புதன், 14 அக்டோபர், 2009

தமிழர்களை குடியமர்த்துவது எப்போது? - தமிழக எம்.பி.க்களிடம் ராஜபட்ச தகவல்



கொழும்பு, அக். 13: இலங்கையில் தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றிய பிறகே அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்கள், சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவர் என்று அதிபர் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர், டி.ஆர். பாலு தலைமையில் சனிக்கிழமை இலங்கை சென்றனர். முள்வேலி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை நேரில் அறிவதற்காக சென்றுள்ள அவர்கள், அதிபர் ராஜபட்சவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.தமிழர்களை மீண்டும் அவர்களுடைய வசிப்பிடங்களில் உடனடியாக குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராஜபட்சவிடம் அவர்கள் வலியுறுத்தினர்.அதற்கு அவர், தமிழர்களை அவரவர் வசிப்பிடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றிய பிறகே முகாம் தமிழர்கள் அங்கு குடியமர்த்தப்படுவர்.இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தொடர்பாக எந்த ஓர் அரசியல் தீர்வும் காணப்படுவதற்கு முன் இரண்டு நிபந்தனைகளை அரசு எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஒன்று, இலங்கையில் உள்ள அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியல் தீர்வு; இரண்டாவது, அண்டை நாடும் (இந்தியா என்று பெயர் குறிப்பிடாமல்) இந்த அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்.இலங்கையில் தமிழர் -சிங்களர் இடையே இணக்கமான உறவு நிலவிவருகிறது. 65 சதவீத தமிழர்கள் இலங்கையின் தெற்கு பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் எப்போதும் அங்குள்ள சிங்களர்களுடன் அமைதியுடனும், மத நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையாக இருந்துவருகின்றனர்.முகாம் தொடர்பாக தவறான கருத்து நிலவுகிறது. தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை வந்தது ஒருவிதத்தில் நன்மையாக அமைந்துவிட்டது. அவர்கள் முகாம்களை நேரில் பார்த்த பிறகாவது உண்மை நிலவரம் தெரியவரும் என்றார்.பின்னர் ராஜபட்சவின் சகோதரரும், அதிபரின் மூத்த ஆலோசகருமான பாசில் ராஜபட்சவையும் எம்.பி.க்கள் குழு சந்தித்தது. தமிழர்களை குடியமர்த்துவதில் தாமதம் ஏற்படுவது குறித்து அவர்கள் அவரிடம் கவலை தெரிவித்தனர்.அதற்கு அவர், முகாம்களில் அளவுக்கு அதிகமாக தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறது. இரண்டொரு நாட்களில் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். முகாம்களிலுள்ள தமிழர்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அவர் எம்.பி.க்களிடம் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.பருவமழை தொடங்கும் முன் முகாம்களில் உள்ளவர்களின் நலன் கருதி அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எம்.பி.க்கள் வருகையால் இந்த பணிகள் இன்னும் துரிதமாக நடைபெற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.எம்.பி.க்கள் திருப்தி: இதற்கிடையே முகாம்களை நேரில் பார்வையிட்ட தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை அரசின் நடவடிக்கை மீது திருப்தி அடைந்துள்ளதாக முக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதிபருடனான சந்திப்பு, அரசு அதிகாரிகளின் செயல்பாடு ஆகியவற்றில் எம்.பி.க்கள் குழுவினர் திருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.தமிழக எம்.பி.க்களின் வருகைக்குப் பிறகு சாதகமான சூழ்நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துக்கள்

President Rajapakshe of Srilanka has assured to the Indian MPs team about the resettlement of displaced Tamil people. There may be delay for the clearance of land mines( already fixed by the LTTE) but it is the urgent work for the Govt. We hope all will be settled before the raining season .

By T.S.PRAKASAM
10/14/2009 4:31:00 AM

You bullshit Raja Bakshu

By sam
10/14/2009 12:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
--------------------------------------------------------------------------------------------------
'இன்று பணம் (ரொக்கம்)! நாளை கடன்!' என்பது போல் ஆயுளுக்கும் இதோன் திரும்பத் திரும்பச் சொல்லப்படும். எப்படியோ சிங்களமும் இந்தியமும் திட்டமி்ட்டாற்போல் தரப்படும் சாதக அறிக்கையைக் காட்டி மேலும் பல்லாயிரக்கணக்கான கோடி நன்கொடையையும் கடனையும் பெற வழி கிடைத்துவிட்டது. அது போதும்.குழு திரும்பியபின்பாவது திருமா காங். கூட்டணியை விட்டு வெளியேறினார் என்றால் அவரை மன்னிக்கலாம். இல்லையேல் அவரது எதிர்காலம் அவ்வளவுதான். இனி, அவர் தமிழர் நலன்பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது.--- இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக