திங்கள், 7 ஜூன், 2010

இலங்கைத் தமிழருக்கு மறுவாழ்வு: மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி கடிதம்



சென்னை, ஜூன் 6: இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் வலியுறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை அதிபர் ராஜபட்ச செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) இந்தியாவுக்கு வர இருப்பதை ஒட்டி மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களின் சாவுக்கு காரணமான ராஜபட்ச இந்தியா வரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் சென்னையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு, பொருளாதார உதவி மற்றும் நிரந்தரத் தீர்வு கிடைப்பதற்கான வழிகளை உருவாக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார்.கடித விவரம்:இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் 2009 டிசம்பர் மாதத்துக்குள் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு உறுதி அளித்திருந்ததை நீங்கள் அறிவீர்கள்.ஆனால், இலங்கையில் இப்போதும் 80 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் இன்னும் இருக்கின்றனர். இவர்கள் அரசிடம் இருந்து மறுவாழ்வுப் பணிகளை எதிர்பார்த்து இருப்பதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.அதேபோல், முகாமில் இருந்து வெளியில் சென்று மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பொருளாதார வளர்ச்சியும், நிரந்தர அரசியல் தீர்வுக்கான பணிகளுக்காக நீதியின் அடிப்படையிலான சமரசப் பேச்சுகளும் தேவைப்படுகின்றன.எனவே, இந்தியாவுக்கு வரும் இலங்கை அதிபரின் பயணத்தின் போது இந்த இரு விஷயங்களைப் பற்றியும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இதை சிறப்பு விஷயங்களாக எடுத்துக் கொண்டு,மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொண்டு, இலங்கையில் உள்நாட்டில் அகதிகளாக உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியம் மற்றும் தேவை குறித்து ராஜபட்சவிடம் வற்புறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.கடந்த ஆண்டு திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் இலங்கை சென்று, முகாம்களில் தமிழர்களை சந்தித்துவிட்டு வந்தனர். அதற்குப் பிறகு மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னதாக முகாம்களில் இருந்து தமிழர்கள், வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர் அல்லது அவர்கள் முன்பு வாழ்ந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவர் என்று இலங்கை அரசு அறிவித்தது.அதன்படி அதற்கடுத்த வாரங்களில் சிலர் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர். இருந்தபோதிலும், தமிழர்களின் முகாம்களில் இன்னும் ஏராளமானோர் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழர்கள் அனைவரையும் சொந்த இடங்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்து, சம அந்தஸ்துடன் வாழ வழி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. அதை வலியுறுத்தும் வகையில் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார்.

கருத்துக்கள்

கொலை வெறியன் இராசபக்சே இங்கு வருவதால், ஈழத் தமிழர் மறுவாழ்விற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, கறுப்புக் கொடி காட்டி எதிர்த்து வரவிடாமல் செய்யமுடியாது என்பதற்காக எழுதப்பட்ட மடல் அல்ல; எழுதப்பட்டுள்ள யாவும் சரியான வேண்டல்களே! ஆனால், கூட்டாளி சிங். வழக்கமான மடல் என எண்ணி இதனைத் துடைத்துப் போடப் பயன்படுத்தக் கூடாதே! உடனடியாக ஒரு குழுவை - கறுப்பாடைகள் அணிந்து- அனுப்பி வைத்து சி்ங். இடம் வலியுறுத்த வைக்கலாமே! ஆனால். வருவது சிங்களத்திற்கு மேலும் செய்யக்கூடிய நன்மைகள் பற்றிப் பேசுவதற்குத்தான் எனில். என்ன பயன் ? எனவே, ஈழத்தமிழர்களுக்குத் தனியுரிமையடன் வாழ வழிவகை செயத பின்னர் இராசகபக்சேவை அழைக்கலாம் எனத் தலைமையமைச்சருக்கு முதல்வர் மடல் அனுப்ப வேண்டும். தமிழ் ஈழம் வெல்க! வளர்க இந்திய ஈழ நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/7/2010 3:11:00 AM

ஏட்டுச சுரைக்காயை வரைந்து கொடுத்து தமிழனை தின்னச் சொன்னான் !!! இதைக் கண்ட முட்டாத் தமிழனுக்கு நாக்கில் நீர் ஊறியது !!! இவனை நான் கிழட்டு சிங்கம் என்று மறந்தும் சொல்ல மாட்டேன் ! இந்த கிழட்டு திருட்டு குள்ள நரி "பெண் சிங்கம் " வரைந்து கொண்டிருந்தது !! அந்நியன் தெரு நாயினை சுடுவதாகச் சொல்லி தமிழனை குறி பார்த்து சுட்டான் !!! உள்ளபடியே எனக்கு இதுபோன்ற சிந்தனைகளில் உடன் பாடு இல்லை என்றாலும்....இந்நேரம் வீரப்பன் இருந்திருந்தால் ....பிரபாகரன் இருந்திருந்தால்....என்று சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் !!!...நாடு போகிற போக்கினைப் பார்த்தால் காட்டில் சில வீரப்பன்கள் வேண்டும் !!! நாட்டில் பலப் பல பிரபாகரன்கள் வேண்டும் !!! @ rajasji

By rajasji
6/7/2010 2:31:00 AM

The Hindu economic news page recently published that SUN TYV is running 13 channels in four southerns states and the revenue is 1500 crores!! So, for the CM of Tamil Naadu there CAN NEVER be genuine commitments to tamil, tamilians and tamil naadu. Eezham support is no longer in his heart and his letters are simple image buildinge exercises.

By Padmanaabhan
6/7/2010 1:53:00 AM

வயசாயிடிச்சல்லே இந்த குத்தியனுக்கு அதுதான் வாக்கு மாறிடிச்சு இனியும் இந்த குசும்பனின் தொல்ல கொஞ்சகாலத்திற்கு இருக்கதான் செய்யும் இந்த தமிழீழிவு சனியன் தொலையும்வரை எப்போ? ஆண்டவா!

By raj
6/7/2010 1:52:00 AM

I share the sentiments of the two already recorded here. If the DMK and its leader thiru.MK had not ever supporetd the caused of Eezham and if the GOI had not supported Eazham, I would not be speaking against thiru.MK! As one who has identiifed with the cause of Eezham tamils and watched their struggle for over more than four decades, IT IS IMPOSSIBLE TO BELIEVE THAT THE DMK AND ITS LEADER NOW SPEAKS FOR MERE REHABILITATION OF EEZHAM TAMILS IN THEIR FORMER LIVING AREAS AND ECONOMIC INCENTIVES! WHY COULD NOT THE DMK AND ITS LEADER STEADFASTLY URGE HE CENTRE TO RECOGNISE THE OVERSEAS GOVERNMENT OF THAMIZH EEZHAM? NOW, the side shows of Semmozhi maanaadau at Coimbatore and his 87th britdhay cake cutting.HOW COULD thiru.MK do it? his party interests, governance of tamil naadu and his family members holding and benefiting from particpating in governent here in TN and at New Delhiu are the prime commitments of thiru.MK. The Hindu economic news page recently that SUN TYV is runnign 13 chan

By P.Padmanaabhan
6/7/2010 1:47:00 AM

SPECTROM OOLALIL IRUNTHU RAAJAAVAI KAAPPAATRA VENDUMAA? THANATHU SONTHANGKALUKKU MANTHRI PATHAVI VAANGA VENDUMAA?UDANE DELHIKKU PARANTHU SELLUM KARUNAANITHI , ILANGAI THAMILAR YENDRAAL KADITHAM ELUTHUVAAR!!ENNE INTHA ULAGA THAMILINA THALAIARIN SEYALPAADUKAL??!!!ADUTHA MURAI PURAAVIL KADITHAM KODUTHU ANUPPUVAARO!!!

By Er.L.C.NATHAN
6/7/2010 1:46:00 AM

Professor K.Anbhazagan of of DMK is having TWO WIVES.Mr.K.SIVATHAMBI who head CLASSICAL TAMIL CONFERENCE IN June 2010,along with M.K.Kanimozhi,was the Relative of Mr.RAGAVAN who was the founder member of V.Prabakaran's LTTE.Nanthan alias Ragavan in NLFT related to Prof.Sivaththampy.

By TAMIL PROFESSOR
6/7/2010 1:24:00 AM

for ministry posts for your family you go and stay in delhi to meet leaders but for the millions of victims of the tamil community it is just a letter.And that too after the other leaders announced protests. How arrogant are you? It is the pity of tamilnadu people that you are still in power.

By anbu
6/7/2010 12:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக