அதிர்ச்சி அடைந்தாலும் குற்றஅரசையே விசாரிக்கச் சொல்லும் அறியாமை பற்றி என்ன சொல்வது? அரசிற்குத் தெரியாமல் படைத்துறையினர் செய்யும் எல்லை மீறல்களை அரசு விசாரிக்கலாம். அரசே தலைமை தாங்கி நடத்தும் இனப்படுகொலைகளை அந்த அரசையே கொண்டு விசாரிப்பது எந்த வகையில் நியாயம்? போர்க்குற்றம் என்று குறிப்பிடாமல் இனப்படுகொலைகள் என்றே சொல்ல வேண்டும். துயரத்துடன் அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கை போர்க்குற்ற காட்சிகள் அதிர்ச்சி அளிக்கிறது: பிரிட்டன் அமைச்சர்
First Published : 15 Jun 2011 05:11:15 PM IST
Last Updated : 15 Jun 2011 05:16:05 PM IST
லண்டன், ஜூன் 15- இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து "சேனல் 4" தொலைக்காட்சி ஒளிபரப்பிய விடியோ காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கூறியுள்ளார்.இலங்கையின் போர்க்குற்றம் குறித்த விடியோ காட்சிகளின் முழு தொகுப்பை "இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற பெயரில் "சேனல் 4" ஒளிபரப்பியது. இதில், பெண்களின் கைகளை கட்டி அவர்களது தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, முன்னாள் புலி ஒருவரை கத்தியை வைத்து மிரட்டுவது, பாலியல் துன்புறுத்தலுக்குப் பின்னர் பெண் புலிகள் கொல்லப்பட்டு கிடப்பது உட்பட பல கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்த காட்சிகளை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் மீது இலங்கை அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரிட்டன் அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கருத்து தெரிவித்தார்.இதனிடையே, சேனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் "யு டியூப்" உட்பட பல்வேறு இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை இலங்கை மீறியிருப்பதற்கு, சேனல் 4 முன்பு ஒளிபரப்பிய காட்சிகள் ஆதாரமாக உள்ளது என்று ஏற்கெனவே ஐநா நிபுணர் குழு கூறியிருந்தது. இந்நிலையில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து முழுமையான விடியோ வெளியாகியுள்ளதால், அதிபர் ராஜபட்ச அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
By உதயம்
6/15/2011 7:07:00 PM
6/15/2011 7:07:00 PM
By Sriram
6/15/2011 7:06:00 PM
6/15/2011 7:06:00 PM
By Raj
6/15/2011 7:05:00 PM
6/15/2011 7:05:00 PM
By பொன்மலை ராஜா
6/15/2011 7:03:00 PM
6/15/2011 7:03:00 PM
By raja
6/15/2011 6:57:00 PM
6/15/2011 6:57:00 PM
By M.Gunasekaran
6/15/2011 6:42:00 PM
6/15/2011 6:42:00 PM
By Paris EJILAN
6/15/2011 6:24:00 PM
6/15/2011 6:24:00 PM
By பிரவீன்
6/15/2011 6:23:00 PM
6/15/2011 6:23:00 PM
By Suresh M
6/15/2011 6:12:00 PM
6/15/2011 6:12:00 PM
By வேந்தன்
6/15/2011 5:58:00 PM
6/15/2011 5:58:00 PM
By v.sampathu
6/15/2011 5:31:00 PM
6/15/2011 5:31:00 PM
இக்கருத்தைத் தினமணி வெளியிடவில்லை. குற்றவாளியை நீதிபதியாக்கும் அவலததைச் சுட்டிக்காட்டுவதைப் பண்பற்ற கருத்தாகக் கண்டுபிடித்துள்ள தினமணி வாழ்க!
பதிலளிநீக்கு