வெள்ளி, 16 அக்டோபர், 2009

இந்தியா நினைத்தால் ஒரேநாளில் கண்ணிவெடிகளை அகற்றி இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும்: ராமதாஸ்



சென்னை, அக்.15: இந்திய அரசு நினைத்தால் ஒரேநாளில் கண்ணிவெடிகளை அகற்றி இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கண்ணிவெடிகளை அகற்ற வேண்டிய பணிகள்தான் தமிழர்களை மீண்டும் அவர்களின் இடத்திற்கு குடியேற்றுவதற்கு தடையாக உள்ளதாக இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார்.கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பது உண்மையானால் வன்னிப்பகுதி நெடுகிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் எந்தவித சிக்கலும் இன்றி விரட்டிவந்தது எப்படி? பின்னர் அங்கிருந்து அகதி முகாம்களுக்கு விரட்டிச் சென்று அடைத்து வைப்பது எப்படி சாத்தியமானது?கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், போர் முடிந்து 6 மாதகாலமாக அகற்ற முடியவில்லையா? இலங்கைக்கு போரில் உதவிய நாடுகளிடம் ஏன் அதற்கான உதவிகளைக் கேட்கவில்லை? இந்தியாவிடம் ஏன் கேட்கவில்லை? இந்திய அரசு நினைத்தால் ஒரேநாளில் கண்ணிவெடிகளை அகற்றி இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும். ஆனால் அதற்கான எண்ணமும், மனமும் இந்திய அரசிடம் இல்லை என்பதே உண்மை. இலங்கையில் தேர்தலை நடத்த ராஜபட்ச திட்டமிட்டுள்ளார். அதற்கு உதவிடும் வகையிலேயே இங்கிருந்து குழு அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

கண்ணிவெடி அகற்றுவது என்பது இந்தியா சொல்லித் தந்த நாடகம். அப்புறம் எப்படி அகற்ற நினக்கும் இந்தியா? தமிழ் மண்ணில் சிங்களர்களைக் குடி யேற்றம் செய்யும் பொழுது வெடிக்காத கண்ணி வெடிகள் தமிழர்களை மீள அனுப்பும் பொழுது மட்டும் வெடிக்குமாம்! கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் நானும் 10 படி பிடித்தேன் என்பவர்களிடம் என்ன சொல்லமுடியும்? காங்கிரசு தொலைந்தால்தான் உலகத் தமிழினத்திற்கு விடிவு. எனவே, எக்காலமும் அதனுடன் சேர மாட்டேன் என்ற உறுதியுடன் திருமாவுடன் போட்டிப் போட்டுக்கொண்டு சேர மாட்டேன் எனத் தெரிவித்து இத்தகைய உண்மைகளை உரைத்தால்தான் மதிப்பு. இல்லையேல் இதில் சிலர் பதிந்துள்ளது போல் திசை திருப்பம் நடைபெறும்.எனவே, பதவி நலத்தை எண்ணாமல் அதற்கான பேரததிற்கு வாய்ப்புகளைத் தேடாமல் தமிழ் உணர்வை மட்டும் வெளிப்படுத்தி இன மீட்சிக்குப் பாடுபட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2009 3:17:00 AM

you talking about tamilan when you are in the power were where you you pannadai.

By kuppu
10/16/2009 2:04:00 AM

Mu.Ka. what a responsible father he is...he has done every thing to his every wife's children... good posts ...lots of assets...what sort of father I am...I am not good father...shame on me....Anbu ma......ennai mannichudu....

By maram vetti fan
10/16/2009 2:01:00 AM

pls dinamsni I requested you plenty of times ,don't put news about this idiot ,don't give chance him to grow up more thrgh magazines stop his publicity,let talk or bark ,let stupid say anything pls don't put his name and news. When the Daily,Monthly,weekly,fortnight magazines will improve theirself in tamilnadu god only knows,magazines are the main reason to grown ups of political nuisense/nasty things/cheap publicity/pls correct your self first DINAMANI

By THAMIZAN
10/16/2009 1:10:00 AM

India is not like to solve Sri Lankan Tamils problem. More than 100000 Tamils were killed with Indian ruling party help.Tamils never believe the present Tamil nadu goverment also.When you going to save these poor minority Tamils in Sri Lanka?

By cholan
10/15/2009 11:47:00 PM

Mr.Vaiko, Mr.Nedumaaran and Mr.Simon know where the kannivedis are kept on the vast land of north eastern Srilanka. Dr.Ramdoss should help the Army and advise these three persons to inform the army the whereabouts of these landmines.

By Anbarasi
10/15/2009 11:39:00 PM

ENTHA VAGAIYELAVATHU EVANATHU SEITHIGAL VARUGIRETHE!!BESH!BESH!!

By THAMARAI MALAR
10/15/2009 11:17:00 PM

அய்யோ! ஆத்தா! இது தெரியாமத்தான் இந்த பண்ணிப் பயளுவ இவ்வளோ நாளா கஸ்டப்படறானுவளா? ஒலகம் முழுக்க இது பெரிய சவாலான வேலையாச்சே. ஒரே நாள்ல சரிபண்ற அளவுக்கு எங்க நாடு தெறமையானதா? இந்த புண்ணாக்கு மடையனுங்க இது தெரியாம ஆட்சி பண்றானுவளே! கண்ணிவெடிய எடுக்கறதுலயே எவ்வளோ பணம் சம்பாதிக்கலாம்! அய்யா சொல்லிட்டருல்ல; ஆரம்பிங்கடா வேலய!?

By Murugadoss K
10/15/2009 9:57:00 PM

Mr South Indian ,ramdoss is go for currect ways, minse removing risk but no need long time... r suku (new delhi)

By r sukumar
10/15/2009 8:34:00 PM

மரம் வெட்டும் வேலையா? கண்ணிவெடியை ஒரே நாளில் அகற்றும் பனி

By hameed beach adirai
10/15/2009 8:30:00 PM

ராமதாஸ் சரியாக கூறுகிறார். இவர்கள் தமிழர்களை வதைக்க ஒரு சாக்காக கன்னி வெடி நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். 6 மாதமாக முடிய வில்லை என்றால் முடிக்க எண்ணமில்லை என்றே தோன்றுகிறது. இவர்களுக்கு ஜால்ரா போட ஒரு இன துரோக கூட்டம் இங்கே அயராது உழைத்து கொண்டிருக்கிறது.

By GANESSIN
10/15/2009 8:19:00 PM

**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் -3 (தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு யாருமே இல்லையென்று தான்...) **ஈழமக்களின் மெளனத்தின் பின்னணி! **குஞ்சரின் சாட்டையடி: இலங்கையின் நிறம்? துட்டகைமுனுவின் ஆவி? **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/15/2009 8:01:00 PM

this guy became made and talking like stupid. he talking as if indian govt and karunanithi don't know anything and he is giving free advise to them. they are the one who delay things in srilanka. srilankan tamils are orphans in their own land now. indian govt and karunanithi are the cause for this. hopeless fellow ramadoss. he is nothing but stupid.

By Mariapan
10/15/2009 7:58:00 PM

arivuketta Ramadasukku innum puththi varavillai poalum.

By Mani
10/15/2009 7:44:00 PM

Ramathas sir you right .congress leader not hindu she is italy any thing happen she run with family in italy . tamil nadu congress make money and power .they dont care tamil or indian people .she wont kill hasbend ragive die. arthma santhikku .srilankan tamil she try tokill 58 thosand . after she never care rajapakshe help to her now she help to rajapakshe brothers come power .she going wrong way. now pakistan china in srilanka with srilankan army staring toch india .fishermen this all so tamil aria she dont care . vary danger tamil nadu if war coming . dmk all so power and family care .this very bad soon they know.

By navarathenam
10/15/2009 7:44:00 PM

இந்தக் கொசுதொல்லை தாங்க முடியலப்பா............

By M.Masuk Rahman
10/15/2009 7:15:00 PM

விடுதலைப் புலிகளின் கடற்படையிடம் அவர்களால் வடிவமைக்கப் பட்ட மிக வேகமாகச் செல்லக்கூடிய சிறிய ரகப் படகுகள் பல இருந்தன. இவை 23 மணித்துளிகளில் பாக்கு நீரிணையக் கடக்கக்கூடியன. அத்துடன் இலங்கைக் கடற்படையினரிடம் இருந்து கைப் பற்றப் பட்ட படகுகளும் இருந்தன. இவற்றை இலங்க அரச படைகள் கைப் பற்றியதாக காட்சிப் படுத்தவில்லை. இப்படகுகளுக்கு என்ன நடந்தது? இலங்கையில் இருந்து கசிந்த தகவல்களின் படி மே மாததின் இரண்டாம் வாரத்தில் வன்னியில் இருந்து 64 படகுகள் தப்பிச் சென்றதாக செய்மதிப் படப் பதிவுகள் கிடைத்துள்ளனவாம். இப் படகுகளின் மூலம் விடுதலை புலிகளின் முழுத்தலைமையும் தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப் படுகிறது

By pirab
10/15/2009 6:39:00 PM

Ramdoss don't talk like stupid

By JIYA
10/15/2009 5:50:00 PM

Ramdoss, pls don't like idiot

By JIYA
10/15/2009 5:48:00 PM

Ramdoss, pls don't like idiot

By JIYA
10/15/2009 5:48:00 PM

YAR ETHU VENDUMANALUM SOLLALAM. AVARAVARGAL ANTHA IRUKKAIYIL IRUNTHALTHAN KASHTA NASHTAM ENNEVENDRU THERIYUM. RAMADASUKKU ENNA INGE IRUNTHUKONDU ETHU VENDUMANALUM VAI KIZHAYA PESUVAR

By Krishnan
10/15/2009 4:32:00 PM

இலங்கை தூதரகத்தின் பூத்தொட்டிகளை உடைத்த புதியதமிழகம் கட்சி உறுப்பினர்களை சிங்களனை திருப்திபடுத்த காங்கிரசு முதலாளி கைது செய்கிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுடப்படுகிறார்கள் அது குறித்து இலங்கையை தட்டிகேட்க திமுக பயப்படுகிறது. சிங்களன் கோவித்து கொண்டால் முதலாளியும் கோவித்து கொள்வார் இல்லையா? முல்லை பெரியார் குறித்தோ மீனவர் படுகொலைகள் குறித்தோ, ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்தோ முதலாளியின் உத்தரவிற்காக வேலைக்காரன் காத்துகிடக்கிறான்.

By Pallavan
10/15/2009 4:11:00 PM

" ராணுவத்தினர் எந்தவித சிக்கலும் இன்றி விரட்டிவந்தது எப்படி? பின்னர் அங்கிருந்து அகதி முகாம்களுக்கு விரட்டிச் சென்று அடைத்து வைப்பது எப்படி சாத்தியமானது? கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், போர் முடிந்து 6 மாதகாலமாக அகற்ற முடியவில்லையா? இலங்கைக்கு போரில் உதவிய நாடுகளிடம் ஏன் அதற்கான உதவிகளைக் கேட்கவில்லை?"

By Agni
10/15/2009 4:07:00 PM

கண்ணிவெடியை ஒரே நாளில் அகற்றிவிடலாம் என்று ஏதோ கண்ணிவெடி நிபுணர் போல பேசுகிறார் இந்த ராமதாசு, உலிகில் பல நாடுகளில் கண்ணிவெடியை அகற்றும் பனி நடந்துள்ளது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, கண்ணிவெடியை அகற்றுவது சுலபமான வேலை இல்லை, மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யலாம் என்பதை நிரூபிக்க போகிறேன் என்று சில மின்னணு வல்லுனர்களை வைத்து ஏதோ செய்து காண்பித்தீர்களே அது போல கண்ணிவெடி அகற்றும் நிபுணர்களை வைத்து,இத்தனை சதுர கிலோமீட்டர் பரப்பிலுள்ள வெடியை அகற்ற இவ்வளவு காலம் ஆகும் என்று இலங்கை அரசுக்கு ஒரு அறிக்கை தயார் செய்து அனுப்பலாமே?

By Natraran,Nagarkoil
10/15/2009 3:44:00 PM

சூழ்நிலைமைகளுக்கேற்ப தனது வண்ணத்தை பச்சோந்தி மாற்றிக்கொள்ளும். சுயநலத்திற்காக தனது அரசியல் கூட்டணி வண்ணத்தை இராமதாஸ் அடிக்கடி மாற்றுவார். இராமதாஸின் இந்த சாதனைச் செயலை கின்னஸ் உலக சாதனைக்கு இன்னும் ஏன் அனுப்பாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

By mas
10/15/2009 3:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக