co-aliation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
co-aliation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஏப்ரல், 2011

Coalition Govt. - Raghul speaks indirectly: திமுக - காங்கிரசு கூட்டணி ஆட்சி: இராகுல் சூசகம்


தமிழ் நாட்டு மேடையில் தமிழில் கூட எழுதி வைக்க விருப்பமில்லாத இவர்கள் ஆடசிக்குவந்தால் தமிழுக்குக் கேடு. தமிழினக் கொலையாளி, தமிழ்மொழிப் பகையாளி காங்.கட்சியை அரசியலில் இருந்தே துரத்துவோம்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: ராகுல் சூசகம்



ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார் ராகுல்காந்தி.
ஈரோடு, ஏப்ரல் 6: தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கட்சிகள் அங்கம் வகிக்க இருக்கும் அரசு ஏழை மக்களின் அரசாக இருக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்காந்தி தெரிவித்தார்.  ஈரோட்டில் ஐனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:  வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள்தான் இந்தியாவின் வலிமை. மத்தியில் ஆட்சி செய்த பாஜக அரசு இந்த மக்களைக் கவனிக்கத் தவறிவிட்டது. காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  விவசாயிகளின் நலன்காக்கும் வகையில் மத்திய அரசு ரூ.70 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. 100 நாள் வேலைத் திட்டம் மூலமாக ஏழை மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் ஆர்வம் கொண்டுள்ளன. வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு முந்தைய காலத்தை விட கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அதிகரித்துள்ளது.  தமிழகத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி நிதி உதவி அளித்துள்ளது. தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதாரத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.  சாயக்கழிவுப் பிரச்னைக்கு  நிரந்தரத் தீர்வு:  ஈரோட்டில் ஜவுளித் தொழிலை மேம்படுத்தும் வகையில், அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், சாயக்கழிவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கும்.  தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் 16 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. இதனால்தான் இந்த தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 10 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக அங்கம் வகிக்க இருக்கும் அரசு, ஏழை  மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும், இளைஞர்களுக்காக உழைக்கும் அரசாக இருக்கும். தமிழக மக்கள் இந்தக் கூட்டணிக்கு இந்தத் தேர்தலிலும் ஆதரவளிக்க வேண்டும் என்றார் ராகுல்.  காங்கிரஸ் மற்றும் திமுக அங்கம் வகிக்கும் அரசு என்று கூறியதன் மூலம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதை ராகுல்காந்தி கோடிட்டுக் காட்டியுள்ளார் என்றனர் காங்கிரஸ் கட்சியினர்.  ராகுல்காந்தி பேச்சை, முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தமிழில் மொழிபெயர்த்தார். திமுக வேட்பாளர்கள் எஸ்.முத்துசாமி, ராஜா, காங்கிரஸ் வேட்பாளர்கள் யுவராஜா, விடியல்சேகர், ஆர்.எம்.பழனிச்சாமி, கொமுக வேட்பாளர்கள் எஸ்.சிவராஜ், கேகேசி.பாலு, பாமக வேட்பாளர் எஸ்.மகேந்திரன் ஆகியோரை வாக்காளர்களுக்கு ராகுல்காந்தி அறிமுகப்படுத்தினார்.   

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

Joint rule with cong. - kalaignar : காங்கிரசோடு கூட்டணி ஆட்சி: கருணாநிதி சூசகம்

இப்போதைய ஆட்சிப்பீடத்தில் காங்.கிற்கு இடம்  தராமல் தமிழக உணர்வைக் காப்பாற்றிய  கலைஞர் நடைபெறும் தேர்தலில் அதற்குப் பங்களிப்பதாகக் கூறுவது அவருக்குப் பின்னடைவையே ஏற்படுத்தும். காங். எந்த வகையிலும் தமிழக ஆட்சிப்பீடத்தில் ஏறுவதை மக்கள் விரும்பவில்லை. காங். கூட்டணி ஆட்சியை விரும்பாத மக்கள் வேறு கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு எடுத்து விடுவார்கள். ஒப்புக்குச் சப்பாணியாகக் காங். இருந்துவிட்டுப் போகட்டும்! ஆட்சியில் பங்கு எனக் கூறினால் தேர்தல் மடிவு அறிவித்ததும் வேறு அணிக்குத் தாவிவிடும்.  கொலைகாரக்  காங். தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை வர வேண்டும்.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக்   காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 




காங்கிரஸோடு கூட்டணி ஆட்சி: கருணாநிதி சூசகம்


சென்னை ஏப்ரல்,4: சட்டப்பேரவைத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றிபெறாவிட்டால் காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து செயல்படுவோம் என்று கூட்டணி ஆட்சி குறித்து முதல்வர் கருணாநிதி சூசகமாகப் பேசினார்.வடசென்னை மாவட்டத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை அயனாவரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி பேசியது:"தில்லியிடமிருந்து நாம் எதிர்பார்க்கப்படுபவை எல்லாம் தாமதமாக வந்து சேர்வதுபோல குலாம்நபி ஆசாத்தும் இந்தக் கூட்டத்திற்கு தாமதமாக வந்து சேர்ந்துள்ளார். ஆனால் தில்லியிலிருந்து நமக்கு எதுவும் தாமதமாக வந்து சேர்ந்தாலும் அனைத்தும் தட்டாமல் தாராளமாக வந்து சேர்வதின் அடையாளமாகத்தான் இந்தக் கூட்டம் இருக்கிறது. விமானம் தாமதமாக வந்ததாலேயே ஆசாத்தும் தாமதமாக வந்திருக்கிறார்.திமுக ஆட்சியின் கடந்தகால சாதனைகளைக் குறிப்பிட்டு, அந்தச் சாதனை தொடர வேண்டும் என்றால் 6-வது முறையாக நான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆசாத் உள்பட எல்லோரும் பேசினர். அப்படி சாதனைகள் தொடர வேண்டும் என்றால் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள கட்சிகளுக்கிடையே வலுவான நல்ல உறவு இருக்க வேண்டும். இதன் அடையாளமாகத்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி திகழ்கிறது. இது ஏதோ தேர்தலுக்காக நாங்கள் சொல்லவில்லை. அகில இந்திய அளவில் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று அண்ணா பலமுறை வலியுறுத்தி கூறியது.தமிழகத்தின் தேவைகள் அனைத்தையும் மாநிலக் கட்சிகளால் மட்டுமே உருவாக்கிக் கொடுத்துவிட முடியாது. மத்திய அரசோடு இணைந்திருக்கிறபோதுதான் நம்முடைய உரிமைகளை வலியுறுத்தி பெற முடியும்.தமிழ் செம்மொழி என்கிற அந்தஸ்தைப் பெற நூறு ஆண்டுகள் போராட்டம் நடைபெற்றிருக்கிறது. பரிதிமாற்கலைஞர் என்று பெயர் மாற்றிக்கொண்ட சூரியநாராயண சாஸ்திரியின் நூறு ஆண்டுகாலப் போராட்டம் அது. மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கையும், சோனியா காந்தியையும் ஒருமுறைக்கு இரு முறை சந்தித்து வலியுறுத்தியதற்குப் பிறகு தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. இதுகுறித்து சோனியாந்தி எனக்கு எழுதிய கடிதத்தில் தமிழ் செம்மொழி தகுதி பெற்றதற்கான பெருமை என் ஒருவரையே சாரும் என்று எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அதைப்போல மெட்ரோ ரயில் திட்டம், நிறைவேறப்போகிற சேதுசமுத்திர திட்டம் எல்லாம் காங்கிரஸ் - திமுகவின் வலுவான உறவாலேயே கிடைத்தது. வெற்றிபெறாவிட்டால்: எனவே உரிமைகளைக் கேட்டுப்பெற இந்தக் கூட்டணி மேலும் மேலும் வலுவாகத் தொடர வேண்டும். இந்தத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றி கிடைக்காவிட்டால் எங்களுடைய இதயத்தின் ஒற்றுமைக்கேற்ப இணைந்து, மத்திய அரசிடமிருந்து உரிமைகளைக் கேட்டுப்பெறுவோம்' என்றார் கருணாநிதி.மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


புதன், 30 மார்ச், 2011

Co-aliation govt - kalaignar: தேவைப்பட்டால் கூட்டணி ஆட்சி: கருணாநிதி


சன் தொலைக்காட்சி அறிவாலயத்தில் வாடகைக்கு இருக்கும் கட்டடம் ; அதற்கும் தனக்கும் எத்தொடர்பும் இல்லை என்றார். ஆனால், ஆதாயப் பங்கு பல கோடி பெற்றுப் பிரித்துக் கொடுத்தார். கலைஞர் தொலைக்காட்சியில் யார், யாருக்கு எவ்வளவு பங்கு என அறிவிக்கப்பட்டதால் நேரடிப்பங்கு இல்லை என்பது உறுதியாகிறது.௨.) கூட்டணி ஆட்சி எனக் கூறுவதன நோக்கம் தேர்தலுக்குப்பின் காங். மாற்று அணியுடன் கூட்டு வைக்கும்  சதித்திட்டத்தை முறியடிக்கத்தான். பலர் எண்ணுவது போல் இவ்வறிவிப்பிற்கும் அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டுரை அளிக்க இருப்பதற்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை. கண்டிப்பாகக் காங்.கிற்கு ஆட்சியில் இடம் அளிக்க மாட்டார். ௩.) எல்லாக்கட்சியிலும் பரம்பரைக் கொத்தடிமை உள்ளதால் குற்றம் சாட்ட ஒன்றும் இல்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

தேவைப்பட்டால் கூட்டணி ஆட்சி: கருணாநிதி

சென்னை, மார்ச் 29- சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் தேவை ஏற்பட்டால் கூட்டணி ஆட்சி குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இன்று அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும், கலைஞர் தொலைக்காட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். "அதற்கு எனது பெயர் மட்டுமே சூட்டப்பட்டுள்ளது. ஆனால், அதில் எனக்கு எந்தவித உரிமையும் கிடையாது. எனது மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி சரத் குமார் ஆகியோருக்கு தான் அதில் பங்குகள் உள்ளன." என்றும் கருணாநிதி தெரிவித்தார்."சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் தொலைக்காட்சி கடன் பெற்றது. இதை எப்படி ஊழலாக கூறமுடியும்? சில அரசியல்வாதிகள் 2ஜி விவகாரத்தை மிகவும் பெரிதுபடுத்தி கூறி வருகின்றனர்." என்றும் கருணாநிதி கூறினார்.துணை முதல்வர் ஸ்டாலின் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், "ஸ்டாலின், எனது அரசியல் வாரிசாக இருப்பதில் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. திமுகவின் மூத்த தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் என் மீது வைத்துள்ள அதே நம்பிக்கையை ஸ்டாலின் மீதும் வைத்துள்ளனர்." என்றார்.