ஞாயிறு, 11 அக்டோபர், 2009

திமுக அணி எம்.பி.க்கள் இலங்கை பயணம்:
அரசு சார்பிலான குழு அல்ல: கருணாநிதி



சென்னை, அக். 10: திமுக அணி எம்.பி.க்கள் குழு தங்களது ஐந்து நாள் இலங்கைப் பயணத்தை சனிக்கிழமை தொடங்கினர்."இந்தக் குழுவினர் அரசின் சார்பில் அனுப்பப்படவில்லை' என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அந்தக் கட்சி எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், ஹெலன் டேவிட்சன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன், ஜே.எம்.ஆரூண், கே.எஸ்.அழகிரி, என்.எஸ்.வி.சித்தன் ஆகியோரும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அந்தக் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவனும் சென்னையில் இருந்து இலங்கைக்கு சனிக்கிழமை புறப்பட்டனர்.சென்னை விமான நிலையத்தில் இருந்து நண்பகல் 12 மணிக்கு விமானம் மூலம் இலங்கை கிளம்பிச் சென்றனர்.இந்த நிலையில், திமுக அணி எம்.பி.க்களின் இலங்கைப் பயணம் குறித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கேள்வி எழுப்பினர்.இந்தக் குழு மத்திய அரசு சார்பில் அனுப்பப்படும் அதிகாரப்பூர்வ குழுவா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோரும் கேள்வி எழுப்பினர். இதனால், பிற கட்சி எம்.பி.க்கள் ஏன் அந்தக் குழுவில் இடம்பெறவில்லை என்ற கேள்வி எழுந்தது.இதற்குப் பதிலளித்து, முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை: ""நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அனுப்ப வேண்டுமென்று காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.அந்த கோரிக்கையை ஏற்று, அந்தக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை இலங்கை சென்று நிலைமைகளை அறிந்து வர மத்திய அரசின் வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது.இது அரசாங்கத்தின் சார்பில், அரசு செலவிலே அனுப்பப்பட்ட குழு அல்ல. அரசு சார்பில் குழு அனுப்பும் போதுதான் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், துறையின் பிரதிநிதிகளையும் அனுப்ப வேண்டும்.இப்போது செல்லும் குழுவிலே உள்ள உறுப்பினர்களுக்கான விமானக் கட்டணம் போன்ற செலவுகளைக் கூட அந்தந்த கட்சிகள்தான் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், எது நடந்தாலும், குறை காண்பது சிலரது வழக்கம்.நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும் அனுப்பினால் வெளியே உள்ள கட்சிகளின் பிரதிநிதிகளையும் சேர்த்து ஏன் ஏனுப்பவில்லை என்று கேள்வி கேட்பார்கள். குழுவுக்கு அனுமதி கொடுக்காவிட்டால் ஏன் கொடுக்கவில்லை என்பார்கள். எதிர்க்கட்சிகள் என்றால் இப்படி குறை காண்பது இயற்கை தானே? என்று தனது அறிக்கையில் முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

கருத்துக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அனுப்ப வேண்டுமென்று கோரிக்கை வைத்ததாகத் தெரிவிக்கும் பொழுது எப்படி திமுக அணியை அனுப்புவதாகக் கருத முடியும்? ஈழப் படுகொலைகளுக்குக் காரணமான அரசியல் அணி செல்வதால் என்ன உண்மை வெளியே வரப்போகிறது? படுகொலை அணியை அனுப்ப இசைவு தரும் வெளியுறவுத் துறை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பிய பொருள்களுக்கு இசைவு தராததேன்? வணங்கா மண் கப்பல் மூலம் அனுப்பப்பட்ட பன்னாட்டு மனித நேயர்களால் வழங்கப்பட்ட பொருள்களை ஏன் தமிழ் மக்களிடம் சேர்க்கவில்லை? பிற கட்சியினர் இது போல் செல்ல வேண்டும் என்று கேட்டால் இசைவு தரப்படுமா? ஆளுங் கட்சியினரின் நாடகம் மட்டுமே அரங்கேற்றப்படுமா?

வினாக்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/11/2009 2:29:00 AM

while Our people dye in MULLIVAIKAL Mr.Karunanithy would have laughed like this photo.

By thilaga
10/11/2009 2:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக