செவ்வாய், 9 ஜூன், 2009


இங்கிலாந்து தமிழர் பேரவை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- சிங்கள படையினரால் இறுதி 3 மாதங்களில் நடத்தப்பட்ட பெரிய இனப்படுகொலையின் போது 53 ஆயிரத்து 215 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர்.
இங்கிலாந்து தமிழர் பேரவை நடத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும் திரட்டப்பட்ட நம்பகமான தகவல்களின் அடிப்படையிலும் அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகார பூர்வ வெளியீடுகளின் அடிப்படையிலும் இந்த செய்தி வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வன்னி மண்ணில் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்ததை அரச அதிபரின் அறிக்கைகளும் அந்தப் பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை களும் உறுதி செய்கின்றது.
ஆனால் தற்போது அகதி முகாம்களில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 785 மக்கள்தான் எஞ்சியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றன. இந்த அடிப்படையில்தான் நாம் எமது மக்கள் பெரிய அளவில் படுகொலை செய் யப்பட்டு உள்ளனர் என அஞ்சுகின்றோம்.
அரசு கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குள் வந்து வதை முகாம்களுக்குள் வாடிய 13 ஆயிரத்து 130 அப்பாவி தமிழர்கள் காணாமல் போய் விட்டனர் என ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில் நாம் எமது உறவுகளில் 53 ஆயிரத்து 215 பேரை மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான ஒரு குறுகிய காலப்பகுதியில் இழந்து நிற்கின்றோம்.
காணாமல் போய் உள்ள மக்களை மீட்டுத்தருமாறு பேரவை அனைத்து தரப்பையும் கேட்டுக்கொள்கின்றது. இந்த பெரிய படுகொலையை உலகறியச்செய்வதோடு, காணாமல் போய் உள்ளதாகக் கூறப்படும் மக்களை மீட்க அனைத்துலகத்தை வலியுறுத்தவும், முள்வேலியின் பின்னால் நிற்கும் மக்களின் அவலத்தைப் போக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி மாபெரும் பேரணியை இங்கிலாந்து தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பேரணி ஜூன் மாதம் 20-ந்தேதி சனிக்கிழமை லண்டனில் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, June 09,2009 01:08 PM, தமிழ்கனல், பெங்களூர் said:

Tuesday, June 09,2009 01:08 PM, தமிழ்கனல், பெங்களூர் said:
உங்கள் கருத்தை நான் ஆதரிக்கிறேன். திரு கலை அரசன் ...நம்மை நாம் காப்பாற்றி கொள்ள வேண்டும்.....ஆனால் ................................. பிழைபிற்கே வழி இல்லாமல் போனாலும் விழிக்க மாட்டான் தமிழன். அவன் தன மானம் செத்து விட்டது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே, நன்றிது தேர்த்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும் என்று பாரதி அன்றே பாடினான். இன்றைய நிலை என்ன?இந்தியன் என்ற போலி முகமும், அரசியல் சாய பட்டரையில் விதவிதமாய் பூசப்பட்ட வண்ணங்களும், ஜாதி மதம் என்ற அழுக்கு பிடித்த போர்வையும், மறத் தமிழருக்கு இல்லாத தன்னலமும் இன்றைய தமிழனை இனங்கான முடியாமல் பெரினத்தையே அட்டிபடைக்கிறது . இதற்க்கு என்ன வழி? துண்டு பட்ட தமிழன் என்று ஒன்று படுவானோ அன்றுதான் இதற்கெல்லாம் விடிவு வரும் . அதுவரை பேரினவாத அரசு என்ற மலைய பார்த்து குறைக்கும் நாய்கள் நாம். அம்மலையை பிளக்கும் ஒரு சிறு உளியாகவாது தமியன் மாறுவானா? அது வரை தமிழ் குலம் நீடிக்குமா?
Tuesday, June 09,2009 11:51 AM, த கலைஅரசன் said:
போஸ்னியாவின் சிறிபிரீகாவில் செர்பிய படைகள் நடத்திய தாக்குதலில் 8,000 அல்பேனிய இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். அதனை ஐ.நா.வும் மேற்கத்திய நாடுகளும் இனப் படுகொலை என்று ஒப்புக் கொண்டன. அதனைப் போன்று 6 மடங்கு அப்பாவித் தமிழர்களை கடந்த ஜனவரியில் இருந்து 5 மாதத்தில் கொன்று குவித்துள்ளது இலங்கை அரசு. ஆனால் அதனை ஐ.நா.வோ அல்லது மேற்கத்திய நாடுகளோ இனப் படுகொலை என்று கூறாதது ஏன்? இங்கு தமிழனை ஆழ்பவன் நடிகன். இந்திய அரசு மனிதபிமானமற்ற அரசு என்பதை உலகுக்கு வெட்ட வெளிச்சமிடுகிறது. இனி இங்குள்ள தமிழர்கள் இவர்களை நம்பினால் நமக்கும் அதே கதி தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக