வியாழன், 15 அக்டோபர், 2009

நார்வேயில் விடுதலைப் புலிகள் ஆலோசனை:
இலங்கை அரசு கடும் எதிர்ப்பு



கொழும்பு, அக். 14: விடுதலைப் புலிகளின் ஆலோசனைக் கூட்டம் நார்வே நாட்டில் உள்ள ஆஸ்லோ நகரில் நடைபெற்றது. இதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தமிழீழ போட்டி அரசின் கொள்கைகளை வடிவமைப்பதற்காக விடுதலைப் புலிகளின் எஞ்சிய தலைவர்கள் நார்வே நாட்டில் உள்ள ஆஸ்லோ நகரில் அண்மையில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்தத் தகவல் உளவுப் பிரிவு மூலம் இலங்கை அரசுக்கு தெரியவந்ததது. இதையடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டாம் என்று நார்வேயிடம் இலங்கை கண்டிப்புடன் கூறியுள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹிதா பொகலகாம கொழும்பில் உள்ள நார்வே தூதர் டோர் ஹாட்ரெமை அழைத்து இலங்கையின் எதிர்ப்பைத் தெரிவித்தார் நார்வே நாட்டில் விடுதலைப் புலிகளும் அவரது ஆதரவாளர்களும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இது இலங்கையை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. விடுதலைப் புலிகள் வெளியிலிருந்தபடி தமிழீழ போட்டி அரசாங்கத்தை நடத்துவதற்கான செயல் திட்டம் இந்தக் கூட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நார்வேக்கும், இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக வலுவான உறவு நீடித்து வருகிறது. எனவே நார்வே மண்ணில் இலங்கை அரசுக்கு எதிரான செயல்களை அனுமதிக்கக் கூடாது என்று பொகலகமா வலியுறுத்தினார். விடுதலைப் புலிகளின் இதுபோன்ற கூட்டங்களை அனுமதித்ததால் அவர்கள் மீண்டும் தனி நாடு கேட்டு போராடுவார்களே தவிர சுமுக தீர்வுக்கு உடன்படமாட்டார்கள் என்றும் அவர் கூறினார். இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கும் நடவடிக்கைகளை நார்வே அனுமதிக்கக் கூடாது என்று அவர் உறுதிபட கேட்டுக்கொண்டார். இலங்கையின் உணர்வுகளை ஏற்றுக் கொள்வதாகவும் நார்வே எப்போதும் தனிநாட்டை ஆதரிக்காது. நட்பு நாட்டுக்கு எதிரான செயல்களை ஆதரிக்காது என்று நார்வே தூதர் ஹெட்ரெம் திட்டவட்டமாக கூறினார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு சுமுக தீர்வுகாண நார்வே நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. நார்வே நாடு எடுத்த முயற்சியால்தான் அங்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ராஜபட்ச அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் போர் நிறுத்த உடன்படிக்கையை தனிச்சையாக ரத்து செய்தார். இதையடுத்து நார்வே மத்தியஸ்த பணியிலிருந்து விலகிக்கொண்டது.
கருத்துக்கள்

வாழ்க நார்வே!

வெல்க விடுதலைப் போராளிகள்!

மலர்க தமிழ் ஈழம்!

தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் ஓங்குக!

உலகெங்கும் தமிழர்கள் உரிமையுடன் வாழ்க! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2009 3:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக