save life லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
save life லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஆகஸ்ட், 2012

வளர்த்தவரைக் காக்க (பாம்பைக் கொன்று)பலியான நாய்

எசமானரை க் காக்க உயிரைவிட்ட நாய்: பாம்பைக் கொன்று பலியான சோகம்
கும்பகோணம்: எஜமானரை கடிக்க வந்த பாம்பை கடித்து கொன்று, பாம்பு கடித்ததால் இறந்த நாயின் நன்றியுணர்வு பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி வடக்குவீதியைச் சேர்ந்தவர் அன்வர்பாய், 56. கூலித்தொழிலாளியான இவரது மனைவி பாத்திமாபீவி, 50. இவர்களது மகன் சாகுல்ஹமீது, 17. மூவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். வீட்டின் பின்புறம் அடர்ந்த முள்செடிகளும், தோட்டமும் உள்ளது. இவர்கள் வீட்டில் பேபி என்ற நாயை கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்த்து வந்தனர்.

இரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் படுத்திருக்கும் போது பேபி வாசலில் படுத்து காவல் காத்திருக்கும். இந்நிலையில் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்ட எழுந்த பார்த்த போது, பேபி குரைத்து கொண்டிருந்தது. அப்போது அன்வர்பாய் எழுந்து பார்த்துவிட்டு, மீண்டும் படுத்துவிட்டார். நீண்ட நேரம் குரைத்து கொண்டிருந்தது. அன்வர்பாய் காலை ஆறு மணிக்கு எழுந்து கொல்லைப்புறம் வந்த பார்த்தபோது, அங்கு நாயும், பாம்பு கிடந்தது. நாயையை உற்றுப்பார்த்தபோது அது இறந்து கிடந்தது.

மேலும் நாயின் வாயில் மூன்று அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு உயிருக்கு போராடியதால், அதை அப்பகுதி மக்கள் அடித்து கொன்றனர். பின்னர் நாயையும், பாம்பையும் ஒன்றாக ஒரே இடத்தில் அப்பகுதியினர் புதைத்தனர்.

இதுகுறித்து அன்வர்பாய் கூறியதாவது:நேற்று குடும்பத்தில் உள்ளவர்கள் அசந்து தூங்கிவிட்டோம். காலையில் எழுந்து பார்த்தபோது நாங்கள் மூன்று ஆண்டு செல்லமாக வளர்த்த நாயை பாம்பு கடித்தது தெரியவந்தது. எங்களை கடிக்க வந்த பாம்பை நாய் கடித்து தடுத்துள்ளது. பாம்பு கடித்ததால் எங்கள் வீட்டு நாய் இறந்து விட்டது. எங்களை காக்க செல்லமாக வளர்த்த நாய் தனது உயிரை விட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தங்களின் உயிரைக் காப்பாற்ற தன்னுடைய உயிரை கொடுத்த நாயின் இறப்பால், அன்வர்பாயும், அவரது குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

வியாழன், 12 ஜூலை, 2012

கிணற்றில் தவறி விழுந்த சிறுவனைக் காப்பாற்றிய 11அகவை மாணவன்!

 


பாலக்காடு:கேரளாவில், கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவனை, தன் உயிரை துச்சமென மதித்து காப்பாற்றினான், 11 வயது மாணவன். அவனது துணிச்சலை பொதுமக்கள் பாராட்டினர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் அடுத்த புதுப்பரம்பு கிராமத்தில் வசிப்பவர் சம்சுதீன். இவரது மகன் ஷிபின் 5, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, வீட்டுக்கு அருகேயுள்ள தோப்பில் விளையாடிக் கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாக, அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்தான்.தற்செயலாக அந்த வழியே வந்து கொண்டிருந்த சிறுவன் அர்ஷாத், 11, இதை பார்த்துள்ளான். உடனடியாக கிணற்றில் குதித்து, மூழ்கிய சிறுவனின் தலைமுடியை கெட்டியாக பிடித்து கொண்டு கிணற்றின் ஓரமாக கொண்டு வந்து சேர்த்தான். அதற்குள், சத்தம் கேட்டு அங்கு திரண்ட ஊர் மக்கள், இருவரையும் கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, முதலுதவி சிகிச்சை தரப்பட்டது.

ஞாரைத்தடம் பாராபரம்பில் கிராமத்தை சேர்ந்த அஷ்ரபின் மகன் அர்ஷாத், கோட்டக்கல் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். தன்னுயிர் பற்றி கொஞ்சமும் பயப்படாமல், மற்றொரு உயிரை காப்பாற்றிய அர்ஷாத்தை உறவினர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.

திங்கள், 25 ஜூன், 2012

புலம் பெயர்ந்து வந்த ஈழத்தமிழர்களின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடருகிறது.

செங்கல்பட்டு முகாமிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னரும்   புலம் பெயர்ந்த ஈழத்தமிழ்த்  தோழர்கள் தங்கள் உண்ணா நோன்பு அறப் போராட்டத்தைத் தொடருகிறார்கள்.

தமிழக அரசு உடனே அறப்போராட்டத்தை முடிவிற்குக் கொணர்ந்து அவர்கள் நலமாகவும் வளமாகவும் உரிமையுடனும் உணர்வு குன்றாமலும் வாழ உதவ வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

http://www.maalaimalar.com/2012/06/25112058/chengalpattu-srilanka-refugee.html
(செய்தி, பதிவேற்றம் ஆகவில்லை)

வெள்ளி, 9 மார்ச், 2012

fighting for life : Please help!

உயிருக்கு போராடும் மகனுடன் தவிக்கும் தாய்: காற்றில் பறந்தது கலெக்டர் பரிந்துரை


கள்ளக்குறிச்சி: வயிற்றில் துளையிட்டு பொருத்தப்பட்ட குழாய் வழியே மூன்று ஆண்டுகளாக பால் செலுத்தி தனது மகனை உயிர் பிழைக்க வைக்க ஒரு தாய் தவியாய் தவித்து வருகிறார். குழந்தையின் மருத்துவ மேல் சிகிச்சைக்காக கலெக்டர் கொடுத்த பரிந்துரை கடிதமும் பயனற்று போனதால் அந்த தாய் செய்வதறியாது பரிதவித்து நிற்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் மோகன்,45; தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி பத்மா, 38. இவர்களுக்கு சிவமணி, 10 என்ற மகன் உள்ளார். கடந்த 2006ம் ஆண்டு பாட்டிலில் இருந்த ஆசிட்டை குளிர்பானம் என்று தவறுதலாக சிவமணி குடித்துள்ளார். இதனால் இரைப்பை முழுவதும் புண்ணாகி வலியால் துடித்தான். சென்னையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சிவமணியின் உயிரை காப்பாற்றினர். இருப்பினும் சாப்பிட முடியாமல் சிவமணி மிகவும் சிரமப்பட்டான். தொண்டையின் உணவுக் குழல் முழுவதும் ஆசிட்டால் காயம் ஏற்பட்டதால் அது சரியாகும் வரை உணவை வாய்வழியே கொடுக் கக் கூடாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அதற்கு தற்காலிக ஏற்பாடாக கடந்த 2009ம் ஆண்டு சிவமணியின் வயிற்றில் ஒரு துளையிட்டு, அதன்வழியே குழாயை இரைப்பையில் செலுத்தி அதில் திரவ உணவை கொடுக்கும் படியும், சிலவாரங்களுக்கு பின் மீண்டும் வருமாறு அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர். மேற்கொண்டு சிகிச்சை அளிக்க போதிய பண வசதி இல்லாததால் குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் பத்மா தவித்து வந்தார். சிவமணியின் தந்தை மோகனுக்கு குடி பழக்கம் உள்ளதால், வீட்டு செலவுக்கு கூட பணம் தருவதில்லை. வயிற்று பிழைப்புக்கே வழியின்றி தவித்த பத்மா சில வீடுகளில் பாத்திரம் தேய்த்து அதன்மூலம் மாதம் தோறும் 750 ரூபாய் சம்பாதித்து வருகிறார்.
வயிற்றில் உள்ள துளை வழியே சிவமணிக்கு தினமும் பால் செலுத்தி அதன் மூலம் அவனது உயிரை காப்பாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக வாய்வழியே உண்பது நிறுத்தப்பட்டதால் தொண்டை குழலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற குழந்தைகளை போல் தின்பண்டங்களை சாப்பிட ஆசைப்பட்டாலும், அதற்கு வழியின்றி சிவமணி தவித்து வந்தான். ஆசைப்படும் திண்பண்டத்தை வாயில் வைத்து சுவைத்துவிட்டு முழுங்க முடியாமல் கீழே துப்பிவிடும், அவலம் நீடித்து வந்தது. வயிற்றில் பொருத்தப்பட்ட குழாய் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளதால் அதில் தொற்று உருவாகி, அதை சுற்றி புண் ஏற்பட்டுள்ளது. குழாய் வழியே பால் செலுத்தும் போது வலிதாங்காமல் சிவமணி துடிப்பது பார்ப்பவர்களை பதற செய்கிறது. பாலை தவிர வேறு உணவுகளை கொடுக்க முடியாததால் சிவமணியின் உடல்நிலை பலகீனமடைந்து நிற்க கூட முடியாமல் கால்கள் நடுங்க சிறுவன் சிரமப்படுவது வேதனையாக உள்ளது. மற்ற குழந்தைகளை பார்க்கும் போது அவர்களுடன் சேர்ந்து ஓடி விளையாட வேண்டும் என்ற ஏக்கம் சிவமணியின் முகத்தில் அப்பட்டமாய் தெரிகிறது. ஆனால் வயிற்றில் உள்ள குழாயை பார்த்தபடி வேடிக்கை பார்க்க மட்டுமே அவனால் முடிகிறது.
அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் கூறியதையடுத்து, கடந்த 15 நாட்களுக்கு முன் தனது மகன் சிவமணியை அழைத்துக்கொண்டு விழுப்புரம் கலெக்டர் சம்பத்தை நேரில் சந்தித்து தனது மகனுக்கு மருத்துவ உதவி செய்யும் படியும், சுயதொழில் செய்ய வங்கி கடன் வழங்கவும் பத்மா கோரிக்கை விடுத்தார். அதை பரிசீலித்த கலெக்டர் கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் சிறுதொழில் செய்ய கடன் பெற்றுக்கொள்ள பரிந்துரை செய்து கடிதம் வழங்கினார்.கடன் பெறும் எதிர்பார்ப்போடு கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய வங்கிக்கு சென்று கலெக்டர் கொடுத்த கடிதத்தை கொடுத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வங்கி அதிகாரிகள் வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் செய்வதறியாது பத்மா தவித்து வருகிறார். வயிற்றில் குழாய் பொருத்தப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி வரும் தனது மகனை தூக்கிக்கொண்டு யாராவது உதவமாட்டார்களா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார். மகனுக்கு மேல்சிகிச்சை தந்து மீட்டெடுக்க போராடி வரும் இந்த ஏழை தாய் பத்மாவுக்கு உதவ முன்வருபவர்கள் 93604 73263 என்ற மொபைல் போனுக்கு தொடர்பு கொள்ளலாம்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

3 பேர் மரணத்தண்டனையில் சட்டப்படி நடவடிக்கை: பழ.நெடுமாறன்

விரைவில் நடவடிக்கை எடுத்து வெற்றி காணுங்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


3 பேர் மரணதண்டனையில் சட்டப்படி நடவடிக்கை: பழ.நெடுமாறன்

First Published : 11 Aug 2011 04:47:46 PM IST

Last Updated : 11 Aug 2011 04:55:03 PM IST

சென்னை, ஆக.11: ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வோம் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.21 ஆண்டு காலம் சிறையில் வாடிய பிறகும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்து 11 ஆண்டுகளுக்குப் பிறகும் இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது இயற்கை நீதிக்குப் புறம்பானதாகும். 1992ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கும் ஒட்டு மொத்தமாக மரண தண்டனை விதித்தபோது அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்காடி 18 பேர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்படவும் மூவருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவும், இக்குழு வழி செய்தது.மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்காக அப்போதைய ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்து அவர் அதை தள்ளுபடி செய்தவுடன் அது செல்லாது என உயர்நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றிபெற்றது இக்குழுவே ஆகும். அதைப்போல இப்போதும் மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்திருப்பதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகளை இக்குழு மேற்கொள்ளும்.ராஜிவ் கொலையில் மேலும் புலன் விசாரணை செய்யப்பட வேண்டும் என ஜெயின் கமிஷன் அளித்த பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட சி.பி.ஐ. புலன் விசாரணைக்குழு இன்னமும் தனது விசாரணையை முடித்து அறிக்கையைத் தரவில்லை. இதுபோன்ற உண்மைகளைக் கவனத்தில் கொள்ளாது இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் ஏற்க மறுத்திருப்பது வருந்தத்தக்கது. எனவே  சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இக்குழு விரைந்து எடுக்கும் என்று பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திங்கள், 7 ஜூன், 2010

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவருக்கு உதவிக் கரம் நீட்டிய அமைச்சர்கள், ஆட்சியர்



விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றும் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்.
நாமக்கல், ஜூன் 6: நாமக்கல் அருகே விபத்தில் சிக்கி சாலையோரம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர், அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் உதவியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஞாயிற்றுக்கிழமை நடந்த பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நாமக்கல் வந்திருந்தார். திம்மராவுத்தம்பட்டியில் நடந்த புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டட திறப்பு விழாவில், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் செ. காந்திச் செல்வன் மற்றும் சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, ஆட்சியர் சகாயம் மற்றும் மருத்துவத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.விழா முடிந்து மல்லசமுத்திரத்தில் கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைக்க அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சென்று கொண்டிருந்தனர். திருச்செங்கோடு அருகே சின்னதம்பிபாளையம் பகுதியில் வரும்போது, விபத்தில் சிக்கி சாலையோரம் ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.செய்தியாளர்கள் வந்த வாகனம் அங்கு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பின்னால் வந்த ஆட்சியரின் வாகனம் மற்றும் அமைச்சர்களின் வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து ஆட்சியர் சகாயம் ஓடிச்சென்று சாலையில் கிடந்தவரைத் தூக்க முயன்றார். அவருடன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், காந்திச் செல்வன், சட்டப் பேரவை துணைத் தலைவர் வி.பி. துரைசாமி மற்றும் போலீஸôரும் ஓடிவந்தனர். வாகனத்தில் வந்த மருத்துவர் உயிருக்குப் போராடியவரை பரிசோதனை செய்தார்.பின்னர், போலீஸôரின் வாகனத்திலேயே அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்ல முயன்றபோது 108 ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.போலீஸôர் விசாரணையில், விபத்தில் சிக்கியவர் நெய்க்காரன்பட்டியைச் சேர்ந்த ஹனுமந்தன் (40) என்பதும், சைசிங் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் மோதியுள்ளது. விபத்து நடந்தவுடன் அப் பகுதியைச் சேர்ந்தோர் 108 ஆம்புலன்ஸýக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் வரும் வரை 30 நிமிடத்துக்கும் மேலாக அவர் சாலையிலே துடித்துக் கொண்டிருந்துள்ளார். ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் வாகனம் வந்ததால் அவருக்கு உடனடியாக உதவி கிடைத்தது.அமைச்சர்கள் ஆட்சியர், மற்றும் போலீஸôர் செய்த உடனடி உதவியை பொதுமக்கள் பாராட்டினர்.
கருத்துக்கள்

நாமும் பாராட்டுவோம்! நெல்லை போல் வேடிக்கை பார்க்காமல் உதவியதற்காக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/7/2010 3:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்