eexham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
eexham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 செப்டம்பர், 2011

திக்குவாய்க்காரன் எல்லாம் அரசியல் தலைவனாகிவிட்டான்; சுப்பிரமணிய சாமிக்கு கொழுப்பு எதனால் வந்தது :

திக்குவாய்க்காரன் எல்லாம் அரசியல் தலைவனாகிவிட்டான்; சுப்பிரமணிய சாமிக்கு கொழுப்பு எதனால் வந்தது :

கள்ளத்தோணியில் போனவன் என்று உன்னை ஏளனம் செய்தார்கள்.  நல்ல தோணியில் போனவன் எல்லாம் காட்டிக்கொடுக்க போனான்.   கள்ளத்தோணியில் போன நீதான்(வைகோ) அந்த நாட்டை கட்டிக்கொடுக்க போகிறாய்.
சும்மா வரமாட்டான் பெரியார்தாசன்.  பெரியாரின் பிரதிபலிப்பு நீ( வைகோ).  என்னை கேட்டார்கள்…என்ன பெறுவதற்கு மதிமுகவிற்கு போகிறீர்கள் என்று கேட்டார்கள்.    தமிழினத்திற்கு மானம் தேடித்தர போகிறேன் என்று சொன்னேன்.  
அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தேன்.  எனக்கு அறிவு இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது.   உலக இலக்கியம் எல்லாம் படித்தவன்.  எனக்கு எதுக்கு அரசியல் என்று திமிராக இருந்தேன்.    திக்குவாய்க்காரன் எல்லாம் அரசியல் தலைவனாகிவிட்டதால் எனக்கு கொஞ்சம் உரைத்தது.    அதனால் அரசியலுக்கு வர முடிவு செய்தேன்.  
விமானத்தில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு தலைவரிடம் பேச்சு கொடுத்தேன்.   அவர் எதுவும் பேசத்தெரியாததால் ஊமை போல் உட்கார்ந்திருந்தார்.   இவரெல்லாம் எங்கே மக்களுக்காக பேசப்போகிறார்.
 பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்து வாதாட ராம்ஜெத்மலானி வந்தார்.   நான் அந்த நிகழ்வை தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்தேன்.   
மூவரின் தூக்கு ரத்து  ஒத்திவைக்கப்பட்டது.   ராம்ஜெத்மலானி வந்தார்.  இவர் வந்தால் வெற்றி என்று எதிர்பார்த்ததுதான்.  ஆனால் இவரை யார் அழைத்து வந்திருப்பார்.   ரொம்ப பெரிய ஆளாச்சே.   இவரை யார் அழைத்து வந்திருப்பார் என்று எனக்குள் கேள்விகள்.   அப்போது ராம்ஜெத்மலானியிடம் எல்லோரும் நன்றி சொல்ல,  அதற்கு அவர்,  உங்கள் நன்றியை வைகோவுக்கு சொல்லுங்கள்.  அவர்தான் இதற்கு காரணம் என்றார். 
அப்போதே நான் முடிவெடுத்துவிட்டேன்.  இனியும் தாமதிக்கக்கூடாது.   தமிழினத்திற்கு இப்படி போராடிக்கொண்டிருக்கும் தமிழனிடம் சென்றுவிடவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்’’ என்று ஆவேசமாக பேசினார்.
அவர் மேலும்,   ‘’ஒரு தமிழன்…சுப்பிரமணிய சாமி….. தமிழ் தொலைக்காட்சிக்கு அளிக்கும் பேட்டியில் ஆங்கிலத்தில் பேசுகிறார்.   சுப்பிரமணிய சாமிக்கு இந்த கொழுப்பு எதனால் வந்தது.   அதனால்….வந்தது.   அந்த கொழுப்பை இதனால்தான் அடக்க முடியும்’’ என்று பேசினார்.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

veera nankai senkodi: இளம் பெண் செங்கொடிக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி


இளம் பெண் செங்கொடிக்கு காஞ்சிபுரம் மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி

பதிவு செய்த நாள் : August 30, 2011



காஞ்சிபுரம்: தூக்கு மேடையில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரைக் காப்பாற்றக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த இளம் பெண் செங்கொடிக்கு காஞ்சிபுரம் மக்கள் மொத்தமாக திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழவைப்பதாக இருந்தது.
காஞ்சிபுரம் இதுவரை கண்டிராத அளவில் செங்கொடி அஞ்சலி நிகழ்ச்சி அமைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஞ்சலி செலுத்த பல ஆயிரம் பேர் திரண்டு வந்ததால் உடல் தகன நிகழ்ச்சியை நாளை வரை தள்ளி வைத்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ஒப்படைக்கப்பட்ட செங்கொடியின் உடல் ஊர்வலமாக நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றபோது ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பேரணியிலும் பங்கேற்றனர். வீடுகளின் மாடிகள், மொட்டை மாடிகளிலும் ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தன. கடந்த 8 வருடமாக மக்கள் மன்றம் மூலமாக காஞ்சிபுரம் மக்களின் தேவைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் செங்கொடி என்பதால் காஞ்சிபுரம் மக்கள் செங்கொடியின் இந்த அகால மறைவால் பெரும் சோகமடைந்துள்ளனர். அவரது மரணம் மிகவும் அசாதாரணமானது, உண்மையான தியாகம் என்று பலரும் சோகத்துடன் தெரிவித்தனர்.
இருள் வகுப்பைச் சேர்ந்தவரான செங்கொடியின் தாயார் ஏற்கனவே காலமாகி விட்டார். இதையடுத்து அவரது தந்தை இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு போய் விட்டார். இதனால் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட செங்கொடி மக்கள் மன்றத்தில் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.
பறை வாசிப்பதில் மிகவும் கை தேர்ந்தவரான செங்கொடி பல்வேறு சமூக நாடகங்கள் மூலம் மக்களுக்கு சமூ்க கருத்துக்களையும் பரப்பி வந்தார்.
செங்கொடியின் உடல் தற்போது அவரது சொந்த கிராமமான மங்கல்பாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பெருமளவிலானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் முக்கியத் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்த வரவுள்ளனர். இதன் காரணமாக இன்று நடப்பதாக இருந்த உடல்தகன நிகழ்ச்சி நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேர‌றிவாள‌ன், முருக‌‌ன், சா‌ந்த‌னை தூ‌க்‌கி‌ல் போட 8 வார‌ம் தடை ‌வி‌‌‌‌தி‌த்தது செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்


வாசகர் கருத்துகள் (2)
  1. வீர நங்கை செங்கொடிக்குச் சிறப்பான வீர வணக்கச் செய்தியை வெளியிட்டு உள்ளீ்ர்கள். எனினும் எதற்காகவும் யாரும் உயிரைஇழக்கும் முயற்சியில் இறங்கக்கூடாது. நம்அரசுகளுக்குயாருடைய உயிரைப்பற்றியும் கவலை இல்லை என்னும் பொழுது அதற்கான முயற்சியில் இறங்குவதும் விழலுக்கு இறைத்த நீரே! எனினும் மூவர் உயிர் காக்கப்படும்!தமிழ் ஈழம் மலரும்! செங்கொடிக்கு வீர வணக்கம். 
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/

திங்கள், 22 நவம்பர், 2010

தகுந்த பதிலடிகொடுப்போம்: புலனாய்வுப் போராளி கரிகாலன் அறிக்கை.



தகுந்த பதிலடிகொடுப்போம்: 
புலனாய்வுப் போராளி கரிகாலன் அறிக்கை.
20 November, 2010 by admin
இக் கட்டுரை தம்மை ஒரு புலனாய்வுப் போராளி எனத் தெரிவிக்கும் ஒருவரால் அதிர்வு இணையத்திற்கு அனுப்பப்பட்டது. இருப்பினும் சுயாதீனமாக அவர் சொல்வதை உறுதிசெய்ய முடியவில்லை. அவர் கட்டுரையை நாம் பிரசுரித்துள்ளோம் !



எமது அன்பிற்குரிய தமிழீழ மக்கள
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், தமிழீழ தேசத்தின் சுதந்திரத்திற்காகவும் தம் இன்னுயிரை ஈகம்செய்த மாவீரர்களை நினைவுகூரும் வாரமாகும்.

எம் இதயக் கோவில்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான தியாகங்களை புரிந்த அந்த உன்னத வீரர்களை உணர்வோடு நினைவுகூருவதற்கு ஒன்று திரளும் நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியமான கட்டமைப்பில் செயற்பட்டவன் என்ற வகையில் சில விடயங்களை உங்களோடு பகிரவிரும்புகிறேன்.

எமது விடுதலை இயக்கத்தின் பாசத்திற்குரிய உறவுகளே!

ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தில், ஆயுதங்களின் அமைதி என்பது அப்போராட்டத்தின் முடிவல்ல. காலத்தின் கட்டளையும், உலகத்தின் நியதியும் மீண்டும் மீண்டும் மாறும். அது, அடுத்த கட்டப் போராட்டத்திற்காக நாம் எத்தகைய ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்ற செய்தியை எமக்குத் தரும். அந்த செய்தி வரும் வரை அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். எமது கடின உழைப்பினாலும், அர்ப்பணிப்பினாலும் மட்டுமே, எமக்கான வாசற்கதவுகளை நாம் திறக்க முடியும்.

இது, முற்றுமுழுதான மக்கள் மயப்பட்ட போராட்டமாக இருக்க வேண்டும். மக்களுக்காய் உருவான போராட்டம், மக்களின் புரட்சியினாலேயே அதன் இலக்கை அடையத்தக்க வகையில் பயணிக்க வேண்டும்.

எமது மாவீரர்கள் துயில்கின்ற இல்லங்களையே சிங்களப் பேரினவாதம் சிதைத்தழித்துவிட்டது. இருப்பினும், எந்த மண்ணின் விடுதலைக்காக அவர்கள் வீழ்ந்தார்களோ அந்த மண்ணோடே அவர்கள் மீண்டும் மீண்டும் சங்கமிப்பதை சிங்கள அரச பயங்கரவாதத்தால் தடுக்க முடியவில்லை. உயரிய அர்ப்பணிப்பினை புரிந்த மாவீரர்கள் எமது போராட்டத்தில் கல்லறைகள் அல்ல, மாறாக எமது சுதந்திரப் போராட்டத்திற்கான கருவறைகள்.

சர்வதேச போர்மரபு சட்ட நியமங்களை மீறி, எமது இதயக் கோவில்களில் வாழும் எம் மாவீரச் செல்வங்களின் துயிலுமில்லங்களை அழித்து, தமிழர் தாயகத்தை சிதைத்து வரும் சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்திற்கு நாம் தகுந்த பதிலடியை உரிய நேரத்தில் கொடுப்போம். இதற்கு, உலகெங்கும் பரந்து வாழும் ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழரினதும் பங்களிப்பு அவசியம்.
களநிலை மாறியிருக்கலாம், ஆனால் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற எமது உறுதியான மனநிலை என்றுமே மாறக்கூடாது.

எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களே!

தன்மானமும், பொறுப்புமுள்ள மனிதர்கள் என்ற வகையில், எத்தகைய கட்டத்திலும் எமது சுதந்திரப் போராட்டத்தை நாம் கைவிடக்கூடாது.

எமது தேசியத் தலைவர் தொடர்ச்சியாக கூறுவதுபோல் எமது இறுதி மூச்சுவரை எமது மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டம் தொடர வேண்டும். எத்தகைய காலகட்டத்திலும் எமது சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் கொள்கையையோ, எமது தேசியத் தலைமையின் இலட்சியத்தையோ மானமுள்ள தமிழர்களாகிய நாம் கைவிட முடியாது. தேசிய நலன்களுக்காக முட்டி மோதிக்கொள்ளும் இன்றைய புதிய உலக ஒழுங்கிலே, விடுதலைப் புலிகளின் அடையாளத்தை பூண்டோடு அழித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்ற பேராபத்து நிறைந்த சூழலை உருவாக்கும் பாரிய சதித்திட்ட முயற்சியில் சிங்களப் பேரினவாதமும் அதன் நேச சக்திகளும் முனைப்புக் காட்டி வருகின்றன.

தமிழர்கள் என்ற இனத்தையும், அவர்களின் பாரம்பரிய அடையாளங்களையும் அழிக்க வேண்டுமாயின், அதன் முதற்கட்டமாக விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற இரகசிய நிகழ்ச்சி நிரலிலே பல சக்திகள் இயங்கி வருவதை எமது புலனாய்வுக் கட்டமைப்பு கண்டறிந்துள்ளது. இதற்காக ஆசைவார்த்தைகளைக் காட்டி, மாயமான்களை உருவாக்கி உரிமைக்கான எமது விடுதலைப் போராட்டத்தை சலுகைகள் ஊடாக கருவறுக்கும் முயற்சியிலே குறித்த சக்திகள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.

இதற்காக, விடுதலைக்கு உதவுவது போல் போக்கு காட்டி விடுதலை உணர்வாளர்களின் மனவுறுதியை சிதைக்கும் பயங்கர நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அன்பிற்குரிய எமது மக்களே, விடுதலை உணர்வாளர்களே!

சிங்களப் பேரினவாதம் விரித்து வைத்துள்ள கபட வலைக்குள் வீழ்ந்து விடாமல், விழிப்புணர்வோடு இருந்து எமது சுதந்திரப் போராட்டத்தை நகர்த்துவதற்கு உங்களின் பங்களிப்பை வழங்க வேண்டியது இந்நேரத்தில் வரலாற்றுக் கடமை என்பதை மனதிற்கொள்ளுங்கள்.

போராடப் புறப்பட்ட இனம் ஒன்று அவலங்களையும், இழப்புகளையும் கண்டு பின்வாங்கியதாக இதுவரை விடுதலைப் போராட்ட வரலாறு இருந்ததும் இல்லை, இனிமேலும் இருக்கவும் கூடாது.
எமக்கான இன்னல்கள் என்பது, எமது தேசத்தின் விடுதலைக்கான பிரசவ வலி.

பல தலைமுறை இழப்புக்குப் பின் சுதந்திரத்தை வென்றெடுத்து இன்று நிமிர்ந்து நிற்கும் அயர்லாந்தைப் பாருங்கள்.

1990ஆம் ஆண்டோடு அழிந்தது சோவியத் ஒன்றியம் எனச் சொன்னோர்கள் அச்சமுறும் வகையில், இருபது வருடங்களுக்குள் தனியொரு தேசமாய் தலைநிமிர்ந்து நிற்கும் ரஷ்யாவைப் பாருங்கள்.

அடுத்து! பால்கன்ஸைப் எடுத்துப் பாருங்கள். எத்தனை இனப்படுகொலைகளைச் சந்தித்தது? புதைகுழிகளின் நகரங்களாக மாற்றம் பெற்றது. மயான தேசத்தில் நிர்க்கதியற்ற மக்களாக அந்த மக்கள் அந்தரித்து விடப்பட்டார்கள். ஆனால், அந்த மக்களோ, சுதந்திர தேசத்தை அடைய வேண்டும் என்ற கனவைக் கைவிடவில்லை. இழந்து போன உறவுகளை நினைக்கும் போதெல்லாம் உங்கள் கனவுகளை நனவாக்குவோம் என்று உறுதியெடுத்துக் கொண்டார்கள். அதற்கேற்ப அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.

அதன் பலன், பால்கன்ஸ் குறுகிய காலப்பகுதிக்குள் ஆறு சுதந்திர தேசங்களை பிரசவித்தது. (இறுதியாக விடுதலையடைந்த ஏழு சுதந்திர தேசங்களில் ஆறு தேசங்கள் பால்கன்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்தவை.) இதற்கு தனித்து பூகோள அரசியல் மட்டுமல்ல, மக்களின் விடுதலை உணர்வும் பாரிய பங்களிப்பை வழங்கியது.

இரண்டாம் உலகப் போரோடு யூதர்கள் என்ற இனம் அழிந்தது என்று ஒரு வரலாறு சொன்னது. ஆனால், இன்று இஸ்ரேலியர்கள் வரலாற்றையே மாற்றிவிட்டார்கள். குந்த ஒரு குடிநிலமாகக் கொடுத்த நிலத்தை ஒரு சக்திமிக்க தேசமாக மாற்றிவிட்டார்கள். அயல்நாடுகள் அரபுநாடுகளாக இருக்கின்ற போதும், நடுநாயகமாகத் தனித்திருந்து சூழவுள்ள நாடுகள் அனைத்திற்கும் சவால்விடும் தேசமாக இன்று இஸ்ரேல் வளர்ந்த கதைக்குப் பின்னால் இருப்பது, தோல்விகளைக் கண்டு பின்வாங்காத உறுதிமிக்க மனோபாவம், அர்ப்பணிப்புடன் ஒன்றுபட்ட கடும் உழைப்பு, தளராத தன்னம்பிக்கை மற்றும் எத்தகைய இழப்புகள் வரினும், இலக்கினை அடையும் வரை போராடும் மனஉறுதி.

இவை கடந்த கால அல்லது அண்மைக் கால எடுத்துக்காட்டுக்களும் எமக்கான சில எடுத்துக்காட்டுக்களுமே ஆகும். எமக்கான விடுதலையைப் பெற்றுக்கொள்ள நாமே போராட வேண்டும். காலம் தாழ்த்தும் ஒவ்வொரு கணமும், எமக்கான சாத்தியப்பாடுகள் கைநழுவிப் போய்விடும்.

ஆகவே, எமக்கு ஏற்பட்ட பேரழிவென்பது, எமது எதிர்காலச் சந்ததியின் வாழ்வுக்குத் தடையாக இருக்கக்கூடாது. அவர்களுக்கு ஏற்படப்போகும் சவால்களைத் தகர்ப்பதற்கு நாமே போராட வேண்டும். அழிவுகளைக் கண்டு நாம் பின்வாங்காமல், எமது இலட்சியத்தைக் கைவிடாமல், எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இலட்சக்கணக்கான எமது மக்களை பூண்டோடு அழிக்கும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் திட்டத்தை அறிந்த எமது போராட்ட அமைப்புக்கு, எமது மக்களைப் பாதுகாக்கும் நோக்கோடு ஆயுதங்களை மௌனமாக்கும் நிர்ப்பந்தம் உருவானது.

எமது மண் சிங்கள இனவெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது! எமது பண்பாட்டுச் சின்னங்கள், மத வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டு வருகிறது! இந்த நிலை நீடிக்குமிடத்து, தமிழர் என்ற இனமே இலங்கைத் தீவில் இல்லாமல் போகும். எமது தாயக நிலப்பரப்பு முற்றுமுழுதாக சிங்கள இனவெறியர்களின் ஆக்கிரமிப்புக்கு உட்படும். ஆகமொத்தத்தில், எமது கடந்த கால அடையாளங்கள் மட்டுமல்ல, எதிர்கால இருப்பே இல்லாமல் போகும் பேராபத்து விரைவாகச் சூழ்ந்து வருகிறது.

இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களையும், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களையும் இழந்த பின்னும் நாம் அமைதி காக்கப் போகிறோமா?

பல்குழல் எறிகணைகளின் வீச்சு ஒருபக்கம், கடற்படையின் தாக்குதல் இன்னொருபக்கம், இரசாயனக்குண்டுத் தாக்குதல் மறுபக்கம், இவற்றையெல்லாம் தாண்டி, மிகையொலி விமானங்களின் கொடும் தாக்குதல்.

உண்ண உணவில்லை, உயிரைப் பாதுகாக்க இடமில்லை, பட்ட காயத்திற்கு கட்டுப்போட மருந்தில்லை, இப்படியான இக்கட்டான நிலைமைகளுக்குள்ளும் இலட்சியப் பற்றுறுதியோடு இறுதிவரை முள்ளிவாய்க்காலில் நின்று எமது தாயக மண்ணோடு சங்கமித்த எம்மக்களை ஒரு தரம் நினைத்து பாருங்கள்.

சுதந்திரமே மூச்சென்று வாழ்ந்து கல்லறைகளுக்குள் விழிமூடிய பின்னும், எம் கனவுகளுக்குத் துணைநிற்கும் மாவீரர்களை மனத்திற் கொள்ளுங்கள்.

பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்ட மண்ணில் இறுதிக்கணம் வரை நிலைகொண்டு, சிறீலங்காவின் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும், போர்க்குற்றங்களையும் வெளிக்கொணர்வதற்காக தாயக மண்ணில், சிறீலங்காப் படைகளின் கொடூர பிடிக்குள் இருந்து கொண்டு துணிச்சலோடு செயற்படும் போராளிகள் - மாவீரர் குடும்ப உறுப்பினர்களின் மனவுறுதியைப் பாருங்கள்.

இராணுவ மயமாக்கப்பட்ட மயான பிரதேசங்களுக்குள் வாழ்கின்ற போதும், சிறீலங்காப் படைகள் நடாத்திய இனஅழிப்புப் போரின் சாட்சிகளாக முன்வந்துகொண்டிருக்கும் எங்கள் தாய்க்குலங்களைப் பாருங்கள்.

இத்தனை நடந்த பின்னும், இவர்களின் போராட்ட உணர்வு மட்டும் மங்கவில்லையே. ஆனால், களத்தோடு ஒப்பிடுமிடத்து, புலத்தில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு விடுதலைக்கான ஆதரவுத்தளங்களை விஸ்தரிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம். ஆயினும், அந்தப் பணி ஆக்கபூர்வமாக இன்னும் தொடங்கப்படாமையால் எமது மக்களின் விடுதலைக்கான போராட்டச் சக்கரம் மந்த நிலையை அடைந்துள்ளது. இது எதிரியானவனுக்கு வாய்ப்பானதாக மாறிவிட்டுள்ளது. ஆகவே, தாயக விடுதலையென்ற உன்னத இலட்சியத்தை அடைவதற்காகவும், எமது மக்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் உணர்வுடனும், உத்வேகத்துடனும் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.

மிக நெருக்கடியான காலகட்டமொன்றிலே தேசியத் தலைவர் உறுதியாக எடுத்த முடிவொன்றைக் கூறி இந்தக் கருத்து பகிர்வை நிறைவுசெய்கிறேன்.

அமைதி காக்கும் படையென்ற பெயரில் வந்திறங்கிய இந்தியப் படையினர் எமது மண்ணை ஆக்கிரமித்து, எமது மக்களைப் படுகொலை செய்தபோது, அவர்களுக்கு எதிராக போரிடுவதைத் தவிர வேறுவழியில்லையென்ற முடிவில் போரிடத் தயாரான போது, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் அதற்கு இணங்கவில்லை. ஏனெனில், இந்திய இராணுவத்தின் உச்சபலம் அவர்களை அவ்வாறான ஒரு நிலைக்கு இட்டுச்சென்றது. ஆனால், தேசியத் தலைவரோ தான் எடுத்த முடிவை மிக நேர்த்தியாக நிறைவேற்றினார்.

எத்தகைய சவால்கள் வரினும் எமது சுதந்திரப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்று தன் அருகிலிருந்தவர்களுக்கு எடுத்துக்கூறியிருந்தார்.

இது, எமது இன்றைய நிலைக்கும் பொருந்தும்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இவ்வண்ணம்,
புலனாய்வுத்துறைப் போராளி,
கரிகாலன்
karikalan04@hotmail.com

Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 16014