திங்கள், 5 ஜூலை, 2010

மேலவையில் பிரதிநிதித்துவம்: பிராமணர் சங்கம் கோரிக்கை





அம்பாசமுத்திரம், ஜூலை 4: தமிழக மேலவையில் பிராமணர் சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் என். நாராயணன் வேண்டுகோள் விடுத்தார்.   தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவராக 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என். நாராயணனுக்கு திருநெல்வேலி மாவட்ட சங்கம் சார்பில் கல்லிடைக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  தமிழகத்தில் பிராமணர் சமுதாயம் 5-வது பெரிய சமுதாயமாகத் திகழ்கிறது. பிராமணர் சமுதாயத்தினர் பிற சமுதாயத்தினருடன் ஒற்றுமையாக உள்ளனர். தமிழ்நாடு பிராமணர் சங்கம் 900 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.  ஆண்டுதோறும் சங்கம் சார்பில் ரூ. 1 கோடியில்  கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.   வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பிராமணர் சமுதாயத்தின் நோக்கங்களை, திட்டங்களை ஏற்றுக் கொள்ளும் அரசியல் கட்சிகள், அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும் பிராமணர் சமுதாயத்தினருக்கு அரசியல் கட்சிகள் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.   தமிழகத்தில் மேலவை அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முதல்வர் கருணாநிதியின் நல்ல முயற்சி. மேலவையில் பிராணமர் சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.இதைத் தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ஆர். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லிடைக்குறிச்சி கிளைத் தலைவர் ஜி. பத்மநாபன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச்செயலர் வி. ஜெகந்நாதன், மாநிலப் பொருளாளர் நெல்லை சீதாராமன், மாநில கொள்கைப் பரப்புச் செயலர் எஸ். சங்கரநாராயணன், மாநில துணைத் தலைவர் என். கிருஷ்ணன், மாநில இணைச் செயலர் ஆர். விஸ்வநாதன், மாநில இளைஞரணி இணைச் செயலர் கே. ஹரிகிருஷ்ணன், மாநிலச் செயலர்கள் என். ஐயப்பன், கணேசன், மாநில மகளிரணி இணைச் செயலர்கள் ரஜினி, ஜெயந்தி, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சந்திரசேகர், கன்னியாகுமரி மாவட்டப் பொதுச்செயலர் டி.பி. குளத்துமணி, மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பி. ராமன், மாவட்ட மகளிரணி இணைச் செயலர்கள் பவானி, நாராயணி, மாவட்ட ஆலோசகர் வி. ரகுநாதன் உள்ளிட்ட பலர் பேசினர். முடிவில், மாநிலத் தலைவர் என். நாராயணன் ஏற்புரையாற்றினார்.   விழாவில், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற எஸ். விக்னேஷ், எஸ். கோமதி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  மாவட்ட துணைத் தலைவர் மீ. ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் எம்.எஸ். ராஜு நன்றி கூறினார்.
கருத்துக்கள்


இவர்கள் மூவகைப்படுவர். தங்களை ஆரியர்களாக எண்ணிக்கொண்டு தமிழைப் பழிப்பவர்கள்; தமிழ் உயர்ந்தது. ஆனால் சமற்கிருதம் அதைவிட உயர்ந்தது எனத் தவறாகக் கருதிக்கொண்டு தமிழ்ப்பணி ஆற்றிக்கொண்டே தமிழின் முதன்மையை விரும்பாதவர்கள் மற்றொரு வகையினர். மூன்றாமவர் தமிழையே எல்லாமுமாக எண்ணுபவர்கள். இவர்கள் சிறுபான்மையர். காலங்காலமாகத் தமிழ்நாட்டில் வாழ்வதைக் கருததில்கொண்டு அனைவரும் தமிழையே தாய் இனமாக ஏற்றுக் கொண்டு சில தலைமுறையிலேனும் சமற்கிருதத்தை மறக்க வேண்டும். நலத்திட்ட உதவி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். இராமகிருட்டிணா மடத்திலுள்ள புத்தக வங்கி கூட பிராமணர்களுக்கு மட்டும் எனச் செயல்படும் பொழுது பிராமண அமைப்புகளைப்பற்றிக் கூறவே வேண்டாம்.ஊடகங்கள் வாயிலாகத் தமிழ்க் கொலை புரிவதையும் நிறுத்த வேண்டும். வளரும் தலைமுறையினர் சாதி வேறுபாடில்லாமல் பழகுவதுபோல் மூத்த தலைமுறையினரும் பழகவும் உதவவும் வேண்டும்.தமிழின் வளர்ச்சியே தங்கள் வளர்ச்சி எனக் கருதவேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2010 2:25:00 PM
BEST WISHES TO BHRAMINS ASSCIATION
By SANGUTHIRTHAN
7/5/2010 1:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

ankay_20090705001
துரைசிங்கம் புஸ்பகலா
மண்கும்பான் யாழ்ப்பாணம்
உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.
அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.
“இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்”
அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழ வேரோடியிருக்க வேணும்.
தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும் அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும் ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம் தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.
தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.
காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.
ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும்இ 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும் நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.
கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.
ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.
லெப்.கேணல் பாமாவுக்கும் மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கையின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள் பண்புகள் எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள் நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும்இ படிச்சு முன்னுக்கு வரவேணும் என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.
‘நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா’ என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.
‘பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை’
என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால் இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால் தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.
கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம் நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.
எல்லாம் தயார்.
கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம் என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும் அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும்இ தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும்இ தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.
அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்பஇ அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.
இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்.
என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.
1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில் காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
எல்லோருக்குமே பரபரப்பு.
தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது.
ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.
‘ரைட் கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.
சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி ‘எங்கள் தோழிகள் தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே’ என்ற எண்ணமே மேலோங்கியது.
அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.
ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.
தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.
இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.
காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம்
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது- இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்-எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது- இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன்-தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா
உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது – இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

காற்றும் நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை – நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
காற்றும் நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை – நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில்
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில்
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது – இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்
எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்
எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது – இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

}
பெயர்ப்பலகைகளில் தமிழ், குழந்தைகட்குத் தமிழ்ப் பெயரிடுதல் முதலான செயற்பாடுகளின் மூலம் தமிழ் வளர்ச்சி நலனில் கருத்து செலுத்தும் மாநகராட்சித் தலைவர் உடனே ஆங்கிலவழிக் கல்வித் திட்டத்திற்கு மூடுவிழா நடத்த வேண்டும். அதற்கு மாற்றாகத தமிழ் வழிக் கல்வியைத் தரமான நிலையில் வழங்கவும் மாநகராட்சிப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளைப்  பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செமமொழி மாநாட்டை நடத்திவிட்டு தாய்த்தமிழைத்  துரத்துவது முறைதானா? சரிதானா?அறம்தானா? அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 


Font Size
மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழி பாடம் - 03-07-2010

சென்னை: “சென்னை மாநகராட்சியில் மேலும் 15 பள்ளிகளில் ஆங்கில வழிப்பாடம் தொடங்கப்படும்,” என்று மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிதி கொடுக்கப்படுமென்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நுங்கம்பக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் சுப்ரமணியன் மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான நிதிகளை வழங்கினார்.

அவர் கூறியதாவது:
தனியார் பள்ளிகளில் அவசர தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது போல், சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கும் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 120 தொடக்கப்பள்ளிகளுக்கு 3,000 ரூபாயும், 97 நடுநிலைப் பள்ளிகளுக்கு 5,000 ரூபாயும், 37 உயர்நிலைப் பள்ளிக்குக்கு 10 ஆயிரம் ரூபாயும், 30 மேல்நிலைப் பள்ளிக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

மாநகராட்சியின் 284 பள்ளிகளுக்கு அவசர தேவைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையில், 16 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை அந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் பள்ளிகளில் கடந்த ஆண்டு 15 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி பாடம் தொடங்கப்பட்டது. துவங்கிய போது 756 மாணவ, மாணவியர் சேர்ந்தனர். இந்த ஆண்டு ஆயிரம் பேருக்கு மேல் ஆங்கில வழிப்பாடத்தில் சேர்ந்துள்ளனர்.

ஆங்கில வழி பாடத்திட்டத்திற்கு பெற்றோர் மத்தியில் ஆதரவு இருப்பதால், இந்த ஆண்டு மேலும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி பாடம் தொடங்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.

சித்திரங்களின் சிந்தனைக் களஞ்சியம்

சித்திரங்களின் சிந்தனைக் களஞ்சியம்



சிரிக்க வைப்பது சிந்தனையைத் தூண்ட வேண்டும். அழுதவன் சிரிக்க ஆரம்பித்தால், சிரித்தபடி அவனை அழ வைத்த ஆணவக்காரர்கள் அழும் காலம் விரைவில் வந்துவிடும்.
திரு. மதி அவர்கள் தினமணி இதழில் வரைந்த கார்ட்டூன்களின் தொகுப்பு வெளிவந்துள்ளது. தற்போதைய பத்திரிகை உலகில் மதி அவர்களின் கார்ட்டூன்கள் தனிப்பட்ட சிறப்புடன் பலராலும் நாள்தோறும் எதிர்பார்க்கக் கூடியனவாக இருக்கின்றன.கார்ட்டூன் என்றால் அரசியல் கேலிச் சித்திரம் என்று ஆங்கிலம்- தமிழ் அகராதியில் பொருள் தரப்படுகிறது. நாட்டு மக்களின் அடிப்படை மனித உரிமைகளை, ஜனநாயக உணர்வைப் பாதுகாப்பதில் பத்திரிகை உலகம் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. மக்களை அல்லற்படுத்தும் குற்றங்களை, குறைபாடுகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவும், அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளை வலியுறுத்தவும் பத்திரிகைகள் பெரிதும் உதவுகின்றன. கொடுமைகளை நீக்கக் கடுமையான கட்டுரைகளும், ஆத்திரமிக்க அறிவுரைகளும் தரும் பலன்களை விட, கனிவாக, மென்மையாக, மக்களுக்கே புரியாத வகையில் நடைபெறும் அவலங்களைப் புலப்படுத்த, சிரிக்கும் வகையில் எளிதில் வெளிப்படுத்த கேலிச் சித்திரங்கள் மிகவும் பயன்படுகின்றன. இங்கிலாந்து நாட்டில் பிரபல கேலிச் சித்திரக்காரராக விளங்கியவர் "லோ' என்பவர். அவரின் முழுப்பெயர் டேவிட் அலெக்சாண்டர் செசில் லோ (1891-1963). நியுசிலாந்து நாட்டில் பிறந்தவர், சிறுவயதிலேயே சித்திரங்கள் வரைவதில் பழகி, பிறகு இங்கிலாந்து வந்து கார்ட்டூன்கள் வரைவதில் முதலிடம் பெற்றார். 1930 முதல் ஜெர்மனியில் ஹிட்லரும் இத்தாலியில் முசோலினியும் நடத்திய பாசிச ஆட்சி உலக ஜனநாயக நாடுகளை அதிர வைத்தபோது, லோ வரைந்த கார்ட்டூன்கள் அந்த எதேச்சாதிகாரிகளைக் கேலி செய்து அகற்றப்பட வேண்டிய கேலிக்குரிய கோமாளிகளாக ஆக்கின. ஜனநாயகத்தைக் காப்பாற்ற சர்ச்சில் ஆற்றிய உணர்ச்சிமிக்க முழக்கங்களைவிட, நேசப் படைகள் எழுச்சியுடன் போர்க்களங்களில் நடத்திய வீரதீரச் செயல்களை விட லோ வரைந்த சித்திரங்கள் நாள்தோறும், கனிவாக, வெற்றியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக, எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதில் பொதுமக்களை உற்சாகப்படுத்தின. தான் வெற்றி பெற்று இங்கிலாந்து நாட்டை அடிமைப்படுத்தியதும், தனக்கு எதிராக இருந்தவர்களைத் தீர்த்துக் கட்ட ஹிட்லர் தயாரித்து வைத்திருந்த கருப்புப் பட்டியலில் லோ பெயர் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்ததாம். கேலிச் சித்திரம் வெற்றியடைவதற்கு மூன்று முக்கிய பண்புகள் தேவைப்படுகின்றன. தாம் படும் அவதிகளுக்கான காரணங்கள் மக்களுக்கு எளிதில் புரிவதில்லை. முதலில் கேலிச் சித்திரக்காரருக்குத் தாம் வரையும் சித்திரம் வெளியிடும் விவரத்துக்கு அடிப்படையான உண்மை இருக்கிறது என்ற தெளிவு இருக்க வேண்டும். இல்லாத ஒன்றை வைத்து கேலி செய்வதில் பலன் இல்லை. இரண்டாவதாக, அந்தச் சித்திரம் மக்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தரும் என்பதில் பத்திரிகை ஆசிரியருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். மூன்றாவதாக, கேலிச்சித்திரத்தை மக்கள் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்றால், கேலி செய்யும் அளவுக்கு அந்த அநீதியும், ஆபத்தும் தாழ்த்தப்பட்டு, அதைத் திரண்ட மக்கள் சக்தியால் நீக்க முடியும் என்ற ஜனநாயக உணர்வு மக்களிடையே வலுவடைய வேண்டும்.இந்த மூன்று பண்புகளும் சித்திரக்காரர் மதியிடமும், தினமணி ஆசிரியரிடமும், நாள்தோறும் சித்திரங்களைப் பார்க்கும் வாசகர்களிடமும் இருக்கின்றன என்று நான் நம்புகிறேன். சிரிக்க வைப்பது சிந்தனையைத் தூண்ட வேண்டும். அழுதவன் சிரிக்க ஆரம்பித்தால், சிரித்தபடி அவனை அழ வைத்த ஆணவக்காரர்கள் அழும் காலம் விரைவில் வந்துவிடும். மதியின் கேலிச் சித்திரங்களைத் தொகுத்துள்ள நூல் சிரிப்பின் மூலம் சிந்தனைகளை வளர்க்கும் கலைக் களஞ்சியம். அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
கருத்துக்கள்


