சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். எனினும் இத் தீர்ப்பால் ஒரு நன்மை ஏற்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பாரும் முறையற்ற நீதியை எதிர்க்க ஒன்றபட்டு உள்ளார்களே! வேறு எதில் ஒன்றுபட்டார்கள்? எனவே, அநத வகையில் நீதிபதிகளுக்குப் பாராட்டுகள். தீர்ப்பை எதிர்த்து அரசே மேல் முறையீடு செய்து குறுகிய காலத்திற்குள் தீர்ப்பு வழங்கவும் காலவரையறை வைக்க வேண்டும். வெற்றி மாலையே! நீ, மெதுவாகவாவது அறத் தாயைத் தழுவக் கூடாதா? வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/8/2010 3:34:00 AM
அணு உலை கட்டித்தந்து அதில் விரிசல் ஏற்பட்டால் நஸ்ர ஈடு கோரமுடியாது என்ற நிபந்தனையை காங்கிரஸ் தி மு கா கலைஞ்யர் அரசு வெளிநாடவரின் காலில் விழாத குறையாக ஏற்றுக்கொண்டுள்ளது இதில் பாதிக்கப்படப்போவது தமிழ்நாட்டு தமிழர்கள் தான் அணு உலை தமிழ்நாட்டில் கட்டி கேரளா ஆந்திரம் கர்நாடம் ஒரிசா ஆகிய இடத்திற்கு மின் வினியேகம் செய்யப்போகின்றனர் விரிசல் ஏற்பட்டால் (ஏற்படும்) உயிர் விடுவது தமிழர் நன்மை அடைவது வேறு மானிலத்தவர் அணு உலை கழிவை தமிழன் கடலில் கொட்டுவார்கள் தமிழனுக்கு கடலும் இருக்காது இதனால் தமிழர்களே விழிப்படையுங்கள் எங்கள் சந்ததியை காப்போம் திராவிடர்களை அவர்களது சொந்த மானிலமான ஆந்திரத்துக்கு விரட்டியடித்து தமிழையும் தமிழரையும் காப்போம்
6/8/2010 2:28:00 AM
இந்திய மத்திய மானில அரசுகளின் துரோகத்தனத்தால் .கலாநிதி கைலாசதநாதன் சுதர்சன் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.. முல்லைத்தீவு மாஞ்சோலை மருத்துவமனையின் மருத்துவராக கடமையாற்றிய இவர் பின்பு வவுனியாவிற்கு வந்து வதைமுகாம்களின் மருத்துவராக கடமையாற்றியுள்ளார். சிறீலங்காப்படையினரின் இறுதிக்கட்ட போரில் பணியாற்றிய மருத்துவர் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவர் தனது பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்குப்பூர் சென்ற இவர் அங்கிருந்து சிறீலங்கா திருப்பிச்செல்ல முடியாத நிலையில் அதாவது சிறீலங்கா சென்றால் சிறீலங்காப்படை கைதுசெய்யும் என்ற நிலையில் தமிழகத்திற்கு சென்றுள்ளார். தமிழகம் சென்ற அவர் சிறீலங்காப்படையின் புலனாய்வாளர்களின் தகவல்களின்படி கியூபிரிவு புலனாய்வாளர்களினால் கடுமையாக விசாரிக்கப்பட்டு இனங்காணப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் மர்மமான முறையில் கியூபிரிவால் கடத்தப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார். இவரது அனனத்து விபரங்களும் சிறீலங்காப்படை புலனாய்வாளர்களுக்கு கியூபரிவு புலன
6/8/2010 2:14:00 AM
இவரது அனனத்து விபரங்களும் சிறீலங்காப்படை புலனாய்வாளர்களுக்கு கியூபரிவு புலனாய்வால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூரிற்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நாடு கடத்திய தமிழகத்தின் கியூப்பிரிவினரால் சிங்கப்பூர் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து இவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையம் சென்ற இவர் அங்கு சிறீலங்காப்படையின் புலனாய்வாளர்களினால் கைதுசெய்யப்பட்டு தற்போது இரண்டாம் மாடி வதைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளியவளை 3 ஆம் வட்டாரத்தை நிலையான முகவரியாக கொண்ட இவர் தமிழ தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினத்தின் நெருங்கிய உறவும் ஆவார். ச.கனகரத்தினத்தின் மகனும் சிறீலங்காப்படையினரின் புலனாய்வாளர்களினால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இவரும் வைதுசெய்யப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களை இனங்கண்டு கைதுசெய்யும் நடவடிக்கைகளில் தமிழகத்தின் கியூப்பிரிவு புலனாய்வளர்கள் மற்றும் சிங்கப்பூர் காவல்துறையின் புலனாய்வாளர்களுடன் சி
6/8/2010 2:13:00 AM