chengalpattu camp லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
chengalpattu camp லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

உயர் பண்டுவம் அளித்துச்செந்தூரன் உயிரைக் காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

உயர் சிகிச்சை அளித்து செந்தூரன் உயிரை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்
உயர் சிகிச்சை அளித்து செந்தூரன் உயிரை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்
சென்னை, ஆக. 28-

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னயில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் இருக்கும் செந்தூரன் 23-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த 9 நாட்களாக தண்ணீர்கூட குடிக்காமல் இருப்பதால் அவருடைய உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம்.

எனவே செந்தூரனின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் உள்ள 47 இலங்கை அகதிகளை விடுதலை செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தூரன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதுவரை 6 முறை மட்டுமே டாக்டர்கள் அவரை பரிசோதித்து உள்ளனர். எனவே சிறந்த மருத்துவர்களை உடனே அனுப்பி உயர் சிகிச்சை அளித்து செந்தூரனை காப்பாற்ற வேண்டும்.

மத்திய அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி கொடுப்போம் என்று பேசி வரும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழர்கள் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் ஒருமைப்பாடு உடைந்து விடும். எனவே இலங்கை அகதிகளை சிறப்பு முகாம்களில் இருந்து விடுவிக்க வேண்டும்.

அவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. கியூபிராஞ்ச் போலீசார் பொய் வழக்கு போடுகிறார்கள். தவறு செய்யாத அகதிகள் மீது குற்றம் செய்ததாக வழக்கு போட்டு அரசுக்கு தவறான தகவலை தெரிவிக்கிறார்கள். இதை முதல்-அமைச்சர் நம்பி செயல்படக்கூடாது. மனிதாபிமானத்துடன்நடவடிக்கை எடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.



வியாழன், 23 ஆகஸ்ட், 2012

செந்தூரான் உயிரிழந்தால் அதற்குத் தமிழக அரசுதான் பொறுப்பு. - வைகோ

கரூர் மாநாடு மதிமுகவுக்கு ப் புதிய எழுச்சியை உருவாக்கும் :வைகோ



 கரூர், ஆக. 22: இந்திய அரசியலில் மதிமுகவுக்கு புதிய எழுச்சியை உருவாக்கும் வகையில், கரூர் மாநாடு அமையும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.  கரூரில் செப்டம்பர் 15 ஆம் தேதி திராவிட இயக்க நூற்றாண்டு விழா மற்றும் மதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, சேலம் - கரூர் சாலையில் மாநாடு நடைபெறவுள்ள இடத்தை புதன்கிழமை பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  கரூரில் செப்டம்பர் 15-ல் நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டுக்கு கிளியநல்லூர் இரா. நடராஜன் பெயரும், மாநாட்டுப் பந்தலுக்கு கரூர் சாமியப்பன் பெயரும், நுழைவுவாயிலுக்கு தொழிற்சங்கவாதி மூர்த்தி பெயரும் சூட்டப்படும். இந்த மாநாட்டில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும், விவசாயிகளின் உரிமைகள், மீனவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தியும், தமிழகத்தின் நீராதாரங்களை தடுக்கும் அண்டை மாநிலங்களை கண்டிக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.  கரூர் மாநாடு இந்திய அரசியலில் மதிமுகவுக்கு புதிய எழுச்சியை ஏற்படுத்தும். திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்த மாநாடு அமையும். 
 பூந்தமல்லி அகதிகள் முகாமில் உண்ணாவிரதமிருந்து வரும் செந்தூரான் உயிரிழந்தால் அதற்குத் தமிழக அரசுதான் பொறுப்பு. இலங்கைத் தமிழர் பிரச்னையில் சரியான அணுகுமுறையை பின்பற்றி வரும் தமிழக அரசு, இந்தப் பிரச்னையிலும் அதேபோன்று அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றார் வைகோ. பேட்டியின் போது, ஈரோடு மக்களவை உறுப்பினர் அ. கணேசமூர்த்தி, மாவட்டச் செயலர் பரணிமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வியாழன், 5 ஜூலை, 2012

Demonstrating UK Tamils expose India’s defiance of international refugee conventions

Demonstrating UK Tamils expose India’s defiance of international refugee conventions

[TamilNet, Wednesday, 04 July 2012, 00:31 GMT]
Demonstrating outside the Indian High Commission at India Place, London, Tamils in the UK demanded the immediate release of the detained inmates of the Chengalpet (Chengkal-paddu) ‘special camp’ and for the closure of that facility. Separate petitions submitted by TCC-UK to the UNHCR and the Indian High Commission called for a revision in the Indian approach to Eezham Tamil refugees in India. “Right now our priority is to shut down these special camps. Apart from that we can't expect much from India but we need the various agencies of the UN to communicate with each other to clarify that the isolated incidents witnessed by each when seen together is actually facilitating the genocide of the Eezham Tamil nation,” Sivatharshan Sivakumaravel, an activist from TCC-UK told TamilNet.

Protest in UK in front of Indian High Commission


Protest in UK in front of Indian High Commission
Protest in UK in front of Indian High Commission
Demonstrators at the protest organized by the TCC-UK, supporting the demands of the hunger strikers at Chengalpet, urged India to comply with the standards of the UNHCR.

The petition submitted to the Indian High Commission, addressed to the state government of Tamil Nadu, urged TN to “take brave measures in addressing Eelam Tamil refugees, beginning with the immediate closure of all ‘special camps’”, also suggesting the development of robust mechanisms to ensure Tamil refugees are gives rights as enshrined in the 1951 refugee convention and its 1967 protocol.

Likewise the petition submitted to the UNHCR, which noted India’s role in assisting Sri Lanka’s colonization of the Tamil homeland, called on the UN to ensure the shutting down of such detention camps in TN, free access of NGOs in all refugee camps, and to protect the fundamental human rights of the Eezham Tamil refugees.

Meanwhile, the remaining inmates of Chengalpet camp have also joined the hunger strikers owing to no positive response from the government. Though 4 of the illegally detained inmates have been released over Sunday and Monday, the fate of the remaining is still uncertain.

Thirteen others may be released owing to pressures from the protests, in accordance with earlier promises, but the current hunger strike protest aims at nothing less than the closure of such illegal detention facilities and release of all inmates, informed sources from Chengalpet told TamilNet.

A prayer meeting for the hunger strikers is to be conducted tomorrow evening jointly by different Tamil Nadu political parties and civil society groups near Thiruvalluvar statue, at Mylapore.

* * *


The demonstration gains significance in the context of India that complicited a genocidal war and continue to abet the structural genocide against Eezham Tamils in the island, being elected to the UNHRC committee to monitor ‘progress’ in the island, commented Tamil diaspora activists.

The media in India, especially in Tamil Nadu, is calculatedly deviated to focus attention on dummy personalities in the island when the master culprits are within India, the activists further said.

India is not a signatory to the international conventions on refugees, even though it had made use of the issue of refugees in the secession of Bangladesh.

For more than half a century, and more than quarter a century respectively, the Tibetan and their inferior brethren, the Eezham Tamils in India, languish without any international status of refugees and no international remedy to their plights.

The demonstration is of a particular significance since India is never exposed to international screening of its dubious handling of the refugees issue, at a time when such issues have become transnational in questioning the global order machinated by the establishments of criminal record, the activists further said.

Chronology:


Related Articles:
07.03.09   Indian High Commissioner rebuffs memorandum of Mauritian dem..

புதன், 4 ஜூலை, 2012

Activists demonstrating at Chengalpet detained by police

Activists demonstrating at Chengalpet detained by police

[TamilNet, Sunday, 01 July 2012, 07:11 GMT]
Over 200 activists from different Tamil Nadu political parties and civil society outfits, who had gathered at Chengalpet to protest the detention and harsh treatment of Eezham Tamil refugees in the ‘special camp’ there were arrested by the police on Saturday. Pressuring the police to release the protestors, 4 of the camp inmates climbed on trees and threatened to jump. After a brief parley, the detained activists were released by evening. Meanwhile, the condition of those hunger strikers who have been hospitalized has been further deteriorating, sources told TamilNet.

Neither the central nor the state government has responded to worsening condition of refugees on fast. Likewise, the refugees are also firm that they will not give up their fast until a just solution is arrived at, informed sources said.

After the demonstration by Tamils outside the Indian embassy in Berlin, protests by the Tamil diaspora criticizing the unjust treatment of Eezham Tamil refugees by the Indian state have been planned in other countries too.

Chronology:

செவ்வாய், 3 ஜூலை, 2012

Tamils in Germany protest India’s ill-treatment of Eezham Tamils in Chengalpet

Tamils in Germany protest India’s ill-treatment of Eezham Tamils in Chengalpet

[TamilNet, Friday, 29 June 2012, 23:54 GMT]
Conveying solidarity with the Eezham Tamil refugees illegally detained in the Chengalpet ‘special camp’, Tamils in Germany demonstrated in front of the Indian Embassy in Berlin today, demanding India to close “such inhuman detention facilities and treat the genocide affected Eelam Tamil refugees like others who have entered its territory for sanctuary from persecution” and urging the UN to compel India to adhere to the standards of the UNHCR. Speaking at the demonstration Vithya Jeyasangar, a democratically elected Eezham Tamil representative from Berlin now working with the VETD, said “After assisting the Sri Lankan government with the structural genocide of the Eelam Tamils, and bartering with the Mahinda regime for economic slices in the Tamil homeland, India is showing its naked contempt for world Tamils through its inhuman treatment of Tamil refugees.”

German protest in front of Indian Embassy


German protest in front of Indian Embassy
German protest in front of Indian Embassy
Security official from the Embassy arguing with a native German protestor
German protest in front of Indian Embassy
An official from the Embassy arguing with the native German protestor
German protest in front of Indian Embassy
An official of the Indian Embassy taking photos of the participants of the demonstration
German protest in front of Indian Embassy
Petition being submitted to embassy officials
The demonstration, organized by the Country Council of Eezham Tamils in Germany (VETD), raised slogans and placards calling for the closure of the Chengalpet camp, comparing it with Guantanamo Bay, and for India to immediately release the 29 Tamil detainees at Chengalpet.

A petition was given to Indian embassy with the above demands and also urging India to stop criminalizing the Eezham Tamil nation and to keep the other refugee camps open to access by NGO’s and independent human rights organizations.

Sources in Berlin told TamilNet that German security guards from the Indian embassy dissuaded native Germans, who were showing solidarity with the demonstrators, not to participate as the protesters were doing propaganda against the Indian government.

Employees in the embassy also took photos of the demonstrators.

“After losing everything except life due to Sri Lankan government’s genocidal war on the Eezham Tamil nation, they have entered Tamil Nadu, home of 70 million Tamils, hoping to at least live there. If even there they are going to be treated as subhumans, what is the message India is trying to send to the Tamils?” Ms. Jeyasangar asked at the demonstration.

A demonstration involving various Tamil Nadu political organisations and civil groups is scheduled to take place at Chengalpet on Saturday, and a protest outside the Indian Embassy in London is called for by the TCC-UK on Tuesday.

Likewise, a press release dated 29 June by civil society organizations in Karnataka has also called for the closure of the Chengalpet prison camp, and for improvement of conditions in all other refugee camps.

"Overall, the Chengalpattu refugee camp is neither functioning as a prison run in accordance with human rights laws nor as a refugee camp where rights are guaranteed. Rather it’s clear that it is functioning as a illegal detention camp. These refugees are neither treated by the international Refugee law (UNHCR) nor by the Indian Penal Code," the release said.

German protest in front of Indian Embassy
Tamil demonstrators outside Indian embassy, Berlin
German protest in front of Indian Embassy


Chronology:

வியாழன், 28 ஜூன், 2012

Condition of hunger strikers deteriorates in Chengalpet detention camp

Condition of hunger strikers deteriorates in Chengalpet detention camp

As the indefinite hunger strike by Eezham Tamil refugees in the notorious Chengalpet ‘special camp’ in Tamil Nadu enters its 12th day, 9 out of the 14 inmates fasting have been hospitalized, with 8 of them in a critical condition. A total of 29 detainees, who have been locked up in inhuman conditions on charges based on flimsy grounds, have been demanding release and relocation to their families outside or to the other ‘normal camps’. But despite their deteriorating conditions and protests by political parties in the recent past, the authorities have shown silence. Speaking to TamilNet, an inmate who did not want to be named appealed to the Tamil diaspora to use their influence and to work with concerned forces in Tamil Nadu to highlight the injustices that the Tamil refugees have been facing in such detention camps in the state.

Stating the miserable conditions in the camp and the physical and psychological humiliations they face as refugees, he said that as long as the Eezham Tamils are deprived of their homeland, they would remain in such status, adding that Tamil Eelam was needed for them to live in a humane environment with dignity and peace.

Of the protestors, one has developed a low pulse rate, while three others are suffering from haematuria, medical sources said.

All of the 29 inmates have been detained in the camp for not having a passport.

While the authorities have claimed in a report in the Indian newspaper Times of India that they have been kept here only for “recent criminal activities”, civil society activists working on this issue deny it as baseless allegation.

Protests by political outfits and civil society organizations opposing their detention took place last week too, but to no avail.

A new demonstration involving different political outfits and civil groups has been called for by film director Pugazhendhi Thangaraj this Saturday at Chengalpet in solidarity with the hunger strikers, to demand closure of the camp and the release of the detainees.

Speaking to TamilNet, Thirumurugan Gandhi of the May 17 Movement called upon the diaspora to register their protest to the United Nations High Commissioner for Refugees and to Indian consulates to secure an unconditional release of the detained inmates and to ensure closure of such notorious detention facilities.

“This camp is India’s Guantanamo Bay. India is not even following basic premises of Universal Declaration of Human Rights. Let alone refugee rights, these Tamils are beyond judicial rights too,” he said, contrasting the visibly superior treatment given to Tibetan refugees and the rehabilitation works set-up for the Afghan refugees in India.

“As there is a Tamil diaspora that is globally present, we should stand up in one voice for this cause to address the unjust stand that the Indian government takes against the Eezham Tamils,” he said.

Around 100,000 registered Eezham Tamil refugees in camps and more than that number living outside, do not come under any international convention of refugees and are deprived of basic rights of refugees since the Indian establishment is not a signatory to any international convention related to refugees.

However, the refugees gagged of political voice and political mobilisation for more than quarter a century, are being used by the New Delhi establishment for its agenda in the island of Sri Lanka, accuse rights activists in Chennai.
Email this Article

திங்கள், 25 ஜூன், 2012

புலம் பெயர்ந்து வந்த ஈழத்தமிழர்களின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடருகிறது.

செங்கல்பட்டு முகாமிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னரும்   புலம் பெயர்ந்த ஈழத்தமிழ்த்  தோழர்கள் தங்கள் உண்ணா நோன்பு அறப் போராட்டத்தைத் தொடருகிறார்கள்.

தமிழக அரசு உடனே அறப்போராட்டத்தை முடிவிற்குக் கொணர்ந்து அவர்கள் நலமாகவும் வளமாகவும் உரிமையுடனும் உணர்வு குன்றாமலும் வாழ உதவ வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

http://www.maalaimalar.com/2012/06/25112058/chengalpattu-srilanka-refugee.html
(செய்தி, பதிவேற்றம் ஆகவில்லை)

திங்கள், 18 ஜூன், 2012

ஈழத்தமிழ்ச்சொ்நதங்களை விடுவிக்க வேண்டி முதல்வருக்குத் தொலைவரி அனுப்புக

புகழேந்தி தங்கராசு
திரைப்பட இயக்குநர்
அலைபேசி: 9841906290

அன்புடையீர், வணக்கம்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நீண்ட நெடுங்காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்களின் அவலநிலையை நீங்கள் அறிவீர்கள். தங்களை விடுவிக்கக்கோரி, சென்ற மாதம் அவர்கள் மேற்கொண்ட அறவழி உண்ணாவிரதப் போராட்டம், அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் கைவிடப்பட்டது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளைத் திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வேண்டும், அவர்கள் மீதான வழக்குகளைக் கைவிட வேண்டும் - என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு பெரும் எண்ணிக்கையில் தந்தி அனுப்புவதென்று ஈழச் சொந்தங்களின் நலனில் அக்கறை கொண்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து முடிவெடுத்துள்ளோம்.


19.6.2012 செவ்வாய்க்கிழமை காலையில், பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் இயக்கங்களும், தமிழ் உணர்வாளர்களும் - சென்னை அண்ணா சாலையில் சாந்தி திரையரங்குக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள தலைமை அஞ்சல் நிலையத்திலிருந்து தமிழக முதல்வருக்குத் தந்திகளை அனுப்ப உள்ளனர். காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள், இரண்டு மணி நேரத்தில், நூற்றுக்கணக்கான தந்திகள் அனுப்பப்பட இருப்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர கடமைப்பட்டுள்ளோம்.

அனைத்துத் தமிழ் உணர்வாளர்களும், இதைத் தங்கள் கடமையாகக் கருதி, அண்ணா சாலை அஞ்சல் நிலையத்துக்கு, 19ம்தேதி செவ்வாய்க்கிழமை  காலை நண்பர்களுடன் நேரில் வந்து தந்தி கொடுக்கவேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில்
புகழேந்தி தங்கராஜ்
18.6.12.

சனி, 28 ஏப்ரல், 2012

செங்கல்பட்டு, பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் [ படங்கள் & காணொளி ]

செங்கல்பட்டு, பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் [ படங்கள் & காணொளி ]

P1120008
செங்கல்பட்டு, பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமை மூடக்கோரி சென்னை நினைவக அரங்கம் அருகில் வழக்குரைஞர் புகழேந்தி தலைமையில் இன்று மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அய்யா பழ.நெடுமாறன், மறுமலர்ச்சி திமுக துணைப்பொதுச்செயலாளர் தோழர் மல்லை சத்யா, விடுதலைச்சிறுத்தைகள் தோழர் வன்னி அரசு, பெரியார் திராவிடர் கழக தோழர் தபசி குமரன், த.மு.மு.க மாணவரணியி மாநிலத்தலைவர் ஜெய்னுலாபுதின், தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை தோழர் அருண்சோரி, மே 17 இயக்க தோழர் திருமுருகன், தமிழ் தேசிய பொதுவுடைமைக்கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன், உயர் நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டு கண்டனவுரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை அமைப்புகளும், தமிழ் தேசிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தோழர்களுடன் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்ட முழக்கம்:
வழக்குரைஞர் தோழர் புகழேந்தி உரை:
அய்யா பழ.நெடுமாறன் உரை:
மதிமுக தோழர் மல்லை சத்யா உரை:
விடுதலைச்சிறுத்தைகள் தோழர் வன்னி அரசு உரை:


புதன், 25 ஏப்ரல், 2012

செங்கற்பட்டு சிறப்பு முகாம் ஈழத் தமிழர்களை விடுதலை செய்திடுக - வைகோ

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் நீண்ட நாட்களாக அடைபட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்திடுக! வைகோ அறிக்கை

vaiko1300
நூற்றுக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள், தமிழக ‘கியூ’ பிரிவு காவல்துறையினரால் பொய்யாகப் புனையப்பட்ட வழக்குகளின் மூலம், சட்டவிரோதமாக செங்கற்பட்டு சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் நீதிமன்றத்தின் மூலமாக விடுவிக்கப்பட்டாலும், நீதிமன்ற வாயிலிலேயே மீண்டும் கைது செய்து, இந்த சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.
இவர்கள் தமிழீழ அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்கள் என்று, சிங்களப் பேரினவாத அரசின் உளவுத்துறை மூலமாக இந்திய அரசுக்குத் தகவல்கள் அனுப்பப்பட்டு, சிங்கள அரசின் அடக்குமுறைச் செயல்பாடுகளை நம்முடைய காவல்துறை மூலமாக இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இவர்கள் தமிழீழ அரசில் பணியாற்றினார்கள் என்பதைத் தவிர, வேறு ஒன்றும் அறியாதவர்கள். அப்படி இருக்கையில் பீடி, தீப்பெட்டி, பேட்டரி கடத்தினார்கள் என்று ஒரு விடுதலை இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவது பாசிச மனப்பான்மை.
தாய்த் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று, உயிரைப் பணயம் வைத்து கடல் கடந்து வந்து, இங்கே சொல்லொணாக் கடும் துயரில் வாடி வதங்குகிறார்கள். நீண்ட நாட்களாகச் சிறை வைக்கப்பட்டு இருப்பவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி, காந்திய அகிம்சை வழிப் போராட்டமான உண்ணாநிலை அறப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு கடந்த 16.04.2012 திங்கள்கிழமை முதல் விக்ரமசிங்கம், அருள் குலசிங்கம், சதீஷ்குமார், சிவக்குமார், நாகராசு, பராபரன், நந்தகுமார், ஜெயராமன் ஆகியோர் உண்ணாநிலைத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும். பத்திரிகைகள் வாயிலாக செய்தி அறிந்து அவர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு ஆறுதல் சொல்லி, உண்ணாவிரதத்தைக கைவிட வலியுறுத்திட, என் வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் க. சோமு மற்றும் கழகத் தோழர்கள் 22.04.2012 திங்கள்கிழமை சென்றபோது, சிறப்பு முகாமின் நிலைய அதிகாரியான வட்டாட்சியர் திரு. வெங்கடேசன், காவல்துறை ஆய்வாளர் திரு. குமரன் மற்றும் காவலர்களால் வாயிலுக்கு முன்பாகத் தடுத்து நிறுத்தி அனுமதிக்க மறுத்து உள்ளனர்.
காரணம் கேட்டபோது, இரத்த சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே சந்திக்க முடியும் என்று சொல்லி உள்ளனர். அப்படியானால் வேலூர் சிறையில் சகோதரி நளினியை இத்தாலி சோனியாவின் மகள் பிரியங்கா எப்படிச் சந்தித்தார் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே விளங்க வேண்டும்.
ஈழத் தமிழர்கள் சுதந்திரமாகத் தாய்த் தமிழ்நாட்டில் வாழ்வதற்கு உரிமை மறுக்கப்படும் நிலையில், இனி வாழ்வதில் பயன் இல்லை என்று தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து உள்ளதாக வருகின்ற செய்திகள், இதயத்தை வாள்கொண்டு பிளப்பதாக உள்ளது. உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வரும் சகோதரர்கள் நம்பிக்கை இழக்கத் தேவை இல்லை. உங்கள் காயங்களுக்கு மருந்து தடவ, நாங்கள் இருக்கின்றோம். விரைவில் மலரப் போகும் சுதந்திரத் தமிழீழ தேசத்தில், உங்களைப் போன்றவர்களின் பணி தேவை.
இலங்கையில் உள்ள சிங்களப் பேரினவாத அரசால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் முள்வேலி முகாம்களை மூடிட நாம் குரல் கொடுக்கும் அதே வேளையில், தாய்த் தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம்களை மூடி முன் உதாரணமாகத் தமிழக அரசு திகழ்ந்திட வேண்டும்.
சர்வதேச சமூகம் வழங்கி உள்ள வாழ்வதற்கான அடிப்படை உரிமையை இழந்து வாடி வரும் அப்பாவி ஈழத் தமிழர்களை விடுவித்து, தங்கள் குடும்பத்துடன் திறந்தவெளி முகாம்களில் வாழ்ந்திட அனுமதிக்குமாறு, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
மனித உரிமைக்காகப் போராடிவரும் வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் வருகிற 26.04.2012 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை, மெமோரியல் அரங்கிற்கு முன்பாக ஈழத் தமிழர்களை அடைத்து வைத்துள்ள சிறப்பு முகாம்களை மூடிடக் கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பங்கேற்கும். துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, வடசென்னை மாவட்டச் செயலாளர் சு. ஜீவன் மற்றும் தோழர்கள் பங்கு ஏற்பார்கள்.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
24.04.2012 மறுமலர்ச்சி தி.மு.க

செவ்வாய், 3 மே, 2011

hunger strike in chengalpattu camp: செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 6-வது நாளாக உண்ணாவிரதம்

௧௪ ஆவது நாட்களாக உண்ணாநிலை மேற்கொ்ண்டுள்ளனர். தினமணியோ ௬ நாள் என்கிறது. மற்றோர் இதழோ பார்வையாளர்கள் தரும் உணவுப் பொருள்களை உண்டு உண்ணா நோன்பு இருப்பதாகக் கேலி பேசுகிறது. ஏன் இந்த இருட்டடிப்பு? தினமணி நடுநிலையோடு ஆராய்ந்து உண்மையை உலகிற்குத் தெரிவிக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 6-வது நாளாக உண்ணாவிரதம்

First Published : 03 May 2011 01:31:39 AM IST


செங்கல்பட்டு, மே 2: செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 27 இலங்கை அகதிகள் 6-வது நாளாக திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு வழக்குகளில் கியூ பிரிவு போலீஸôரால் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 40 பேர் செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த ஜனவரி 7-ம் தேதி 5 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பிப்ரவரி 28-ல் விடுதலை செய்வதாக கூறினர். 2 மாதமாகியும் விடுதலை செய்யாததால் மீண்டும் ஏப்ரல் 27 முதல் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் முதல் நாள் காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆனந்தகுமார், ஜெயக்குமார் ஆகிய இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் முகாமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

செங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடிவருகின்றோம். நாங்கள் எங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளோம்.

ஈழத் தமிழராகிய எங்களது இவ்விடுதலை போராட்டம் முடிவில்லாத தொடர் போராட்டமாக நீடிக்கிறது, இங்குள்ள பெரும்பாலான நாங்கள் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து சென்ற போது சட்ட விரோதம், சந்தேகம் என்ற பெயர்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்,பின்பு நீதிமன்றத்தின் மூலமாக பிணை பெற்று விடுதலையான போது சிறைவாயினில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு எங்கள் பெற்றோர், உறவினர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இந்த தடுப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ளோம்.

எங்கள் மீது காவல்துறையினரால் தொடுக்கப்பட்ட வழக்குகளின் குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்ய காவல்துறை முயல்வதில்லை. நாங்கள் இங்கு அடைக்கப்பட்டு இருப்பதால் எங்கள் மீதான வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உடனடி தேவையும் இல்லை,

எனவே நாங்கள் மூன்று மாத தண்டனை கிடைக்க கூடிய வழக்கிற்கு மூன்று வருடமாக இங்கு அடைக்கப்பட்டுள்ளோம், எங்களது உறவுகளாகிய மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர் வெளியே அகதி முகாம்களிலும் வெளிக்காவல் பதிவுகளிலும் பதிந்துகொண்டு துணை, ஆதரவு இல்லாமல் பரிதவித்து வருகின்றார்கள்.

இலங்கையில் இனக் கலவரம் முடிந்து விட்டது, ஆனால் இங்கோ நாங்கள் இந்தத் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு வதைபடுகின்றோம். நாங்கள் எங்கள் உற்றார் உறவினர்களுடன் வெளிமுகாம்களில் இருந்து, எங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம் என்றும் எங்கள் அனைவரையும் வெளி முகாம்களுக்கு மாற்றக் கோரியும் பல விண்ணப்பங்களும்.உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தியும் உள்ளோம்.

ஆனால் விடுதலை தொடர்பாக எங்களுக்கு முடிவு கிடைக்கவில்லை. எங்களில் பலரின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் பலியாகிவிட்டனர், பலர் காணாமல் போய்விட்டனர், பலரின் மனைவி மற்றும் குழந்தைகள் எங்குள்ளார்கள் என்றே தெரியவில்லை.

இச்சூழ்நிலையிலும் நாங்கள் இங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். இந்த வதை முகாமில் சித்தப்பிரமை பிடித்தவர்கள் போல வாழ்ந்து வருகின்றோம், இப்படியே தொடர்ந்து இங்கு அடைக்கப்பட்டு இருந்தால் நிச்சயமாக பைத்தியகாரர்களாக ஆகிவிடுவோம், எங்களை விடுதலைசெய்யக் கோரி சென்ற மாதம் உண்ணாவிரதம் இருந்தோம்.

