சென்னை, ஜூன் 6: இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு திங்கள்கிழமை தில்லி செல்கிறது.இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசின் முகாம்களில் அடைக்கப்பட்டனர். எவ்வித அடிப்படை வசதியும் இன்றி, அடைத்து வைக்கப்பட்டுள்ள ஏராளமான தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை போருக்குப் பின் உலகின் பல நாடுகளிலிருந்தும் எழுந்தது. எனினும், அவர்களை விடுவிக்க இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் தமிழகத்திலிருந்து தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் 10 பேர் கடந்த 10.10.2009 அன்று இலங்கைக்குச் சென்றனர்.அங்குள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுóள்ள தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிந்த அவர்கள், இலங்கை அதிபர் ராஜபட்சவையும் சந்தித்து, அந்த மக்களை விடுவிக்குமாறு வலியுறுத்தினர்.5 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய எம்.பி.க்கள் குழுவினர், டிசம்பர் இறுதிக்குள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழர்களையும் விடுவிக்க ராஜபட்ச உறுதி அளித்துள்ளதாக அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.அக்குழு சென்று வந்த அடுத்த சில நாட்களில் சில ஆயிரம் தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்தடுத்த வாரங்களில் மேலும் சில ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.எனினும் ராஜபட்ச உறுதி அளித்தபடி முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் விடுவிக்கப்படவில்லை. இன்னும் ஏராளமானோர் முகாம்களில் வதைபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபட்ச செவ்வாய்க்கிழமை (ஜுன் 8) இந்தியா வருகிறார். அப்போது, முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரையும் விடுவிக்கவும், தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை செய்யுமாறும் ராஜபட்சவை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வற்புறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்திலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில் இந்தியா வரும் ராஜபட்சவை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் நேரில் சந்திக்க உள்ளனர். இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் விடுவிக்கவும், அவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் ராஜபட்சவிடம் தமிழக எம்.பி.க்கள் குழுவினர் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.இதற்காக தமிழக எம்.பி.க்கள் குழுவினர் திங்கள்கிழமை சென்னையிலிருந்து தில்லி புறப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக எம்.பி.க்கள் - ராஜபட்ச சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவை, முதல்வர் கருணாநிதி ஏற்கெனவே தில்லிக்கு அனுப்பியுள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கள்
இக்குழுவினர் அளிக்கும் பொன்னாடைகள், பட்டாடைகள், நினைவுப் பரிசுகளால் பக்சே மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடிப்போவான். எனினும் ஒரு வேண்டுகோள். குழுவினர் அனைவரும் கறுப்பாடைகள் அணிந்து செல்ல வேண்டும். கறுப்புத் துண்டுகளையே அணிவிக்க வேண்டும். உண்மை உணர்வில் செல்வதாயின் இதனைப் பின்பற்ற வேண்டும். வேறுநோக்கம் எனில் சென்றால் என்ன? இருந்தால் என்ன? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan 6/7/2010 3:20:00 AM
ஏட்டுச சுரைக்காயை வரைந்து கொடுத்து தமிழனை தின்னச் சொன்னான் !!! இதைக் கண்ட முட்டாத் தமிழனுக்கு நாக்கில் நீர் ஊறியது !!! இவனை நான் கிழட்டு சிங்கம் என்று மறந்தும் சொல்ல மாட்டேன் ! இந்த கிழட்டு திருட்டு குள்ள நரி "பெண் சிங்கம் " வரைந்து கொண்டிருந்தது !! கர்நாடகத்தில் தெரு நாயினை சுடுவதாகச் சொல்லி தமிழனை குறி பார்த்து சுட்டான் !!! உள்ளபடியே எனக்கு இதுபோன்ற சிந்தனைகளில் உடன் பாடு இல்லை என்றாலும்....இந்நேரம் வீரப்பன் இருந்திருந்தால் ....பிரபாகரன் இருந்திருந்தால்....என்று சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் !!!...நாடு போகிற போக்கினைப் பார்த்தால் காட்டில் சில வீரப்பன்கள் வேண்டும் !!! நாட்டில் பலப் பல பிரபாகரன்கள் வேண்டும் !!! @ rajasji