புதுச் சேரி, ஜூன் 10: புதுச்சேரியில் ரூ.15 லட்சம் செலவில் திருவள்ளுவரின் 13.3 அடி உயர வெண்கலச் சிலை நிறுவப்படுகிறது. இது 2 டன் எடையுள்ளது. ÷புதுச்சேரி சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. இங்கு சுற்றிப் பார்க்க பல்வேறு இடங்கள் இருக்கின்றன. இப்போது சுண்ணாம்பாறு படகு குழாம் அருகே புதியதாக திருவள்ளுவர் சிலை இன்னும் ஒரு மாதத்தில் நிறுவப்பட உள்ளது. அங்கு ஒரு சிறிய பூங்காவும் நிர்மாணிக்கப்படுகிறது. ÷ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி பிர சாத் (44) இந்தச் சிலையின் மாதிரியை வடிவமைத்துள்ளார். இதை முதல்வர் வைத்திலிங்கம், சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், பொதுப்பணித்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் பார்வைக்காகவும், அவர்களின் ஒப்புதலுக்காகவும் இந்த மாதிரி திருவள்ளுவர் சிலையுடன் விஜயவாடாவில் இருந்து புதுச்சேரிக்கு வந்துள்ளார். ÷இந்த மாதிரி திருவள்ளுவர் சிலைக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் இதே வடிவத்தில் திருவள்ளுவர் வெண்கலச் சிலையை அவர் வடிவமைக்க உள்ளார். ÷அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவர் கையால் கதர் ஆணையத்தின் தேசிய விருதைப் பெற்றவர் இந்தச் சிலையை வடிவமைக்கும் பிரசாத். ÷திருவள்ளுவர் சிலை வடிவமைப்பு குறித்து சிற்பி பிரசாத் கூறுகையில், திரு வள்ளுவர் சிலை எப்படி இருக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு சார்பில் புகைப்படம் கொடுத்தனர். மேலும் இன்டர்நெட்டிலும் திருவள்ளுவர் படத்தை எடுத்து ஒப்பிட்டு இந்தச் சிலையை உருவாக்கியுள்ளேன். ÷இந்தச் சிலையில் திருவள்ளுவர் முகம் சிறப்பாக இருக்கும். மிகப்பெரிய புலவரின் சிலையை என் கை வடிவமைத்துள்ளது குறித்து பெருமைப்படுகிறேன். அது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. பாரம்பரியமாக கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். 24 வயதில் இருந்து இது போன்று சிலைகள் வடிவமைப்பதில் ஈடுபட்டு வருகிறேன். ÷மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை வடிவமைத்துள்ளேன். ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அந்த இடத்தில் 20 அடி உயர ராஜசேகர ரெட்டியின் வெண்கலச் சிலை நிறுவப்பட உள்ளது. அந்தச் சிலையையும் தயாரித்து வருகிறேன் என்றார். ÷புதுச்சேரி யூனியன் பிரதேசம் யேனம் பிராந்தியத்தில் நாட்டிலேயே உயரமான 24 அடி உயர பாரதமாதா சிலையை வடிவமைத்தவர் இந்தச் சிற்பிதான். இதைத் தவிர புதுச்சேரி அரசுக்காக மேலும் சில சிலைகளை இவர் வடிவமைத்து வருகிறார். ÷கா ரைக்கால் பகுதிக்காக காமராஜர் வெண்கலச் சிலை 10 அடி உயரத்தில் தயாரித்து வருகிறார். காமராஜரின் இரண்டு கைகளிலும் சிறுவன், சிறுமி ஆகிய 2 பேர் இருப்பர். இது ரூ.13 லட்சம் செலவிலான வெண்கலச் சிலை. மேலும் காரைக்கால் பகுதிக்கு 7 அடி உயரத்தில் உட்கார்ந்த நிலையில் வெண்கல காந்தி சிலையையும் இவர் தயாரித்து வருகிறார். இதற்கு செலவு ரூ.15 லட்சம். ÷இப்போது புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கட்டப்பட்டு முடியும் நிலையில் இருக்கிறது. இந்த மருத்துவமனையின் முன்பு நான்கரை அடி உயரத்தில் தாய் குழந்தைக்கு பாலூட்டுவது போன்ற வெண்கலச் சிலையையும் இந்தச் சிற்பி வடிவமைத்து வருகிறார். இதன் மதிப்பு ரூ.6.3 லட்சமாகும்.
கருத்துக்கள்
குமரியில் பெண்மையின் சாயலில் திருவள்ளுவரை வடித்து விட்டு நொண்டிச் சாக்கு சொல்லி அதையே புதுமை எனக் கதையளந்ததுபோல் இல்லாமல் நன்கு வடிவமைத்துள்ள சிற்பி பிராசத்திற்குப் பாராட்டுகள். குமரியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாமல் இதற்கு உரியவர்கள் ஒப்புதல் தர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/11/2010 7:29:00 AM
6/11/2010 7:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்