அப்பொழுது அரசுசார்பில் ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைக்குமெனவும் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டி கேட்டு கொண்டதற்கு இணங்கி நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டோம். ஆனால் உண்ணாவிரதம் கைவிட்டு பதினைந்து நாட்கள் ஆகியும் தற்போது இங்குவரும் அதிகாரிகளின் பேச்சுகளிலும் இருந்தும் எங்களின் விடுதலைதொடர்பாகவும் எந்தவித முன்னேற்றமும் நடைபெறவில்லை என்பது தெரியவருகிறது,எனவே எங்கள் அனைவரையும் இந்த தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து எங்கள் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதிகாரிகள் எங்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கத் தயங்கும் பட்சத்தில் நாங்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் 5ம் திகதி முதல் மீண்டும் எமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவோம் என தீர்மானித்துள்ளோம் என்பதைத் தங்களுக்கு தாழ்மையுடன் அறியத் தருகிறோம்.

மேலும் எங்கள் மீது அனுதாபமும் ஆதரவும் காட்டும் சக்திகள் எங்களுக்குத் துணையாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவுதிரட்டி எங்கள் போராட்டத்தை வலுப்படுத்தி எங்கள் விடுதலைக்கு உதவுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களை வெளியில் விடும்வரை காலவரையற்ற உண்ணாவிரத்தை நாம் தொடர்வோம். இவ்வாறு செய்வதைத் தவிர வாக்குறுதியை நம்பி இடைநிறுத்தியோ அவகாசம் கொடுத்தோ எம்மால் தீர்வு காணமுடியாது, இதைத் தவிர நாம் நிம்மதியாக வாழ்வதற்கு வகையோ வழியோ இல்லை.

அதற்கேற்றது போலவே முன்கூட்டியே எல்லோருக்கும் எமது நிலைப்பாட்டையும் அறிவுறுத்தலையும் தந்துள்ளோம், எமது வழக்குகளில் இருந்தோ தண்டனைகளில் இருந்தோ சலுகைகள் கேட்கவில்லை. எல்லா நாட்டவரையும் போல வெளியே இருந்து வழக்கை முடிப்பதற்கு அனுமதியை கேட்கிறோம்.

தங்களால் முடியக்கூடிய கோரிக்கையை நாம் முன்வைத்துள்ளோம், உறுதியான தெளிவான முடிவுகளுடனேயே இவ்வழியை கையாள்கிறோம். இதிலிருந்து பின்வாங்குவதற்கு நாம் தயாராக இல்லை, எமது உறவுகள் துன்பப்படும்போது நீங்கள் ‘எல்லா வசதிகளும் செய்து தருவோம்' என்று வாக்குறுதி வழங்கி, தொலைக்காட்சி பெட்டியையும் விளையாட்டு பொருட்களையும் கொண்டு வந்து தருவது, எமது உணர்வைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது.

எந்த மிருகத்தைக் கூட கூண்டில் அடைத்து விட்டு அதற்கு என்ன உணவை கொடுத்தாலும் அதற்கு கூட அது சிறைவாழ்க்கையாகவே இருக்கும். காயப்படும் விலங்குகள், பறவைகள் எல்லாவற்றுக்கும் மருத்துவம் செய்து சுதந்திரமாக உலாவருவதற்கும் எற்பாடு செய்வதை பத்திரிக்கை வாயிலாக தெரிந்து கொள்கிறோம்.

திசைமாறி வரும் கொடிய மிருகம் என்றாலும் கூட அதைக் காப்பாற்றி அனுப்புவதைக் காண்கிறோம், இவ்விலங்குகள் அளவுக்குக்கூட நாம் இல்லையே என்பது எமக்கு பெரும்வேதனையான விஷயம். நாம் இங்கு இருக்கும் உறவுகளுடன் சேர்ந்து வாழவே கேட்கிறோம், இக்கோரிக்கையை நிறைவேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் உண்ணாவிரதத்திற்கு முன்னரே தங்களிடம் இம்மனுவை அனுப்பி வைக்கிறோம்.

இப்படிக்கு

முகாம் வாசிகள்

இடம்: சிறப்பு முகாம். செங்கல்பட்டு