ஒரு பெரிய புத்தகம் உணர்த்த முடியாத கருத்தை ஒரு கேலிப்படம் அல்லது கருத்துப்படம் கருத்தோவியம் நன்கு எளிதில் உணரத்தி அந்நூல் செய்ய முடியாதவற்றைச் செய்துவிடுகிறது. எனவே செழியனார் சொல்வது சரிதான். ஆனால், தினமணியில் மதியின் படங்கள் இணையப் பக்கங்களில் உடனுக்குடன் பாரக்க முடியவில்லை.சான்றாக இன்றைய கருத்தோவியத்தைச் சொடுக்கினால், நேற்றைய கருத்தோவியம்தான் வருகிறது. இன்றைக்கு சூலை 5 ஆம் நாள் என்றாலும் 3 கருத்தோவியங்கள்மட்டுமே காண முடிகிறது. ஒவ்வொரு திங்களிலும் நடைபெறும் அவலமதான் இது. சூன் திங்களில் 19, ஏப்பிரலில் 8, மேத்திங்களில் 19 எனக் குறைவாகத்தான் கருத்தோவியங்களைக கண்டு களிக்க முடிகிறது. மதியின் கருத்தோவிய வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பாராட்டும் ஆசிரியர் அன்றாடம் வைகறையிலேயே கருத்தோவியங்களைக் காண வசதி செய்து தர வேண்டும். கருத்தோவியங்களின் 3 பண்புகளைச் சரியாகச் சுட்டிக் காட்டிய செழியனாருக்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2010 3:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பொய் சொல்லக் கூடாது

First Published : 05 Jul 2010 12:06:00 AM IST


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, வழக்கறிஞர்களின் ஒரு சிறு பிரிவினர் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் உண்ணாவிரதம், நீதிமன்றப் புறக்கணிப்பில் தொடங்கி, அதை அரசியலாக்கினர். இப்போது அரசியல் கட்சித் தலைவர்கள் முதலாக, தமிழில் வாதாட வாய்மொழி உத்தரவாதம் அளித்த தலைமை நீதிபதி வரை, ஓர் அப்பட்டமான அரசியலமைப்புச் சட்டச் சிக்கலையும், தகுந்த கட்டமைப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை என்கிற உயர் நீதிமன்ற  நீதிபதிகளின் தீர்மானத்தையும் முற்றிலும் மறந்துவிட்டு, வெறும் தமிழுணர்வின் அடிப்படையில், அறிக்கைகள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டவே இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரை தமிழுணர்வுக்கு எதிரானது அல்ல; தமிழர்கள், சட்டத்தின் முன்பாக உண்மையறியாத அப்பாவிகளாக இருக்கிறார்களே என்கிற ஆதங்கமே இக்கட்டுரை. இந்தப் பிரச்னையின் அரசியலமைப்புச் சட்டச் சிக்கல்களைப் பற்றி அலசும் முன் சில அடிப்படை உண்மைகளைச் சொல்லியாக வேண்டும். உயர் நீதிமன்றம் தவிர, இதர கீழமை நீதிமன்றங்களில் 1976-ம் ஆண்டு முதல் அலுவல் மொழி சட்டத்தில் (Offi​ci​al Langu​ages Act 1956.)​ .- திருத்தம் 4ஏ மற்றும் 4பி-ன் கீழ் சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள எல்லா நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக உத்தரவாதம் பெற்றும்கூட, அந்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தபோது சிக்கல் ஏற்பட்டது.  ஒரு முன்சீப் நீதிமன்றத் தீர்ப்பு தமிழில் எழுதப்பட்டபோது, அது சட்டப்படி தீர்ப்பே அல்ல என்று அந்த வழக்கில் (1978(2)MLJ 442 Ram​ayee Vs Muniy​andi)  தீர்ப்பு வந்த பிறகே ​1982-p ​(Go Ms​ 9,​ 19th Jan 1982)​ சட்டம் அமலாகி கீழமை நீதிமன்றங்களில் தமிழ்மொழி வழக்காடு மொழியாக அந்தஸ்து பெற்றது. இருப்பினும், தமிழ் தெரியாத இதர மொழி பேசும் நீதிபதிகளுக்கு ஒரு சிறப்பு அனுமதி மூலம் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுத ஓர் அனுமதி இருந்தது. அப்போது தமிழில் அவர்கள் பரிபாலனம் செய்யும் சட்டங்கள் இயற்றப்படாததாலும், அவர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தாலும் இருந்த இச்சிறப்பு அனுமதி, பின்னாளில்,  கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் சொந்த விருப்பத்தில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தீர்ப்பு எழுதலாம் என்று அப்போது தலைமை நீதிபதியான கே.ஏ. சாமி சுற்றறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது. அலுவலக மொழிச் சட்டத் திருத்தத்துக்கு முரணான இந்தச் சுற்றறிக்கை இப்போதும் நிலுவையில் உள்ளது. இந்தச் சுற்றறிக்கை சட்டத்துக்குப் புறம்பானது. இதை இன்றுவரை யாரும் எதிர்த்து வழக்குப் போடவில்லை. அப்படி ஒன்று இருப்பதே தெரியாதவர்கள்தான் உயர் நீதிமன்றத்தில் தமிழ் பற்றிப் பேசுகிறார்கள். இன்றுகூட 80 விழுக்காடு வழக்கறிஞர்கள் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலேயே மனு தாக்கல் செய்கிறார்கள், ஆங்கிலத்திலேயே வாதாடுகிறார்கள். ஒருவேளை அவ்வாறு செய்வது கட்சிக்காரர் புரிந்துகொள்ள முடியாத ஒரு தொழில் ரகசியமாகக் கூட இருக்கலாம். எனவே, ஏற்கெனவே கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாகச் சட்டம் மூலம் கொண்டு வந்த திருத்தத்தையே இன்றுவரை 80 விழுக்காடு வழக்குரைஞர்கள் நடைமுறையில் கடைப்பிடிக்காதபோது, உயர் நீதிமன்றத்தில் தமிழ் என்று கேட்கும் வாதத்தில் உள்ள நடைமுறை ஓட்டைகளைப் பார்ப்போம். இந்திய அரசியல் சட்டத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றப் பரிபாலன மொழி என்ன என்பது பற்றி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348-ல் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வருவதற்கு முன்னால், இந்திய அரசியலமைப்புச் சட்டம்  214 (5) மற்றும் 227-ன் கீழ் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நிர்வாகம் மற்றும் நீதி பரிபாலனம் இருக்க வேண்டிய காரணத்தால், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசில் இயற்றப்படும் சட்டங்கள், ஆளுநர் மற்றும் அரசு உத்தரவு, அதைப் பரிசீலனை செய்து தீர்ப்பு அளிக்கும் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது.  இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தீர்ப்பை தன் மொழியில் எழுதினால், சட்ட பரிபாலனத்தில் மொழி வேற்றுமை காரணத்தால், பல மொழி சட்டத்தில் பல தீர்ப்புகள் முரணாக அமையும். இதைப் போக்க வேண்டுமானால் அனைவரும் ஏற்கும் ஒரே மொழியில்தான் சட்டம் மற்றும் தீர்ப்புகள் தேசிய மற்றும் மாநில அளவில் இருக்க வேண்டும். இன்றுள்ள இந்திய அரசியல் பின்னணியில் "ஆங்கிலம்' ஒன்றே "ஓர் இணைப்பு மொழி'. ஹிந்தியோ, தமிழோ அல்லது மற்ற மொழிகளோ அல்ல. அரசியலமைப்புச் சட்டம் 348-வது பிரிவில் கூட முதல் பிரிவு இதையே வலியுறுத்துகிறது. ஆனால், இதற்கு மாற்றாக அல்லது விதிவிலக்காக 348(2)வது பிரிவில் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் பேரில் அந்த மாநிலத்தில் இயற்றப்படும் சட்டம் மற்றும் உயர் நீதிமன்ற நடவடிக்கை (வழக்காடு மொழி) அந்த மாநிலத்தின்  அலுவல் மொழியாக இருக்கலாம் என்று வழிவகை செய்கிறது. அதேநேரத்தில் உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழி தமிழில் இருந்தாலும் தீர்ப்பு ஆங்கிலத்தில்தான் இருக்க முடியும், தமிழில் அல்ல. மேலும் அரசு சட்டங்கள் கூட தமிழில் இயற்றினாலும் அதனுடைய அதிகாரப்பூர்வ மொழியாக்கம் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். அவ்வாறு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஷரத்துகளே அதிகாரப்பூர்வ சட்டமாகும் என்று உள்ளது.   இதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால் உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காடினாலும் அதன் தீர்ப்பு தமிழில் இருக்காது. ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அப்படியானால், தமிழில் வாதாடி, ஆங்கிலத்தில் தீர்ப்பா? ஒரேமொழி ஒழுங்காகத் தெரிந்தவர்களே குறைவு என்கிறபோது, தமிழில் பேசி ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதும்போது வரும் "இடைவெளி மாற்றம், புரிதல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு? நான், தமிழில் என்ன பேசினேன் என்பது ஆங்கிலத் தீர்ப்பாக வரும்போது மொழிபெயர்க்கும் (ஆங்கிலத் தீர்ப்பு எழுதும்) நீதிபதி சரியாக மொழி இடைவெளி இல்லாமல் புரிந்துகொண்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?