வியாழன், 28 அக்டோபர், 2010

புலிகள் மீதான தடை: அரசு சாட்சியிடம் வைகோ குறுக்கு விசாரணை

சென்னை, அக்.28:  விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை நீட்டிப்பு குறித்து, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றத்தின் அமர்வுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, பழ.நெடுமாறன், வழக்கறிஞர்கள் தேவதாஸ், சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜரான காவல் அதிகாரிகளிடம் வைகோ குறுக்கு விசாரணை செய்தார்.இதுதொடர்பாக மதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் விவரம்:இன்று காலை 10.30 மணி அளவில், சென்னையில் பயங்கரவாத நடவடிக்கைகள் (தடுப்பு) தீர்ப்பாயத்தின் நீதிபதி விக்ரம் ஜித் சென் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்காக வைகோ, பழ. நெடுமாறன், வழக்கறிஞர்கள் தேவதாஸ், சந்திரசேகர் ஆகியோர் தீர்ப்பாயத்திற்கு வந்தனர்.அரசுத் தரப்பு சார்பில் சிவகங்கை மாவட்ட கியூ பிராஞ்ச் ஆய்வாளர் சந்திரசேகரன், கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) இளங்கோவன், தூத்துக்குடி கியூ பிராஞ்ச் ஆய்வாளர் பாஸ்கரன், சென்னை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் முகமது அஸ்ரப் மற்றும் திண்டுக்கல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.சாட்சி சந்திரசேகரனிடம் வைகோ , சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பிரிவு 10 (a) (1) கீழ் யார் மீதாவது விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டின்மீது வழக்கு பதிவு செய்துள்ளீர்களா?" என்று கேட்டார். அப்படி எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று சந்திரசேகரன் கூறினார்.தூத்துக்குடி கியூ பிராஞ்ச் ஆய்வாளர் பாஸ்கரன் நீதிமன்றத்தில் சாட்சியாக விசாரிக்கப்பட்டபோது, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். அப்பொழுது வழக்கறிஞர் சந்திரசேகரன் உயர் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்றும் அப்பேச்சின் தொடர்ச்சியாக குற்றச் செயல்கள் ஏதேனும் நடந்திருந்தால்தான் குற்றமாகும் என்றும் தெரிவித்து சீமான் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று தீர்ப்பாயத்தில் தெரிவித்து அது சாட்சிக்குத் தெரியுமா என்று கேட்டார்.அப்போது வைகோ எழுந்து, மற்றொரு பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக சீமான் கைது செய்யப்பட்டு தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தில்லி நீதிமன்றத்தில் நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் என நீதிபதி அறிவித்தார் என மதிமுக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

தமிழ்ப்பகைவர்கள் தத்தம் கருத்துகளை வெவ்வேறு பெயர்களில் எத்தனை முறை பதிந்தாலும் மனித நேய அடிப்படையில் தம் இனம் காக்கும் விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக வாதிடும் வைக்கோ அவர்களின் தொண்டு வரலாற்றில் இடம் பெறும். வல்லரசு நாடுகள் எல்லாம் பிறரை அடக்கி வைத்தும் படுகொலை செய்தும் தத்தம் நலம் பேணுவதால் வாய்மூடிக்கிடக்கின்றன. எனினும் உண்மை வெல்லும்!அறம் வெல்லும்! ஈழம் வெல்லும்! வரலாறு அதைச் சொல்லும்! 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/28/2010 5:06:00 PM
திரு rajasji அவர்களே, தங்களுக்கு ஈழத்தமிழரின் வரலாறை நன்கு அறிய முடியா விடிலும் பரவாயில்ல, புரட்சி தலைவர் மற்றும் அவரது கொள்கைகள் மற்றும் வரலாற்றை மதிப்பவர் என்ற நோக்கத்தில் நான் இதை தங்களுக்கு சொல்லவிரும்புகிறேன். உங்கள் தலைவியை அம்மா என்ற தமிழில் உண்மை பாசத்தோடு அழைப்பவரராகின், நீங்களும் தாங்கள் சார்ந்தகட்ச்சி தலைவியும் ஒருதிடமான எழுத்துவடிவ உறுதிப்பாட்டை ஈழத்தமிழினத்திற்கு வழங்கி அவர்கள் வாழ்வில் வசந்தம் பெற ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அழைப்பவர்
By muthu
10/28/2010 5:01:00 PM
திரு வைகோ அவர்களே ! வணக்கம் !...புலிக்கு மூன்று கால்கள் என்று சொல்லி வெற்றி பெற்றுவிட முடியாது ! தற்ப்பொழுது விபத்தில் அல்லது போராட்டத்தில் ஈடுபடும் போது புலி ஒரு காலினை இழந்திருக்கலாம் ! அதற்காக புலி மூன்று கால்களைக் கொண்டது என்று நிரூபிக்க போராடி நேரத்தை விரயமாக்கக் கூடாது ! உண்மை நிலையினை சுபாவத்தை தத் ரூபமாக புரிந்து கொண்டு எஞ்சியுள்ள தமிழ் இனத்தை காத்திட ஒத்துழைப்பு நல்கி உதவிட வேண்டும் ! இன்று அனைவரும் விடுதலைப் புலிகளுக்காக நேரத்தை செலவிடுவதை விட்டு விட்டு..முள் வேலிகளுக்கிடையில் அடைத்து வைக்கப் பட்டுள்ள இன்னல் படும் தமிழர்களை மீட்டு நல வாழ்வினை வாழ நாம் அனைவரும் ஒன்றுபட்டு உதவிட வேண்டும் ! ஜனநாயக ரீதியில் போராடி தமிழ் இனம் சுயமரியாதையுடன் போதிய உரிமையுடன் சேதாரமின்றி வாழ்ந்திட நிச்சயம் வழிகள் இருக்கிறது ! இதற்க்கு ஒவ்வொரு தமிழனின் ஆதரவும் என்றென்றும் உண்டு ! ஆனால் தகளின் இலங்கை அரசியல் நடவடிக்கைகளில் எங்களுக்கு உடன் பாடில்லை ...மன்னிக்கவும் எங்களுக்கு புரியவும் இல்லை !!! @ rajasji
By rajasji
10/28/2010 4:34:00 PM
indian சிங்களன், நீ உண்மையான மனிதன் எனில் LTTE யை தவிர்த்து அப்பாவி தமிழர்களை அவர்கள் வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழ வழி வகை செய்யவேண்டியதுதானே. ஏன் எதகேடுத்தாலும் LTTE பெற சொல்லியே மொத்த தமிழனையும் அழிக்கிறிங்க. ஆக, உங்கள் எண்ணமெல்லாம் LTTE பேரை சொல்லியே மொத்த தமிழினைத்தையும் அழிப்பதே நோக்கம். இதுமாதிரியான சிங்களவேரியங்கள் indian, tamilan, unmai tamilan என்ற பேரில் அனைத்து தமிழ் பத்திரிகைகளிலும் இதுபோல அடிக்கடி எழுதுகிறார்கள். அவர்கள் அனைவரும் தமிழ் தெரிந்தவர்கள்.
By muthuraman
10/28/2010 4:31:00 PM
he is using the loopholes of India law and he wants to do damage to Indian unity.We have to remember the past of LTTE.They are misused in whole world for murder,kidnap,sharescam,drug dealing etc.,It is a well known fact that they smuggle arms from the shore of India. Using this name lot of anti social things will happen.It will be easy for the rest of the tigers in the world getin here.Now they hate India .It is open onn our news papers. This man should be put inside. We feel for innocent people of eelam.So BAN SOULDNOT BE REMOVED
By indian
10/28/2010 4:14:00 PM
தமிழர்க்கு பாடுபடும் தலைவர் வைக்கோ ஒருவரே
By satheesh-cochin
10/28/2010 3:38:00 PM
திரு வைகோ அவர்களே தொடரட்டும் உங்கள் தமிழ் பணி. வாழத்துக்கள்.
By தஞ்சை ராஜு
10/28/2010 3:36:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக