வெள்ளி, 16 அக்டோபர், 2009

முள்வேலி முகாமிலிருந்து 2,400 தமிழர்கள் ஊர் திரும்பினர்: டி.ஆர்.பாலு



சென்னை, அக். 15: இலங்கையில் முள்வேலி முகாம்களில் இருந்து 2,400 தமிழர்கள் வியாழக்கிழமை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்கள் நிலையை நேரில் கண்டறிந்து புதன்கிழமை திரும்பி வந்து முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கை அளித்தோம். முதல்கட்டமாக 58 ஆயிரம் பேரை 15 நாள்களுக்குள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசு உறுதி அளித்த தகவலை முதல்வர் அப்போது அறிவித்தார். அதன்படி முகாம்களில் இருந்த 2,400 தமிழர்கள் வியாழக்கிழமை சொந்த இடங்களில் குடியேற பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் உடனடி தேவைகளுக்காக ஒவ்வொருவருக்கும் ரூ.5000 பணத்துடன் படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பாலு தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

1% அளவு கூட இல்லாத எண்ணிக்கையைப் பெருமையாகப் பேசும் இவர்கள் அப்பாவிகளா? அடிமைகளா? இவர்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட வதைமுகாம்களில் யார் அடைத்து வைத்து உண்மையை உணர்த்துவார்கள். சொந்த மண்ணில் வாழ விரும்புபவர்களை வன் கொடுமை வதைமுகாம்களில் அடைத்து வைத்திருப்பதைப் பாரர்த்தும் வெட்கம், மானம். சூடு, சொரணை, தன்மானம், இனமானம் இல்லாதவர்களை எல்லாம் ஏன்தான் தமிழினத்தில் படைத்தானோ இறைவன்? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2009 3:02:00 AM

பண்ணாடை பாலு. சொந்த இடம் என்றால் எது தெரியுமா? செட்டி குளத்தில் இருந்து வவுனியா வருவது தினமும் நடப்பதுதான். அவங்கள் சிங்கள நாய்கள் நாடச்கம் காட்டுவாங்கள் நீங்கள் அதை இங்கே அரங்கேர்றம் செய்யுங்கோ? மண்ணை கழன்ற பாலு குறூப் என்றுதான் ராஜபக்‌ஷ கூறுகிறான்.

By zoyza
10/16/2009 1:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக