வியாழன், 10 ஜூன், 2010

தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி



புது தில்லி, ஜூன் 9: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண அந் நாட்டு அரசை வலியுறுத்த இந்திய அரசு தவறி விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா எம்.பி., தில்லியில் புதன்கிழமை கூறியதாவது: பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இலங்கை அதிபருக்கு, இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. ஆனால், அங்கு பல்வேறு இன்னல்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்தியா, இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அதுபோல், தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இது, தமிழர்களுக்கு மத்திய அரசு இழைக்கும் மற்றொரு துரோகம் என்றார் டி. ராஜா.
கருத்துக்கள்

இந்தியம் சிங்களத்திற்கு நன்றி தெரிவித்துக் கைம்மாறாக மேலும் சில ஒப்பந்தப் பரிசுகளை நல்கும் சந்திப்பு. அவ்வாறிருக்க தமிழர் நலன் எங்கே இடம் பெறும். நாம் நம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2010 3:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக