face-book லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
face-book லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 அக்டோபர், 2013

எவரெசுட்டு உச்சியில் தமிழ் முழங்கிய தமிழ் இளைஞர்

உலகின் மிக உயரமான மலை உச்சியான எவரெசுட்டு சிகரத்தில் ஏறி தமிழக இளைஞர் சென்னையைச் சேர்ந்த எசு..சந்தோசுகுமார் (வயது27) சாதனை படைத்துள்ளார். இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்ததும் கையில் எடுத்து சென்ற 'தமிழ் வாழ்க' என்ற பேனரை நெஞ்சில் ஏந்தியபடி தமிழ் வாழ்க என்று சத்தமாக முழக்கமிட்டுள்ளார்.

இந்த சாதனையை கேட்டு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகமுமே பெருமை கொண்டது. இந்த சாதனை தமிழர் 'தினத்தந்தி'க்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

எனது பூர்வீகம் புதுச்சேரி. ஆனால், சென்னையில் வளர்ந்தேன். படித்ததும் இங்குதான். எனது அப்பா சங்கரன் துபாயில் வங்கி அதிகாரியாக இருக்கிறார். அம்மா அமுதா இல்லத்தரசி. தங்கை அபிநயா துபாயில் இளங்கலை பட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். பிளஸ் டூ வரை சென்னையில் படித்த நான், சிங்கப்பூரில் பி.இ. (எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்) பட்டம் பெற்றேன். எனக்கு இயல்பாகவே ஓட்டத்திலும், சைக்கிளில் நீண்டதூரம் செல்வதும் பிடிக்கும்.

சிங்கப்பூரில் உள்ள 'பார்கலேஸ் கேபிடல்' வங்கியில் திட்ட அதிகாரியாக வேலை பார்த்து வருகிறேன். அங்கிருந்தபோது வெளிநாட்டு நண்பர் ஒருவர் அறிமுகமானார். அவர் மூலம் மலை ஏற்ற பயணத்தில் ஆர்வம் ஏற்பட்டது. முதல் முதலில் அவருடன் சேர்ந்து 2006-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கடல் மட்டத்தில் இருந்து 9188 அடி உயரத்தில் உள்ள 'ரிஞ்சானி' என்ற மலையில் ஏறினேன். மலை உச்சிக்கு செல்ல 2 நாட்கள் ஆனது.

அதையடுத்து சிங்கப்பூரில் மலையேற்ற பயணம் தொடர்பான பயிற்சி எடுத்து கொண்டேன். பிறகு 2008-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் 19340 அடி உயரத்தில் உள்ள 'கிளிமஞ்சாரோ' என்ற சிகரத்திற்கு 6 நாட்களில் சென்றேன். இதையடுத்து எவரெஸ்ட் மலை அடிவாரத்திற்கு (பேஸ் கேம்ப்) 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 5 பேருடன் சென்றேன்.

கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த அடிவாரத்திற்கு 12 நாட்களில் போய் சேர்ந்தோம். அங்கிருந்து எவரெஸ்ட் சிகரத்தை பார்த்தபோது அதன் அழகில் மயங்கினேன். அந்த பனி மலையில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்ற வேகமும் அப்போதே ஏற்பட்டது.

12 ஆயிரம் கிலோ பொருட்களுடன்...

பின்னர் திபெத் நாட்டில் உள்ள உலகத்தில் 6-வது உயரமான பனிமலையில் (26900 அடி உயரம்) ஏறினேன். இந்த மலை உச்சிக்கு செல்ல 40 நாட்கள் ஆனது. அப்போதுதான் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி விட முடியும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. அதைத்தொடர்ந்து கடல் மட்டத்தில் இருந்து 29035 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கு ஆயத்தமானேன். நிறைய பணம் செலவாகும் என்பதால் விளம்பரதாரரும், உரிய பயிற்சியும் தேவைப்பட்டது. அப்பா, அம்மா, தங்கை, உறவினர்கள், நண்பர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேபாள நாட்டு தலைநகர் காத்மாண்டு போனேன். அடுத்தநாள் அங்கிருந்து இமயமலை அடிவாரத்தில் உள்ள லுக்லா கிராமத்திற்கு நான் உள்பட 7 பேர் போனோம். மற்ற 6 பேரும் ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். எங்களுடன் வந்த மற்றவர்களையும் சேர்த்தால் மொத்தம் 24 பேர்.

எவரெஸ்ட் போய் வர 60 நாட்கள்

எங்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, இறங்கி வருவதற்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களின் மொத்த எடை 12 ஆயிரம் கிலோ. எவரெஸ்ட் மலை அடிவாரத்திற்கு (பேஸ் கேம்ப்) இந்தப் பொருட்கள் மாடுகள், ஆட்கள், ஹெலிகாப்டர் மூலம் எடுத்து வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து நாங்கள் சாட்டிலைட் போன், சோலார் சார்ஜர், சாப்பாடு, ஆக்ஸிஜன் பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.

தினமும் 6 மணி நேரம் நடந்தோம். 12 நாட்களில் எவரெஸ்ட் மலை அடிவாரத்தை சென்றடைந்தோம். அதற்கு மேலே மொத்தம் 4 கேம்ப்கள் உள்ளன. பனிப்பாறைகள் அந்தப் பகுதியில் காக்காவை மட்டும் காண முடிந்தது. சில குருவிகளும் கண்ணில் தென்பட்டன. அப்போதுதான் பறவைகள் குறிப்பாக காகம் இவ்வளவு உயரத்திற்கு வருகிறதே என்று ஆச்சரியப்பட்டேன். கடுங்குளிர் வாட்டி வதைத்தது. ஆக்ஸிஜனும் குறைவாக இருந்ததால் உடல்நலம் பாதித்தது. ஆக்ஸிஜன் பாட்டில்கள் அப்போது கைகொடுத்தன. சூரியன் சுட்டெரித்ததில் எனது முகத்தில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிப்பது என்ற மனஉறுதியும், வேகமும் கொஞ்சமும் குறையவில்லை.

எதிர்கால லட்சியம்

எவரெஸ்ட் சிகரத்தை நெருங்க, நெருங்க மலையின் அழகு பிரமிக்க வைத்தது. நிலவும், நட்சத்திரங்களும் மிக அருகில் இருப்பதாக உணர்ந்தோம். எங்களுடன் வந்த 24 பேரில் 15 பேர் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தோம். அந்த மலை உச்சியில் ஏறியதும் தமிழன் என்ற உணர்வில் கையில் எடுத்துச் சென்ற 'தமிழ் வாழ்க' என்ற பேனரை நெஞ்சில் ஏந்தி 'தமிழ் வாழ்க' என்ற உரக்க முழக்கமிட்டேன். மற்றவர்களும் அவரவர் நாட்டின் பெயரைச் சொல்லி மகிழ்ந்தனர். எவரெஸ்ட் சிகரத்தைஏறுவதற்கு 55 நாட்கள் ஆனது. 5 நாட்களிலே கீழே இறங்கி வந்துவிட்டோம்.

ஆசியாவில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்பட இதுவரை 3 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறிவிட்டேன். இவை தவிர அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா ஆகிய 4 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறி மொத்தம் 7 கண்டங்களில் உள்ள சிகரங்களிலும் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

இவ்வாறு சந்தோஷ்குமார் கூறினார்.

சந்தோஷ்குமாரின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று அவரது தாய் அமுதாவும், பாட்டி மகாலட்சுமியும் கூறினார்கள். சந்தோஷ்குமாருக்கு முன்னதாக 1997-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த பி.சண்முகவடிவேலு என்பவர் தனது 28-வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-- இளஞ் சித்திரன்
1Like · ·

வியாழன், 26 செப்டம்பர், 2013

திலீபன்கள் கனவு நனவாகத் தமிழீழக் கொடி பாரெங்கும் பறக்கட்டும்!

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/625490_459978357449482_1878770218_n.jpg 
 
ஆம் ! தியாக திலீபன் பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.
ஆம்! அடங்காப் பசியோடுதான் இருக்கிறான். தீரா விடுதலைப் பசியோடு 26 ஆண்டுகளாய் தமிழீழத்தின் விடிவுதன்னை வானத்திலிருந்து மூடா விழிகளோடு உறங்காத கண்மணியாய் நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறான்! எம் தலைவன் எம்மீது சுமத்திச் சென்ற
பணிகளைப்பற்றிய நம் பொறுப்பைப் பற்றி வினா எழுப்புகிறான்.
மிகவிரைவில் அவனது பசியாறி இளைப்பாற தமிழீழம் மிக விரைவில் படைக்க சூளுரைப்போம்!!!

 

புதன், 1 மே, 2013

புகழுக்குரிய அருந்திறல் விசாலினி

தற்போது வயது பன்னிரண்டு(பிறந்த தேதி:23.05.2000). பதினொரு வயதிலேயே IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம்.

இந்தியா அதுவும் தமிழகம் என்பதால் தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள்.
Like · ·

சனி, 13 ஏப்ரல், 2013

முகநூலால் உடனடித் தீர்வு!








http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_68878220130412230242.jpg

முகநூலால்  உடனடி த் தீர்வு!

"பேஸ்புக்' மூலம், பொதுமக்களின் பிரச்னையை உடனடியாக தீர்க்கும், நகராட்சி தலைவி சுமித்ரா ரவிக்குமார்: நான், தேவக்கோட்டை நகராட்சியின் தலைவராக, பணியாற்றி வருகிறேன். நகராட்சித் தலைவியாக பொறுப்பு வகிப்பதற்கு முன், "பேஸ்புக்' எனும் முகநூல் போன்ற, சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தியதில்லை. ஆனால், அதன் பயன்பாடுகள் பற்றி, நிறைய கேள்விபட்டிருக்கிறேன்.பெண்ணான என்னை, ஒரு நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுத்த பொதுமக்களுக்கு உதவும் வகையில், பேஸ்புக் வழியாக, நகராட்சி தொடர்பான செய்திகளை, மக்களிடம் உடனடியாக கொண்டு செல்லவும், மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து, அவற்றை விரைவாக நிறைவேற்ற முடியும் என்ற எண்ணத்தில், பேஸ்புக்கான என் பகுதியை, "சேர்மன் ஆப் தேவக்கோட்டை' என்ற பெயரில் ஆரம்பித்தேன்.ஒருமுறை, தேவக்கோட்டை தியாகிகள் சாலையில், மணல் மற்றும் கற்கள் குவியலாக கொட்டப்பட்டிருப்பதால், போக்குவரத்துக்கு இடையூறாகவும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு இடறி விழும் அபாயம் இருப்பதாகவும், ஒரு இளைஞர், தகவல் அனுப்பியிருந்தார். உடனே அந்த இளைஞரின் தகவலை புகாராக எடுத்து, சாலையில் உள்ள மணல் மற்றும் கற்களை அகற்றி சாலையை சுத்தப்படுத்தினேன்.
அதுபோல், தேவக்கோட்டை தினசரி மார்க்கெட் பின்புறமாக, புதிதாக பூ மற்றும் பழ மார்க்கெட் கட்ட, நகராட்சி முயன்ற போது, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்னையை, உடனடியாக மக்களிடம் கொண்டு சென்று, அவர்களின் கருத்துக்களை அறிய, பேஸ்புக் உதவியாக இருந்தது.தண்ணீர் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மக்களின் தேவை மற்றும் பொது பிரச்னையை தீர்ப்பது என, ஓரிடத்திலிருந்தே செயல்படுத்த முடிகிறது. இதனால், பொதுமக்கள் எங்கும் அலைந்து திரிந்து, அலைக்கழிக்கப்படாமல் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்படுகிறது.

சனி, 6 ஏப்ரல், 2013

Promote Linguistic Equality: Hindi is Not National Language of India

 
 Promote Linguistic Equality:
Hindi is Not National Language of India
 
Dear Friends, Check the protests by our North-East students for the linguistic rights in Delhi University. Recently launched a protest asking Delhi University to stop indirectly imposing Hindi. Students released memorandum to Ministry of HRD, you could see the excerpt of it below and full copy in the link.

Its Good to see youth from North-East actively voicing against Hindi imposition, and we already have many North-East Friends in this ca. 1000 membered group. Hopefully youth from various linguistic groups could start networking with each other, towards our common goal of bringing constitutional amendment that no single language is sole official language of union, all 8th Schedule Languages are official language of union and the lethargy of updating 8th schedule list must be condemned and be updated regularly.

