வன்முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வன்முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

வன்முறை யிலிருந்து காக்கும் ஆடைகள், கருவிகள்: மாணவியர்

 
 
வன்முறை யிலிருந்து காக்கும் ஆடைகள், கருவிகள்: விதவிதமாக கண்டுபிடித்து அசத்தும் மாணவியர்

புதுதில்லி:பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய விடாமல் தடுக்கும் அதிநவீன கருவிகளை, மாணவியர் மற்றும் பெண்கள் தயாரித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. அதனால், பாலியல் பலாத்காரத்திலிருந்து பெண்களை காக்கும் கருவிகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.
எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி:

சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில், "ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்' படிக்கும் மனிஷா, இன்ஜினியரிங் மாணவர்களான, நீலாத்ரி பாசு மற்றும் ரிம்பி திரிபாதி ஆகியோருடன் இணைந்து, "எஸ்.எச்.இ.,' என்ற கருவியை கண்டு பிடித்துள்ளார்.சாதாரண, "நைட்டி' போல காட்சியளிக்கும் உடையில், அதிநவீன கருவி இணைக்கப்பட்டுள்ளது. பிறரால் பலாத்காரத்திற்கு உள்ளாகிறோம் என்பதை அறிந்தவுடன், அந்த உடையில் பொருத்தப்பட்டிருக்கும், பொத்தானை அழுத்தினால் போதும்; 3,800 கிலோ வாட், "எலக்ட்ரிக் ஷாக்' அடித்து, தொட்ட நபர் மயங்கி சரிவார்.ஆனால், இந்த உடையை அணிந்திருக்கும் பெண்ணுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், அடுத்த வினாடி, உடையுடன் இணைக்கப்பட்டிருக்கும், ஜி.பி.ஆர்.எஸ்., கருவி செயல்பட்டு, போலீஸ், பெண்ணின் உறவினர்கள் மொபைல் போன் எண்களுக்கு, எச்சரிக்கை செய்திகளை அனுப்பும்.

குறைந்த விலையில்:

""இது போன்ற கருவியை, அமெரிக்காவின், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவர்கள் தயாரித்துள்ளனர். அதன் விலை, பல லட்ச ரூபாய் இருக்கும் என, கூறப்படுகிறது. ஆனால், நாங்கள் தயாரித்துள்ள ஆடையின் விலை, அதிகபட்சம், 1,500 ரூபாய்க்குள் தான் இருக்கும்; ஆடையை சலவையும் செய்யலாம்,'' என, மாணவி மனிஷா தெரிவிக்கிறார். அது போல், தேசிய ஆடை அலங்கார தொழில் நுட்பம் படிக்கும் மாணவர்கள், நிஷாந்த் பிரியா, ஷாஜத் அகமது ஆகியோர், பேராசிரியர், நூபூர் ஆனந்த் துணையுடன், "ஜாக்கெட்' ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதை அணிந்திருக்கும் போது, தேவையில்லாமல் யாராவது தொட்டால், தொட்ட நபருக்கு, எலக்ட்ரிக் ஷாக் கிடைக்கும்.

பயங்கர "ஷாக்':

எலக்ட்ரிக் ஷாக்கால் பாதிக்கப்பட்டவர், 15 நிமிடத்திற்கு எதுவும் செய்ய முடியாது; மயக்க நிலையை அடைந்து விடுவார். அந்த ஜாக்கெட்டிலிருந்து வெளியாகும், 110 வோல்ட் மின்சாரம், சில்மிஷ நபரையோ அல்லது பலாத்கார நபரையோ நிலைகுலையச் செய்து விடும்.வியர்வை மற்றும் மழை நீர் பட்டாலோ, அணிந்திருப்பவருக்கு எத்தகைய ஆபத்தையும் அளிக்காத வகையில், இந்த ஜாக்கெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த வரிசையில், தவறான எண்ணத்துடன் தொட்டவுடன், சகிக்க முடியாத நாற்ற நீரை, அந்த நபர் மீது பீய்ச்சி அடைக்கும் ஆடைகள், தொட்டவுடன், முள்ளெலி போல, கூர்மையான கம்பிகளால், பலாத்காரம் செய்பவனின் உடலை துளைக்கும் ஆடைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.அவை, காப்புரிமைக்காகவும், குறைந்த விலையில் தயாரிப்பதற்காகவும், அடுத்த கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.



ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

வன்முறையைத் தடுக்க!


இரட்டிப்புமகசூல்!

விவசாயிகளுக்கு, அரசின் மானியத்தோடு, அதிக லாபம் தரும், மாம்பழ சாகுபடியின் புதிய முறையை கூறும், திரவியம்: நான், தென்காசி தோட்டக் கலையில், உதவி இயக்குனராக பணியாற்றுகிறேன். தொடர்ந்து மழையின் அளவு குறைவது, மா மரத்தில் ஏற்படும் பூச்சிகளின் தாக்குதல் போன்ற குறைகளை நீக்கவும், மா சாகுபடி பரப்பை அதிகரித்து, அதன் உற்பத்தியை பெருக்குவது என்ற நோக்கிலும், தேசிய தோட்டக்கலை இயக்கம், "மா அடர் நடவு' என்ற, புதிய மா சாகுபடி முறையை அறிமுகபடுத்தியுள்ளது.

இம்முறையை பின்பற்றும் விவசாயிகளுக்கு, முதலாம் ஆண்டு, 24 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் ஆண்டு, 8,000 ரூபாயும், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப்படுகிறது. ஒரு ஹெக்டேரில், 100 மாங்கன்றுகளை மட்டுமே நட்டு வளர்க்க முடியும் என்ற நிலையை மாற்றி, 400 செடிகளை இம்முறையில் வளர்க்க முடியும்.

மா சாகுபடிக்கு, வடிகால் வசதியுள்ள செம்மண் ஏற்றது. அல்போன்சா, பங்கனபள்ளி, சேலம், மல்லிகா போன்ற மா ரகங்களே, தமிழகத்தில் அதிகம் பயிர் செய்யப்படுகின்றன. ஆடி முதல் மார்கழி வரை, மா கன்றுகளை நடவு செய்யலாம். வாங்கி வந்த மாங்கன்றுகளை உடனே நடவு செய்யாமல், நடவு செய்ய உள்ள நிலத்தின் மேல் மண்ணை, கன்று இருக்கும் பைகளில் இட்டு, நீர் தெளித்து, புதிய தளிர்கள் வரும் வரை, நிழலில் வைத்த பின்னரே, நடவு செய்ய வேண்டும்.
மாங்கன்றுகளுக்கு, தேவையான காலங்களில் உரமிடுவது, நோய் தாக்கிய மற்றும் காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு, சூரிய வெளிச்சமும், காற்றும், மரக் கிளைகளுக்கு கிடைக்கச் செய்வது, மா மரம் பூக்கும் தருணத்தில் வளர்ச்சி ஊக்கிகள் தெளிப்பது போன்ற செயல்களில், அதிக கவனம் தேவை.மாங்காய்கள், 80 சதவீதம் முற்றிய பின்னரே, அறுவடை செய்ய வேண்டும். ஏற்றுமதிக்கான மாங்காய்களை சேதமில்லாமல் பறிக்க வேண்டும். மற்ற முறைகளில் ஒரு ஹெக்டேருக்கு, 12 டன் மட்டுமே மகசூல் கிடைக்கும். ஆனால், இம்முறையில், 20 முதல், 25 டன் மாங்காய்களை, அறுவடை செய்து அதிக லாபம் ஈட்டலாம்.

வன்முறையை த் தடுக்கணும்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து, ஐ.நா., சபையில் பேசிய, 13 வயது மாணவி சொர்ணலட்சுமி: நான், சென்னை லிட்டில் பிளவர் கான்வென்டில், 9ம் வகுப்பு படிக்கிறேன். பிறக்கும் போதே கண் பார்வை இல்லாமல் பிறந்தேன். நான் மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், தன்னம்பிக்கை மற்றும் உலக அறிவுக்கான கருத்துக்களை சொல்லியே, பெற்றோர் வளர்த்தனர். படிப்பது, கீ போர்ட் வாசிப்பது, செஸ் விளையாடுவது என, அனைத்திலும் கவனம் செலுத்தினேன்.

மொத்தம், 6,000 குழந்தைகள் உறுப்பினராக உள்ள, "தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி குழந்தைகள் பாராளுமன்றம்' என்ற குழந்தைகள் அமைப்பில் சேர்ந்தேன். உலகில் குழந்தைகளுக்காக செயல்படும் அமைப்புகளில், சிறந்த அமைப்பு என, 2009ம் ஆண்டு, "யுனிசெப்' வழங்கும், "சான் மெரினோ-யுனிசெப்' விருதை, எங்கள் அமைப்பு வென்றுள்ளது.
"தானே' புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் எண்ணத்தில், ஒவ்வொரு குழந்தைகளிடமும், ஒரு ரூபாய் வீதம் என, 7,000 ரூபாய் வசூல் செய்து, "தானே' புயலால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுத்தேன். இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின், குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டேன்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை எப்படி ஒழிப்பது என, ஆராய்வதற்கான கூட்டம், நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., சபை அரங்கில் நடைபெற்றது. 250க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, குழந்தைகள் பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினேன்.பின்லாந்தின், ஐ.நா., பிரதிநிதியான ஜோர்மா பவ்டு என்பவர், குழந்தைகள் பாராளுமன்றத்தை தங்கள் நாட்டிலும் அமைக்க முயற்சிப்பதாக கூறினார்.என் ரோல் மாடலாக, விவேகானந்தரை பின்பற்றுகிறேன். ஐ.ஏ.எஸ்., ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே, என் எதிர்கால லட்சியம்

புதன், 13 பிப்ரவரி, 2013

வருந்துவதா? மகிழ்வதா?


வன்முறைக்கு வருந்துவதா?  பழங்குடிப் பெண்களின் போராட்ட உணர்விற்கு மகிழ்வதா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

திங்கள், 24 டிசம்பர், 2012

பலாத்காரத்துக்குத் தூக்குத் தண்டனையா: எதிர்க்கும் கமல்

பலாத்காரத்துக்குத் தூக்குத் தண்டனையா: எதிர்க்கும் கமல்

பலாத்காரத்துக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை என்பது நியாமில்லை என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கொச்சியில் இன்று பட விழாவில் பங்கேற்க வந்த நடிகர் கமலஹாசனிடம் செய்தியயாளர்கள், டெல்லியில் மாணவி பலாத்கார விவகாரம் குறித்து கருத்துக் கேட்டதற்கு, அது என்னுடைய பேருந்து, அது என்னுடைய தலைநகரம், அந்த மாணவி என்னுடைய சகோதரி, அந்த குற்றவாளியும் என்னுடைய சகோதரன்தான். இந்த சம்பவம் வெட்கப்பட வேண்டிய விஷயமாகும் என்று தெரிவித்தார்.
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற போராட்டத்துக்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பலாத்காரக் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. ஒரு குற்றத்துக்கு மற்றொருக் குற்றத்தை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 3 ஜூலை, 2009

Rajapaksa’s actions speak louder than words for sceptical Tamils

When President Rajapaksa of Sri Lanka declared victory over the Tamil Tigers in May, he reached out to the Tamil minority that the defeated rebels had claimed to represent over 26 years of civil war.

Speaking in Tamil, as well as his native Sinhalese, he told Parliament in Colombo that the war against the Tigers was not a war against the Tamil people, and declared that everyone in Sri Lanka should live with equal rights.

Since then, however, he has done little to convince Sri Lanka’s three million Tamils — let alone the 74 million-strong diaspora — of either of those points, and has, in fact, tolerated or condoned much to persuade them that the opposite is true.

In the celebrations that followed his victory, he appeared to revel in comparisons to King Dutugemunu, a legendary Sinhalese sovereign who routed a rival Tamil monarch and unified Sri Lanka.

More than six weeks after the Tigers’ defeat, his Government still has not allowed UN staff and aid workers unfettered access to the 300,000 ethnic Tamil refugees in army-run internment camps.

Critics of the Government continue to be harassed and intimidated, the most recent example being a popular astrologer who was arrested last week after predicting that Mr Rajapaksa would lose power in September.

This week, his Government announced that it planned to add another 50,000 people to its armed forces — already at a record strength of more than 350,000, almost all Sinhalese.

In its defence, the Government says that it has set a date of August 8 for elections to representative bodies in the Vavuniya and Jaffna areas, as part of a broader plan to democratise the Tigers’ former territory.

However, if the Government continues to indulge Sinhalese nationalists, drag its feet on resettlement, harass its critics and spend public money on the military rather than reconstruction, even moderate Tamils say that the elections will be a meaningless gesture.

வியாழன், 18 ஜூன், 2009

இலங்கையில் 224 தமிழர்கள் கட்டாய இடமாற்றம்
தினமணி


கொழும்பு, ஜூன் 17- இலங்கையில் மூத்தூர் பகுதியைச் சேர்ந்த 224 தமிழர்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாக வேறு இடத்திற்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கருத்துகள்

காலம் காலமாகச் செய்து வரும் வாழ்வுரிமைப் பறிப்புச் செயலையும் சிங்களக் குடியேற்றத்தையும்தான் சிங்களக் காட்டுமிராண்டி அரசு இப்பொழுதும் செய்கிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வந்துள்ள இலங்கைத் தமிழர் தொடர்பான கட்டுரைகளும் நூல்களும் இதைத் தெளிவாக விளக்குகின்றன. தமிழர்கள் தனித்து வாழும் பகுதி என ஒன்றும் இல்லாமல் அவர்களை முகாம் என்ற பெயரில் திறந்தவெளி வதைக் கூடத்தில் அடைப்பதுவும் சிங்களர்களைத் தமிழர் பகுதிகளில் குடியேற்றுவதும் இப் பொழுது விரைவு படுத்தப்படுகின்றது. அறிவு இருந்தும் சிந்திக்க மறுப்பவர்கள் இது குறித்து ஒன்றும் சொல்ல மாட்டார்கள். இனியேனும் விழிக்குமா உலகத் தமிழினம்?

ஏக்கத்ததுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/18/2009 4:52:00 AM
இதை தமிழர்களின்? கையில் மாற்றீடு செய்ய(தார்மீகக் கடமைகள் நிறைவேற்றப் படாத பட்சத்தில்)வழிவகை செய்யப் பட்டிருக்க வேண்டுமே தவிர,பிரிட்டிஷ் போலவே(அணுகுமுறை)வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது என்பதாகும்.இத்தகைய வழிவகைகளை செய்ய இந்த “தமிழீழ இடைகா(டர்)ல அரசாங்கம் உதவியாக இருக்கும் என்றால்,அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.தமிழர்கள் தாங்கள் ஆயுதம் தாங்கும் உரிமையை கைவிடுவது என்பது சட்ட ரீதியாக எந்த “இனக்குழுவும்” ஏற்றுக் கொள்ளமுடியாது,இதை சொல்லுவத்ற்கு இலங்கைத் தமிழருக்கு உரிமையும் கிடையாது(இலங்கையில் மட்டும் தமிழர் இல்லை),ஆனால் அதற்காக ஆயுதம் ஏந்துவதும் “சட்டப்படி” குற்றமாகும்(எந்த ஒரு இறையாண்மையுள்ள நாட்டின் அங்கீகாரமும் இல்லாமல்).
By CHAMELEON BROTHER
6/17/2009 10:52:00 PM

ஹவேர்ட் பல்கலைக் கழகத்தில்(அமெரிக்கா)சட்டம் பயின்ற திரு.உருத்திரகுமாரின் அக்கறையை குறைத்து மதிப்பிட முடியாதுதான்!.இவர் இலண்டனில் உள்ள தயா இடைக்காடரின் சொந்தக்காரர்.இவர் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான திரு.லாரன்ஸ் திலகரின் நெருங்கிய நண்பர்.இச் செயற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் சுவீடன், பேராசிரியர் பீட்டர் சார்ல்ஸ் வீட்டிலுள்ள நிலவறை அலுவலகத்தில்,உள்ள பிரத்தியேகமான சிலை சீன முகாமைப்பு வடிவிலான புத்தர் சிலையாகும்.இவர் அப்சாலா பல்கலைக் கழகத்தில் செய்த ஆராய்ச்சி “மதங்களின் வரலாறு” ஆகும்.கிடைத்த சில செய்திகளின்படி,மதிப்பிற்குறிய பேபி(இளங்குமரன்),கா.வே.பாலக்குமார்,இளம்பரிதி,எழிலன்,யோ.யோகி,புதுவை இரத்தினத்துரை,ஆகியோர் இலங்கை இராணுவத்திடம் சிறைக் கைதிகளாக உள்ளனர் என்று கூறுகிறது.சர்வதேசம் இதைதான் கூறுகிறது தமிழர்களின் தற்காப்பு உரிமை(ரைட் ஆஃப் வயலன்ஸ்)வலுக்கட்டாயமாக பிரிட்டிஷ் காலனியால் பறிக்கப்பட்டிருந்தது,அது இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களிடம் சுதந்திரம் என்றப் பெயரில் கையளிக்கப்பட்டிருந்தது,இதை தமிழர்களின்? கையில் மாற்றீடு செய்ய(தார்மீகக் கடமைகள் நிறைவேற்றப் படாத பட்சத

By CHAMELEON BROTHER
6/17/2009 10:50:00 PM

It is clearly reveals that all 29 countries in south east asia who opposed the inquary of human mass muder in Srilanka are ready to mass murder the minories in their respective countires who make protest for their freedom. Is democretic system works or failed in these south east asian countires? In the democretc system only majority people enjoy their freedom; and , minority are slaves in the demoretic process according to UNITED NATIONS and SOUTH ASIAN COUNTIRES. WHERE ARE ALL HUMAN RIGHTS RESOLUTIONS IN UNITED NATIONS OR THE SUPER POWERS WHO SUPPORT FOR THE BIAS DEMOCRETICS SYSTEM OF GOVERNMENTS. IS A UNITED NATIONS AND THE SECRETARY NECESSOR IN AMERICA OR GENIVA?

By S.Raman
6/17/2009 10:18:00 PM

நேற்று நீ செய்த நாச வேலைகளுக்கு உடனேயே தண்டனை கிடைத்து விட்டது என்று உன் தேச மக்கள் கண்ணீர் வடிப்பார்கள். ஈழத்தமிழர்கள் விட்ட கண்ணீரும் சிந்திய செங்குருதியும் உன் கண்களின் முன்பாக தோன்றி மறையும் நமது மக்களின் சடலங்களின் தடயங்களை அழித்துவிடலாம். ஆனால் அவைகள் பற்றிக்கொண்டிருக்கும் உண்மை வெளிப்பட்டே தீரும். அன்றைக்கு தான் இனப் படுகொலைக்கு துணை போன உன் நாட்டுத் தலைமையின் நாகரீகமற்ற நடவடிக்கைக்காக இந்தியா என்ற நாடு வெட்கித் தலை குனியும் நாள் வரும்.

By ravi
6/17/2009 9:24:00 PM

Every now atleast understand or trying to understand that what is happening in Srilanka, Due to Prabhakaran they were some what quit and respected Tamils, not that is also gone... I dont think Tamilian can live there any cost. Here karunanithi, soniya cant do any thing because they need to earn money and see their activities only..

By chnandru
6/17/2009 8:03:00 PM

Rajapaka is a No one bastered, sure he will die with suiside bomb blasr very soon sankara

By sankar
6/17/2009 7:31:00 PM

நம்மை குழப்பவும் சோர் வடையச் செய்யவும் பிரபாகரன் குறித்த பொய்யானச் செய்திகளை இந்திய ரா உளவுத் துறையும் ஊடகங்களும் பரப்புகின்றன. நெடி துயர்ந்து நிற்கும் தமிழ்ப் பொதிகை மலை போல அந்தத் தலைவன் களத்தில் காலூன்றி நிற்கிறான். முழுமதியை சில நேரங்களில் மேகங்கள் மறைக்கலாம். ஆனால் நிரந்தரமாக மறைத்து விட முடியாது. முகிலை கிழித்து முழு மதி முன்னிலும் ஒளிவிட்டு மின்னும். தலைவர் பிரபாகரனும் முன்னிலும் அதிகமான துடிப்புடன் நம்மை வழிநடத்துவார். தமிழர் வரலாற்றில் பிரபாகரனைப் போன்ற ஒரு வீரன் பிறந்ததில்லை என மறைந்த முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதன் அவர்கள் ஒரு முறை மன நெகிழ்ச்சியுடன் கூறினார். கல்லின் மேல் எழுத்துப் போன்ற அந்த சொற்களை மனதில் பதிய வையுங்கள். வாராது போல் வந்த மாமணியாக அந்த தலைவன் வாழும் காலத்திலேயே தமிழீழம் மலரும். அதன் மூலம் உலகத் தமிழர்களுக்கும் விடிவுப் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்குவோம். கடமையாற்றுவோம்.

By ravi
6/17/2009 7:00:00 PM

Congress and its overseas bon leader Sonia should take responsible.

By Kugan
6/17/2009 5:28:00 PM

Now Sigalese becoming coomon enemy for Tamils. We should wage a eraticating sigalese from the earth war.

By Ramu
6/17/2009 4:39:00 PM

We know all these happen in Srilanka when Tamils were defeated by India becuse we have experience this since 1957 during Mr. S.W.R.D. Bandaranayke to Mr. Mahinda Rajapaksha regime.

By Amirali -Sammanthurai
6/17/2009 4:38:00 PM

worst rajapaksa

By malai
6/17/2009 4:35:00 PM

it is rediculous. The entire world should condomn these kind of activities

By palayam
6/17/2009 4:25:00 PM



புதன், 3 ஜூன், 2009

வன்முறை தீர்வாகாது

First Published : 02 Jun 2009 01:12:00 AM IST



கருத்துகள்

வன்முறை தீர்வாகாது என்பது உண்மைதான். ஆனால் அரசுகள் வன்முறைக்கு மட்டுமே செவிசாய்த்து வன்முறையை வளர்த்துவிட்டது. ஒருவர் தாக்கப்பட்டாலு்ம் பிற மாநிலங்களில் பெருங் கலவரம் வெடிக்கின்றது. அரசும் கலவரத்தை அடக்க அவர்களின் கோரிக்கையை ஏற்க முன்வருகின்றது. பல்லாயிரக்கணக்கானவர் மடிந்தாலும் பேரவலம் ஏற்பட்டாலும் தமிழகம் அமைதியாகவே காட்சி அளிக்கின்றது. எனவே கோரிக்கைக்குச் செவி மடுக்காததுடன் மேலும் பேரவலங்களையே அரசுகள் ஏற்படுத்துகினறன. எனவே 'முள்மரம் சிறியதாக இருக்கும் பொழுதே' பிடுங்கி எறிய வேண்டும் ('இளைதாக முள்மரம்கொல்க') எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் தெரிவித்ததற்கிணங்க எந்தச் சிக்கலும் சிறியதாக இருக்கும் பொழுதே வளரவிடாமல் நீக்கிட வேண்டும். இல்லாவிடில் இது போன்ற வன்முறைகள் வளருவதைத் தவிர்க்க முடியாது. அதுபோல் வன்முறைக்கு எதிராக மக்கள் மனத்தையும் பக்குவப்படுத்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/3/2009 2:54:00 AM

nam naatu enru pothuvaka sollathirkal enn enraal thamil naattil entha kalavaram ithuvarai natanthathu illai amaithiyaka poratukinranar
By srinivasan
6/2/2009 11:41:00 AM