செவ்வாய், 5 ஏப்ரல், 2011
Artificial clouds: நிழல் தரும் செயற்கை மேகங்கள்
சோவியத்து நாட்டில் உண்மையான முகில் கூட்டங்களையே வேறு பகுதிக்கு நகர்த்தி விளையாட்டிற்கு எந்தவிதத் தொந்தரவும் வராமல் பார்த்துக் கொண்ட முன் நிகழ்வு உள்ளது. அதுபோல் முகில் கூட்டத்தைத் தேவையான இடத்திற்கு இடம பெறச் செய்து நிழல் அளிக்கும் முறையையும் பின்பற்றி உள்ளனர். பிந்தைய முறையில் செயற்கை மழைக்கே முதன்மை அளித்துள்ளனர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
மே மாதம் அக்னி நட்சத்திரத்தின்போது சென்னையில் வெயில் 41 டிகிரி செல்சியஸ் (106 டிகிரி பாரன்ஹீட்) வரை இருக்கும். அந்த வெயிலில் கால்பந்தாட்டப் போட்டி நடத்தினால் அது பைத்தியக்காரத்தனமாக இருக்கும். கத்தார் நாட்டில் அதுதான் நடக்கப் போகிறது.2022-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி கத்தாரில் அதுவும் கோடையில் நடக்கப்போகிறது. பெரிதும் பாலைவனமாக உள்ள கத்தார் நாட்டில் கோடையில் வெயில் 50 டிகிரி ( 122 டிகிரி) அளவில் இருக்கும். இந்த அளவு வெயிலில் எப்படி விளையாடுவது? ஆகவே, வெயிலிலிருந்து விளையாட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க, கத்தார் பல்கலைக்கழக நிபுணர்கள் வழி கண்டுபிடித்துள்ளனர். அதுதான் செயற்கை மேகங்கள். எந்தெந்த ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியை எங்கே நடத்துவது என்பதை எப்போதும் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஓட்டெடுப்பு மூலம் முடிவு செய்துவிடுவது வழக்கம். அதன்படி 2022-ம் ஆண்டுப் போட்டியை நடத்துவதற்கான இடத்தை முடிவு செய்ய 2010-ம் ஆண்டு டிசம்பரில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் உலகக் கால்பந்தாட்ட அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது.ஓட்டெடுப்பு நடந்தபோது போட்டியை கத்தாரில் நடத்துவதற்கு ஆதரவாக 14 உறுப்பினர் நாடுகள் வாக்களித்தன. 8 உறுப்பினர் நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் இப் போட்டியைத் தங்கள் நாட்டில் நடத்த ஆதரவு திரட்டுவதில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் தீவிரமாக முயன்றும் கத்தார் வென்றது.அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் நேரில் சென்று முகாமிட்டு ஆதரவு கோரியும் அவரது முயற்சி பலிக்கவில்லை. எண்ணெய் வளம் கொண்ட கத்தார் நாடு பணம் கொடுத்துப் போட்டியை விலைக்கு வாங்கிவிட்டதாக அப்போது பேசப்பட்டது. பாலைவன வெயிலில் போட்டியை நடத்துவதா என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் குரல் எடுபடவில்லை. இப் போட்டியை கத்தாரில் நடத்துவது என்று எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்று அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா பகிரங்கமாகக் கூறினார். கடந்த சுமார் 70 ஆண்டுகளில் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் மாறி மாறி நடந்துள்ளன. 2002-ம் ஆண்டில் முதல் தடவையாக இப்போட்டி ஆசியாவில் (ஜப்பானிலும் தென் கொரியாவிலும்) நடந்தன. அதேபோல 2010-ம் ஆண்டில் முதல் தடவையாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் (தென்னாப்பிரிக்கா) நடந்தது. எனினும், கத்தார் போன்ற சின்னஞ்சிறிய நாட்டில் இப் போட்டி நடக்க இருப்பது இதுவே முதல்தடவையாக இருக்கும்.கத்தார் என்பது ஒரு சிறிய அரபு நாடு. இது சவூதி அரேபியாவுக்கு வடக்கே அமைந்துள்ளது. பரப்பளவில் அது தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைவிட இரு மடங்கு பெரியது. மக்கள்தொகை சுமார் 16 லட்சம். அதில் பாகிஸ்தான் உள்பட வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாற்றுகிறவர்களின் எண்ணிக்கையும் அடங்கும். நாட்டின் பெரும்பகுதி பாலைவனம் என்று சொல்லத்தக்க அளவில்தான் உள்ளது. கத்தாரில் நிறைய பெட்ரோலிய குரூட் எண்ணெயும் எரிவாயுவும் கிடைக்கின்றன. அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் கத்தாருக்கு நிறைய வருமானம் கிடைக்கிறது. ஆகவே, அந்த நாடு பல மேற்கத்திய நாடுகளுக்கு ஈடாகப் பெரிய பணக்கார நாடாக விளங்குகிறது. எங்கள் நாட்டில் கடும் வெயில் அடித்தால் என்ன? அதைச் சமாளிக்கத் தொழில் நுட்பம் இருக்கிறது என்று கத்தார் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்துள்ளது. போட்டியை நடத்துவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் இருந்தாலும், இப்போதே அது பிரச்னையைச் சமாளிக்க வழி கண்டுபிடித்துள்ளது.கத்தார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் செயற்கை மேகத்துக்கான டிசைனைத் தயாரித்துள்ளனர். கால்பந்தாட்ட மைதானத்துக்கு மேலாக நல்ல உயரத்தில் இந்த செயற்கை மேகம் நிலைநிறுத்தப்படும். ரிமோட்டை இயக்குவதன் மூலம் இந்த மேகத்தை சற்று மேலே போகும்படி செய்யலாம். வானில் சூரியன் எங்கே இருக்கிறது என்பதைப் பொறுத்து செயற்கை மேகத்தை கிழக்கே நகர்த்தலாம் அல்லது மேற்குப் பக்கம் நகர்த்தலாம். தேவையானால் இந்தச் செயற்கை மேகத்தை வேறு மைதானத்துக்கு மேலாகக் கொண்டுபோய் நிறுத்தலாம். நிபுணர்கள் இதற்குச் செயற்கை மேகம் என்று பெயரிட்டுள்ளனரே தவிர, உண்மையில் இது கால் ஊன்றாமல் போடப்படுகிற அந்தரங்க பந்தல் போன்றதே.சென்னை போன்ற பெரிய நகரங்களில் விளம்பரத்துக்காக நீண்ட கயிற்றின் நுனியில் பெரிய பலூனைக் கட்டிப் பறக்க விடுவார்கள். இதில் பெரும்பாலும் ஹீலியம் வாயு நிரப்பப்பட்டிருக்கும். ஹீலியம் வாயு காற்றைவிட லேசானது என்பதால் ஹீலியம் அடைக்கப்பட்ட பலூன் உயரே பறக்கிறது.கத்தார் நிபுணர்கள் உருவாக்கும் செயற்கை மேகம் என்பது எடை குறைவான, ஆனால் வலுவான ஒரு பொருளால் தயாரிக்கப்படுவதாகும். இதனுள் ஹீலியம் வாயு நிரப்பப்பட்டிருக்கும். இது பார்வைக்கு ராட்சத கைப்பேசிபோல இருக்கும். இதன் மேற்புறத்தில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகிற சோலார் செல்கள் நிறையப் பதிக்கப்பட்டிருக்கும். இவை தொடர்ந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கும். செயற்கை மேகத்தின் மேற்புறத்தில் நான்கு மூலைகளிலும் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவை மின்சாரத்தால் இயங்குபவை. ஆகவே, இந்த எஞ்சின்களை இயக்கி செயற்கை மேகத்தை இஷ்டம்போல நகர்த்தலாம். இந்தச் செயற்கை மேகமானது ஒரு மைதானம் முழுவதற்கும் நிழலை அளிக்கிற அளவுக்கு நீள அகலம் கொண்டதாக இருக்கும்.செயற்கை மேகத்தைத் தக்கநேரத்தில் மைதானத்துக்கு மேலே கொண்டுபோய் நிறுத்திவிட்டால் மைதானத்தில் வெயில் விழாது. மைதானத்தில் நேரடியாக வெயில் விழாது என்பதால் தரை சூடேறாது. ஆகவே, தரைக்கு மேலே உள்ள காற்றும் சூடேறாது. இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும்.பொதுவில் உலகில் எந்த ஒரு நாட்டிலும் வானிலைத் துறையினர் வெயிலை அளக்கும்போது வெப்ப அளவு மானியானது வெயிலில் வைக்கப்படுவதில்லை. நிழலில்தான் வைக்கப்படுகிறது. தவிர, வெயிலால் தரை சூடாகி அதன் விளைவாகச் சூடேறும் காற்றின் வெப்பத்தைத்தான் வெப்பமானி அளக்கிறது. அந்த அளவில் கத்தார் நிபுணர்களின் செயற்கை மேகத்தால் நிலம் சூடேறாமல் தடுக்கப்படும்போது அங்கு வெப்ப அளவு குறையும். அக்னி நட்சத்திரத்தின்போது என்றாவது ஒருநாள் காலையிலிருந்தே வானம் மேகமூட்டமாக இருக்குமானால் அன்று வெயில் அவ்வளவாகத் தெரியாது என்பது நாம் அறிந்த விஷயமாகும்.தலைக்கு மேலே செயற்கை மேகம் இருந்தாலும் மைதானத்துக்கு வெளிப்புறத்திலிருந்து அனல் காற்று வீசினால் அது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் கால்பந்தாட்ட வீரர்களைப் பாதிக்குமே என்று கேட்கலாம். அதற்கும் கத்தார் நிபுணர்கள் பதில் வைத்துள்ளனர். மைதானத்தைச் சுற்றி ரசிகர்கள் அமரும் ஆசனங்களுக்கு அடியிலிருந்து மேல் நோக்கி குளிர்காற்று வீசிக் கொண்டிருக்க ஏற்பாடு செய்யப்படும். அதாவது, மைதானத்தின் எல்லாப் புறங்களிலும் ஆசனங்களுக்கு அடிப்புறத்தில் குளிர்சாதன வசதி இருக்கும். இதனால் ரசிகர்களுக்கு வெயில் பாதிப்பு இராது.ஆகவே, ஆட்டக்களத்தைச்சுற்றி ஏ.சி. போட்டது போன்ற விளைவு இருக்கும் என்பதால் வெளியிலிருந்து வரும் அனல்காற்று விளையாட்டு வீரர்களைப் பாதிக்கிற வாய்ப்பு இராது.செயற்கை மேகம் ஒன்றை உருவாக்க ரூ 2 கோடி ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று பல செயற்கை மேகங்களை உருவாக்கும்போது செலவு குறையலாம். செயற்கை மேகம் பற்றி கத்தார் நிபுணர்கள் மார்ச் மூன்றாம் வாரம் அறிவிப்பு வெளியிட்டதிலிருந்து உலகில் பல நாடுகளும் இதுகுறித்து தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. ஏனெனில், இவ்வித செயற்கை மேகத்தை கால்பந்தாட்டப் போட்டிக்கு மட்டுமன்றி, திறந்த வெளியில் நடக்கிற கிரிக்கெட், ஹாக்கி போன்ற வேறு விளையாட்டுகளுக்கும் பயன்படுத்த முடியும்.திறந்த வெளியில் நடத்தப்படுகிற வேறு பல நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்த முடியும். செயற்கை மேகங்கள் வாடகைக்குக் கிடைக்கிற நிலைமையும் ஏற்படலாம். கத்தாரில் கோடையில் கடும் வெயில் இருக்கும்போது உலகக் கோப்பைப் போட்டியை நடத்துவதற்குப் பதில் குளிர்காலமாக இருக்கும்போது நடத்தலாமே என்று ஒருசமயம் யோசனை கூறப்பட்டது. ஆனால், உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டார்.உலகக் கோப்பைப் போட்டியில் கலந்துகொள்ளும் நாடுகள் வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏற்கெனவே போட்டுள்ள திட்டங்களை மாற்றச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் அது சாத்தியமற்றது என்று அவர் கூறினார்.உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியை நடத்த கத்தார் சுமார் 2 லட்சத்து 60 கோடி செலவிடலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது. போட்டிக்கென்றே லூசெயில் என்ற பெயரில் புதிதாக ஒரு நகரம் உருவாக்கப்படும். அங்கு குறைந்தபட்சம் புதிதாக ஐந்து கால்பந்தாட்ட மைதானங்கள் கட்டப்படும்.இந்தியாவில் கிரிக்கெட் ஆட்டத்தின் மீது பித்து அதிகம். ஆனால், கத்தாரில் கால்பந்தாட்டத்தின் மீது தான் ஆர்வம் அதிகம். கடந்த பல ஆண்டுகளில் கத்தார் அரபு நாடுகளுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் இரண்டு தடவை கோப்பையை வென்றுள்ளது.2006-ம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டி கத்தாரில் நடந்தபோது கால்பந்தாட்டத்துக்கான தங்கப் பதக்கத்தை கத்தார் வென்றது.ஆசிய விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதில் அனுபவம் உண்டு என்பதால் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியை நடத்துவது கத்தாருக்குப் பெரிய விஷயமாக இராது என்று கருதப்படுகிறது.கத்தார் நாட்டின் நிபுணர்கள் உருவாக்குகிற செயற்கை மேகங்களை பல தடவை சோதித்து அவற்றை மேலும் செம்மையாக்க நிறைய அவகாசம் இருக்கிறது. ஆகவே, செயற்கை மேகங்களை உருவாக்கும் திட்டம் வெறும் வாய்ப்பந்தலாக இராது என்று நிச்சயம் கூறலாம்.
muthusamy versus chandirakumar: விஐபி தொகுதி - 8: நல்லவரின் நேரம் நல்லாயிருக்கா?
ஒன்றுமி்ல்லாத கோவனின் ஆதரவு இருக்கின்றது என்றால் முத்துச்சாமிக்குத் தோல்வி உறுதி. அவரது ஆதரவு என்பது மாயை. தலைமையை எதிர்த்துப் புரட்சியாளர்போல் எண்ணிக் கொண்டு பிதற்றிக் கொண்டிருப்பார். எனவே, அவரது ஆதரவு மக்களை எதிர் அணியினருக்கு வாக்களிக்கச் செய்து விடும். அந்தோ பாவம்! முத்துச்சாமி!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தொகுதி மறுசீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பது ஈரோடு கிழக்குத் தொகுதி. மொத்தம் 1,75,396 வாக்குகள் உள்ள இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர், முதலியார் வாக்குகள் பிரதானமானவை. தி.மு.க. சார்பில் களமிறங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.முத்துசாமி கடந்த ஆண்டுதான் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர் என்பது மட்டுமல்லாமல் அவரது மனதிலும் இடம் பெற்றவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் 1977 பேரவைத் தேர்தலில் முதல் முறையாக அ.தி.மு.க. சார்பில் இந்தத் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். பிறகு 1980 மற்றும் 1984 தேர்தல்களில் வெற்றிபெற்று எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் தொடர்ந்து இடம் பெற்றார். 1988-ல் அ.தி.மு.க. பிளவுபட்டபோது ஜானகி அணியில் இடம்பெற்றிருந்த இவர், 1989-ல் ஈரோடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் டெபாசிட் இழந்தார். அ.தி.மு.க. இணைப்புக்குப் பிறகு, 1991-ல் பவானியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றார்.1996-ல் ஈரோடு தொகுதியில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமியிடம் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற பிறகு, கட்சியில் இருந்து வெளியேறிய அவர் சில ஆண்டுகளில் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்பினார். 2001 மற்றும் 2006 பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்களில் அ.தி.மு.க.வில் இவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 2010-ல் தி.மு.க.வில் இணைந்தார். இதுதான் முன்னாள் அமைச்சர் முத்துசாமியின் அரசியல் சரித்திரம்.எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வில் முத்துசாமியின் இடத்தை செங்கோட்டையன் பிடித்துக்கொண்டார். முத்துசாமிக்கு 1996-க்கு பிறகு பல சவால்கள் இருந்தன. தி.மு.க.வில் இணைந்த பிறகும், இந்த சவால்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தே.மு.தி.க. சார்பில் களமிறங்கியுள்ள வி.சி.சந்திரகுமார், கடந்த பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 29 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர். கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாய வாக்குகளுக்கு இணையான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இச்சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில் உள்ள சுமார் 60 தொகுதிகளில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் மட்டும்தான் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஓர் அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இந்த வாய்ப்பை ஈரோடு கிழக்குத் தொகுதியில் தே.மு.தி.க. வழங்கியுள்ளது. இதனால் சமுதாய ஒற்றுமையை இந்தத் தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு உணர்த்த வேண்டும் என்று இத்தொகுதியில் உள்ள முதலியார் சமூகத்தினரும் களமிறங்கியுள்ளனர்.விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம் பிரச்னை போன்றவை இத்தொகுதியில் தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய பிரச்னைகள். கொங்கு மண்டலத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் பலம் வாய்ந்த கட்சியாக கருதப்படும் கொ.மு.க.வை தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டு சேர்த்தவர் முத்துசாமி. இவரை வெற்றி பெற வைப்பது தங்களது கடமை என்று கருதி இவருக்கு வீடுவீடாக வாக்குச் சேகரித்து வருகின்றனர் இந்தக் கட்சியின் நிர்வாகிகள். அ.தி.மு.க.வில் இருந்து இவருடன் வெளியேறிய தொண்டர்களும், இவர் பின்னால் அணிவகுத்துள்ளனர். ம.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் கணிசமான வாக்குகள் உள்ள தொகுதி இது. ம.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாததால், ம.தி.மு.க. மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தியின் ஆதரவாளர்கள் அமைச்சர் முத்துசாமிக்கு ஆதரவாகக் களம் இறங்கக் கூடும் என்பது அவருக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி.மேலும், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்களும் முத்துசாமிக்காகப் பிரசாரத்தில் முனைப்புடன் இறங்கி இருக்கிறார்கள்.காங்கிரஸýக்கு என்று கணிசமான வாக்கு வங்கி ஈரோட்டில் இல்லை என்றாலும், பெரியார் குடும்பத்துக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ள தொகுதி இது என்பதால், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவு அமைச்சர் முத்துசாமிக்கு நிச்சயமாக வலு சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.முத்துசாமி 1977 முதல் ஏற்படுத்தி பலப்படுத்திய அ.தி.மு.க. வாக்கு வங்கி அவருக்கு சாதகமாகத் திரும்புமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். 1989-ல் அ.தி.மு.க. (ஜா) அணியின் சார்பில் முத்துசாமி போட்டி போட்டபோது, எம்.ஜி.ஆர். வாக்கு வங்கி அவருக்கு சாதகமாக இருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆரால் ஆளாக்கப்பட்ட முத்துசாமி தி.மு.க.வில் இணைந்ததை அவருக்கு நெருக்கமான பலரே கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.அ.தி.மு.க.வுக்கு என்று இருக்கும் வாக்கு வங்கி, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான தே.மு.தி.க.வின் வாக்குகள், கணிசமான முதலியார் வாக்கு வங்கி இவையெல்லாம் தே.மு.தி.க. வேட்பாளருக்கு சாதகமாக இருக்கிறது என்றால், தி.மு.க. வேட்பாளரான முத்துசாமியின் மிகப் பெரிய சவால், தி.மு.க.வினரைத் தனக்கு சாதகமாக பிரசாரத்தில் இறக்குவது. முத்துசாமியின் வளர்ச்சி மாவட்டத்தில் தனது செல்வாக்கை பாதித்து விடும் என்று கருதும் மாவட்டச் செயலாளர் என்.கே.கே.பி. ராஜா, தனது ஆதரவாளர்களுடன் அவர் போட்டியிடும் அந்தியூர் தொகுதியில் கவனம் செலுத்துவதால், தி.மு.க.வின் ஆதரவும் முழுமையாக இல்லாமல், அ.தி.மு.க.வினரையும் விரோதித்துக் கொண்டு, இளங்கோவனின் காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் முத்துசாமி.முத்துசாமி நல்ல மனிதர் என்று சொல்லாதவர்களே கிடையாது. அது வாக்குகளாக மாறுமா என்பதுதான் கேள்வி!
Joint rule with cong. - kalaignar : காங்கிரசோடு கூட்டணி ஆட்சி: கருணாநிதி சூசகம்
இப்போதைய ஆட்சிப்பீடத்தில் காங்.கிற்கு இடம் தராமல் தமிழக உணர்வைக் காப்பாற்றிய கலைஞர் நடைபெறும் தேர்தலில் அதற்குப் பங்களிப்பதாகக் கூறுவது அவருக்குப் பின்னடைவையே ஏற்படுத்தும். காங். எந்த வகையிலும் தமிழக ஆட்சிப்பீடத்தில் ஏறுவதை மக்கள் விரும்பவில்லை. காங். கூட்டணி ஆட்சியை விரும்பாத மக்கள் வேறு கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு எடுத்து விடுவார்கள். ஒப்புக்குச் சப்பாணியாகக் காங். இருந்துவிட்டுப் போகட்டும்! ஆட்சியில் பங்கு எனக் கூறினால் தேர்தல் மடிவு அறிவித்ததும் வேறு அணிக்குத் தாவிவிடும். கொலைகாரக் காங். தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை வர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சென்னை ஏப்ரல்,4: சட்டப்பேரவைத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றிபெறாவிட்டால் காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து செயல்படுவோம் என்று கூட்டணி ஆட்சி குறித்து முதல்வர் கருணாநிதி சூசகமாகப் பேசினார்.வடசென்னை மாவட்டத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை அயனாவரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி பேசியது:"தில்லியிடமிருந்து நாம் எதிர்பார்க்கப்படுபவை எல்லாம் தாமதமாக வந்து சேர்வதுபோல குலாம்நபி ஆசாத்தும் இந்தக் கூட்டத்திற்கு தாமதமாக வந்து சேர்ந்துள்ளார். ஆனால் தில்லியிலிருந்து நமக்கு எதுவும் தாமதமாக வந்து சேர்ந்தாலும் அனைத்தும் தட்டாமல் தாராளமாக வந்து சேர்வதின் அடையாளமாகத்தான் இந்தக் கூட்டம் இருக்கிறது. விமானம் தாமதமாக வந்ததாலேயே ஆசாத்தும் தாமதமாக வந்திருக்கிறார்.திமுக ஆட்சியின் கடந்தகால சாதனைகளைக் குறிப்பிட்டு, அந்தச் சாதனை தொடர வேண்டும் என்றால் 6-வது முறையாக நான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆசாத் உள்பட எல்லோரும் பேசினர். அப்படி சாதனைகள் தொடர வேண்டும் என்றால் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள கட்சிகளுக்கிடையே வலுவான நல்ல உறவு இருக்க வேண்டும். இதன் அடையாளமாகத்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி திகழ்கிறது. இது ஏதோ தேர்தலுக்காக நாங்கள் சொல்லவில்லை. அகில இந்திய அளவில் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று அண்ணா பலமுறை வலியுறுத்தி கூறியது.தமிழகத்தின் தேவைகள் அனைத்தையும் மாநிலக் கட்சிகளால் மட்டுமே உருவாக்கிக் கொடுத்துவிட முடியாது. மத்திய அரசோடு இணைந்திருக்கிறபோதுதான் நம்முடைய உரிமைகளை வலியுறுத்தி பெற முடியும்.தமிழ் செம்மொழி என்கிற அந்தஸ்தைப் பெற நூறு ஆண்டுகள் போராட்டம் நடைபெற்றிருக்கிறது. பரிதிமாற்கலைஞர் என்று பெயர் மாற்றிக்கொண்ட சூரியநாராயண சாஸ்திரியின் நூறு ஆண்டுகாலப் போராட்டம் அது. மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கையும், சோனியா காந்தியையும் ஒருமுறைக்கு இரு முறை சந்தித்து வலியுறுத்தியதற்குப் பிறகு தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. இதுகுறித்து சோனியாந்தி எனக்கு எழுதிய கடிதத்தில் தமிழ் செம்மொழி தகுதி பெற்றதற்கான பெருமை என் ஒருவரையே சாரும் என்று எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அதைப்போல மெட்ரோ ரயில் திட்டம், நிறைவேறப்போகிற சேதுசமுத்திர திட்டம் எல்லாம் காங்கிரஸ் - திமுகவின் வலுவான உறவாலேயே கிடைத்தது. வெற்றிபெறாவிட்டால்: எனவே உரிமைகளைக் கேட்டுப்பெற இந்தக் கூட்டணி மேலும் மேலும் வலுவாகத் தொடர வேண்டும். இந்தத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றி கிடைக்காவிட்டால் எங்களுடைய இதயத்தின் ஒற்றுமைக்கேற்ப இணைந்து, மத்திய அரசிடமிருந்து உரிமைகளைக் கேட்டுப்பெறுவோம்' என்றார் கருணாநிதி.மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
During D.M.K. and A.D.M.KL. regimes thamixhnadu met Retreat திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகம் பின்னடைவு: பொன்.இராதாகிருட்டிணன்
பேராயக்கட்சியான காங். ஆட்சியை விட அடுத்து அமைந்த இரு கழகங்கள் ஆட்சியும் பல நன்மைகளை நாட்டிற்குச் செய்துள்ளன; இருப்பினும் எதிர்பார்த்த நன்மையான தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமையிடம் என்பதில் இரண்டும் கோட்டை விட்டன. அதனால்தான் இரண்டையும் எதிர்க்க வேண்டுமே தவிர, ஒட்டு மொத்தமாக ௨ கழகங்களின் ஆட்சியால் கேடு என்று கூறக்கூடாது. ஊழலைப் பொறுத்தவரை எல்லா நாடுகளிலும் உள்ளது. பேராயக் காங். கின் ஊழலை யாரும் முந்த முடியாது. எனவே, அதற்கு 2 கழகங்களை மட்டும் குற்றம் சுமத்த முடியாது. எதிர்பார்த்தவாறான நேர்மையான ஆட்சியைத் தரவில்லை என்பது உண்மைதான். ஆனால், காங். இருநதிருந்தால் இன்னும் மோசமாக இருநதிருக்கும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
களியக்காவிளை, ஏப். 3: தமிழகத்தை 44 ஆண்டுகளாக ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகள் தமிழ்நாட்டை வளர்ச்சி விகிதத்தில் பின்னோக்கிக் கொண்டு சென்றுள்ளன என பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். கிள்ளியூர் தொகுதி பாஜக வேட்பாளர் டி. சந்திரகுமாரை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்ய வந்த அவர் அதங்கோட்டில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: ஏராளமான சாதனைகள் செய்ததாகக் கூறியுள்ளார். சலுகைகளை வாரி வழங்கி வருகிறார். இலவசங்களை ஏராளமாக அறிவித்து அவை முழுமையாகக் கொடுக்கப்படாவிட்டாலும், கொடுத்து முடித்துவிட்டதாகக் கூறுகிறார். அப்படியிருந்தும், திமுக தனித்து தேர்தலைச் சந்திக்க அச்சப்படுகிறது. இருமுறை முதல்வராக இருந்த ஜெயலலிதா கூட்டணி இல்லாமல் எந்தத் தேர்தலையும் சந்திக்கவில்லை. இக் கட்சிகள் இப்போது சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துக்கொண்டு தேர்தலில் மட்டும் வெற்றிபெற முயல்கின்றனர். தமிழக பாஜகவுக்கு நான் தலைமையேற்ற நாள்முதல், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்ற முடிவை அறிவித்து தேர்தலைச் சந்திக்கிறோம். பாஜக நிலைப்பாட்டை மக்கள் பரிபூரணமாக ஏற்றுள்ளனர். வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் ஆட்சி எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை பாஜகதான் முடிவு செய்யும். இம் மாவட்டத்தில் கிள்ளியூர் உள்பட 6 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும். தேர்தல் முடியும் வரை இரவில் மின்வெட்டு ஏற்படாமலிருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் பணம் கடத்த பயன்படுத்தப்படுகிறது என்ற செய்தி அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் சோதனையை எல்லா வாகனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றார் அவர். அதங்கோட்டில் இருந்து பிரசாரம் மேற்கொண்ட அவர் படந்தாலுமூடு, கோழிவிளை, தளச்சான்விளை, சூழால், நடைக்காவு, நித்திரவிளை, மங்காடு வழியாக இரவு விழுதலம்பள்ளத்தில் நிறைவு செய்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
By முத்துக்குமார்
4/4/2011 1:06:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *4/4/2011 1:06:00 PM
வெள்ளி, 1 ஏப்ரல், 2011
Cannibal Rajapakshe visit Thirupathy
கொடுமை! கொடுமையிலும் கொடுமை! ஆன்றோரும் உண்டுகொல்! சான்றோரும் உண்டுகொல்! தெய்வமும் உண்டுகொல்! கொடுமைக்கு முடிவு ஏற்படுவது எப்போது? திருப்பதிக்கு வருபவனைத் திரும்பப் போகவிடாமல் வைத்துக்கொள்வானா இறைவன்?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
S.M.S. to voters: ஏமாறாமல் இருந்தால் ஏற்றம் பெறலாம்'
இவ்வாறு பலரும் தேர்தல் விழிப்புணர்வு பற்றிய குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். நான் அரசியல் ஆத்திசூடி என அனுபபி வருகின்றேன். இதுவரை அனுப்பியவை.1. அறநெறி தவறுவோர்க்கு வாக்கு அளிக்காதீர்! 2. ஆருயிர்த் தமிழைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்! 3. இனப் பகைவருக்கு வாக்களிக்காதீர். 4. ஈழத் தமிழர்களை அழித்தவர்க்கு வாக்களிக்காதீர்! 5. உண்மை பேசாதவர்க்கு வாக்களிக்காதீர் 6. ஊழலில் வாழ்பவர்க்கு வாக்களிக்காதீர்! 7. எளிமையை மறந்தவர்க்கு வாக்களிக்காதீர்! 8. ஏய்த்துப் பிழைப்பவர்க்கு வாக்களிக்காதீர்! 9. ஐயததிற்கு இடம் ஆனவர்களுக்கு வாக்களிக்காதீர்! 10. ஒழுக்கக் கேடர்களுக்கு வாக்களிக்காதீர்! 11.ஓய்விலே சுவை காண்பவருக்கு வாக்களிக்காதீர்! ௧௨ . ஔவியம் (அழுக்காறு) உடையவர்க்கு வாக்களிக்காதீர்! 13. அஃகம் (முறைமை ) தவறுபவர்க்கு வாக்களிக்காதீர்! 14*. கயவருக்கு வாக்களிக்காதீர்! தேர்தல் ஆத்திசூடி என்னும் தலைப்பில் thiru-thoazhamai@googlegroups.com குழுவிலும் நாள்தோறும் காணலாம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கண்ணியமான தேர்தல்-2011 குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆம்பூர் ஜமாத்தே இஸ்லாமி இந்த் அமைப்பு தினந்தோறும் வாக்காளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறது. வியாழக்கிழமை அனுப்பிய எஸ்.எம்.எஸ்ஸில் குறிப்பிட்டிருப்பது: "ஏமாறாமல் நாம் இருந்தால் ஏற்றம் பெறும் நம் நாடு. வரும் ஏப்ரலிலும் ஏமாந்தால் - அது ஏங்கி நிற்கும் நம்மோடு! கடமையை செய்வோம் கண்ணியம் காப்போம்.
Un expected candidate - Thanga balu: எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்: தங்கபாலு
தங்கபாலு உட்பட அனைத்துக் காங். வேட்பாளர்களும் மண்ணைக் கவ்வ வேண்டும். அதே நேரம் தங்கபாலுவிற்கு எதிராகக் கோவன் குழுவினர் தொடர்ந்து ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர். காலங்காலமாகக் காங்.கட்சி என்பதே இங்குள்ளோர் தனிப்பட்ட முடிவைச் செயல்படுத்த முடியாது என்பதுதான். அவ்வாறிருக்க அவர்மீது வேண்டும் என்றே பழி சுமத்தப்படுகிறது. தி.மு.க.கூட்டணியை விரும்பாதக் காங். தலைவர்களாலும் எதிர்ப்புப் போராட்டம் தூண்டப்படுகிறது. மாநிலக் கட்சியின் தலைவர் என்ற முறையில் நேரடியாகவே தொகுதியைப் பெற வாய்ப்பு உள்ளபொழுது அவர் ஏன் குறுக்குவழியைப் பின்பற்ற வேண்டும். தங்கபாலு தலைவராக இருக்கும் பொழுது எதிரப்பு ஆர்ப்பாட்டங்கள் மிகுதியாக இருக்கின்றன வென்னால் அதன் காரணம், அவரது எதிர் அணியினர் தலைமைக்குக்கட்டுப்படாததுதான். எனவே, காங். அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வேளை காங்.. கணிசமான அளவில் வெற்றி பெற்றால் அணிமாறி ஆட்சிப்பீடத்தில் அமரத் துடிப்பவர்களால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தை அக்கட்சித் தலைமை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடாமல் சத்தியமூர்த்தி நிலையத்தைத் தங்கள் அணிக்குச் சார்பான போ்ராட்டக் களமாக மாற்றும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வேண்டுகோள் காங்.தலைமைக்க நடுவு நிலையுடன் விடுக்கப்படுவது! அதே நேரம் வாக்காளர்களுக்கான மனித நேய வேண்டுகோள், காங்.கிற்கு எக்காரணம் கொண்டும் வாக்களிக்காதீர்கள் என்பது!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சென்னை: ""எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காங்கிரஸ் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்பது கட்சி விரோத செயல். தேர்தல் நேரத்தில் தொண்டர்களை குழப்புவது நல்லதல்ல. தேர்தல் முடியும் வரை தொண்டர்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். தேர்தல் முடிந்த பின் தங்களது கருத்துக்களை கட்சி மேலிடத்தில் தெரிவிக்கலாம். உண்ணாவிரதம் இருந்தவர்களை, உள்ளே வருமாறு அழைத்தேன். இது என் பண்பாடு. கட்சி கட்டுப்பாட்டை நான் மதிக்கிறேன். கட்சியில் எனக்கென்று தனி சிறப்பு உண்டு. இரண்டு முறை தலைவர் பதவியும், பல பொறுப்புகளையும் வகித்துள்ளேன். கூட்டணியின் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
நான் எந்த வேட்பாளரையும் மாற்றவில்லை. வேட்பாளர்கள் தேர்வு மேலிடம் எடுத்த முடிவு. மேலிடம் அறிவித்த வேட்பாளர்கள் அனைவரையும் காங்கிரசார் ஆதரிக்க வேண்டும். ஒரு அசாதாரண சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகியுள்ளேன். இது விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. எனக்கு கட்சி தான் முக்கியம். அதற்காக எந்த தியாகத்தையும் நான் செய்வேன். தனிப்பட்ட முறையில் விருப்பு, வெறுப்புக்கு இடமில்லை. நான் விரும்பியிருந்தால் சோனியாவிடம் ஏதாவது ஒரு தொகுதியை கொடுங்கள் என கேட்டிருப்பேன். 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். தலைமைக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது; விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு தங்கபாலு கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காங்கிரஸ் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்பது கட்சி விரோத செயல். தேர்தல் நேரத்தில் தொண்டர்களை குழப்புவது நல்லதல்ல. தேர்தல் முடியும் வரை தொண்டர்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். தேர்தல் முடிந்த பின் தங்களது கருத்துக்களை கட்சி மேலிடத்தில் தெரிவிக்கலாம். உண்ணாவிரதம் இருந்தவர்களை, உள்ளே வருமாறு அழைத்தேன். இது என் பண்பாடு. கட்சி கட்டுப்பாட்டை நான் மதிக்கிறேன். கட்சியில் எனக்கென்று தனி சிறப்பு உண்டு. இரண்டு முறை தலைவர் பதவியும், பல பொறுப்புகளையும் வகித்துள்ளேன். கூட்டணியின் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
நான் எந்த வேட்பாளரையும் மாற்றவில்லை. வேட்பாளர்கள் தேர்வு மேலிடம் எடுத்த முடிவு. மேலிடம் அறிவித்த வேட்பாளர்கள் அனைவரையும் காங்கிரசார் ஆதரிக்க வேண்டும். ஒரு அசாதாரண சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகியுள்ளேன். இது விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. எனக்கு கட்சி தான் முக்கியம். அதற்காக எந்த தியாகத்தையும் நான் செய்வேன். தனிப்பட்ட முறையில் விருப்பு, வெறுப்புக்கு இடமில்லை. நான் விரும்பியிருந்தால் சோனியாவிடம் ஏதாவது ஒரு தொகுதியை கொடுங்கள் என கேட்டிருப்பேன். 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். தலைமைக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது; விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு தங்கபாலு கூறினார்.
Senthil - San Franciso,யூ.எஸ்.ஏ
2011-04-01 01:57:56 IST Report Abuse
வருங்கால பிரதமர் நொங்குபாலு வாழ்க.
Share this comment
Yuvraj - Chennai,இந்தியா
2011-04-01 02:45:55 IST Report Abuse
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி தங்கபாலு வாழ்க!!...
Share this comment
srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ
2011-04-01 01:52:51 IST Report Abuse
எங்களுக்கு தெரியும் உங்களின் எதிர்பார்ப்பு என்னவென்று. திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் காங்ரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைத்தால் துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நப்பாசை தானே? அதெப்படி உங்களின் வேட்புமனுவோடு எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கும் போது மனைவியின் வேட்பு மனுவில் இரண்டு ஆவணங்களை மறந்தீர்கள்? நல்ல வேலை இந்த குறுக்கு புத்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே வந்ததே. நான் மேலே சொன்னது போல் தப்பித்தவறி கூட்டணி ஆட்சி அமைந்து அப்போது உங்களுக்கு துணை முதல்வர் பதவி ஆசை இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப குசும்பு தான். பேட்டிய பாரு "எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்".
