விந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஜூலை, 2013

6000 ஆண்டுகள் பழமையான "சவுக்கை' கண்டுபிடிப்பு:

பழனி அருகே 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான "சவுக்கை' கண்டுபிடிப்பு: சூரிய ஒளி ஊடுருவிய விந்தை
பழநி: பழநி அருகே ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில், 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, "சவுக்கை' (பெருங்கற்களாலான அமைப்பு) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், பழநி ஆண்டிபட்டி மலைப்பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையில், ஆர்வலர்கள் கன்னிமுத்து, சவுரப், ராமலிங்கம் ஆகியோர் குழுவாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது "சவுக்கை' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாராயண மூர்த்தி கூறியதாவது: இங்குள்ள மலைப்பகுதியில் இரண்டு பெரும் உருண்டை பாறாங்கற்களை அருகருகே அடுக்கி, அதன் மேல் ஒரு பலகை பாறாங்கல்லை வைத்து மூடியுள்ளனர். தூரத்திலிருந்து பார்க்கும் போது இவ்வமைப்பு ஆயுத எழுத்து வடிவில் உள்ளது. சூரிய ஒளியின் நகர்வுப்பாதையை கணிக்க இடைச்சங்க காலத்தைச் சேர்ந்த தமிழர்கள் இவ்வமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதனை சவுக்கை என்பர். 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஓர் ஆண்டில் 6 மாதம் காலத்திற்கு சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் பயணத்தை தட்சணாயண காலம் என்றும், மீதி உள்ள 6 மாத காலத்தில், தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் காலத்தை உத்தராயண காலம் என்றும் கணித்துள்ளனர். இந்தாண்டு தட்சணாயணத் துவக்க நாளான ஆடி 1-ல் சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக, சூரிய உதயத்தில் ஒளிக்கதிர்கள் தென்மேற்காக துல்லியமாக ஊடுருவுவதை காண முடிந்தது. மூன்று நாட்கள் இதுபோல் ஒளியை காணலாம். இதைப்போல் உத்தராயணகால, துவக்க நாளான தை 1-ல் சூரியன் மறையும் போது, ஒளிக்கதிர்கள் வடகிழக்காக துல்லியமாக ஊடுருவதற்கு ஏற்பவும், இந்த சவுக்கை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சவுக்கைகள் இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் உள்ளன, இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 22 ஜூன், 2013

காயமடைந்த ஆங்கிலப் பெண்: பிரெஞ்ச்சு பேசும் விந்தை

 காயமடைந்த ஆங்கிலப் பெண்:  பிரெஞ்சு பேசும் விந்தை


சிட்னி: ஆசுதிரேலியாவில், விபத்துக்குள்ளான பெண் ஒருவர், மயக்கம் தெளிந்ததும், தன் தாய் மொழியான ஆங்கிலத்திற்கு பதிலாக, பிரெஞ்சு மொழியில் பேசத் தொடங்கியுள்ளார். இதனால், அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரை சேர்ந்த பெண் ஒருவர், சாலையில் நடந்து சென்ற போது, கார் மோதி வித்துக்குள்ளானார். தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண் சுயநினைவிழந்தார். ஒரு வாரத்துக்கு பின், நினைவு திரும்பியதால், பெண்ணின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும், அந்த பெண் என்ன பேசுகிறார் என, யாருக்கும் புரியவில்லை. இது குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் தெரிவித்தனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், அப்பெண் பேசுவது ஆங்கிலம் அல்ல; பிரெஞ்சு என்பது தெரிய வந்தது. "தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், ஆங்கிலம் மறந்து போயிருக்கலாம்' என, டாக்டர்கள் தெரிவித்தனர். "பிரெஞ்சு மொழியில், சிறிதும் அறிமுகம் இல்லாத பெண், எவ்வாறு அந்தமொழியில் பேச முடியும்' என, உறவினர்கள் கேட்டதற்கு, பதில் கூற முடியாமல், டாக்டர்கள் விழி பிதுங்கியுள்ளனர். "எங்கள் அனுபவத்தில், இது போன்ற சம்பவத்தை கண்டதில்லை' என, குழப்பத்துடன் டாக்டர்கள் தெரிவித்தனர்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

வலுதத மழை: உலக விந்தை இடிந்து விழுந்தது

பலத்த மழை : உலக அதிசயம் இடிந்து விழுந்தது

First Published : 10 Aug 2012 02:53:31 PM IST


பெய்ஜிங், ஆக., 10 : உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதி, அப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் இடிந்து விழுந்துவிட்டது. ஷாஞ்சியாகு பகுதியில் சுமார் 36 மீட்டர் அளவுக்கு சீனப்பெருஞ்சுவர் இடிந்துவிழுந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சீனாவில் கடந்த இரண்டு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதுவரை மழை தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.