செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

உயர் பண்டுவம் அளித்துச்செந்தூரன் உயிரைக் காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

உயர் சிகிச்சை அளித்து செந்தூரன் உயிரை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்
உயர் சிகிச்சை அளித்து செந்தூரன் உயிரை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்
சென்னை, ஆக. 28-

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னயில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் இருக்கும் செந்தூரன் 23-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த 9 நாட்களாக தண்ணீர்கூட குடிக்காமல் இருப்பதால் அவருடைய உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம்.

எனவே செந்தூரனின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் உள்ள 47 இலங்கை அகதிகளை விடுதலை செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தூரன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதுவரை 6 முறை மட்டுமே டாக்டர்கள் அவரை பரிசோதித்து உள்ளனர். எனவே சிறந்த மருத்துவர்களை உடனே அனுப்பி உயர் சிகிச்சை அளித்து செந்தூரனை காப்பாற்ற வேண்டும்.

மத்திய அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி கொடுப்போம் என்று பேசி வரும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழர்கள் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் ஒருமைப்பாடு உடைந்து விடும். எனவே இலங்கை அகதிகளை சிறப்பு முகாம்களில் இருந்து விடுவிக்க வேண்டும்.

அவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. கியூபிராஞ்ச் போலீசார் பொய் வழக்கு போடுகிறார்கள். தவறு செய்யாத அகதிகள் மீது குற்றம் செய்ததாக வழக்கு போட்டு அரசுக்கு தவறான தகவலை தெரிவிக்கிறார்கள். இதை முதல்-அமைச்சர் நம்பி செயல்படக்கூடாது. மனிதாபிமானத்துடன்நடவடிக்கை எடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக