கண்டுபிடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்டுபிடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 அக்டோபர், 2013

குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம்

குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு!

Comment (4)   ·   print   ·   T+  
1
தான் உருவாக்கிய நவீன காற்றாலை மின் உற்பத்தி எந்திரத்தின் முன்னால் சுப்பிரமணியம்
தான் உருவாக்கிய நவீன காற்றாலை மின் உற்பத்தி எந்திரத்தின் முன்னால் சுப்பிரமணியம்


“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு.. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..’ என்ற கண்ணதாசனின் காப்பிய வரிகளுக்கு கச்சிதமான உதாரணம் சுப்பிரமணியம்!
சுப்பிரமணியத்தின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை. குடும்பச் சூழலால் பத்தாம் வகுப்புக்கு மேல் தாண்ட முடியாத சுப்பிரமணியம் இப்போது, தனியார் கல்லூரியின் தற்காலிக ஊழியர். ஆனால், இவரது சாதனைப் பட்டியல், பெரிய சைன்டிஸ்ட் ரேஞ்சுக்கு நீள்கிறது.
மெட்ரிக் முறையில் இயங்கும் கடிகாரம், செலவைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய பெட்ரோல் இயந்திரம், தினசரி, மாத காலண்டர்களைப் போல வார காலண்டர், சாண எரிவாயு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், தமிழ் எழுத்து சீர்திருத்தத்துக்கான முயற்சி… என பல கண்டுபிடிப்புகளால் மிரட்டுகிறார் மனிதர்!
இதுமட்டுமா, சிலந்தி வலை சிக்கலில் எனது நாடு, டீசல், இந்தியா - உலக நாடுகள் பல்வகை ஒப்பீடு உள்ளிட்ட நூல்களையும் சுப்பிரமணியம் எழுதியுள்ளார். இதில், 'சிலந்திவலை சிக்கலில் எனது நாடு' என்ற நூலை, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் வைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளது சிறப்பிலும் சிறப்பு.
"படிப்பு கம்மினாலும், புதுசா எந்தத் தகவல் கிடைச்சாலும் மறக்காம நோட்டுல குறிச்சு வைச்சிக்குவேன். அதைத் தொகுத்துத்தான் நூல்களா எழுதிருக்கேன். எட்டு மாசத்துக்கு முந்தித்தான் இப்ப நான் இருக்கிற வேலையில சேர்ந்தேன். அதுக்கு முந்தி கம்ப்யூட்டரை தொட்டுக்கூட பார்த்ததில்லை" என்று தன்னை வெளிச்சம் போட்டுக் கொள்ளும் சுப்பிரமணியம், கடந்த, 2000-ம் ஆண்டில், தமிழக அரசின், புதிய கண்டு பிடிப்புக்கான அறிவியல் ஆய்வாளர் விருது பெற்றவர்.
இந்த, 'வில்லேஜ் விஞ்ஞானி'யின் தற்போதைய கண்டுபிடிப்பு நவீன காற்றாலை
மின் உற்பத்தி இயந்திரம். அதுகுறித்து பேசியவர், ’’நம்ம மாநிலத்தில இருக்கிற காற்றாலைகள், வருஷத்துக்கு, 4 மாசம்தான் வேலை செஞ்சு, கரன்ட் உற்பத்தி பண்ணுது. அதுவும், வேகமா காத்து அடிக்கிற தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கம்பம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் மாதிரியான ஊர்கள்ளதான் இந்த காற்றலைகளையும் அமைக்க முடியுது. இதுக்கான செலவும் அதிகம்.
ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற மெஷின் லேசா காத்தடிச்சாலும் ஓடி கரன்ட் உற்பத்தியாகும். காத்து உராய்வு மூலமா, பெரிய ரெக்கைகள் சுத்தி, அது வழியா கரன்ட் உற்பத்தி பண்ணுறாங்க. இதுக்கு பதிலா, காத்து நேரடியா ரெக்கைகளை தள்ளினால், முழு சக்தி கிடைக்கும்; மின்சார உற்பத்தியும் அதிகரிக்கும்னு நினைச்சேன். அதைத்தான் இப்ப செஞ்சிருக்கேன்.
இப்ப இருக்கிற செங்குத்தான பெரிய ரெக்கைகளைக் கொண்ட காற்றாலைகள் மணிக்கு, 12 கி.மீ. வேகத்தில் காத்து வீசினாத்தான், மின்சார உற்பத்தி செய்யும். வருஷத்துல நாலு மாசம்தான், இந்த வேகத்தில் காத்து வீசும்ங்கிறதால, அப்ப மட்டுமே, மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனா, நான் வடிவமைச்சிருக்கிற காற்றாலையில மணிக்கு, 6 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலே மின் உற்பத்தி செய்யமுடியும். அப்படிப் பார்த்தா வருஷத்துல 8 மாசம் மின் உற்பத்தி செய்ய முடியும்.
தற்போதுள்ள காற்றாலை இயந்திரங்களை, 300 மீட்டர் இடைவெளியில் தான் நிறுவமுடியும். என்னுடைய இயந்திரத்தை அருகருகே அமைக்க முடியும். காற்று எந்த திசையில் இருந்து வீசினாலும் மின் உற்பத்தி செய்யமுடியும். முதலில் சின்னதாக ஒரு மாடல் செய்து பார்த்தேன். அதில் வெற்றி கிடைத்ததால், அடுத்ததாய், நான்கு இறக்கைகளுடன் சற்று பெரிய அளவில் வடிவமைத்துள்ளேன். இதனை, 20 இறக்கைகள் வரை அதிகரித்தால், அதற்கு ஏற்ப மின் உற்பத்தியும் அதிகரிக்கும்’’ என்றார்.
கோவை, 'கொடிசியா'வில், புதிய கண்டுபிடிப்புகளுக்காக நடந்த கண்காட்சியில் இவரது கண்டுபிடிப்புக்கு ஏக வரவேற்பாம். பெருமையோடு இதை நம்மிடம் சொன்ன சுப்பிரமணியம், "இரண்டு இறக்கை கொண்ட காற்றாலை இயந்திரத்தை செய்ய, 60 ஆயிரம் ரூபாய் செலவானது. எனவே, எனது இயந்திரத்தை தனித்தனியாக அமைப்பது நடைமுறை சாத்தியமில்லை. அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, செலவு குறையும்.
ராணுவத்தில் பணியாற்றும் முருகசாமி, எனது கண்டுபிடிப்பை ஊக்குவிக்க 35 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்து இந்த இயந்திரத்தை உருவாக்க உதவினார். எட்டு மாதங்கள் பாடுபட்டு இந்த இந்திரத்தை செய்து முடித்திருக்கிறேன். எனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பம் செய்திருக்கின்றேன். அரசு எனக்கு நிதி ஆதாரம்
வழங்கினால் தொழிற்சாலை தொடங்கி இந்த காற்றாலை இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் தயாரித்துக் கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்’’ என்று சொன்னார்.
இவரது நவீன இயந்திரத்தைக் கொண்டு மணிக்கு, 6 கி.மீ. வேகத்தில் காற்று அடிக்குமானால் ஒரு நாளில் 4 யூனிட் வரை மின் உற்பத்தி செய்ய முடியுமாம். இறக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால், மின் உற்பத்தியின் அளவை அதிகரிக்க முடியும். சாதாரணமாக வீட்டின் மாடியில் இதனை பொருத்திவிட்டால், எட்டு மாதத்துக்கு மின்சாரம் தடையின்றி பெறமுடியும்.
ஆயிரக்கணக்கில் கோடிகளை கொட்டி அணு உலைகளை அமைத்து மின்சாரம் தேடும் ஆட்சியாளர்கள் தனது எளிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கத் தயங்குவதாக ஆதங்கப்படுகிறார் சுப்பிரமணியம், ‘’அதற்காக நான் சோர்ந்துட மாட்டேன் சார்.. எடிசனையே அவர் ஆயுசு இருக்கும் வரைக்கும் இந்த உலகம் கண்டுக்கல. அதேமாதிரி, என்னையும் ஒருநாள் இந்த உலகம் கண்டுக்கும். அதுவரைக்கும் நாட்டுக்கு
தேவையான நல்ல விஷயங்கள் எதையாவது கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பேன் சார்’’ நம்பிக்கை துளிர்க்கச் சொன்னார் சுப்பிரமணியம்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

பதனீரில் இருந்து புதிய வகை சருக்கரை : மாணவிகள் அருந்திறல்

தமிழில் பெயர் வைக்கத் தெரியவில்லையா? இப்பொழுது உள்ள பனஞ்சீனிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? ஒருவேளை இவர்கள் கண்டுபிடித்தது பனஞ்சீனியை விரைவில்  உருவாக்கும் முறையாக இருக்கலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82014420131006011154.jpg

பதனீரில் இருந்து புதிய வகை சர்க்கரை கண்டுபிடிப்பு: கீழக்கரை கல்லூரி மாணவிகள் சாதனை


கீழக்கரைஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி மனையியல் துறை மாணவிகள், பதனீரிலிருந்து "பாம் சுகர்' என்ற, புதிய வகை சர்க்கரையை, கண்டு பிடித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், பனை மரங்களை வெட்டி, விறகாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பனைத்தொழிலுக்கு புத்துயிரூட்டும் முயற்சியாக, பதனீரில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்ட, கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மனையியல் பிரிவு மாணவிகள், அதில் வெற்றி கண்டுள்ளனர்.

கல்லூரி முதல்வர் சுமையா கூறியதாவது: பதனீரிலிருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு முழு நிலையை அடைய, 30 முதல் 40 நாட்கள் வரை ஆகிறது. இதனால் இத்தொழிலில், மக்கள் ஆர்வம் காட்டவில்லை. வருமானக்குறைவால், பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகிறது. இயற்கையை காக்கும் நோக்கத்துடன், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில், எங்கள் கல்லூரி மனையியல் துறை மாணவிகள், புதிய தொழில் நுட்பத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்காதபடி, பதனீரிலிருந்து "பாம் சுகர்' என்ற சர்க்கரையை (பவுடர் போல உள்ளது) கண்டு பிடித்துள்ளனர். இயற்கையான பச்சை தாவர தண்டுகள், இலைகளை, பதனீரில் போட்டு, கெடாத வகையில், இயந்திரத்தின் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் குறிப்பிட்ட அளவு "பாம் சுகர்' தயாரிக்க முடியும். இதை தயாரிப்பது குறித்து, கிராம மக்களுக்கு பயிற்சி அளித்தால், பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். மக்களின் பொருளாதார நிலை உயரும். வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும். அன்னியச் செலாவணி அதிகரிக்கும். எங்களது ஆய்வுக்காக, 75 லிட்டர் பதனீரில், 3 கிலோ "பாம் சுகர்' தயாரிக்கும் அளவில், இயந்திரம் தயாரித்துள்ளோம். இதற்கு 5.25 லட்சம் ரூபாய் செலவானது. இதை, பெரிய அளவிலும் செய்ய முடியும். பால் கூட்டுறவு சங்கத்தை போல், பதனீருக்கும் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தி, இந்த திட்டத்தை செயல்படுத்த, அரசு முன்வர வேண்டும், என்றார்.
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++
பனை வெல்லக் கூட்டுறவுச் சங்கம் இப்பொழுதும் உள்ளது. பதநீர் விற்பனைக்கும் பனம்பொருள் விற்பனைக்கும்  அரசு சார் நிறுவனங்களும் கூட்டுறவு அமைப்புகளும் உள்ளன. இவர்கள் பிறரின் திட்டத்தைப் பார்த்து உருவாக்கவில்லை எனில், அரசுசார் அமைப்பின் மூலமே முயலலாம். பால் கூட்டுறவுச் சங்கம் இருப்பதை அறிந்த இவர்கள் இதனை அறியாததால்  இப்போதைய பனஞ்சீனியை முற்றிலும் அறியாமல் கருத்து தெரிவிக்கிறார்கள் என எண்ணுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

வெள்ளி, 4 அக்டோபர், 2013

நெசவாளர் பானுமூர்த்திக்கு இலட்சத்தைவிட மகிழ்ச்சி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_818663.jpg

நெசவாளர் பானுமூர்த்திக்கு இலட்சத்தைவிட மகிழ்ச்சி தருவது எது?


புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதல் பரிசை ப் பெறுபவர் வேலூர் மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள துருகம் பகுதியைச் சேர்ந்த நெசவாளி பானுமூர்த்தி என்று அறிவித்து ,ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய போது கோவை கொடீசியாவில் திரண்டிருந்த மொத்த கூட்டமும் எழுந்து நின்று ஆர்ப்பரித்து கைதட்டி மகிழ்ந்தது.
யார் இந்த பானுமூர்த்தி, இவரது கண்டுபிடிப்புதான் என்ன.?
கைத்தறி தொழிலும்,அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களும் செழிப்புடன் காணப்படும் துருகம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமூர்த்தி. பத்தாவது படிக்கும்போது எதிர்பாராதவிதமாக இவரது தாய் இறந்துவிட, பெரியவன் என்ற முறையில் குடும்ப பாரத்தை தந்தையுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு பதினான்கு வயதில் கைத்தறி தொழிலில் இறங்கினார்.
கொஞ்சம், கொஞ்சமாக இந்த தொழிலின் நுணுக்கத்தை கற்றுத் தேர்ந்தார். தறியில் நெய்த புடவைகளை கொண்டு போய் கொடுக்கப்போகும் போது, கொஞ்சம் புது டிசைனில் நெய்ய வேண்டும் ஆனா அது உங்களால முடியுமா? என்று சொல்லியிருக்கின்றனர். இவருக்கு "சுருக்'கென்று பட்டது . என்னால் நிச்சயமாக முடியும் என்று சொல்லி ஆர்டரை கேட்டு வாங்கி வந்து நெய்து கொடுத்துள்ளார். இதன் காரணமாக பாராட்டும், ஆர்டர்களும் குவிந்தன.
இதற்கு பிறகு மேலும் மேலும் தொழிலில் பல நுணுக்கங்களை கற்றவர் கடைசியாக ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடித்து இந்த கைத்தறி தொழிலில் புகுத்தினார்.
இந்த புதிய கண்டுபிடிப்பை தறியில் அமல்படுத்த சின்ன,சின்ன மாற்றங்கள் செய்தால் போதும், இதற்கு ஐநூறு ரூபாய் வரைமட்டுமே செலவாகும்.ஒரு அரைமணி நேர பயிற்சி வேண்டும். அவ்வளவுதான்.
இதன் மூலம் ஒருவர் இரண்டு மணிநேரம் நெய்வதை ஒரு மணி நேரத்தில் நெய்து விடலாம், இரண்டு ஆள் செய்வதை ஒரு ஆளே செய்துவிடலாம். நூலிழை கம்பிகளின் உறுதியும் ஐம்பது சதவீதம் அதிகரிக்கும். விருப்பப்பட்ட டிசைன்களை எளிதில் வடிவமைக்கலாம். குழந்தை தொழிலாளர் முறை அடியோடு ஒழியும்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் இவரது தொழில் பெருகியது. இதன் மூலம் இவர் மட்டுமே பயன்பெற விரும்பவில்லை, மாறாக தான் சார்ந்த நெசவாள சமுதாயமே பயன்பெற வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பத்தாவது படிப்பைக்கூட தாண்டாத என்னால் இந்த கண்டுபிடிப்பை எப்படி வெளியே கொண்டு செல்வது என்று நினைத்த போதுதான், தினமலர் செய்தியை பார்த்த சேவா தொண்டு நிறுவன விவேகானந்தன் என்பவர் முயற்சியால், கோவை கொடீசியாவில் நடைபெறும் ஐ3 எக்ஸ்போவில் எனது கண்டுபிடிப்பை இடம் பெறச்செய்யும் வாய்ப்பை பெற்றேன் என்கிறார் பானுமூர்த்தி.
அவர் மேலும் பேசுகையில் நெசவு தொழிலை நேசித்து செய்பவர்கள் வாழ்க்கையில் என்றும் வளம்தான். என்னுடன் மகன் சீனிவாசன், மகள் வனிதா ஆகியோர் இந்த நெசவு தொழில் செய்துவருவதை பெருமையாக கருதுகிறேன். என் தந்தையும் குருவுமான லட்சுமணன் 83 வயது வரை நெசவு செய்து ஆரோக்யமாக இருந்தார் என்று சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.
கோவையின் சுற்றுப்புற பகுதியில் நிறைய நெசவாளர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நிச்சயம் இந்த கண்டுபிடிப்பு பயன்படும் என்ற நோக்கில்தான் நான் இங்கு அரங்கம் அமைத்தேன். கிட்டத்தட்ட ஐநூறு பேர் அரங்கம் அமைத்திருந்தும், சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய அருமையான கண்டுபிடிப்பு என்று, அறிஞர்கள் கூடி எனது கண்டுபிடிப்பை அங்கீகரித்து முதல் பரிசு வழங்கி கவுரவித்திருக்கிறார்கள், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றவர், பரிசு பெறும் போது, " மேடையேறி பேசி பழக்கம் இல்லை இருந்தாலும் ஒரு வார்த்தை சொல்லிக் கொள்கிறேன், இந்த கண்டுபிடிப்பை கத்துக்கிட்டு ஓரு நூறு நெசவாளிகளாவது பயன் பெற்றார்கள் என்றால் அது இப்ப எனக்கு கிடைச்ச ஒரு லட்ச ரூபாய் பரிசைவிட மகிழ்ச்சிதரும்' என்றார்.
தனக்கு கிடைத்த பரிசு பணத்தை வைத்து தனது கண்டுபிடிப்பை எளிமையாக வீடியோ சி.டி போன்ற ஊடகங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு போக எண்ணியுள்ளார். நெய்யும் தொழிலை தெய்வமாக போற்றி அதில் தான் உயர்ந்தால் போதாது தன்னைப்போல பிறரும் உயர வேண்டும், வளர வேண்டும், நன்றாக வாழவேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ள அபூர்வ மனிதர் பானுமூர்த்தியுடன்
 தொடர்பு கொண்டு பேசுவதற்கான எண்: 
99944 66498.

- எல்.முருகராசு

வியாழன், 26 செப்டம்பர், 2013

கொசுக்களை மணத்தால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி: + 1 மாணவியர் கண்டுபிடிப்பு

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_812540.jpg

கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி:  + 1 மாணவியர் கண்டுபிடிப்பு

சென்னை : மனித உடலில் இருந்து வெளியேறும் வாசனையை, திரவம் மூலம் உருவாக்கி, கொசுக்களை கவர்ந்திழுத்து அழிக்கும் புதிய கருவியை, தனியார் பள்ளி மாணவியர் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை, பெரம்பூர், கலிகி ரங்கநாதன் மான்ட்போர்டு மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் ஒப்பிலியா, தேன்மொழி, அபிராமி ஆகிய மூன்று மாணவியர், மிக மிக குறைந்த செலவில் கொசுவை ஒழிக்கும் கருவியை கண்டுபிடித்து உள்ளனர்.இந்த புதிய கருவியின் செயல்பாடு குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு, அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

அப்போது மாணவியர் கூறியதாவது:மனித உடலில் இருந்து வெளியேறும் வெப்பம், கார்பன் டை ஆக்சைடு, வியர்வையில் இருந்து வெளிப்படும் வாசனை மூலம் கொசுக்கள் மனிதர்களை அடையாளம் கண்டுபிடித்து, கடிக்கின்றன. அதன் அடிப்படையில் தான் இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.
*செவ்வக வடிவில் பெட்டி போன்று காணப்படும் இந்த கருவியில், இரண்டு பக்கங்களிலும் கம்பி வலைகள் உள்ளன. அந்த வலைகளில் 20 முதல் 40 வாட் வரை மின்சாரம் பாய்ச்சப்படும்.
*பெட்டியின் கீழ்ப்பக்கத்தில் மூன்று திரவங்களை கொண்ட கண்ணாடி குடுவை பொருத்தப்பட்டுள்ளது.
*இரண்டு துளைகள் கொண்ட ரப்பர் அடைப்பான் மூலம் அந்த குடுவை மூடப்பட்டுள்ளது.
*ஒரு துளை வழியாக காற்றை குடுவைக்குள் செலுத்தும் போது, திரவம், கம்பி வலை வழியாக வாயுவாக வெளியேறும்.
*இந்த வாயு, மனித உடலில் வியர்வை வாசனை போன்று இருக்கும். அந்த வாசனையால், கவரப்படும் கொசுக்கள், கம்பி வலையை நோக்கி ஈர்க்கப்படும். மின்சாரம் தாக்கி அழியும்.

இந்த கருவியை தயாரிக்க, 1,750 ரூபாய் செலவாகும். திரவ கலவை 50 மி.லி., அளவு, 30 ரூபாய் ஆகும். இந்த கலவை இரண்டு மாதங்களுக்கு பயன்படும்.கருவிக்கு ஐந்து ஆண்டுகள் வரை உத்தரவாதம் தரலாம். கருவியில் இரவு நேர மின்விளக்கும் பொருத்திக் கொள்ளலாம்.தற்போது கடைகளில் விற்கப்படும் கொசு ஒழிப்பு மருந்துகள் மனிதர்களுக்கு நுரையீரல் பாதிப்பு உட்பட, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்த திரவ கலவை அதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தாது. அதற்கு உரிய சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.இவ்வாறு மாணவியர் விளக்கம் அளித்தனர்.

கருவியின் செயல்பாடுகளை கேட்டறிந்த மேயர் சைதை துரைசாமி, கருவி தயாரிப்பு செலவை குறைக்க மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து மாணவியர் கூறுகையில், ‘தற்போது இந்த கருவி, பிளைவுட் மூலம் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டால் செலவு இன்னும் குறையும்’ என்றனர்.

புதன், 25 செப்டம்பர், 2013

13- ஆம் நூற்றாண்டு சுடுமண் உறை கேணி கண்டுபிடிப்பு

13- ஆம் நூற்றாண்டு சுடுமண் உறை கேணி கண்டுபிடிப்பு: தொல்லியல் ஆய்வாளர் ஆய்வு


சிதம்பரம் ஓமக்குளத்தில் தூர்வாரும் போது கண்டுபிடிக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டு சுடுமண் உறை கேணி மற்றும் செங்கல் கேணிகள் புதன்கிழமை தொல்லியல் ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரம் ஓமக்குளம் இந்த ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும்போது திங்கள்கிழமை பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த காலத்தில் 13-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட 13 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறை கேணி 2-ம், 17-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட 20 அடிக்கு மேல் விட்டம் கொண்ட செங்கல் கேணிகள்- 4 ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இதனை சென்னை தொல்பொருள் ஆய்வுத்துறையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் முனைவர் யத்தீஷ்குமார் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிற்கால சோழர்கள் காலத்தில் இதுபோன்ற சுடுமண் உறை கேணியை மக்கள் தூய குடிநீருக்காக அமைத்து பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்று சுடுமண் உறை கேணிகள் மகாபலிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரவலாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என முனைவர் யத்தீஷ்குமார் தெரிவித்தார். தொல்லியல் ஆய்வாளருடன் இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், நிர்வாகிகள் சந்திரசேகரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

புதன், 4 செப்டம்பர், 2013

தொழில்நுட்பப் பிழையைக் கண்டுபிடித்த தமிழ்ப் பொறியியலர்

தொழில்நுட்பப் பிழை ஒன்றைக் கண்டுபிடித்ததற்காக முகநூலின் அன்பளிப்பினைப் பெறும் இந்தியப் பொறியியல் பட்டதாரி
புதுடெல்லி, செப். 4-

பேஸ்புக் என்பது பிரபல சமூக இணையதளம் ஆகும். இதன் மூலம் பல தகவல் பரிமாற்றங்கள் உலகெங்கிலும் நொடிப்பொழுதில் கொண்டு செல்ல முடியும். இதில் தனி நபருக்கான தகவல் பக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளதால் தனி ஒரு நபர் தன்னுடைய தகவல் தொடர்புகள் அனைத்தையும் இதன் மூலம் பராமரித்துக் கொள்ள முடியும். இத்தகைய வலைத்தளங்களிலும் தொழில்நுட்பக் குறைகள் ஏற்படுவது உண்டு. அவ்வாறான குறைகள் தலைமை நிறுவனத்திற்குத் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவிக்கப்படுமேயானால் அந்த நபர்களுக்குத் தகுந்த சன்மானமும் அளிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த அருள் என்ற 21 வயது பொறியியல் பட்டதாரி சமீபத்தில் இப்படிப்பட்ட பிழை ஒன்றினை அந்நிறுவனத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ளார். கோயம்புத்தூரில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் சில மாதங்களுக்கு முன்னர்தான் தகவல்தொடர்பு துறையில் தனது பட்டப்படிப்பை இவர் முடித்துள்ளார். தொழில்நுட்பக் குறைகளை கண்டறிவோருக்கு பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் இதனைப் பார்க்க ஆரம்பித்தவர் அதன்மூலம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்னாலும், பிழை ஒன்றினை சுட்டிக்காட்டி அருள் எழுதியபோது அவருக்கு 1,500 டாலர் அன்பளிப்பாகத் தரப்படும் என்று பேஸ்புக் நிறுவனத்திலிருந்து தகவல் வந்துள்ளது. ஆயினும், இன்னும் அந்தப் பணம் அவருக்குக் கிட்டவில்லை. இப்போது, ஒருவரால் தனது தகவல் பக்கத்தில் போடப்படும் போட்டோவை அவருக்குத் தெரியாமல் அழிக்ககூடிய தவறினை அருள் கண்டறிந்தார். இதனை முதலில் நிறுவனத்திடம் தெரியப்படுத்தியபோது அவர்கள் அதனை நிராகரித்துள்ளனர். பின்னர், தகுந்த வீடியோ ஆதாரங்களுடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் வெளியிட்டிருந்த போட்டோ ஒன்றினை அகற்றும் முறையை அருள் விளக்கியிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனம் பரிசுத்தொகையாக 12,500 டாலர் அளிப்பதாகத தெரிவித்துள்ளது.

சமீபத்தில், பாலஸ்தீனிய ஆராய்ச்சியாளர் ஒருவர் இதுபோன்ற பிழை ஒன்றினைக் குறித்து எழுதியபோது பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் அதனை நிராகரித்தனர். அதனால், அந்த ஆராய்ச்சியாளர் நிறுவனர் மார்க் சக்கர்பர்கின் தகவல் பக்கத்திலேயே நுழைந்து இதனைத் தெரிவித்திருந்தார். இது தவறான அணுகுமுறை என்று கூறிய பேஸ்புக் நிறுவனம் ஆராய்ச்சியாளரது தகவல் தொடர்புப் பக்கத்தையும் துண்டித்து விட்டது.

வெள்ளி, 19 ஜூலை, 2013

6000 ஆண்டுகள் பழமையான "சவுக்கை' கண்டுபிடிப்பு:

பழனி அருகே 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான "சவுக்கை' கண்டுபிடிப்பு: சூரிய ஒளி ஊடுருவிய விந்தை
பழநி: பழநி அருகே ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில், 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, "சவுக்கை' (பெருங்கற்களாலான அமைப்பு) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், பழநி ஆண்டிபட்டி மலைப்பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையில், ஆர்வலர்கள் கன்னிமுத்து, சவுரப், ராமலிங்கம் ஆகியோர் குழுவாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது "சவுக்கை' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாராயண மூர்த்தி கூறியதாவது: இங்குள்ள மலைப்பகுதியில் இரண்டு பெரும் உருண்டை பாறாங்கற்களை அருகருகே அடுக்கி, அதன் மேல் ஒரு பலகை பாறாங்கல்லை வைத்து மூடியுள்ளனர். தூரத்திலிருந்து பார்க்கும் போது இவ்வமைப்பு ஆயுத எழுத்து வடிவில் உள்ளது. சூரிய ஒளியின் நகர்வுப்பாதையை கணிக்க இடைச்சங்க காலத்தைச் சேர்ந்த தமிழர்கள் இவ்வமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதனை சவுக்கை என்பர். 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஓர் ஆண்டில் 6 மாதம் காலத்திற்கு சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் பயணத்தை தட்சணாயண காலம் என்றும், மீதி உள்ள 6 மாத காலத்தில், தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் காலத்தை உத்தராயண காலம் என்றும் கணித்துள்ளனர். இந்தாண்டு தட்சணாயணத் துவக்க நாளான ஆடி 1-ல் சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக, சூரிய உதயத்தில் ஒளிக்கதிர்கள் தென்மேற்காக துல்லியமாக ஊடுருவுவதை காண முடிந்தது. மூன்று நாட்கள் இதுபோல் ஒளியை காணலாம். இதைப்போல் உத்தராயணகால, துவக்க நாளான தை 1-ல் சூரியன் மறையும் போது, ஒளிக்கதிர்கள் வடகிழக்காக துல்லியமாக ஊடுருவதற்கு ஏற்பவும், இந்த சவுக்கை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சவுக்கைகள் இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் உள்ளன, இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 17 ஜூன், 2013

வேப்பமரத்தில் அற்புதமான "வீரிய ஊக்கி':கால்நடை டாக்டர் கண்டுபிடிப்பு

வேப்பமரத்தில் அற்புதமான "வீரிய ஊக்கி':கால்நடை மருத்துவர் கண்டுபிடிப்பு
 
தேனி:தேனியை ச் சேர்ந்த, கால்நடை அரசு மருத்துவர் உமாகாந்தன், மருந்து, பெட்ரோல் உள்ளிட்டவைகளின் சக்தியை அதிகரிக்கும், "வீரிய
ஊக்கி'யை கண்டுபிடித்து உள்ளார். இதற்கான வேதிப் பொருள், வேப்பமரத்தில் அதிகம் இருப்பது, கண்டறியப்பட்டு உள்ளது. போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த இவர், பொள்ளாச்சி கஞ்சம்பட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். கடந்த எட்டு ஆண்டு ஆராய்ச்சியில், "வீரிய ஊக்கி' (பொட்டன்ஷியேட்டர்) என்ற, ஒரு வகை உப்பை கண்டுபிடித்துள்ளார். அவர் கூறியதாவது:"பென்சிலின்' என்பது "ஆன்டிபயாடிக்' சக்தி கொண்டது. வேப்பமரத்துக்கும், அதே சக்தி உண்டு. வேப்பமரம், பல நூறு ஆண்டுகளாக, அதே சக்தியுடன் உள்ளது; ஆனால், "பென்சிலின்' விஷமாக மாறி வருகிறது.

இதை முன்வைத்து, ஆராய்ச்சி செய்தேன்."நிம்பின்' என்ற வேதிப்பொருள் மூலம், "ஆன்டிபயாடிக்' தன்மையை, வேப்பமரம் அதிகரிக்கச் செய்து கொள்கிறது; "பென்சிலின்', மாற்றிக்கொள்வதில்லை. இந்த மாற்றத்தை உருவாக்கும், "நிம்பின்' குறித்து ஆராயப்பட்டது. அது, "பொட்டன்ஷியேட்டர்' எனப்படும் "வீரிய ஊக்கி உப்பு' என, கண்டறியப்பட்டது. இந்த "வீரிய ஊக்கி' யை, குறைந்த அளவு மருந்துடன் சேர்த்து பயன்படுத்தினால், அதிக வீரியம் கிடைக்கும். குறைந்த அளவு "ஆன்டிபயாடிக்' மருந்து, பயன்படுத்தினால் போதும். இதை, பெட்ரோல், டீசலில் குறிப்பிட்ட அளவு சேர்த்தால், எரிபொருள் சிக்கனம் கிடைக்கும்; மாசு உண்டாக்கும் புகை அளவை குறைக்கலாம். இதே போல மண்ணெண்ணெய், நல்லெண்ணெய், பசும்பால், நெய்யில் சேர்த்து, ஆராய்ச்சி செய்யப்பட்டது; இதில், பயனுள்ள முடிவுகள் கிடைத்தன. விவசாயம் மற்றும் சிமென்ட், ரப்பருடன், சரியான விகித்தில் பயன்படுத்தினால், வீரியம் அதிகரிக்கும்; செலவு குறையும். இதே போல, 14 "வீரிய ஊக்கி' இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். தற்போது, ஒரு "ஊக்கி' யின் பயனை மட்டுமே கூறியுள்ளோம். அரசிடம், இந்த ஆராய்ச்சியை நிரூபிக்க தயாராக உள்ளேன், என்றார்.
 

சனி, 18 மே, 2013

ஒடிசாவில் பழமையான புத்தர் சிலை-கிணறு கண்டுபிடிப்பு

ஒடிசாவில் பழமையான புத்தர் சிலை-கிணறு கண்டுபிடிப்பு
ஒடிசாவில் பழமையான புத்தர் சிலை-கிணறு கண்டுபிடிப்பு
கேந்திரபாரா, மே 18-

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள படான்கோ கிராமத்தில் பழமையான புத்தர் சிலை, கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட துணை கலெக்டர் பிரதாப் மிஷ்ரா கூறுகையில், “ஊரக வேலை வாய்ப்புறுதி திட்டத்தின் கீழ் அந்தப் பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது 30 சென்ட்டி மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலை ஒன்றும், படிகளுடன் கூடிய 30 அடி ஆழம் உடைய கிணறும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

“இந்த புத்தர் சிலை மிகவும் பழமையானது, இந்த பகுதிகளில் பவுமகர் பேரரசு ஆட்சியில் இருந்த போது பவுத்தம் தழைத்தோங்கியது” என்று வரலாற்று ஆய்வாளர் தெரிவித்தார்.

இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் புத்த பாரம்பரிய தலங்களான லலித்கிரி, ரத்னகிரி, உதயகிரி பகுதிக்கு அருகில் இந்த கிராமம் அமைந்துள்ளது.

O
P
E
N
close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பாக். சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சரப்ஜித் சிங் குடும்பத்திடம் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது

பாகிஸ்தான் சிறையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் ....»

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

வன்முறை யிலிருந்து காக்கும் ஆடைகள், கருவிகள்: மாணவியர்

 
 
வன்முறை யிலிருந்து காக்கும் ஆடைகள், கருவிகள்: விதவிதமாக கண்டுபிடித்து அசத்தும் மாணவியர்

புதுதில்லி:பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய விடாமல் தடுக்கும் அதிநவீன கருவிகளை, மாணவியர் மற்றும் பெண்கள் தயாரித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. அதனால், பாலியல் பலாத்காரத்திலிருந்து பெண்களை காக்கும் கருவிகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.
எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி:

சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில், "ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்' படிக்கும் மனிஷா, இன்ஜினியரிங் மாணவர்களான, நீலாத்ரி பாசு மற்றும் ரிம்பி திரிபாதி ஆகியோருடன் இணைந்து, "எஸ்.எச்.இ.,' என்ற கருவியை கண்டு பிடித்துள்ளார்.சாதாரண, "நைட்டி' போல காட்சியளிக்கும் உடையில், அதிநவீன கருவி இணைக்கப்பட்டுள்ளது. பிறரால் பலாத்காரத்திற்கு உள்ளாகிறோம் என்பதை அறிந்தவுடன், அந்த உடையில் பொருத்தப்பட்டிருக்கும், பொத்தானை அழுத்தினால் போதும்; 3,800 கிலோ வாட், "எலக்ட்ரிக் ஷாக்' அடித்து, தொட்ட நபர் மயங்கி சரிவார்.ஆனால், இந்த உடையை அணிந்திருக்கும் பெண்ணுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், அடுத்த வினாடி, உடையுடன் இணைக்கப்பட்டிருக்கும், ஜி.பி.ஆர்.எஸ்., கருவி செயல்பட்டு, போலீஸ், பெண்ணின் உறவினர்கள் மொபைல் போன் எண்களுக்கு, எச்சரிக்கை செய்திகளை அனுப்பும்.

குறைந்த விலையில்:

""இது போன்ற கருவியை, அமெரிக்காவின், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவர்கள் தயாரித்துள்ளனர். அதன் விலை, பல லட்ச ரூபாய் இருக்கும் என, கூறப்படுகிறது. ஆனால், நாங்கள் தயாரித்துள்ள ஆடையின் விலை, அதிகபட்சம், 1,500 ரூபாய்க்குள் தான் இருக்கும்; ஆடையை சலவையும் செய்யலாம்,'' என, மாணவி மனிஷா தெரிவிக்கிறார். அது போல், தேசிய ஆடை அலங்கார தொழில் நுட்பம் படிக்கும் மாணவர்கள், நிஷாந்த் பிரியா, ஷாஜத் அகமது ஆகியோர், பேராசிரியர், நூபூர் ஆனந்த் துணையுடன், "ஜாக்கெட்' ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதை அணிந்திருக்கும் போது, தேவையில்லாமல் யாராவது தொட்டால், தொட்ட நபருக்கு, எலக்ட்ரிக் ஷாக் கிடைக்கும்.

பயங்கர "ஷாக்':

எலக்ட்ரிக் ஷாக்கால் பாதிக்கப்பட்டவர், 15 நிமிடத்திற்கு எதுவும் செய்ய முடியாது; மயக்க நிலையை அடைந்து விடுவார். அந்த ஜாக்கெட்டிலிருந்து வெளியாகும், 110 வோல்ட் மின்சாரம், சில்மிஷ நபரையோ அல்லது பலாத்கார நபரையோ நிலைகுலையச் செய்து விடும்.வியர்வை மற்றும் மழை நீர் பட்டாலோ, அணிந்திருப்பவருக்கு எத்தகைய ஆபத்தையும் அளிக்காத வகையில், இந்த ஜாக்கெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த வரிசையில், தவறான எண்ணத்துடன் தொட்டவுடன், சகிக்க முடியாத நாற்ற நீரை, அந்த நபர் மீது பீய்ச்சி அடைக்கும் ஆடைகள், தொட்டவுடன், முள்ளெலி போல, கூர்மையான கம்பிகளால், பலாத்காரம் செய்பவனின் உடலை துளைக்கும் ஆடைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.அவை, காப்புரிமைக்காகவும், குறைந்த விலையில் தயாரிப்பதற்காகவும், அடுத்த கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.



வியாழன், 11 ஏப்ரல், 2013

கடவுச் சொல்லை நினைத்தாலே கணிணியை இயக்கும்


கடவுச் சொல்லை  நினைத்தாலே  கணிணியை இயக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
டோக்கியோ, ஏப். 11-

ஒவ்வொரு இணையதள தொடர்பிற்கும், ஒவ்வொரு பாஸ்வேர்ட் உபயோகப்படுத்தப்படும். சிலர் பாதுகாப்பு கருதி அடிக்கடி தங்களின் பாஸ்வேர்டை மாற்றிக் கொண்டிருப்பார்கள். வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் புதிய தொழில்நுட்பமாக பாஸ்வேர்டை டைப் செய்வதற்குப் பதிலாக மனதில் நினைப்பதன் மூலமே நமது தகவல் தொடர்பினை இயக்க முடியும். 

யு.சி.பெர்க்லி ஸ்கூல் என்ற ஆராய்ச்சி மையம், இதுகுறித்த செய்முறையை நடத்தி காட்டியுள்ளது. இம்மையத்தின் பேராசிரியர் ஜான் சுவாங், ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா நகரில் நடைபெற்ற, பதினேழாவது தகவல் பாதுகாப்பு மற்றும் ரகசியக் குறியீடு எழுத்து குறித்த கருத்தரங்கில், இந்த ஆராய்ச்சியின் அறிக்கையை சமர்ப்பித்தார். அவருடைய குழுவினர், ஈஈஜி சென்சார்கள், புளூடூத் மற்றும் தலையணைக் கருவி உபயோகிப்பதன்மூலம் இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை அங்கு செயல்படுத்திக் காட்டினார்கள்.

சமீபகாலமாக, ஆராய்ச்சிகளில் பாதுகாப்பு கருதி விஞ்ஞானிகள் இம்முறையை பயன்படுத்துகின்றனர். மற்ற உடற்புள்ளியியல் முறைகள் போலவே, இம்முறையும் சிக்கலான, விலை உயர்வான பயன்பாடுகளைக் கொண்டது. ஆனால் பாதுகாப்பான, துல்லியமான மற்றும் மீண்டும் கையாளக்கூடிய விதத்திலும் அமைந்திருப்பது இம்முறையின் சிறப்புகள் என்பது இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

புதன், 10 ஏப்ரல், 2013

புற்று நோய்க்குப் புதிய மருத்துவ முறை-மாணவன் சாதனை

புற்று நோய்க்குப் புதிய மருத்துவ முறை கண்டுபிடிப்பு-கனடா இந்திய மாணவன் சாதனை
 
புற்று நோய்க்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு-கனடா இந்திய மாணவன் சாதனை
ஒட்டாவா, ஏப். 10-

கனடாவில் பள்ளியில் படித்துவரும் அர்சூன் நாயர்(16) என்ற மாணவன் நுண்ணுயிர் எதிரிகளை ஒன்று சேர்த்து சிறிய மாற்றங்களுடன் புற்று நோய் சிகிச்சைக்கு ஒரு புதிய சோதனை ஒன்றை செய்துள்ளார். இதை மூத்த விஞ்ஞானிகள் குழுவும் வரவேற்றுள்ளனர்.

கேன்சர் போட்டோதெர்மல் சிகிச்சை என்ற இந்த புதிய முறையின் மூலம் நோயாளியின் உடம்பில் தங்கத்துகல்கள் செலுத்தப்படுகிறது. பின்னர் அது ஒரு கட்டியைபோன்று ஒன்றுதிரள்கிறது. அப்போது ஒளியை பாய்ச்சி கேன்சர் செல்கள் மீது தாக்குதல் நடத்த்ப்படுகிறது.

இந்த முறை பயனுள்ளதாக இருந்தாலும், மிகுந்த பயனுள்ளதாக அமையவில்லை. கேன்சர் செல்கள் தாக்கப்படுகிறதுபோது, வெப்ப அதிர்ச்சி புரதங்கள் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

எப்படியோ, கேன்சர் செல்கள் அதிகரிப்பதை தடுக்க முடியும் என்பதால் இந்த முறை மிகவும் பயனுள்ள ஒரு முறையாக உருவாகும் என்று கருதப்படுகிறது. இதனால் இரண்டு வருடங்களாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவன் அர்சூன் நாயருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

புதன், 20 பிப்ரவரி, 2013

வளிஉருளை எரிபொருள் குறை உணர் கருவி : மாணவர் கண்டுபிடிப்பு


ிஉரளைில் எரிபொருள் குறைவதை உணர்த்தும் கருவி : அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு

பேரூர்:காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.கோவை மாவட்டம், பேரூர், மாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர், சந்துரு. இவர், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை, ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை கண்டறிந்துள்ளார்.கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த, இவரது படைப்பை, பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி, சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

மாணவர் சந்துரு கூறியதாவது:காஸ் சிலிண்டர் காலியாவதை முன்பே தெரிந்து கொண்டால், "புக்கிங்' செய்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதைக் கருத்தில் கொண்டு, கண்டுபிடிப்பை உருவாக்கினேன். எடை பார்க்கும் தராசில், சுழலும் தகட்டில் ஒரு தகடு இணைக்கப்பட்டுள்ளது.காஸ் சிலிண்டரை வைக்கும் போது, அதிக எடையின் காரணமாக, சுழலும் தட்டு, இடதுபுறமாக சுழலும். சிலிண்டரில் காஸ், குறைய குறைய, வலது புறமாக சுழல ஆரம்பிக்கும். சிலிண்டரிலுள்ள கேஸ் தீரும் நிலைக்கு சற்று முன், தராசில் இணைக்கப்பட்டுள்ள ஒலி எழுப்பும் கருவி, ஒலியை எழுப்ப துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதன், 26 டிசம்பர், 2012

மஞ்சள் வெடடும் கருவி கண்டுபிடிப்பு


சொல்கிறார்கள்

"நவீனமுறை மஞ்சள் அறுவடை!'
மஞ்சள் வெட்டும் கருவியை வடிவமைத்துள்ள சுப்பிரமணியம்: என் சொந்த ஊர், ஈரோடு மாவட்டத்திலுள்ள, கவுண்டபாடி கிராமம். குடும்ப வறுமையால், சிறிய வயதில், ஒர்க் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தேன்.அதன் பின், தனியாக ஒர்க் ஷாப் ஆரம்பித்தேன். கடந்தாண்டு, மஞ்சள் சாகுபடி செய்யும் பாலு என்பவர், என்னிடம், மஞ்சள் வெட்டும் கருவி செய்து தரும்படி கேட்டார். அதற்காக, ஒரு மாதமாக வயலுக்குச் சென்று, மஞ்சள் எப்படி வெட்டுகின்றனர்; சேதாரம் இல்லாமல், மஞ்சளை எப்படி எடுக்கின்றனர் என்பது போன்ற, பல விஷயங்களைக் கவனித்தேன்.மஞ்சள் வெட்டுவது, சிரமமான வேலை என்பதால், ஆண்கள் மட்டுமே, மண்வெட்டியால் வெட்டுவர். மஞ்சள் அறுவடை செய்ய, ஏக்கருக்கு, 25 ஆட்கள் வரை தேவை. கூலியாக, தலைக்கு, 500 ரூபாய் வரை கொடுக்கின்றனர்.அதற்கு ஏற்றாற்போல், ஒரு கருவியை வடிவமைத்தேன். இது மஞ்சளை வெட்டுவதோடு மட்டுமல்லாமல், மண்ணையும் நீக்கிக் கொடுத்து விடும். கேரள, கர்நாடகா மஞ்சள் விவசாயிகளுக்கும் சேர்த்து இதுவரை, 223 மஞ்சள் வெட்டும் கருவிகளை செய்து கொடுத்துள்ளேன்.கருவி மூலம் மஞ்சள் வெட்டினால், ஏக்கருக்கு, 3,000 செலவில், ஒரே நாளில் அறுவடை செய்து விடலாம். எல்லா மண் வகையிலும், மஞ்சளை வெட்டி எடுக்க வசதியாக செய்துள்ளேன். மஞ்சள் வெட்டும் கருவியோடு, நெல் உலர்த்தும் கருவியையும் கண்டுபிடித்துள்ளேன்.பவர் டில்லர் அல்லது டிராக்டரில் பொருத்தி தான், இக்கருவியை பயன்படுத்த முடியும்.தமிழக வேளாண் துறை காப்புரிமை வழங்கி சிறப்பித்தது மட்டுமல்லாமல், விவசாயிகளையும், வாங்கிப் பயனடைய பரிந்துரையும் செய்துள்ளது. மொபைல்: 94437 88778

புதன், 19 டிசம்பர், 2012

முதலாம் இராசாதிராசன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

முதலாம் இராசாதிராசன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
தஞ்சாவூர்: அடஞ்சூர் அனந்தீஸ்வரர் கோவில், கர்ப்பக்கிரக கதவு அருகில், கருங்கல்லில், முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன், முதலாம் ராசாதிராசன் செதுக்கிய அரிய கல்வெட்டை, தஞ்சை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். தஞ்சையிலிருந்து, 35 கி.மீ., தூரத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே அடஞ்சூர் கிராமம் உள்ளது. இங்குள்ள, அனந்தீஸ்வரர் கோவிலில், முதலாம் ராஜேந்திர சோழனின், மூத்த மகனான ராசாதிராசனின் கல்வெட்டு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு : தஞ்சை கல்வெட்டு ஆய்வாளர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய குழு, அனந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று, அங்குள்ள கர்ப்ப கிரக கதவின் கருங்கல் நிலையில் காணப்படும் கல்வெட்டை, படி எடுத்து ஆய்வு செய்தனர். அந்த கல்வெட்டு, முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன், முதலாம் ராசாதிராசன் கல்வெட்டு, என்பது ஆய்வில் உறுதியானது. இது குறித்து ஆய்வாளர்கள் கண்ணதாசன், தில்லை கோவிந்தராஜன், ஜெயராமன், அருணாசலம் ஆகியோர் கூறியதாவது: அனந்தீஸ்வரர் கோவிலில், கர்ப்பக்கிரக கதவு அருகே உள்ள கல்வெட்டில், "பாண்டியன் தலையும், சேரலஞ்சாலையும் இலங்கையும் தண்டாற் கொண்ட கோப்பரகேசரி பன்மரான கோ இராசாதிராச தேவர்க்கு யாண்டு பத்தாவது என, வாசகம் துவங்குகிறது. அதில், செதுக்கப்பட்டுள்ள மங்கள வாசகத்தை அறிய முடியவில்லை.
தானம்: இருப்பினும், பாண்டிய குலாசனி வளநாட்டு அடைஞ்சூர் குடி வென்றாழி கணங்குடி அனந்தீஸ்வர மகேஸ்வரக் கண்காணி, ஸந்தி விளக்கெரிக்க பொன் தானம் கொடுத்தது குறித்து அறிய முடிகிறது. அதாவது, முதலாம் ராசாதிராசன் ஆட்சி பொறுப்பேற்று, பத்தாவது ஆண்டில், அவருடைய ஆணையின்படி கோவிலை நிர்வாகம் செய்து வந்த கண்காணி என்பவர் மூலம், பொன் தானம் வழங்கப்பட்டுள்ளது. கதவின் இடதுபுறம் நிலைக் கல்லிலுள்ள கல்வெட்டு வாசகங்களின் தொடர்ச்சி, வலது புறத்திலுள்ள, மற்றொரு நிலைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. ராசாதிராசனின் கல்வெட்டுகளில் மெய்க் கீர்த்திகள் பொதுவாக, "திங்களேர் தருதன் எனவும், "திங்களேர் பெருவளர் எனவும் துவங்கும்.
பரகேசரி : இவ்வாறு, துவங்கும் கல்வெட்டுகளில், "கல்யாணபுரம் எறிந்த விஜய ராசேந்திரன் என்னும் பட்டமும், உடையாளூரில் காணப்படும் கல்வெட்டில், "இராசேந்திர இராசாதி ராசன் எனவும் காணப்படுவதால், தன் தந்தையின் மீதுள்ள அன்பால் ராசாதிராசன் பெயர்சூட்டிக் கொண்டுள்ளது தெரியவருகிறது. ஆனால், முதலாம் ராசாதிராசனின் மெய்க்கீர்த்தி முழுமையும் இடம்பெறாமல், "வெற்றிச்செய்தி மட்டுமே மேற்கண்ட கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. சோழமரபுப்படி, முதலாம் ராசாதிராசனுக்கு ராசகேசரி என்னும் பட்டம் காணப்பட வேண்டும். ஆனால், கல்வெட்டில் பரகேசரி, என உள்ளது. விரிவாக ஆய்வு மேற்கொண்டால், மேலும் பல தகவல்கள் வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share  
Bookmark and Share

திங்கள், 17 டிசம்பர், 2012

இளம் அறிவியலார்களின் அருமையான கண்டுபிடிப்பு

இளம் விஞ்ஞானிகளின் அபார கண்டுபிடிப்பு! அறிவியல் கண்காட்சியில் அசத்தல்
அந்த சிறுவனுக்கு வயது ஆறு. மழலை ஆங்கிலத்தில் பேசி, "மாஜிக் மேன்' போல், எரிமலையை வரவழைத்து, பார்வையாளர்களை மெய்மறக்க செய்கிறான். மலை உச்சியில் இருந்து எரிமலை குழம்பு, ரத்தச் சிவப்புடன் புகை கக்கியவாறு, பீறிட்டு வெளியேறுகிறது.இயற்கை நிகழ்வை மிகவும் தத்ரூபமாக, செயற்கையாக செய்து காட்டும் சிறுவன் பெயர் ஷென்னால். வடவள்ளி பி.எஸ்.பி.பி. மில்லேனியம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். வெறும் வினிகர், சோடா பவுடரை கையில் வைத்துக் கொண்டு, இந்த மாந்தரீக வித்தையை செய்து காட்டுகிறான் அந்த பிஞ்சு சிறுவன். எதிர்கால விஞ்ஞானியை அடையாளம் காட்டிய இடம், கோவை கொங்குநாடு அறிவியல் கல்லூரி வளாகம்.

இந்திய அறிவியல் கழகத்தின் நூற்றாண்டு விழாவை, தென்பிராந்திய அளவில் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும், இந்திய அறிவியல் கழக கோவைப்பிரிவும் இணைந்து நடத்தின. விழாவின் ஒரு பகுதியாக, நேற்று கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், "மாணவர் அறிவியல் கண்காட்சி' நடந்தது.கண்காட்சியில், ஒன்றாம் வகுப்பு மாணவர் முதல் முதுகலை மாணவர்கள் வரை தங்கள் அறிவியல் தொழில்நுட்ப அறிவை பறைசாற்றும் விதத்தில், அசத்தல் அரங்குகளை அமைத்திருந்தனர். மொத்தம் 130 அறிவியல் படைப்புகள், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியில், உயிரி அறிவியல், கணிதம் என, பல்வேறு பிரிவுகளில், செயல்விளக்க மாதிரிகளுடன் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. மரபுசாரா எரிசக்தி பயன்பாட்டை வலியுறுத்தும் வகையில், சுற்றுச்சூழலுக்கு கெடுதல் விளைவிக்காத புதிய படைப்புகளைமாணவர்கள் தயாரித்திருந்தனர். எதிர்காலத்தில் பசுமை உலகத்தை படைக்கும் அக்கறையை, தங்கள் தொலைநோக்கு சிந்தனை வாயிலாக இளம் விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியதே, கண்காட்சியின் சிறப்பம்சம்.

மாணவர்களின் இளம் மூளையில் அக்னி சிறகாக பொறி தட்டி, அழகிய கை வண்ணத்தில் மிளிர்ந்த படைப்புகளில் சில:
ரயில் விபத்து தடுக்கும் "ரோபோ' :

ரயில் ரயில்கள் தடம்புரண்டு, பயணிகள் கொத்து கொத்தாக உயிர் இழக்கும் கோர சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மனித தவறா, இயந்திர தவறா என்ற இனம்புரியாத கேள்விகளுடன், விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகின்றன. விபத்து தடுப்புக் கருவிகளை பொருத்துவது குறித்த திட்டங்கள் நீண்டுகொண்டிருக்க, உயிர்இழப்புகளும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. ரயில் விபத்தை தடுப்பது எப்படி என்பதை செயல்விளக்கம் காட்டி, விளக்கியுள்ளார், ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர்.கரூர் வெற்றி வினாயகா மெட்ரிக் பள்ளி மாணவர் பாரத். தேசத்தின் பெயரைக் கொண்ட இந்த மாணவர் தேச சிந்தனையோடு, ரயில் விபத்து தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். "டிரைன் வே டிராக்கர்' என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ரயில்கள் விபத்தின்றி தடுக்கப்படலாம் என்பது இவரது கண்டுபிடிப்பு.இதற்கு "வேவ் டிரான்ஸ்மிஷன் ஆன்டெனா' பொருத்தப்பட்ட ஒரு ரயில் பெட்டி போதும். ஆளில்லாத இந்த ரயில் பெட்டி, ஒரு "ரோபோ ரயில்' போல் செயல்பட்டு, பயணிகள் ரயிலின் முன்னால் சென்று கொண்டிருக்கும். பயணிகள் ரயிலுடன் "ரேடியோ பிரிக்குவன்சி வேவ்' தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, ரோபோ ரயில் குறிப்பிட்ட இடைவெளியில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும்.ரயில் தண்டவாளத்தில் சேதம் மற்றும் இதர பாதிப்புகள் இருந்தால், ரோபோ ரயில் தானாகவே நின்று, பின்னால் வரும் ரயிலுடன் தொடர்பு துண்டிக்கப்படும். அப்போது, அந்த ரயிலும் தானாகவே நின்று, விபத்தில் இருந்து காப்பாற்றப்படும். இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள மாணவர் பாரத் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

நியூட்டன் விதிக்கே சவால் :

நியூட்டனின் புவியீர்ப்பு விசை குறித்த விதியை, புதிய கண்ணோட்டத்தில் கண்டுபிடித்துள்ளனர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி முதுகலை இயற்பியல் (எம்.எஸ்.சி.,) மாணவர்கள். எந்த பொருளும் மேலிருந்து கீழே விழும் என்பது, புவியீர்ப்பு விசையின் அடிப்படை கோட்பாடு. ஆனால், இந்த புதிய கண்டுபிடிப்பில், கீழே இருக்கும் ஒரு பொருள் மேல்நோக்கி நகரும் விந்தையை காணலாம். இதற்கு தேவை இரண்டு புனல்கள்; இரண்டு பி.வி.சி.,குழாய்கள். வாய் பகுதியில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட புனல்கள், குழாய்களை தாங்குதளமாக கொண்டு மேல்நோக்கி நகருகின்றன. "புவிஈர்ப்பு விசைக்கு எதிராக, ஒரு பொருள் நகருவதை போன்ற உணர்வு ஏற்பட, கண்களின் "இடமாற்று தோற்றப்பிழை' என்ற இயற்பியல் தத்துவமும் ஒரு காரணம்,' என, இந்த அற்புத கண்டுபிடிப்பின் பின்னணியை விளக்கி, பார்வையாளர்களின் கண்களை விரிய வைக்கின்றனர், மாணவர்கள்.

ஓடும் வாகனத்தில் மின்சாரம் தயாரிப்பு:

தமிழகத்தின் இன்றைய முக்கிய பிரச்னையே மின் பற்றாக்குறை தான். இப்பிரச்னைக்கு தீர்வு காண, தங்களால் ஆன புதிய முயற்சியை துவக்கியுள்ளனர், கல்லூரி மாணவிகள். இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, சாலை போக்குவரத்தில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம் என்கிறார், சோபியா ஜென்னிபர் என்ற மாணவி. இவர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், ஸ்பீடு பிரேக்கருக்கு பதிலாக காற்று செலுத்தப்பட்ட ரப்பர் குழாய்களை பதிக்க வேண்டும். இந்த "ஸ்பீடு பிரேக்கர்' வழியாக வாகனங்கள் செல்லும்போது, டயர் அழுத்தம் காரணமாக, அதிக விசையுடன் காற்று உள்ளே செல்கிறது. ஒவ்வொரு முறையும் அழுத்தப்படும் காற்று, சாலையோரத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள, "ஸ்டோரேஜ் டேங்க்'ல் சேமிக்கப்பட்டு, அருகில் உள்ள காற்றாலையை இயங்க வைக்கிறது. இங்கு இயந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.தமிழக சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு சிறிது நேரம் கூட ஓய்வில்லாத நிலையில், இந்த தொழில்நுட்பத்தால் மின்சாரம் தயாரிப்பது, பெருமளவில் பலனைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

சூரிய சக்தியால் இயங்கும் வாகனங்கள்:

வாகன புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுதல், பற்றி எரியும் பெட்ரோல் - டீசல் விலை என்ற பிரச்னைகளுக்கு தீர்வாக, சூரிய ஆற்றலால் இயங்கக் கூடிய, சோலார் காரை தயாரித்துள்ளார் கொங்குநாடு கல்லூரி பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு மாணவர் பிரசன்னா.காரின் மேற்பகுதியில் சோலார் பேனல் அமைக்கப்பட்டிருக்கும். இதில் இருந்து வெளிப்படும் சூரிய ஆற்றல் காரணமாக கார் இயங்குகிறது. சிலிக்கான், "செமி - கண்டக்டராக' செயல்படுகிறது. இந்த காரை ரிமோட் கன்ட்ரோல் வாயிலாக இயக்கும் விதத்திலும் வடிவமைத்துள்ளார். காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் குணசேகர், சூரிய சக்தியால் இயங்கும் பஸ்சை செயல்விளக்கம் செய்து காண்பித்து அசத்தினார். இந்த பஸ்சை சூரிய ஒளி கிடைக்காத நேரத்திலும், குறிப்பாக இரவு மற்றும் மழைக்காலங்களிலும் இயக்கலாம். இதில் ஆற்றல் சேமிக்கும் தொழில்நுட்பத்தையும் இவர் விளக்கிக் காட்டினார். இதேபோல், கோவை இன்பன்ட் ஜீசஸ் கான்வென்ட் மாணவி செலின் ஹில்டா, சூரிய அடுப்பு தொழில்நுட்பத்தில், ஆரோக்கிய உணவு தயாரிப்பது குறித்து விளக்கினார்.சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதத்தில், மரபுசாரா எரிசக்தி தொழில்நுட்பத்தை முன்னிறுத்தி, இவர்கள் தயாரித்துள்ள அற்புத படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

பாடும் ஒலியில் ஆடும் தீ:

நெருப்புக்கு கூட இசையை ரசிக்க முடியும் என்பதை அறிவியல்பூர்வமாக மெய்ப்பித்து காட்டினர் மாணவர்கள். காஸ் அடுப்பு போன்று, சிலிண்டரில் இருந்து, குழாய் வழியாக காஸ் வினியோகிக்கப்படுகிறது. குழாயில் நீண்ட வரிசையில் துளைகள் போடப்பட்டுள்ளன. குழாயின் மறு முனையில், ஸ்பீக்கர் இணைக்கப்பட்டுள்ளது. காஸ் குழாயை பற்ற வைக்கும்போது, வரிசையாக தீ ஜுவாலைகள் அணிவகுத்து நிற்கின்றன.மறுமுனையில் மின்னாற்றலால், ஸ்பீக்கரில் பாட்டு ஒலிக்கப்படுகிறது. பாட்டு ஒலிக்கு ஏற்றவாறு தீ ஜுவாலைகள் மேல் எழுந்தும், கீழே தாழ்ந்தும் ஆடுகின்றன.
"மியூசிக்கல் பிளேம் என்ற பெயரில், நாங்கள் கண்டுபிடித்த இந்த தொழில்நுட்பம், வாயு மூலக்கூறுகளை அடிப்படையாக கொண்டது' என்கிறார், கொங்குநாடு கல்லூரி எம்.எஸ்.சி., முதலாமாண்டு மாணவர் பிரபாகரன்.
விமானத்தை வீழ்த்தும் துப்பாக்கி:


அறிவியல் கண்காட்சி என்றால், பாதுகாப்பு தளவாட பொருட்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே. இதை வலியுறுத்தும் விதத்தில், என்.சி.சி., மாணவர்கள் அதிநவீன துப்பாக்கிகளையும் கண்காட்சிக்கு வைத்திருந்தனர். இவை ராணுவத்தின் காலாட்படைப் பிரிவில் இருந்து வரவழைக்கப்பட்டவை. இதில், முக்கியமானது, ஆகாயத்தில் புள்ளியாக பறக்கும் எதிரி நாட்டு விமானத்தை, குருவி போல் சுட்டு வீழ்த்தும் இயந்திர துப்பாக்கி.

ராணுவ அதிகாரி ஜுவாலா கூறுகையில், ""9.2 கிலோ எடை கொண்ட இந்த இயந்திர துப்பாக்கியை ஒருவர் மட்டும் கையாள முடியாது. துப்பாக்கியை இயங்க வைக்கும்போது இருவர் வேண்டும். 360 டிகிரி கோணத்தில் சுழன்று தாக்கும் இந்த துப்பாக்கியில் 30 புல்லட்கள் இருக்கும். ஒரு முறை கைவைத்தால், 28 புல்லட்கள் தொடர்ச்சியாக வெளியேறி, எதிரி விமானத்தை சுக்கு நூறாக்கும்,'' என்றார். இதேபோல், பல்வேறு மாடல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் கண்காட்சியில் இடம்பெற்றன.

