வியாழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 மே, 2013

புதன், வியாழன், வெள்ளி : 28 அன்று ஒரே நேர்க்கோட்டில் காணலாம்

புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3  கோள்களையும் 28 அன்று ஒரே நேர்க்கோட்டில் காணலாம்

புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கிரகங்களையும் 28-ம் தேதி ஒரே நேர்க்கோட்டில் காணலாம்
வாசிங்டன், மே 19-

புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கும் அற்புத நிகழ்வை வரும் 28-ம் தேதி காணலாம்.

பூமியில் இருந்து காண்போரின் கண்களுக்கு இந்த காட்சியானது புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிரகங்கள் அருகருகே இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

இரண்டு பவுர்ணமி நிலவின் அளவிற்கு புதன் கிரகம் காணப்படும். அதனையடுத்து சற்று ஒளிமங்கிய நிலையில் வியாழன் கிரகமும், நேர்க்கோட்டில் தென்படும். இவை இரண்டிற்கும் சற்று தூரத்தில் வெள்ளி கிரகமும் தெரியும்.

வரும் 28-ம் தேதி சூரியன் மறைந்த பிறகு வானத்தின் மேற்கு திசையில் இக்காட்சியை காண முடியும்.

பூமியில் இருந்து புதன் கிரகத்தை சென்றடைய 38 மில்லியன் கி.மீட்டர் பயணிக்க வேண்டும்.

புதன் கிரகத்தில் இருந்து வியாழன் 660 மில்லியன் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. வியாழன் இருந்து வெள்ளி 744 மில்லியன் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இவை மூன்றையும் ஒரே நேர்க்கோட்டில் காணும் அபூர்வ வாய்ப்பு வரும் 28-ம் தேதி நமக்கு கிடைக்கவுள்ளது.

புதன், 21 நவம்பர், 2012

பெரு வியாழன் கண்டுபிடிப்பு

வியாழனைப் போன்று புதிய  கோள்  கண்டுபிடிப்பு: 13 மடங்கு பெரியது
வியாழனைப் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு: 13 மடங்கு பெரியது
வாஷிங்டன், நவ.21-

கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.

அப்போது சூரிய குடும்பத்தில் மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்தனர். அது சூரியனை விட 2 1/2 மடங்கு பெரியதாக இருந்தது. அதே நேரத்தில் வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரியதாக காணப்பட்டது. நெப்டியூனை விடவும் பெரியதாக உள்ளது. இதற்கு 'சூப்பர் ஜுபிடர் (வியாழன்)' என்று பெயரிட்டுள்ளனர்.

கடந்த 4 ஆண்டு ஆய்வுக்கு பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்பா ஆண்ட்ரோ மேடு என்ற நட்சத்திரம் அருகே மங்கலாக தெளிவற்ற நிலையில் இது காணப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சனி, 29 அக்டோபர், 2011

சூரியனை நெருங்கி வரும் வியாழன்: ஆர்வமூட்டும் வானியல் நிகழ்வு

சூரியனை நெருங்கி வரும் வியாழன்: ஆர்வமூட்டும் வானியல் நிகழ்வு

First Published : 28 Oct 2011 08:59:43 PM IST


சென்னை, ஆக்.28: சூரியனுக்கு அருகே வியாழன் கிரகம் நெருங்கி வரும் நிகழ்வு நாளை நடக்கவுள்ளதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதனை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்ததாவது:சூரியக் குடும்பங்களில் உள்ள கிரகங்களில் வியாழன் கிரகம் மிகப் பெரிது. சூரியனைச் சுற்றும் போது 398.9 நாள்களுக்கு ஒரு முறை சுற்றுப் பாதையில் சூரியனுக்கு நேர் எதிரில் வியாழன் கிரகம் வருகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு இன்று (29-ந் தேதி) நடக்கவுள்ளது. இதனை நாம் பூமியில் இருந்தே எளிதாகக் காணலாம்.பொதுவாக பூமிக்கும் வியாழனுக்கு இடையே உள்ள தூரம் 92 கோடி கிலோ மீட்டர். ஆனால் சூரியனுக்கு நேர் எதிராக வியாழன் வரும்போது பூமிக்கும் வியாழனுக்கும் இடையேயுள்ள தூரம் மிகவும் குறைந்து விடும். இந்த தூரம் 92 கோடி கிலோ மீட்டரிலிருந்து இருந்து 59.3 கோடி கிலோ மீட்டராக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவை நேர் எதிரில் வருவதால் வியாழன் மீது சூரிய ஒளி முழுவதும் படுவதாலும், பூமிக்கு அது நெருங்கி வருவதாலும் வியாழன் கிரகத்தை பூமியில் இருந்து தெளிவாகப் பார்க்க முடியும். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய நேரங்களில் வியாழன் கிரகம் வெளிச்சமாகக் காணப்படும். இந்த நிகழ்வு ஒரு மாதத்திற்கு மேலாக தொடரும் என்றாலும் நம்மால் மூன்று நாள்களும் தெளிவாக வியாழன் கிரகத்தை பார்க்கலாம். இதனை நேரடியாகவும், டெலஸ்கோப் வழியாகவும் பார்க்கலாம். வானம் தெளிவாக இருந்தால் 29 முதல் 31-ந் தேதி வரை இரவு 7 மணியில் வியாழன் கிரகத்தைப் பார்க்கலாம். பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் பிர்லா கோளரங்க நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதே போன்றொரு நிகழ்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி நடந்தது. அடுத்ததாக 2012-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதியும் மீண்டும் இந்த நிகழ்வு நடக்கும் என்றார் அவர்.