Photo லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Photo லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 16 ஜனவரி, 2013
செவ்வாய், 30 அக்டோபர், 2012
தொடரி மொய்ப்பு! கேள்வி கேட்பார் இல்லையா?
தொடரியின் (இரயிலின்) கடும் கூட்டத்தை ப் பொருட்படுத்தாமல் உத்தரரப்பிரதேச மாநிலம் சந்துவாசு நகரில் நீராட ச் செல்லும் பற்றர்கள் (பக்கதர்கள்.)
சனி, 8 செப்டம்பர், 2012
மதிமாறனின் பார்வையில் ஊட்டியின் பயங்கர முகம்
மதிமாறனின் பார்வையில் ஊட்டியின் பயங்கர முகம்
அந்த போட்டோவை பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை.
சகலவிதமான கெமிக்கல் விஷத்தையும் சுமந்துகொண்டு ஆறு போல அந்த தண்ணீர்
வளைந்து, நெளிந்து போய்ச் சேர்ந்து கொண்டு இருந்தது, சேர்ந்த இடம் மக்களின்
குடிநீர் ஆதாரத்திற்காக மழைநீர் தேக்கிவைக்கப்பட்டிருக்கும்
அணைப்பகுதியாகும்.
விஷ(ய)ம் இதுதான். மலைகளின் அரசி, நீலகரி மாவட்டத்தின் தலைநகர்,
உலகில் உள்ள 14 முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்று, பொட்டனிக்கல் கார்டன்,
ரோஸ்கார்டன், போட்ஹவுஸ், மலைரயில் என்று மக்களை மகிழ்விக்கும் அனைத்தும்
இங்கே உண்டு. ஆம், இவ்வளவு நேரத்திற்குள் தெரிந்துதிருக்கும்
ஊட்டியைப்பற்றித்தான் சொல்கிறோம் என்று.
அழகான, பசுமையான, குளுமையான ஊட்டியைத்தான் எல்லாருக்கும் தெரியும்.
ஆனால் ஊட்டியை நாசப்படுத்திக் கொண்டிருக்கும் வகையில் அங்கே இன்னொரு
கோரமுகம் இருப்பது நிறையபேருக்கு தெரியாது. அந்த கோரமுகம் அங்குள்ள பைகாரா
அணைப்பகுதியில் மருந்து கம்பெனி என்ற பெயரில் அமர்ந்திருக்கிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக மருத்துவ பொருட்கள் தொடர்பான தயாரிப்புகளில்
ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம், தயாரிப்பு தொடர்பான ரசசாயன கழிவுகளை
எந்தவிதமான சமூக அக்கறையும் இல்லாமல் பைக்காரா அணையில் திறந்து விடுகிறது.
ஊட்டி பைகாரா அணையின் சாண்டிநல்லா பகுதியில் அமைந்துள்ள இந்த
தொழிற்சாலையின் கழிவுநீர் அணையின் அடிப்பகுதியில் சேருமாறு
அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையில் தண்ணீர் தேங்கியிருக்கும்போது
இந்த கழிவுகள் அணையில் கலப்பதே யாருக்கும் தெரியாது, பார்க்கவும் முடியாது.
எப்போதாவது மழையில்லாமல் போய் கடும் வறட்சி ஏற்பட்டு அணையின் நீர்மட்டம்
வெகுவாக குறையும்,அப்போது மட்டுமே இந்த ரசாயான கழிவுகள் ஆறு போல அணைக்குள்
போய் கலப்பதை பார்க்கமுடியும்.
இப்போது அந்த அவல நிலை அங்கு நிலவுகிறது. இப்படி திறந்துவிடப்படும்
ரசாயனக்கழிவு கலந்த கழிவு நீரானது முதுமலை புலிகள் சரணாலயம் செல்கிறது,
அங்குள்ள விலங்குகள் இந்த கழிவு நீரைக்குடிக்கும் அபாயத்திற்கு
தள்ளப்படுகிறது. அடுத்தபடியாக பைகாரா அணையில் இருந்து மோயாறு ஆறாக மாறி
பவானி நதியோடு கலக்கிறது. பவானி நீர்தான் ஈரோடு மற்றம் கரூர் உள்ளிட்ட பல
மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகும்.
கொஞ்சம் மழை பெய்து அணையில் தண்ணீர் வந்துவிட்டாலே மெள்ள கொல்லும் இந்த
கழிவு நீர் பயங்கரம் வெளியே தெரியாது, ஆகவே அதற்குள் இந்த விவகாரத்தை
வெளியே தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக படம் எடுத்து எல்லா
ஊடகங்களுக்கும் இயற்கை ஆர்வலரும், ஊட்டியின் நேசிப்பாளருமான மதிமாறன்
அனுப்பியுள்ளார். ஆனால் இதுவரை யாரும் "கண்டுகொள்ளததால் 'தினமலர்.காம்
பற்றி கேள்விப்பட்டு அனுப்பியிருந்தார்.
படத்தை பார்த்துவிட்டு மதிமாறனிடம் பேசியபோது ரொம்பவே உணர்ச்சி
வசப்பட்டார், ஒரு முறை இந்த கொடுமையை சுற்றுச்சுழல் ஆர்வலர்களோ, பசுமை
இயக்கத்தினரோ, இயற்கை நேசிப்பாளர்களோ வந்து பார்த்தால் போதும் அதன்பிறகு
அவர்களே இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கண்டுவிடுவார்கள் என்றார்.
சரி மதிமாறன் இந்த கழிவாற்றின் பின்னாடியே போய் இன்னும் கொஞ்சம் படம்
எடுத்து அனுப்ப முடியுமா என்றபோது அவருக்கு இருந்த "ரிஸ்க்கையும'
பொருட்படுத்தாமல், நல்லது நடந்தால் சரி என்று கழிவு நீர் பயணம் செய்யும்
பாதையோடு முடிந்த மட்டும் சென்று அதன் கோரமாக முகத்தை பல்வேறு கோணங்களில்
காட்டியிருந்தார். (அந்த படங்களை போட்டோ காலரியில் பார்க்கலாம்)
பார்த்துவிட்டு மனசு ரொம்பவே கஷ்டமாகிவிட்டது. பூனைக்கு யாராவது மணிகட்டுவார்களா என்ற ஆதங்கமும் எழுந்தது.
சனி, 28 ஜூலை, 2012
ஞாயிறு, 24 ஜூன், 2012
அணையா...அலைகடலா
Pothu Photo's | Pothu Album | Special Gallery | News Pictures | Live images | News Photos - No.1 Tamil News paper
அணையா...அலைகடலா...அலைகடலுக்கு மட்டும் தான் சீற்றம் உண்டா என்ன... சாந்தமாக தெரியும் நம்ம ஊரு வைகை அணை நீருக்கும் கூட ஆர்ப்பரிக்கும் ஆற்றல் உண்டு. தேனி மாவட்டத்தில் வீசிவரும் பலத்த காற்றினால் எழுந்த பிரமாண்ட அலைகள் மெய்ப்பித்தன.
அணையா...அலைகடலா...அலைகடலுக்கு மட்டும் தான் சீற்றம் உண்டா என்ன... சாந்தமாக தெரியும் நம்ம ஊரு வைகை அணை நீருக்கும் கூட ஆர்ப்பரிக்கும் ஆற்றல் உண்டு. தேனி மாவட்டத்தில் வீசிவரும் பலத்த காற்றினால் எழுந்த பிரமாண்ட அலைகள் மெய்ப்பித்தன.
வியாழன், 15 மார்ச், 2012
வியாழன், 1 மார்ச், 2012
acclaimed for photography
"பாராட்டு பெற்றுள்ளேன்!'
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆஸ்தான புகைப்படக்காரர் தர்மசந்துரு: கிரிக்கெட் போட்டி முடிந்த பின், வீரர்கள், பெரிய அல்லது சின்னத் திரையில், தாங்கள் விளையாடியபோது செய்த சாகசங்களை மீண்டும் பார்க்க விரும்புவதுண்டு. ஆனால், அதற்கு சற்று பொறுமை தேவை. போட்டோவாக இருந்தால், உடனே பார்த்து விட முடியும். அதற்காகத் தான், "மல்டிபிள் பிரேம் போட்டோகிராபி' (எம்.எப்.பி.,) என்ற முறையில், வீரர்களின் ஆட்டத்தை போட்டோவில் கொண்டு வந்தேன். பிலிம் ரோல்களை விட, "டிஜிட்டல்' கேமராவில் இதற்கான வசதிகள் அமோகம். வெட்டி ஒட்ட வேண்டாம், செலவு குறைவு. பொதுவாக ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும், பவுலர்களுக்கும் ஒரு தனி பாணி உண்டு. உதாரணமாக, இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி, வேகமாக பந்தை அடிக்கும் ஸ்டைலை, "ஹெலிகாப்டர் ஷாட்' என்பர். டிராவிட் அடிப்பதை, "டெக்ஸ்ட் புக் ஷாட்' என்று கூறுவர். ஆஸ்திரேலியாவின் பாண்டிங் பந்தை அடிக்கும் போது, மட்டையை இழுப்பது போல் இருக்கும். அதனால், அதை, "புல் ஷாட்' என்பர். கிரிக்கெட் விமர்சனம் செய்பவர்கள் சொல்லும் இந்த சங்கேத வார்த்தைகள் ரசிகர்களுக்குத் தெரியாது. ஆனால், எனக்குத் தெரியும். அதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப போட் டோ எடுக்க வேண்டும். இல்லையெனில், வீரர்களின் முகபாவம் மாறிப் போய்விடும். போட்டிகள் நடக்கும் போது, மைதானத்தில் மட்டுமல்ல, அவர்களின் ஓய்வு நேரங்களில் இருப்பதையும் படம் பிடித்து அவர்களிடமே காண்பித்து, பாராட்டுக்களைப் பெற்றுள்ளேன். அதில், அடுத்த கட்டமாக வன விலங்குகளையும், பறவைகளையும் அவற்றின் வாழ்விடங்களுக்கே சென்று "எம்.எப்.பி.,' முறையில் புகைப்படம் எடுக்கப் போகிறேன்!
சனி, 31 டிசம்பர், 2011
செவ்வாய், 27 டிசம்பர், 2011
ஞாயிறு, 25 டிசம்பர், 2011
Wonders of flowers: பூவுக்குள் ஒளிந்திருக்கும்…. (ஒளிப்படத் தொகுப்பு)
பூவுக்குள் ஒளிந்திருக்கும்…. (ஒளிப்படத் தொகுப்பு)
சனி, 17 டிசம்பர், 2011
செவ்வாய், 13 டிசம்பர், 2011
வெள்ளி, 18 நவம்பர், 2011
திங்கள், 7 நவம்பர், 2011
ஞாயிறு, 6 நவம்பர், 2011
ஞாயிறு, 23 அக்டோபர், 2011
வியாழன், 29 செப்டம்பர், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)