_________________________ ________________________ ____________________
Excerpt From NEFIS Memorandum:

Respected Sir,

We are submitting this memorandum to register our deeply felt sense of resentment against the new course structure that is to be introduced by Delhi University next academic year onward. It has come to our notice that as per the requirements of the new course structure it would become compulsory for every student to learn either Hindi or one of the Modern Indian Languages (MIL) as part of the foundational course. [please see Annexure I attached herewith has acopy of the new proposed syllabus displayed on Delhi University website.] Sir,we are certain that your good office is aware of the fact that MILs consist only of the languages recognized by the 8th schedule of the Constitution of India which consists of Assamese/Axomiya, Bengali, Bodo, Dogri,Gujarati, Hindi, Kannada, Kashmiri, Konkani, Maithili, Malayalam, Manipuri (also Meitei or Meithei), Marathi, Nepali, Oriya, Punjabi, Sanskrit, Santhali, Sindhi,Tamil, Telugu and Urdu. Even from this narrow list, the university has the infrastructure/faculty to offer only a very small number of languages. This means that the languages of a number of communities from all parts of India and particularly the North-East would not be offered to the students by the university. We consider this dismal situation a result, not of the inadequacy of our respective languages but a by-product of the long standing bias and neglect on part of the government of India and the respective state governments in ensuring that the distinct cultural identity and dignity of the marginal/minoritygroups and communities is preserved. The fact that the languages of so many communities/marginal groups is not given due recognition is not accidental but the unfortunate result of the insolent attitude of an arrogant state that chooses to impose its culture and language upon marginal groups/communities inthe manner of a haughty conqueror.

Students from the North-East, if they are forced to opt for the compulsory language course,they would either fail the examination or would pass put with lower grades. If this is allowed to happen then the disadvantage of the youth from the North-East in seeking jobs in the labour market would become worse.

Sir, it is high time that the government recognizes our right to equality of opportunity with the students from the rest of thecountry. The government and the institutions run by it cannot shirk from their responsibility to pay particular attention to the special needs of the vulnerable sections of the society, but so far the attitude of the University administration has been most disappointing. Despite three protests and the submission of a memorandum by us, the University administration did not deem it necessary to even reply to us and instead treated us like criminals. Gates to the dean’s office, which usually remain open for thorough fare, were shut in our faces, tight security was clamped down, heavily armed police was called in and we were video recorded every time we tried to meet the Dean or theVice-Chancellor to convey our message. The security guards hurled dirty abuses upon us and some of us were even manhandled. Apart from this the University administration has even been resorting to making individual telephone calls and intimidation of our organizers. This is hardly a record becoming of the premier institution of learning of a country that claims itself to be the world’s largest democracy. Sir it is not the sheer size that makes a country great, the spirit of inclusiveness and sensitivity toward the vulnerable sections are by far the much more important criteria. The repressive tactics used by the University administration has lead us to lose faith that the institutions run by the government of India are capable of living up to the highest standards ofdemocratic spirit and inclusiveness that the oppressed minorities of thiscountry expect of it.

We appeal to the good office of your officeto kindly intervene into this matter and ensure the following:
1. Make the compulsory Hindi/MIL course optional.
2. Take immediate steps to develop the infrastructure, adequate faculty and syllabus for the MILs presently offered by the University.
3. Immediately look into the matter of students who were illegally forced to take the compulsory Hindi exam in the older format resulting in their failure in the University examination and ensure that they are provided the best possible remedy
4. Provide other kinds of remedies/reliefs that this ministry may deem fit, apt and just to ensure the welfare of the affected students.

https://www.facebook.com/notes/nefis-delhi/memorandum-to-be-submitted-tomorrow-to-the-ministry-of-human-resource-developmen/124991394360198
               To,                                                                                                                                 Date: 5.4.2013 Hon'bleMinister The Ministry of Human Resource Development, Shastri Bhawan, New Delhi,  110001.                                ...

Letter of Maraimalai Ilakkuvanar to Arvind kejriwal

Maraimalai Ilakkuvanar
20 minutes ago near Chennai ·

Yahoo! Mail
Re: Appeal from Arvind Kejriwal.
Saturday, April 6, 2013 4:50 AM
From:
"maraimalai"
To:
"Arvind kejriwal"
Cc:
contact@aamaadmiparty.org
Bcc:
"maraimalai Face book" , "ilakkuvanar maraimalai"
Dear Arvind Kejriwal,
Thank you for your mail inviting me to join your movement and appeal for a donation.
I agree with your observation that"Most of today's problems are due to corrupt politics. Unless it is cleansed, nothing would improve. "
At the same time due to the wrong and rotten approach of the politicians people are suffering a lot.For example,take the "Koodankulam Atomic powerplant project" which is a threat to the lives of Fishermen living in the surrounding area.It is also an impending hazard
detrimental to the ecological system.Due to the mixing of the waste the ocean itself may turn as a poison to the flora and fauna.
Thousands and thousands of village peoiple are conducting Dharnas and holding fasts for more than a period of Four months there.I wonder how can your party be termed as Aamaadmi Party,while you are not at all uttering even a word about the plight of the people there at Koodankulam?
The Genocide conducted by Rajapakshe at SriLanka is condemned by the people throughout the world and almost the entire humankind is pressing the U.N. to conduct an impartial enquiry about the sufferings of the Eezham Tamils.
You never spoke a word expressing your condmnation of the atrocoties committed by Rajapakshe government.Is it not the duty of a humanist to sympathise the people who are tortured and tormented by a racist military junta under the mask of Anti-terorism?
It is quite clear that your whole attention is concentrated at Delhi.
"Corruption has reached such levels that it is becoming impossible for the common man to survive. In Delhi, It is becoming impossible for them to even pay water and electricity bills which are highly inflated on account of corruption. The story of Delhi could well be the story of India."
You want to threaten the Govt.of India as well as multimillionares engaged in the expansion of their corporate development.
I am sorry you have to learn more things and acquire a broad vision before you float a party.
You are under the assumption that Delhi is India or India is Delhi.
Please see the plights and perils of the people at Assam,Nagaland,Andhra and Tamilnadu and assess a possible action programme to redress the grievances of people from Himalayas to Capecomorin.
After you derive a pragmatic plan of action let us know it and we will surely with you.
Thank you,
Maraimalai Ilakkuvanar
Please have a glance:
http://www.scribd.com/milakkuvanar




--- On Fri, 4/5/13, Arvind kejriwal wrote:


From: Arvind kejriwal
Subject: Appeal from Arvind Kejriwal.
To: maraimalai@yahoo.com
Date: Friday, April 5, 2013, 2:28 PM

Aam Admi Party

My Fellow Indian,

Under Anna's leadership, India came on streets against corruption. The people demanded a strong anti-corruption law. The government did not agree. None of the parties agreed. Obviously, they couldn't have agreed because if they passed a strong Jan Lokpal Bill, most of the politicians would be in jail and their properties would be confiscated.

My friend, our entire political system has become rotten. Most of today's problems are due to corrupt politics. Unless it is cleansed, nothing would improve. That's why we entered politics - we realized that staying away will not work. We have now formed the AAM AADMI PARTY. This party does not seek to capture power; it seeks to restore power back to the people.

Corruption has reached such levels that it is becoming impossible for the common man to survive. In Delhi, It is becoming impossible for them to even pay water and electricity bills which are highly inflated on account of corruption. The story of Delhi could well be the story of India. The time has come for people to rise up together and say that they will not allow this corruption.

To give people strength to protest, to remove fear from their minds and join the civil disobedience movement I have been sitting on an indefinite fast at a jhuggi colony in Sundar-nagri , New Delhi since 23rd March. More than 9 lakh people of Delhi and several eminent and patriotic citizens of the country such as Shri Annaji Hazare , Justice Krishna Iyer, Admiral Ramdas and Shri J.M. Lyngdoh have already pledged support towards this campaign.

Gandhiji said that politics devoid of honesty and spirituality is disastrous for the country. We have to change the politics of this country. I am confident that together, we can.

I seek your time and money in this mission as we are all working towards a common cause. Most parties are funded by big corporates for something in return but this will not happen in Aam Aadmi Party. This party would be funded by Aam Aadmi and Aam Aurat of this country. That would be the beginning of an honest and transparent politics, unfortunately which runs on black money today

Whatever amount you contribute – small or big – is not important. Every paisa matters because it is honest, and will go a long way in redefining the politics. In the interest of financial transparency, we publish the names of all the donors every week on our website.
Donate now

You can donate online through national or international debit or credit cards or internet banking OR send a DD or cheque in favour of "Aam Aadmi Party" at the following address:
A-119, Kaushambi, Ghaziabad – 201010, UP.

OR If you wish to just stay connected, kindly fill out the form here to give us your contact details, this will help us work together, Kindly click here to stay in touch.

Do not hesitate to write to us at contact@aamaadmiparty.org, if you have any questions or suggestions. You may also like to call Akash at 09717460029 for further queries. Click here to check my video to confirm the authenticity of this mail.

Kindly forward this mail as widely as possible. Every effort helps, in the fight against corruption.

Jai Hind.

Warm regards,
Arvind Kejriwal
Aam Aadmi Party
P.S.: Do you remember that I had exposed details of Swiss bank accounts of Ambani brothers and some other persons? Now, Mukesh Ambani has sent defamation notices to all TV Channels for telecasting my press conferences live. Click here to read defamation notice. In response, I wrote a letter to Mukesh Ambani recently. Click here to read my response. Response is available in Hindi as well as English.
www.aamaadmiparty.org Follow us on



This is an Affiliate campaign and you have received this mail as you have opted in to receive promotional emails.



--
If you do not wish to receive any further communications, please click here.
Maraimalai Ilakkuvanar on Scribd
www.scribd.com
Please enter your email address below to reset your password. We will send you an email with instructions on how to continue.
Like · ·

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

தமிழ்நாட்டுத் தெருக்களுக்கும் இடங்களுக்கும் பிற மொழிப் பெயர்கள்!

நம் நாடு தமிழ்நாடு என எண்ணக்கூடாது என்பதற்கான சான்றுதான் இப்பெயர்ப்பட்டியல். பதிவிற்கு நன்றி. இந்நேரத்தில் நான் என் கட்டுரை ஒன்றின் பகுதியைப் பதிவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 1996 நவம்பரில் நடத்திய ‘தமிழ் ஆட்சிமொழி : சிக்கல்களும் தீர்வுகளும்’ என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் ‘’தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் - ஓர் இனிய கனவு’’ என்னும் தலைப்பில் நான் அளித்த கட்டுரையின் ஒரு பகுதி. (இதன் முழுமையையும் முன்பே முனைவர் அருள் நடராசன் கேட்டிருந்தார்.)
பெயர் சூட்டல்
தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், நகர்கள் முதலியவற்றிற்குப் பெயர் சூட்டும் பொழுது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநாகராட்சி அமைப்புகள் தமிழ் வளர்ச்சித் துறையினரின் ஒப்புதலைப் பெறுவதில்லை. அவற்றைத் தமிழ் வளர்ச்சி இயக்குநருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஆணையை மாற்றித் தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஒப்புதல் பெற வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டும் பின்பற்றுவதில்லை. எனவே, எலலாம் அயல்மொழியாய் மாறி வருகிறது. ஊர்தோறும் பதவிப் பெயர்களைக் கொண்டு நகர்களுக்குப் பெயர் சூட்டுகின்றனர். எனவே, என்.சீ.ஓ.காலனி, டி.ஆர்.ஓ.காலனி, தாசில்தார் காலனி, சர்வேயர் காலனி, எஞ்சினீயர் காலனி, போன்று அயல்மொழிப் பெயர்கள் இடம் பெற்று விடுகின்றன. இருக்கின்ற தமிழ்ப்பெயர்களையும் திருத்தமாக எழுதுவதில்லை. பிற மாநிலங்கள், நாடுகளில் பெயர்களை அவரவர் மொழிக்கேற்ப திருத்தமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் அமைந்து தொடர்பான ஆணைகள் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன. தமிழ்நாட்டில்தான் ஆணைகள் பெயரளவு ஆணைகளாக இருக்கின்றன. எதிர்ப்புக் குரல்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் இவ்வாறு எதிராகக் கூறுவோர் விரட்டப்படுவார்கள் என்ற அச்சத்தாலும் மண்ணிற்கேற்ப ஒத்துப்போவோம் என்ற உணர்வினாலும் அமைதியாக இருக்கின்றனர். இங்கே பெயர் மாற்றத்தால் தமிழ் வளர்ந்துவிடுமா என்ற குரல்தான் ஒலிக்கிறதே தவிர, தமிழ் வளர்ச்சியில் பெயர்மாற்றமும் தமிழ்ப்பெயர் சூட்டலும் சிறப்பான இடத்தை வகிக்கின்றன என்பது உணர்த்தப்படுவதில்லை. பெயர் மாற்றம் தொடர்பான முழு உரிமையும் நம் அரசிற்கு வேண்டும். தகவல் மட்டும் நடுவணரசிற்குத் தொடர் நடவடிக்கைக்காகத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்ப் பெயர் சூட்டப்படும் பொது நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் உள்ளவர்களே மிகுதியாக உள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்பது ‘பீடி யுனிவர்சிட்டி’ எனச் சுருக்கப்படுவதுபோல் சுருக்கப்படக்கூடாது என்னும் நிலை வர வேண்டும். பேரறிஞர் அண்ணா தலைமைச் செயலகம் எனக் குறிப்பிட்டது செகரட்டேரியட்டை மட்டும்தான் என்று கூறி இன்றுவரை செயிண்ட்சார்சு கோட்டை எனக் குறிப்பவர்களே மிகுதியாக உள்ளனர். செயலக முகவரிகள், அமைச்சர்களின் மடலேடுகள், விளம்பரங்கள் ஆகியவற்றிலும் இவ்வாறு குறிக்கப்படுவதை நாம் காணலாம். தலைமைச் செயலகம் தவிர, நடுவணரசின் அலுவலகங்கள், பல துறை அலுவலகங்கள் உள்ளன என்பது உண்மைதான். ஏன் அவர்கள் தலைமைச் செயலக வளாகம் எனக் குறித்திருக்கக்கூடாதா? இத்தகைய போக்குகளைப் போக்க, தமிழருக்கே உரிய ஐந்நிலப் பாகுபாட்டின் சிறப்பை உணர்த்த, ஐந்திணைக் கோட்டை என்று பெயர் சூட்டக்கூ்டாதா? அல்லது தமிழ்க்கோட்டை என்று அழைக்கக்கூடாதா?
பெரும்பாலான அமைச்சர்கள் குடியிருக்கும் தெருவின் பெயர் ‘கிரீன்வேய்சு சாலை’ என்றுதான் இருக்க வேண்டுமா? பைந்தமிழ்ச்சாலை என்று பெயர் மாற்றக்கூடாதா? வெள்ளையர் தெரு, கறுப்பர் தெரு என்ற இனப்பாகுபாடு தேவைதானா? வெள்ளிவீதியார் தெரு அல்லது வெள்ளை நாகனார் தெரு, கார் நாற்பது தெரு, எனப் புலவர்கள், நூல்கள் பெயர்களைச் சூட்டலாமே! இன்னும் பொருத்தம் இல்லாத பெயர்கள் பல உள்ளன. காவல் ஆணையர் அலுவலகத் தெருவில் அவ்வலுவலகமே இப்பொழுது இல்லை. சங்கப்புலவர் காவற்பெண்டு பெயரைச்சூட்டலாமே! மேலும் அவ்வாறான பெயர்கள் தமிழில் அமையாமையால் அவற்றின் அடிப்படையிலான பேருந்து நிறுத்தங்கள், கடைகள், அலுவலகங்கள் முதலியனவும் அயல்மொழிப் பெயரில் அமைந்து விடுகின்றன. எடுத்துக் காட்டாக முனிசிபல் காலனி மதுரையில் உள்ளது. அப்பெயரில் அஞ்சலகம் உள்ளது. (மதுரை, மாநாகராட்சி ஆன பின்பும் இப்பெயர் நீடிப்பதே தவறு.) திருச்சிராப்பள்ளியில் மெயின்கார்டுகேட் உள்ளது. (மேல வாயில், கீழ வாசல் போல) தலை வாயில் அல்லது தலைவாசல் எனலாமே! இருக்கின்ற பெயர்களை மொழி பெயர்த்துக் கொண்டிராமல் ஒத்து வரக்கூடிய அல்லது முற்றிலும் புதிய தமிழ்ப்பெயர்களை, ஆங்கிலப் பெயர் உள்ள இடஙகளுக்குச் சூட்ட வேண்டும். உணர்வே இல்லாத மக்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில் வெறும் அரசாணைகளால் என்ன பயன்?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

62 Englishman names in chennai-
-------------------------------------
Adams Street (Washermanpet)
Anderson Road (Ayanavaram)
Austin Nagar (Alwarpet)
Ballard Street (Perambur):
Bamford Road (Ayanavaram)
Binny Colony (Madhavaram)
Bishops Garden (RA Puram)
Branson Garden Street (Kilpauk):
Clemens Road (Vepery)
Cox Street (Park Town)
DeCaster Main Road (Ayanavaram):
Demellows Road (Ayanavaram):
Doomingkuppam (San Thome)
Dooming Street (San Thome):
Duncan Road (Ayanavaram)
Edward Park Road (Choolai)
Fisher Road (Perambur):
Flowells Street (Guindy)
Flower Street (Saidapet)
Foxen Street (Perambur)
Francis Joseph Street (George Town)
George Avenue (Poes Gardens)
Gills Lane (George Town)
Gills Street (George Town)
Goomes Street (George Town)
Grays Nagar (Choolai)
Gregory Street (George Town)
Heaton Road (Perambur):
Hopman Street (St Thomas Mount)
Isac Street (Park Town):
Jeremiah Road (Vepery)
Jesson Street (Park Town)
Jones Road (Saidapet)
Kellys Road (Kilpauk)
Kennett Lane (Egmore)
Lafford Street/Lane (Chindadripet)
Lambeth Avenue (RA Puram)
Lamech Avenue (Nungambakkam)
Lettangs Road (Vepery/Purasawalkam)
Lloyds Colony (Royapettah):
Lock Street (Ayanavaram)
Maddox Street (Park Town)
Menads Street (Puraswalkam):
Millers Road (Puraswalkam/Vepery):
Morse Road (Ayanavaram)
Nancy Street (Purasawalkam)
Noble Street (St Thomas Mount):
Philips Street (George Town):
Queen Victoria Road (Poonamallee):
Rex Street (Egmore)
Ritherdon Road (Vepery)
Robertson Road (Vepery):
Rutland Gate (Nungambakkam)
Samson Road (Ayanavaram)
Sargent Road (Ayanavaram)
Slaterpuram (Mylapore)
Solomon Street (St Thomas Mount):
Teeds Gardens (Perambur)
Thomas Street (Teynampet)
Wallace Garden (Nungambakkam):
Williams Street (Perambur)
Wheners Road (Egmore):
++++++++++++++++++++++++++++++++++++++
 

வியாழன், 4 ஏப்ரல், 2013

1400 ஆண்டுக் கால சூரிய ஒளிக் கடிகாரம்

1400 ஆண்டுகால அதிசயமாகத் திகழும் சூரிய ஒளிக் கடிகாரம்!

காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை... ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்... பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகின்றன. அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்து வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன்கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 1400 ஆண்டுகால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது.


இந்த நிழல் விழும் பகுதிகள் காலை சூரியன் உதிக்கும் 6 மணி முதல் மாலை சூரியன் மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணிநேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது.ஆகம விதிப்படி ஒவ்வொரு கோவிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் நடைபெற்று குடமுழுக்கும் நடைபெற வேண்டும்... ஆனால் 62 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகளும் நடக்காமல், குடமுழுக்கும் நடைபெறாமல் இருக்கிறது. இதனால் பாழடைந்த நிலையில் உள்ள கோவிலை பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள் இந்த பகுதி மக்கள்.. தவறாமல் காலம் காட்டும் இந்த கடிகாரத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

@[210804085646629:274:உலக தமிழ் மக்கள் இயக்கம்]
1400 ஆண்டுகால அதிசயமாகத் திகழும் சூரிய ஒளிக் கடிகாரம்!

காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை... ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்... பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகின்றன. அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்து வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன்கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 1400 ஆண்டுகால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது.


இந்த நிழல் விழும் பகுதிகள் காலை சூரியன் உதிக்கும் 6 மணி முதல் மாலை சூரியன் மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணிநேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது.ஆகம விதிப்படி ஒவ்வொரு கோவிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் நடைபெற்று குடமுழுக்கும் நடைபெற வேண்டும்... ஆனால் 62 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகளும் நடக்காமல், குடமுழுக்கும் நடைபெறாமல் இருக்கிறது. இதனால் பாழடைந்த நிலையில் உள்ள கோவிலை பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள் இந்த பகுதி மக்கள்.. தவறாமல் காலம் காட்டும் இந்த கடிகாரத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

உலக த்தமிழ் மக்கள் இயக்கம்

2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை - திருப்பெரும்புதூர் அருகே கண்டுபிடிப்பு

இலங்கைத் தமிழர்களின் தாயகம் இலங்கையே! - விவேகானந்தர்