Share this comment
sathish - melbourne,ஆஸ்திரேலியா
2011-04-01 01:38:10 IST Report Abuse
அது எப்படி அய்யா தங்க பாலு, மனைவியின் வேட்பாளர் படிவத்தில் கையெழுத்து போட மறந்து,, உங்க படிவத்தில் மாத்திரம் எல்லாம் சரியாக செய்தது, என்ன இருந்தாலும் இந்த தமிழ் மக்களை இவ்வளவு கேனைகளாக செய்ய கூடாது. தமிழ் மக்கள் முட்டாள்கள் தான். கேனைகள் தான். இந்த இலவசத்தை கொடுத்து கொடுத்து, சொரணை கெட்ட ஜன்மங்களாக செய்து விட்ட இந்த கலைனர் உங்களுக்கும் நல்ல உதவி இருக்கிறார். என்ன தெரு கூத்து நடந்தாலும் உங்க பின்னே தான் கொஞ்சம் சூடு, சொரணை, வெட்கம், மானம் இல்லா நீங்க அப்ப அப்ப போடும் பிச்சைக்கு கை தூக்கும் தொண்டர்கள் கொஞ்சம் இருக்கும் வரை உங்களுக்கு கவலை எது,. உங்க கலைனரும் கோஷ்டி தலைவர்களும் வாரிசு பதவி வைக்கும் போது உங்களுக்கு மட்டும் என்ன இருக்காதா? என்ன ஒரு கேவல பிழைப்பு அய்யா ? இதில் காமராஜரையும் என்னையா இழுக்கிறீர்கள்.
Share this comment
maazmai - Chennai,இந்தியா
2011-04-01 00:49:46 IST Report Abuse
ஆனால் எல்லோரும் எதிர்பார்க்கிறபடி உங்கள் தோல்வி உறுதி..
Share this comment
k.kaipulla - nj,இந்தியா
2011-04-01 00:46:24 IST Report Abuse
பொதுவா பாத்தீங்கன்னா, எதிர்பாராத விதமா அந்த சம்பவம் நடந்திடிச்சுன்னு ஒரு கெட்ட காரியத்த பத்தி சொல்லுவாங்க. அதுமாறியே இவரும் சொல்லுறாரு.
Share this comment
Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-04-01 00:44:54 IST Report Abuse
நீயெல்லாம் தமிழ் நாட்டுக்கு ஒரு சாப கேடு... அது என்ன எப்ப பாத்தாலும்... "அன்னை சோனியா", "அன்னை சோனியா" ன்னு ஜால்ராவ தட்டோ தட்டுன்னு தட்ற வெக்கமே இல்லாம.... சோனியாவுக்கு ..... மாதிரி இருக்கிற நீ.... பேச்சை பாரு...
Share this comment
Rameshbabu R - Salem,இந்தியா
2011-04-01 00:44:10 IST Report Abuse
எதிர்பாராத விதமாய் நி மனிதனாக கூடத்தான் பிறந்து விட்டாய்.. இதெல்லாம் சகஜமப்பா..
Share this comment
Vaigai Selvan - Chennai,இந்தியா
2011-04-01 00:31:12 IST Report Abuse
நீங்கள் வேட்பாளர் ஆனது எதிர்பாராதது தான்.. ஆனால்நீங்கள் டிபாசிட் இழக்கப்போவது நாங்கள் எதிர்பார்த்தது..
Share this comment
Disabled voters requested priority :வாக்களிக்க முன்னுரிமை: மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள்
சரியான வேண்டுதல்கள். இந்தத் தேர்தலிலேயே இவை நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சென்னை, மார்ச் 31: தேர்தலில் வாக்களிக்கும்போது உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் சார்பாக, "தேர்தலில் மாற்றுத் திறனாளிகளின் சிரமங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் பேசியதாவது:தமிழகத்தில் சுமார் 20 லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். எனவே எங்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேர்தல் ஆணையம் சில உரிமைகளையும், வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.குறிப்பாக, நடக்க இயலாதவர்களுக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி வசதியை செய்து தர வேண்டும்.பார்வையற்றோரை பொறுத்தவரையில், மற்றவர்களின் உதவியில்லாமல் வாக்களிக்க இயலாது. அவ்வாறு உதவி செய்பவர்கள் அவர்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களித்து விடும் சூழ்நிலை உள்ளது. எனவே பார்வையற்றோரின் வாக்குரிமை மறைமுகமாகப் பறிக்கப்படுகிறது.இதனைத் தவிர்க்க, மற்றவர்களின் உதவியில்லாமல் வாக்களிக்கும் வகையில் பேசும் மென்பொருள் (டாக்கிங் சாஃப்ட்வேர்) வசதியை வாக்குச்சாவடிகளில் கொண்டு வர வேண்டும்.உயரம் குறையுள்ளவர்களுக்கு வாக்கு இயந்திரம் எட்டும் அளவுக்கு சாய்வு தளப் பலகை வசதியை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல, செவித்திறன் குறைபாடுள்ளோருக்கு தகவல் பரிமாறும் வசதி மிகவும் குறைவாக இருக்கும். எனவே, அவர்களுக்கு சமூக நலத்துறை சார்பாக வழங்கப்படும் அடையாள அட்டையையே போதுமானதாக கருதி வாக்காளர் அடையாள அட்டையைத் தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் நம்புராஜன், உயர வளர்ச்சி தடை பெற்றோர் சங்கத் தலைவர் ஆர்.கோபிநாத், மாற்றுத் திறனாளிகள் நல ஆணைய உதவி இயக்குநர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)