telegram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
telegram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 ஜூன், 2013

அஞ்சலகங்களில் தொலைவரிக்கு மாற்றாக மின்மடல் பணி

இப்பொழுதும் நடைமுறையில் இவ்வசதி உள்ளது. எனினும் மிகச் சில அஞ்சலகங்களில்தான் உள்ளது. மயிலாப்பூரில் உள்ள அஞ்சலகம்  கணிணி பயன்பாடு உள்ள பெரிய அஞ்சலகம்தான். அங்கேயே  மின்மடலில் அனுப்ப முயன்ற பொழுது இராயப்பேட்டை அஞ்சலகத்திற்குச் செல்லுமாறு தெரிவித்தனர். எனவே, அனைத்து அஞ்சலகங்களிலும் கணிணியை நிறுவி இவ்வசதி்யை எல்லா அஞ்சலகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

 

தபால் நிலையங்களில் தந்திக்கு மாற்றாக இ-போஸ்ட் சேவை

தந்தி சேவை நிறுத்தப்படவுள்ள நிலையில், இ-போஸ்ட் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தபால் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தபால் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவின் மிகப் பழமையான தகவல் தொடர்பு சேவைகளுள் ஒன்றான தந்தி சேவை ஜூலை 15-ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளது.
தந்தி சேவையைப் போன்றே இ-போஸ்ட் சேவையை இந்திய தபால்துறை வழங்குகிறது. இச்சேவையில், ஏ4 பக்க அளவிலான செய்திக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மின்னஞ்சலின் வேகத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்படுகிறது.
கணினிமயமாக்கப்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் இச்சேவை அளிக்கப்படுகிறது.
அச்சடிக்கப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தகவலை, இ-போஸ்ட் மையத்தில் கொடுத்தால், அது ஸ்கேன் செய்யப்பட்டு இணையம் மூலம் மின்னஞ்சல் செய்யப்படும். விநியோகிக்கப்படும் மையத்தில் அத்தகவல் பிரின்ட் எடுக்கப்பட்டு, உறையிலிடப்பட்டு தபால்காரர் மூலம் உரிய முகவரியில் சேர்க்கப்படும்.
தபால் முகவரி தவிர, உலகின் எந்தப்பகுதியில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் கொண்டு சேர்ப்பதற்கும் இச்சேவையைப் பயன்படுத்தலாம்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக இ-கார்ப்பரேட் எனும் சிறப்புத் திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரே சமயத்தில் 9,999 முகவரிகளுக்கு தகவல் அனுப்பலாம். இதற்கு ஏ4 பக்க அளவிலான தகவலுக்கு ரூ.6 கட்டணமாக வசூலிக்கப்படும். ஒரே முறை குறைந்தது 50 அல்லது அதற்கு அதிகமான முகவரிக்கு தகவல் அனுப்பும் நிறுவனங்களுக்கு ஒரு பக்கத்துக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும்.
பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 18 ஜூன், 2012

ஈழத்தமிழ்ச்சொ்நதங்களை விடுவிக்க வேண்டி முதல்வருக்குத் தொலைவரி அனுப்புக

புகழேந்தி தங்கராசு
திரைப்பட இயக்குநர்
அலைபேசி: 9841906290

அன்புடையீர், வணக்கம்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நீண்ட நெடுங்காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்களின் அவலநிலையை நீங்கள் அறிவீர்கள். தங்களை விடுவிக்கக்கோரி, சென்ற மாதம் அவர்கள் மேற்கொண்ட அறவழி உண்ணாவிரதப் போராட்டம், அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் கைவிடப்பட்டது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளைத் திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வேண்டும், அவர்கள் மீதான வழக்குகளைக் கைவிட வேண்டும் - என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு பெரும் எண்ணிக்கையில் தந்தி அனுப்புவதென்று ஈழச் சொந்தங்களின் நலனில் அக்கறை கொண்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து முடிவெடுத்துள்ளோம்.


19.6.2012 செவ்வாய்க்கிழமை காலையில், பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் இயக்கங்களும், தமிழ் உணர்வாளர்களும் - சென்னை அண்ணா சாலையில் சாந்தி திரையரங்குக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள தலைமை அஞ்சல் நிலையத்திலிருந்து தமிழக முதல்வருக்குத் தந்திகளை அனுப்ப உள்ளனர். காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள், இரண்டு மணி நேரத்தில், நூற்றுக்கணக்கான தந்திகள் அனுப்பப்பட இருப்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர கடமைப்பட்டுள்ளோம்.

அனைத்துத் தமிழ் உணர்வாளர்களும், இதைத் தங்கள் கடமையாகக் கருதி, அண்ணா சாலை அஞ்சல் நிலையத்துக்கு, 19ம்தேதி செவ்வாய்க்கிழமை  காலை நண்பர்களுடன் நேரில் வந்து தந்தி கொடுக்கவேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில்
புகழேந்தி தங்கராஜ்
18.6.12.

திங்கள், 23 ஜனவரி, 2012

Send telegrams to kalam! Don't return to thamizhnaadu!

தமிழர்கள் வேண்டுகிறோம்! தமிழகம் திரும்பாதீர் ~ கலாமுக்குத் தொலை வரி   அனுப்புவோம்

பதிவு செய்த நாள் : 21/01/2012 http://www.natpu.in/?p=20251

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு,  தமிழகம் திரும்ப வேண்டா  எனத் தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் தொடர்ந்து தொலை வரிகள் (தந்திகள்)  தூதஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
பல்வேறு தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளையும் தாண்டித் தமிழினத்தை கொன்றழித்த இலங்கைக்குச் சென்றுள்ள அப்துல் கலாம் மீண்டும் தமிழகத்திற்குள் கால் வைக்க வேண்டா, என அவருக்குத் தொலை வரி அனுப்புமாறு அனைத்துத் தமிழ் அமைப்புகளையும்  மனித நேய அமை ப்புகளையும் தமிழின உணர்வு இயக்கங்களையும் கட்சிகளையும் தமிழ்க் காப்புக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
 தொலை வரியை அவர் சென்னையில் தங்கும் இடமான ஆளுநர் மாளிகை  முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


வெள்ளி, 12 நவம்பர், 2010

இராசாவை பதவி நீக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அ.தி.மு.க.வினர் தந்தி

ராசாவை பதவி நீக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அ.தி.மு.க.வினர் தந்தி

தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கிண்டி தபால் நிலையத்தில் வியாழக்கிழமை, குடியரசுத் தலைவருக்கு தந்திகளை அனுப்பும் அ.தி.மு.க. மருத்துவர் அணி தலைவர
சென்னை, நவ. 11: மத்திய அமைச்சர் ஆ. ராசாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் குடியரசுத் தலைவருக்கு தந்திகளை அனுப்பினர்.  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால்  1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை மூலம் குடியரசுத் தலைவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் ஆ. ராசாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாட்டு மக்கள் அனைவரும் குடியரசுத் தலைவருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.   இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் குடியரசுத் தலைவருக்கு அ.தி.மு.க.வினர் வியாழக்கிழமை தந்திகளை அனுப்பினர்.  வட சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தந்தி அனுப்பும் இயக்கத்தை அக்கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன் சென்னை ஜார்ஜ் டவுன் தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் டி. ஜெயக்குமார், மாவட்ட அவைத் தலைவர் நீலகண்டன், பொருளாளர் வெற்றிவேல், கு. சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோரும் தந்திகளை அனுப்பினர்.  வட சென்னை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலிருந்தும் வியாழக்கிழமை சுமார் 9 ஆயிரம் தந்திகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன என்றும், வெள்ளிக்கிழமை மேலும் ஆயிரக்கணக்கான தந்திகள் அனுப்பப்படும் என்றும் டி. ஜெயக்குமார் தெரிவித்தார். தென்சென்னை:தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தந்தி அனுப்பும் இயக்கம் கிண்டி தபால் நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அ.தி.மு.க. மருத்துவர் அணி தலைவர் வா. மைத்ரேயன், மாவட்டச் செயலாளர் ஜி. செந்தமிழன், பொருளாளர் கோ. சாமிநாதன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தந்திகளை அனுப்பினர்.  இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான தந்திகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன.
கருத்துகள்

தொலைவரித்துறைக்குக் கூடுதல் வருவாய்க்குக் காரணமாக உள்ளதால் நன்றி தெரிவிக்க வேண்டியது அ.இஅ.தி.மு.க.விற்கா? தி.மு.க.விற்கா? அமைச்சர் ஆ.இராசாவிற்கா? காங்.கிற்கா? வேலையற்ற வேலை என்றாலும் அரசிற்கு வருவாய் ஈட்டும் வேலை! பாராட்டுகள்! அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/12/2010 7:47:00 AM
Maithreyan's grand father brokered his wife to British babus. Thats is how maithreyan got little bit white gene in his body.
By PA Valarmathi
11/12/2010 12:11:00 AM
Kudumi Paarpaan Maithreyan is good mama broker. Now he is trying to hook up Jeya with Sonia. But he has to be careful with Sasi's relatives, in case Jeya dumps Sasi.
By PA Valarmathi
11/12/2010 12:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English