லி, ஜூன் 14- இலங்கையின் போர்க்குற்றம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தினார்.இன்று பிரதமரை நேரில் சந்தித்தபோது, அவரிடம் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய கோப்பு ஒன்றை ஜெயலலிதா அளித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கை போரின் கடைசி நேரத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த மோதல் குறித்து ஊடகங்கள் சுதந்திரமாக செய்திகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படவில்லை.பரவலான குண்டுவீச்சு மூலம் பொதுமக்கள் படுகொலை, மருத்துவமனை மற்றும் நிவாரண முகாம்கள் மீது தாக்குதல், மனிதாபிமான உதவிகள் மறுப்பு, மனித உரிமை மீறல்கள், ஊடகம் மற்றும் அரசுக்கு எதிரான விமர்சகர்கள் மீது தாக்குதல் ஆகியவை குறித்து ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இத்தகைய போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க, இப்பிரச்னையை இந்திய அரசு ஐநா சபையிடம் கொண்டுச் செல்ல வேண்டும்.இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் நிர்வாகத்தில் அவர்கள் முழுமையாக இடம்பெற வழி ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து, நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.இலங்கையில், தமிழர்கள் நீண்டகாலமாக இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். அரசியல் சட்டத்திருத்தம் மூலம் அவர்களுக்கு சமவுரிமை வழங்குவதை இலங்கை அரசு தவிர்த்து வருகிறது. சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல் ரீதியான சமவுரிமை வழங்க வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்கள் முழுமையாக அவர்களது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தப்படும் வரை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா பிரதமரிடம் அளித்துள்ள கோப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

சட்ட சபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்ப் பிரச்சனை, போர்க் குற்ற விசாரணை, கச்சத் தீவு ஆகியவற்றில் அம்மையார் உறுதியாய் இருக்க வேண்டும். அங்கு அவர்கள் தனியாக செல்ல வில்லை; 7 கோடி மக்களின் உணர்வுகளை தங்களின் கைகளில் ஏந்தி செல்கின்றார்கள். இலங்கை சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் இலங்கை தமிழர்ப் பிரச்சனை இன்னும் தீரவில்லை. கச்சத் தீவோ சுமார் 35 வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கேட்டால் இலங்கை தமிழர்ப் உள்நாட்டுப் பிரச்சனை என்கின்றார்கள். அப்படிப்பார்த்தால், வங்க தேசமும் அன்று 1971 -ல் உள்நாட்டுப் பிரச்சனைத் தானே. பின்பு ஏன் தலையிட்டார்கள்? ஏனென்றால் பாகிஸ்தான் எதிரி நாடு; அடக்க வேண்டும்; இலங்கையோ நட்பு நாடு. அவர்களிடம் நல்லுறவு வைத்துக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் சீனாவோடு சேர்ந்து விடுவார்கள். இதுதான் உண்மை; அதனால்தான் ஈழத் தமிழர்ப் பிரச்னை உள்நாட்டுப் பிரச்சனை என்கின்றார்கள். அம்மையாரின் அனைத்து முயற்சிகளும் வெற்றிப் பெற வேண்டிப் பிரார்த்திக்- கின்றேன்.
By பழனிசாமி T
6/14/2011 2:55:00 PM
நடிகர்.சோ மற்றும் சு.சாமி கூறியது போல் ஜெயா முதலமைச்சர் ஆனவுடன் இலங்கை பிரச்சனையை பிரதம மந்த்ரியிடம் துணிவாக எடுத்து வைத்துள்ளார். அவர் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெற நல வாழ்த்துக்கள்
By Gangadharan
6/14/2011 2:27:00 PM
Good thing Jeyalalitha has done. Gooodoos to Jeyalalitha. If Jeyallitha brings relief and freedom for Ellam peoples, she will be in history books for ever. I wish jeyalalitha saves Tamilnadu from Karunanidhi and his family, I also wish JJ saves Ellam peoples from sinhalese. Both sinhalese and Karunanidhi are one and the same. Friends, Support our JJ.
By Ravi
6/14/2011 2:20:00 PM
கிழடு இப்போ என்ன சொலபோகின்றதூ? ஜெயலலிதா தந்தி அனுப்பவில்லை........
By KOOPU
6/14/2011 2:18:00 PM

திங்கள், 13 ஜூன், 2011

Ka.Pa.Aravaanan about engineering education: பொறியியல் கல்வி படும்பாடு: க.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர்

பொறியியல் கல்வி படும்பாடு: 
க.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர்
தமிழகத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து, உதகமண்டலம் வரை செல்லும் மலை ரயில், மாதம் முப்பது நாட்களில், இருபது நாட்களுக்கு மேல் பழுதாகி, நடுவே நின்றுவிடும். அங்கிருந்து பயணிகள், பஸ்கள் மூலம் பயணிப்பர். ஐநூறுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளையும், ஐந்து அண்ணா பல்கலைக்கழகங்களையும், தனியார் நடத்தும் பத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பல்கலைக்கழகங்களையும் கொண்டுள்ள தமிழகத்தில், பழுதடையாத ஒரு மலை ரயிலைக் கூட உருவாக்க முடியவில்லை என்று சொன்னால், நம் பொறியியல் கல்வியை என்னவென்பது?

அண்மையில் வெளிவந்துள்ள பத்திரிகை செய்தியின்படி, நம் பல்கலைக்கழகங்களிலிருந்தும் கல்லூரிகளில் இருந்தும் வெளிவரும் நூறு பொறியியல் பட்டதாரிகளில், இரண்டு பட்டதாரிகள் மட்டுமே, அவர்கள் படித்து வெற்றி பெற்ற பாடத்தில், வேலைக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். இச்செய்தி, நம் நாட்டில் உள்ள பொறியியல் கல்வித் தரம் பற்றிய ஐயத்தை பன்மடங்கு ஆக்குகிறது.பொறியியல் கல்வியை தனியார் வசமும், தனியார் வணிக வசமும், நம் மேதகு அரசுகள் ஒப்படைத்தன. அதன் பிறகே, ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகள், ஆங்காங்கே தோன்றின. இக்கல்லூரியின் தரம் பற்றி ஆராய, சில ஆண்டுகளுக்கு முன், ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தன் அறிக்கையில், "60 சதவீத பொறியியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என்ற பெயருக்கே தகுதியில்லாதவை. போதிய அளவு சோதனைச்சாலைகள் இல்லை, வகுப்பறைகள் இல்லை.பணியாற்றும் ஆசிரியர்கள், மிகத் தகுதி குறைவானவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மிகக் குறைவாக இருக்கிறது. பெரும்பாலானோர் அனுபவம் குறைந்தவர்களாக இருக்கின்றனர்' என, தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த அளவில், கடந்த அரசிலும், அதற்கு முன் இருந்த அரசிலும் இடம் பெற்றிருந்த அமைச்சர்களில் கணிசமானோருக்கு, பொறியியல் கல்லூரிகள் சொந்தமாக இருக்கின்றன. இவை அமைச்சர்களாலும், செல்வந்தர்களாலும், வணிகர்களாலும் நடத்தப்படுவதற்கு அடிப்படை காரணம், பணம் காய்ச்சி மரங்களாக இக்கல்லூரிகள் இருப்பது தான். இந்தக் கல்வி ஆண்டில் தான், பொறியியல் கல்லூரிக்கு வரும் விண்ணப்பங்களின் பெருகிய எண்ணிக்கை குறைந்திருக்கிறது.பல நிறுவனங்கள், பெறும் பணத்திற்கு ரசீதும் கொடுப்பதில்லை. பல கல்வி நிறுவனங்கள், காசோலையாகவோ, டி.டி.,யாகவோ கட்டணத்தைப் பெறுவதில்லை. "ரொக்கமாக கொடுக்க வேண்டும்' என, நிபந்தனை போடுகின்றன. கணக்குக் காட்டுவதிலிருந்து தப்புவதற்கு இந்த ஏற்பாடு.சரி, தமிழகத்தில், பொறியியல் கல்வி பெருகினால் நல்லது தானே என்று நினைக்கலாம். பெரும்பான்மையான பாடத் திட்டங்களும், அமெரிக்க வேலைவாய்ப்பை நம்பியே அமைக்கப்படுகின்றன. அதாவது, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக, இங்கே கல்வி உற்பத்தி நடக்கிறது.சரியான கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்? அந்த மண்ணுக்குரிய, அந்தந்தப் பகுதி மக்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். இங்குள்ள ஊட்டி ரயிலுக்கு பதில் சொல்ல முடியாத பொறியியல் பல்கலைக்கழகங்களால் பயன் என்ன?

தமிழகத்தை ஒட்டி, பொறியியல் கல்வி செய்ய வேண்டிய பணிகள், கண்டுபிடிப்புகள், சவால்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றுள் இன்றியமையாத சிலவற்றை மட்டும் பட்டியலிடுவோம்.

1. உணவின் ஒரு பகுதியாக இருப்பது தண்ணீர். வேளாண் தொழிலுக்கு வேண்டிய தண்ணீர், பருகுவதற்கு வேண்டிய தண்ணீர். நம் நாடு, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளைப் போல, ஆண்டு முழுவதும் மழை பொழியும் நாடு அல்ல. குளம், குட்டை, கிணறு, ஏரி முதலானவற்றில் தண்ணீர் தேக்கி வைப்பதைப் பற்றி, விரிவாக சிந்திக்க வேண்டும். இவற்றை தூர்வாருதலுக்கு எளிய வழிகளையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்க வேண்டும். இவற்றில் தேங்கியிருக்கும் நீர், வெயிலில் எளிதாக ஆவியாகாதவாறு, ஏதேனும் யுக்திகள் இருக்கின்றனவா என்று ஆராயப்பட வேண்டும்.
இன்னொரு வகையில் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் கடல் நீர் ஒரு பெரும் பேறாகும். கன்னியாகுமரியில் இருந்து, தமிழக வட எல்லை வரை, வங்காள விரிகுடா விரிந்து கிடக்கிறது. இந்த தண்ணீரை, குடிநீராக வேதியியல் மாற்றம் செய்வது பற்றி, வேதியியல் பொறியியல் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா, செயல்படுத்த வேண்டாமா? தமிழக ஆறுகளில் தண்ணீர் இல்லாத காலங்களில், பனிரெண்டு மாதமும் ஓடும் கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி, கிருஷ்ணா முதலான ஆறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது பற்றி திட்டங்கள் தீட்ட வேண்டாமா?

2. தமிழகத்தில் வாழக்கூடிய ஆறு கோடிக்கு மேற்பட்ட மக்களில், எல்லாருக்கும் போதிய உடை கிடைத்தபாடில்லை. அத்தனை பேருக்கும் உடை கிடைக்கும் வண்ணம், குறைந்த செலவில், எந்தெந்த மூலப்பொருளை வைத்து சட்டை, வேட்டி, பேன்ட், சேலை முதலானவற்றை நெய்யலாம் என்பது பற்றி சிந்தித்து செயல்படுத்த வேண்டியவர்கள் பொறியியலாளர்கள் தானே?

3. நம் சுகாதாரக்கேட்டின் உச்சம், கிராமங்களிலும், நகர சேரிப்பகுதிகளிலும், போதிய கழிப்பறைகள் இல்லாததுதான். பல நோய்கள், தொற்று நோய்களாக பெருகுவதற்கு, இது பெரும் காரணம். மலிவு கழிப்பறை பற்றி இவர்கள் சிந்திக்க வேண்டாமா?

4. கணினி, இன்று இன்றியமையாத பொருளாகி விட்டது. கணினியை, இன்னும் குறைந்த விலையில் உற்பத்தி செய்வது பற்றி ஆராய வேண்டாமா?

5. சிவில் இன்ஜினியர்கள், வீடு கட்டுவதற்கு உரிய புதிய மூலப்பொருட்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.செங்கல் தொழிலும் தற்போது அறைகூவலாகி விட்டது. மாற்றாக, சிமென்ட் கற்கள் வந்துள்ளன. தக்கைக் கற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் பற்றி சிந்திக்கவேண்டும்.

6. தமிழகத்தில் மிகப்பெரிய அறைகூவலாக இருப்பது மின்சக்தி. சோவியத் புரட்சியைச் சாதித்த மாவீரர் லெனின் புரட்சி நடந்து முடிந்து, தான் தலைமை ஏற்ற உடனே செய்த முதல் வேலை, சோவியத் ஒன்றியம் முழுவதும் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு சென்றது தான். மின் விளக்குகள், ரஷ்ய மொழியில், "விளாதிமிர் லெனின்' என்றே அழைக்கப்படுகின்றன. மின்சக்தி அனைவருக்கும் கிடைத்தல் அத்தனை முதன்மையானது என்பதை அவர் கண்டுகொண்டிருந்தார். 21ம் நூற்றாண்டு வந்த பிறகும், நாம் இன்னும் மின்சக்தியை முழுமையான தேவைக்கு உற்பத்தி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு உள்ள வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியவர்கள் பொறியாளர்கள் தானே?ஆக, நம் நாட்டுத் தேவைகள் நூற்றுக்கணக்கில் நமக்கு முன்னே மண்டிக்கிடக்க, வெறும் பேப்பர் பட்டங்களைப் பெற்று வெளிநாடு செல்லத் துடிக்கும் இளைஞர்களை உருவாக்குவதுதான் நம் பொறியியல் கல்வியின் நோக்கமா? அதற்காக எவ்வளவு பணம், எத்தனை இளைஞர்களின் உழைப்பு? நியாயமா...? சிந்தித்துப் பார்ப்போம்!

circle around the moon: dinamalar photo


D.M.K. actioons for Ilangai thamizhs: இலங்கைத் தமிழர்களுக்காக திமுக செய்தவை என்ன?

பால் திரிந்தபின் அதன் முந்தைய பயனுக்காக அதனைப் பயன்படுத்தி என்ன பயன்? உணவு  நஞ்சான பின்பும் அதனை உட்கொள்ளலாமா? வேலியே பயிரை மேய்ந்த பின்பு வேலியால் என்ன நன்மை? இனப்படுகொலையின் பொழுது அமைதி காத்தபின்பு முந்தைய கூக்குரல்களைச் சொல்லி இழந்த உயிர்களைக் காக்க முடியுமா? நம்பியவர்களே, கொலைகாரர்களுடன் சேர்ந்த பின்பு நம்பாதவர்களைப் பற்றிச் சொல்லி ஆவது என்ன? தமிழ்ச்செல்வனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த மைக்கோல்  தமிழ்த்தேசிய ஞாலத் தலைவரின் பெற்றோர்கள் மறைந்த பொழுது முறிந்து போனது ஏன்?  சீரான பாதையில் சென்ற ஊர்தி நிலை தடுமாறித் தலைகுப்புறக் கவிழ்ந்து உயிர்களைப்   பலிவாங்கியபின்பு, ஓட்டுநர் தன் ஓட்டும் திறமை குறித்துப் பெருமை பேசி என்ன மாற்றத்தை விளைவிக்க எண்ணுகிறார்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கைத் தமிழர்களுக்காக திமுக செய்தவை என்ன?

First Published : 13 Jun 2011 01:39:49 AM IST


சென்னை, ஜூன் 12: இலங்கைத் தமிழர் பிரச்னையில் தாம் எப்போதும் கேலிக் கூத்தாடியது இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கை மீது பொருளாதாரத் தடை கோரும் தீர்மானத்தை சட்டப் பேரவையில் வரவேற்றது திமுக. அப்போது பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், காவிரிப் பிரச்னையில் தமிழகத்தை திமுக வஞ்சித்துவிட்டது என்று வேண்டுமென்றே பேசி விஷத்தைக் கக்க வேண்டிய அவசியம் என்ன?  இலங்கைத் தமிழர்களுக்காக நான் எதைச் செய்தாலும் அதை ""கபட நாடகம்'' என அறிக்கை விடுகிறார் ஜெயலலிதா.  1956-ல் சிதம்பரம் திமுக பொதுக் குழுவில் அண்ணா முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை நான்தான் முன்மொழிந்தேன். 24.8.1977-ல் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகப் பிரமாண்ட பேரணி நடத்தியது திமுக. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படும் பிரச்னையை தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவுமாறு கோரி 13.8.1981-ல் பிரதமருக்கு தந்தி அனுப்பியது நான்.  1981-ல் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஆகஸ்ட் 15-ம் நாள் அதிமுக அரசால் கைது செய்யப்பட்டேன்.  25.7.1983-ல் வெலிக்கடை சிறையில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்ற 35 தமிழர்களை கொலை செய்தபோது பெரிய பேரணியை திமுக நடத்தியது. மத்திய, மாநில அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறை காட்ட நானும், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை 10.8.1983-ல் ராஜிநாமா செய்தோம். 16.5.1985-ல் காஞ்சிபுரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக நடந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானேன். அதே ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை அடுத்து சென்னையில் ஊர்வலம் நடத்தி, அந்த உத்தரவை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் என அறிவித்து, அதன் தொடர்ச்சியாக நாடு கடத்தும் உத்தரவைத் திரும்பப் பெறச் செய்தோம்.  இலங்கைத் தமிழர் நலன்களைப் பாதுகாக்க 1986-ல் மதுரையில் டெசோ அமைப்பு சார்பில் மாநாடு நடத்தினோம்.  1989-ல் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண விரும்பி அப்போதைய பிரதமர் வி.பி. சிங் தெரிவித்த யோசனையின் பேரில், பல்வேறு போராளி குழுவினரையும் தனித்தனியே சந்தித்து உரையாடி 19.12.1989-ல் பிரதமரைச் சந்தித்து விவரங்களைக் கூறினேன்.  1990 ஜூன் 19-ல் வி.பி. சிங் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அத்வானி, வாஜ்பாய், அருண் நேரு உள்ளிட்ட தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர். பிரச்னை குறித்து அனைத்து விவரங்களையும் விளக்கிவிட்டு, தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பிய போதுதான், சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் பத்மநாபா உள்ளிட்டோர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வந்தது.  1997-ல் திமுக ஆட்சியில் இருந்தபோது, ""சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கிவிட்டார்கள்'' என ஜெயலலிதா கண்டன அறிக்கை வெளியிட்டார்.  இலங்கைத் தமிழர்களுக்காக திமுக ஆட்சியில் மத்திய அரசை வலியுறுத்தி எதுவும் செய்யவில்லை என கூறுகிறார்கள். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தி 23.4.2008-ல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 6.10.2008-ல் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக பேசியதை மறந்துவிட்டார்கள்.  இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டும் என தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், ""விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை'' என தெரிவித்தார்.  அப்போது அப்படிக் கூறிவிட்டு இப்போது நடத்துவதுதான் கேலிக்கூத்தே தவிர, நான் எந்தக் காலத்திலும் கேலிக் கூத்தாடியவன் இல்லை. இதை இலங்கைத் தமிழர்களும், உலகம் முழுதும் இருக்கிற தமிழர்களும் நன்கு உணர்வார்கள்.  2006ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 7.12.2006, 23.4.2008, 12.11.2008, 23.1.2009 நாள்களில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகப் பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். குறிப்பாக 23.4.2008-ல் பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்காக திமுக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது.  அதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய அரசு இலங்கைத் தூதர்களை அழைத்து அன்று பிற்பகலிலேயே பேசியதாகவும், இந்தத் தகவலை எனக்குத் தெரிவிக்குமாறு பிரதமர் கூறியதாகவும் சொன்னார்.  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் மறைந்தபோது நான் எழுதிய இரங்கல் கவிதை பற்றிக் குறிப்பிட்ட ஜெயலலிதா, புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று, அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.  2009-ல் இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தபோது, இலங்கையில் தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக்கூட தயார் என்று அறிவித்தவன் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.  மனசாட்சி உள்ள சிலராவது இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டால், அதுவே எனக்கு ஓர் ஆறுதல்தான் என கருணாநிதி கூறியுள்ளார்.