- செய்தியாளர், தினமலர் -

வெள்ளி, 30 நவம்பர், 2012

புதன் கோளில் பனிப்பாறைகள் : நாசாவின் செயற்கைக்கோள் கண்டுபிடிப்பு

மெர்குரி கிரகத்தில் பனிப்பாறைகள் : நாசாவின் செயற்கைக்கோள் கண்டுபிடிப்பு

First Published : 30 November 2012 11:15 AM IST
சூரியனுக்கு மிக அருகில் உள்ள மெர்குரி கிரகத்தின் ஒரு பகுதி முழுவதும் பனிப்பாறைகள் நிறைந்திருப்பதை நாசாவின் செயற்கைக் கோள் கண்டுபிடித்துள்ளது.
நாசா அனுப்பிய மெசஞ்சர், கடந்த 2 ஆண்டுகளாக நடத்திய ஆய்வின் அடிப்படையில், நாசா 3 கட்டுகரைகளை வெளியிட்டுள்ளது.
அந்த கட்டுரையில், சூரியனுக்கு மிக அருகில் உள்ள மெர்குரி கிரகத்தின் தெற்குப் பகுதியில் பனிப்பாறைகள் நிறைந்திருக்கிறது. இது  விஞ்ஞானிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரிய ஒளி படாத மற்றொரு பகுதியில்தான் பனிப்பாறைகள் காணப்படுவதாகவும், அதன் ஆழம் குறித்து கணிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 22 நவம்பர், 2012

எலிகளை விழுங்கும் செடி கண்டுபிடிப்பு !

எலிகளை விழுங்கும் செடி கண்டுபிடிப்பு !
Photo: எலிகளை விழுங்கும் செடி கண்டுபிடிப்பு !

மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி, கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப் பீர்கள். ஆனால், உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை, விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த செடியின் இலைகள், உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

செடி, கொடிகள் அடங்கிய தாவரங்கள் சுத்தமான சைவம்தான். அவைகளுக்கு உணவே, சூரிய ஒளி, தண்ணீர், உரங்கள் தான். அதுவும் வேர்கள், இலைகள் மூலம் உணவை கிரகித்துக் கொள்ளும். ஆனால், அசைவ உணவை சாப்பிடும் தாவரம் பற்றிய தகவல் இப்போது தான் வெளியே வந்துள்ளது.

பிரபல தாவர இயல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன், அலாஸ்டியர் ராபின்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பிலிப் பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப்பகுதியில் செடி, கொடிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போதுதான், இந்த மாமிசம் உண்ணும் தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மிஷனரிகள் இந்த அபூர்வ தாவரம் பற்றி கேள்விப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ச்சி செய்த போதுதான், இந்த தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இது குறித்து மெக்பெர்சன் கூறியதாவது:
இந்த கண்டுபிடிப்பு மிக, மிக முக்கியமானது. 21ம் நூற்றாண்டு வரை, இப்படி ஒரு தாவரம் இருப்பதை கண்டுபிடிக்காமல் இருந்ததே மிகவும் அதிசயம் தான். இயற்கை உலகின் அதிசயம், அழகைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ள மிகவும் பாடுபட்டவர் சர்.டேவிட் அட்டன்பரோ. எனவே, அவர் பெயரிலேயே இந்த தாவரத்தை அழைக்க முடிவு செய்துள்ளோம். இனி, இந்த தாவரம், “நேபன்தஸ் அட்டன்பரோகி’ என அழைக்கப்படும். இந்த தாவரம் சிவப்பு, பச்சை நிறத்தில் உள்ளது. இதன் தண்டு, நான்கு அடி உயரம் வரை வளரும். விக்டோரிய மலை சரிவுகளில் பெரும் புதர்களுக்கு மத்தியில் மட்டுமே இந்த செடி வளர்கிறது.

இந்த செடியின் இலைகள் தான், அந்த செடிக்கு வாய் போல் உள்ளது. அதன் மேல் அமரும் எலி போன்றவற்றை அப்படியே பிடித்துக் கொள்கிறது. இலையில் சுரக்கும் ஒருவித வழுவழுப்பான என்சைம்களில் இருந்து எலிகள் தப்ப முடியாது. பின்னர், அந்த என்சைம்களே எலிகளை கொன்று விடுகிறது. எலிகள் மட்டுமல்ல, பூச்சிகள் போன்ற சிறிய உயிரினங்களையும் இந்த தாவரம் கபளீகரம் செய்து விடும். தாவர இயலில் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது.
— இவ்வாறு மெக்பெர்சன் கூறினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழக தாவர இயல் முன்னாள் பேராசிரியர் இவர். 2007 முதல் இந்த தாவரம் பற்றி ஆராய்ச்சிகளை மேற் கொண்டுள்ளார். தன் ஆராய்ச்சியில், மாமிச தாவரம் பற்றிய உண்மைகளை முழுமையாக கண்டுபிடித்த பின்னர், சமீபத்தில் இந்த அதிசயத்தை உலகிற்கு அறிவித்தார்.

மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி, கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப் பீர்கள். ஆனால், உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை, விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த செடிய

ின் இலைகள், உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

செடி, கொடிகள் அடங்கிய தாவரங்கள் சுத்தமான சைவம்தான். அவைகளுக்கு உணவே, சூரிய ஒளி, தண்ணீர், உரங்கள் தான். அதுவும் வேர்கள், இலைகள் மூலம் உணவை கிரகித்துக் கொள்ளும். ஆனால், அசைவ உணவை சாப்பிடும் தாவரம் பற்றிய தகவல் இப்போது தான் வெளியே வந்துள்ளது.

பிரபல தாவர இயல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன், அலாஸ்டியர் ராபின்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பிலிப் பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப்பகுதியில் செடி, கொடிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போதுதான், இந்த மாமிசம் உண்ணும் தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மிஷனரிகள் இந்த அபூர்வ தாவரம் பற்றி கேள்விப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ச்சி செய்த போதுதான், இந்த தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இது குறித்து மெக்பெர்சன் கூறியதாவது:
இந்த கண்டுபிடிப்பு மிக, மிக முக்கியமானது. 21ம் நூற்றாண்டு வரை, இப்படி ஒரு தாவரம் இருப்பதை கண்டுபிடிக்காமல் இருந்ததே மிகவும் அதிசயம் தான். இயற்கை உலகின் அதிசயம், அழகைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ள மிகவும் பாடுபட்டவர் சர்.டேவிட் அட்டன்பரோ. எனவே, அவர் பெயரிலேயே இந்த தாவரத்தை அழைக்க முடிவு செய்துள்ளோம். இனி, இந்த தாவரம், “நேபன்தஸ் அட்டன்பரோகி’ என அழைக்கப்படும். இந்த தாவரம் சிவப்பு, பச்சை நிறத்தில் உள்ளது. இதன் தண்டு, நான்கு அடி உயரம் வரை வளரும். விக்டோரிய மலை சரிவுகளில் பெரும் புதர்களுக்கு மத்தியில் மட்டுமே இந்த செடி வளர்கிறது.

இந்த செடியின் இலைகள் தான், அந்த செடிக்கு வாய் போல் உள்ளது. அதன் மேல் அமரும் எலி போன்றவற்றை அப்படியே பிடித்துக் கொள்கிறது. இலையில் சுரக்கும் ஒருவித வழுவழுப்பான என்சைம்களில் இருந்து எலிகள் தப்ப முடியாது. பின்னர், அந்த என்சைம்களே எலிகளை கொன்று விடுகிறது. எலிகள் மட்டுமல்ல, பூச்சிகள் போன்ற சிறிய உயிரினங்களையும் இந்த தாவரம் கபளீகரம் செய்து விடும். தாவர இயலில் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது.
— இவ்வாறு மெக்பெர்சன் கூறினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழக தாவர இயல் முன்னாள் பேராசிரியர் இவர். 2007 முதல் இந்த தாவரம் பற்றி ஆராய்ச்சிகளை மேற் கொண்டுள்ளார். தன் ஆராய்ச்சியில், மாமிச தாவரம் பற்றிய உண்மைகளை முழுமையாக கண்டுபிடித்த பின்னர், சமீபத்தில் இந்த அதிசயத்தை உலகிற்கு அறிவித்தார்.
 

புதன், 21 நவம்பர், 2012

பெரு வியாழன் கண்டுபிடிப்பு

வியாழனைப் போன்று புதிய  கோள்  கண்டுபிடிப்பு: 13 மடங்கு பெரியது
வியாழனைப் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு: 13 மடங்கு பெரியது
வாஷிங்டன், நவ.21-

கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.

அப்போது சூரிய குடும்பத்தில் மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்தனர். அது சூரியனை விட 2 1/2 மடங்கு பெரியதாக இருந்தது. அதே நேரத்தில் வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரியதாக காணப்பட்டது. நெப்டியூனை விடவும் பெரியதாக உள்ளது. இதற்கு 'சூப்பர் ஜுபிடர் (வியாழன்)' என்று பெயரிட்டுள்ளனர்.

கடந்த 4 ஆண்டு ஆய்வுக்கு பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்பா ஆண்ட்ரோ மேடு என்ற நட்சத்திரம் அருகே மங்கலாக தெளிவற்ற நிலையில் இது காணப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.