செவ்வாய், 8 ஜூன், 2010

குழந்தைத் தொழிலாளரை ஒழிப்பதற்கான நாளன்று. அவர்களைத் தொழிலில் இருந்து மீட்டு வாழ வைக்க வேண்டியதற்கான விழிப்புணர்வு நாள். எனவே, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் எனக் குறிப்பிட வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++
"மாத்தி யோசி' என்பது இது தானோ தேதி தெரியாமல் உறுதிமொழி எடுத்தது












பதிவு செய்த நாள் : ஜூன் 08,2010,03:17 IST

சேலம்: "குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்' என்றைக்கு எனத் தெரியாமல், சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதி மொழி எடுத்து புதுமை(!) படைத்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை 11 மணிக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதி மொழி எடுக்கப்படுவதாவும், இதில் அனைத்து பிரிவு ஊழியர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும், எனவும் அறிவிக்கப்பட்டது. குழந்தை தொழிலை ஒழிக்கும் உறுதி மொழி எடுப்பதற்காக, அரசு மருத்துவமனை டாக்டர்களும், அனைத்து பிரிவு ஊழியர்களும் நேற்று காலை 10.30 மணிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் கூடி, கண்காணிப்பாளர் டாக்டர் மோகனுக்காக காத்திருந்தனர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடன் ஆய்வை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக வந்து சேர்ந்தார் கண்காணிப்பாளர் மோகன். பின், நர்ஸ் பயிற்சி பள்ளி மாணவிகள், டாக்டர்கள், நர்ஸ்கள் ஒன்று கூடி, "குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின' உறுதி மொழியும் எடுத்தனர்.
இதற்கிடையே, சில விவரமான மருத்துவமனை ஊழியர்கள், ஜூன் 11ம் தேதி தான் "குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்' என்பதை கண்காணிப்பாளர் மோகனிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்காணிப்பாளர், அவசர அவசரமாக பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு, "குழந்தை தொழில் ஒழிப்பு உறுதி மொழி எடுத்தது குறித்த செய்தி மற்றும் படங்களை பிரசுரிக்க வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார். எதை கணக்கில் கொண்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது என்பதும், இந்த விஷயத்தில் எங்கே குழப்பம் ஏற்பட்டது என்பதும் மருத்துவமனை நிர்வாகத்திற்கே வெளிச்சம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக