திங்கள், 7 ஜூன், 2010

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவருக்கு உதவிக் கரம் நீட்டிய அமைச்சர்கள், ஆட்சியர்



விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றும் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்.
நாமக்கல், ஜூன் 6: நாமக்கல் அருகே விபத்தில் சிக்கி சாலையோரம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர், அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் உதவியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஞாயிற்றுக்கிழமை நடந்த பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நாமக்கல் வந்திருந்தார். திம்மராவுத்தம்பட்டியில் நடந்த புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டட திறப்பு விழாவில், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் செ. காந்திச் செல்வன் மற்றும் சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, ஆட்சியர் சகாயம் மற்றும் மருத்துவத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.விழா முடிந்து மல்லசமுத்திரத்தில் கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைக்க அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சென்று கொண்டிருந்தனர். திருச்செங்கோடு அருகே சின்னதம்பிபாளையம் பகுதியில் வரும்போது, விபத்தில் சிக்கி சாலையோரம் ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.செய்தியாளர்கள் வந்த வாகனம் அங்கு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பின்னால் வந்த ஆட்சியரின் வாகனம் மற்றும் அமைச்சர்களின் வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து ஆட்சியர் சகாயம் ஓடிச்சென்று சாலையில் கிடந்தவரைத் தூக்க முயன்றார். அவருடன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், காந்திச் செல்வன், சட்டப் பேரவை துணைத் தலைவர் வி.பி. துரைசாமி மற்றும் போலீஸôரும் ஓடிவந்தனர். வாகனத்தில் வந்த மருத்துவர் உயிருக்குப் போராடியவரை பரிசோதனை செய்தார்.பின்னர், போலீஸôரின் வாகனத்திலேயே அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்ல முயன்றபோது 108 ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.போலீஸôர் விசாரணையில், விபத்தில் சிக்கியவர் நெய்க்காரன்பட்டியைச் சேர்ந்த ஹனுமந்தன் (40) என்பதும், சைசிங் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் மோதியுள்ளது. விபத்து நடந்தவுடன் அப் பகுதியைச் சேர்ந்தோர் 108 ஆம்புலன்ஸýக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் வரும் வரை 30 நிமிடத்துக்கும் மேலாக அவர் சாலையிலே துடித்துக் கொண்டிருந்துள்ளார். ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் வாகனம் வந்ததால் அவருக்கு உடனடியாக உதவி கிடைத்தது.அமைச்சர்கள் ஆட்சியர், மற்றும் போலீஸôர் செய்த உடனடி உதவியை பொதுமக்கள் பாராட்டினர்.
கருத்துக்கள்

நாமும் பாராட்டுவோம்! நெல்லை போல் வேடிக்கை பார்க்காமல் உதவியதற்காக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/7/2010 3:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக