life of 3 tamils லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
life of 3 tamils லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

high court stayed hanging for 3 : 3 பேரைத் தூக்கில் போட 8 வாரம் தடை: நீதிமன்றம்

பாராட்டுகள். முன் எடுத்துக்காட்டுகள் அடிப்படையில் மூவரையும் விடுதலை செய்யும் நாளையும் எதிர்பார்ப்போம்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!
3 பேரை தூக்கில் போட 8 வாரம் தடை: நீதிமன்றம்



சென்னை, ஆக. ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். 3 பேரின் சார்பில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தது நீதிமன்றம். விசாரணை முடிவில், இம் மூவரையும் தூக்கில் போட நீதிபதிகள் சத்தியநாராயணன், நாகப்பன் ஆகியோர் இம்மூவரையும் தூக்கில் போட தற்காலிகத் தடை விதித்தனர். மூன்று பேரின் மனுவை ஏற்று சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

assembly resolutions about hanging of 3: 3 பேரின் தூக்கு த் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பேரவையில் தீர்மானம்

மிக மிகப் பாராட்ட வேண்டிய தீர்மானம்.  குடியரசுத்தலைவரின் கருணை மனு மறுக்கப்பட்ட பின்பு மாநில அரசு மறு ஆய்வு செய்யக்கூடாதுஎன்ற மத்திய அரசின் குறிப்புரையை  முதல்வர் வாசித்த பொழுதே   சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றி அனுப்பலாம் என மக்களால் கருதப்பட்டது. மக்களின் உணர்வினைப் புரிந்து கொண்டு செயல்பட்டுள்ள  மாண்புமிகு முதல்வர் அவர்களுக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!



3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க பேரவையில் தீர்மானம்

First Published : 30 Aug 2011 11:23:37 AM IST

Last Updated : 30 Aug 2011 11:27:41 AM IST

சென்னை, ஆக.30: ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவருவதாக முதல்வர் தெரிவித்தார். பேரவையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. கருணை மனுக்களை பரிசீலித்து குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்கும்படி இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பேரவைத் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உடனே தெரிவிக்கப்பட்டது. தூக்கு தண்டனை என்பது தமிழக மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
கருத்துகள்

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த முதல்வருக்கும், உயர்நீதிமன்றம், இரண்டுக்கும் தமிழர்கள் தலைவனங்குறோம்.
By கேசவராஜ.j
8/30/2011 12:00:00 PM
நன்றி
By gb
8/30/2011 11:31:00 AM
நன்றி அம்மா . நன்றி.
By கௌசல்யா
8/30/2011 11:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 27 ஆகஸ்ட், 2011

மூவர் உயிர் காப்போம் - கருத்தைத் திரட்டும் கவிதை, கட்டுரைப் போட்டி

மூவர் உயிர் காப்போம் - கருத்தைத் திரட்டும் கவிதை, கட்டுரைப் போட்டி

பதிவு செய்த நாள் : August 27, 2011


ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (திருக்குறள் 579)
மூவர் உயிரைக் காத்திடுக !            மூவாப்புகழைப் பெற்றிடுக !
தமிழ்க்காப்புக் கழகம் தொகுக்கும்
மக்கள் முறையீட்டுக்
கவிதை, கட்டுரைப் போட்டிகள்
மனிதநேய ஆர்வலர்களே!
மரணத்தண்டனையினும் கொடியது அதனை எதிர்நோக்கிச் சிறை வாழ்க்கையைக் கழிப்பது என நீதிபதிகளாலேயே சொல்லப்பட்ட கொடுந்தண்டனையால் துன்புறுபவர்கள்
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஆவர்.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மக்களின் கருத்துக்களைத் திரட்டி அவை, தடை வழக்கு  நீதிபதி, முதல்வர் முதலானவர்களுக்கு அனுப்பி வைக்கப் பெறும். இதனை முன்னிட்டு விடுதலை முறையீடுகளைக்  கவிதை,  கட்டுரை வடிவில்  அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
  • கவிதை 24 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • கட்டுரை 4 பக்க அளவில்  இருக்க வேண்டும்.
பிழைகளின்றியும் அயற்சொல் கலப்பும் அயலெழுத்துக் கலப்பும்  இன்றியும் படைப்புகள்  இருக்க வேண்டும்.
படைப்புகளை 5.9.2011 ஆம் நாளுக்குள் thamizh.kazhakam@gmail.com என்னும் மின்வரிக்கு அனுப்ப வேண்டும். எல்லா அகவையினரும் எல்லா நாட்டினரும் கலந்து கொள்ளலாம். தங்கள் பெயர், அகவை, பேசி எண் மற்றும் முகவரியைக் குறிப்பிடவும்.
பங்கேற்போர் எண்ணிக்கைக்கேற்ப தமிழ்க்காப்புக்கழக நிறுவனர் பேராசிரியர் சி.இலககுவனார் அவர்களின் 38 ஆவது நினைவு நாளை முன்னிட்டுப் பரிசுகளும்  வழங்கப் பெறும். பரிசுகள் அடிப்படையில்  இல்லாமல் உணர்வின் அடிப்படையில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இளந்தலைமுறையினரைப் பங்கேற்கச் செய்து தமிழ் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் படைப்புகளைப் பெற்று அனுப்பலாம்.
மக்கள் கருத்தைத் திரட்டி மூவருக்கும் விடுதலை வழங்கச் செய்வோம்.

தொடர்பிற்கு
இலக்குவனார் திருவள்ளுவன்,
தலைவர்
பேசி: 98844 81652

அரு.வள்ளியப்பன்,
செயலர்
பேசி: 98840 57744