÷இதுமட்டுமல்ல, உயர் நீதிமன்றங்கள் மாநில வரம்புக்குள் இருந்தாலும் உச்ச நீதிமன்றம் இந்தியா முழுவதற்கும் ஒன்றே. ஆனால் 21 மொழிகள் அலுவலக மொழி என்று அட்டவணை 8-ல் உள்ளபோது, 21 அட்டவணை மொழிகளும் உயர் நீதிமன்றத்தின் மொழியானால் அதை மொழிமாற்றம் செய்து ஒரே மொழியான ஆங்கிலத்தில் பரிபாலனம் செய்வது தேவையா? நேரம், பொருள், நிதி விரயம் இல்லையா?÷அப்படியானால் அலாகாபாத், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கிறதே என்ற வாதத்துக்கு அங்கு கூட ஒரு நீதிபதி ஹிந்தியில் போடும் மனுக்கள் போன்றவைக்கு ஆங்கில மொழியாக்கம் பெற நிர்பந்திக்கலாம். மேலும் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஏற்கெனவே நீதிமன்ற நடவடிக்கை தாமதம் ஆகும் இவ்வேளையில், மொழியாக்க நேரம், செலவு தேவைதானா? அது விரயம் இல்லையா? தமிழில் வாதாடினால் சட்டம் தெரியும் என்று அர்த்தம் அல்ல. மொழி வேறு, ஒரு பிரிவில் பாண்டித்யம் என்பது வேறு. சட்டம் தெரியாமல் தமிழ் தெரிந்தவர்கள் எவ்வளவு பேர்?÷இந்தியா போல பல மொழி பேசும் மாநிலங்களின் கூட்டாக ஒரு தேசம் இருக்கையில் இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைத் தவிர வேறு எதுவும் நல்லதல்ல. அது இந்தியாவுக்கு மட்டுமல்ல, இதர நாடுகளின் பரிவர்த்தனைக்கும்! இன்று 80 நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஆங்கில அறிவு இல்லாதிருந்தால் இன்று அவர்களுக்கு ஜீவாதாரமே இல்லை.÷இந்தியராய் எந்த மாநிலத்திலும் தங்கி, உயிர் வாழ்ந்து, தொழில் செய்யும் உரிமை, அடிப்படை உரிமையாக இருக்கும்போது, ஒரு மாநிலத்தின் ஆட்சிமொழி ஓர் அளவுக்கு மேல் இந்த அடிப்படை உரிமையைப் பாதிக்காததாக இருக்க வேண்டும். தமிழ் வழக்காடு மொழியாவதற்கு முன், தேவையாக உள் கட்டமைப்பு ""எல்லா சட்டங்களின் தமிழாக்கம், தீர்ப்புகளின் தமிழாக்கம், தமிழ் சட்டமொழி, மொழியாக்கத்தில் வல்லுநர்களாக உள்ளோரின் தேர்வு இவை அனைத்தையும் செய்யாமல் வழக்காடு மொழியாக தமிழை அறிவிப்பது அரிசி இல்லாமல் வெறும் பாத்திரத்தில் சோறு வடிப்பதைப் போன்றது! சிலர் அரசியலாக்குகிறார்கள் என்பதால், ஒரு உடனடி தீர்வு கேட்டுப் போராடுவது பேதைமை.÷இதில் வேடிக்கை என்னவென்றால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இணங்க கொண்டு வரப்படும் ஒரு சட்ட அதிகாரத்தில், சட்டத்தில் உரிமையே இல்லாத தலைமை நீதிபதியும் மற்றும் சில நீதிபதிகளும் ""வாய்மொழி உத்தரவாக உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடலாம்'' என்று கூறியிருப்பதுதான். இது, இப்போராட்டத்துக்கு நீதிபதிகளும் சேர்ந்து பொதுவான ஒரு குருட்டு நம்பிக்கைக்கு  ஒத்தடம் கொடுப்பதைப் போன்றது. நீதிபதிகளுக்கு இந்தப் பிரச்னையில் தீர்வுகூறும் உரிமையில்லை. முழு நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு உள்பட்டே இதை நடைமுறைப்படுத்த முடியும். இந்த உண்மையைச் சொல்ல ஏன் தயக்கம்?  உண்மை பேசத் துணிவில்லாத பயத்தினால் பொய்யர்கள் தங்களின் போராட்டத்தை பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள்.  பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே மெய்போலும்மே!இதனுடைய பின்விளைவால் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள்தான் என்பதை நாம் உணர வேண்டும். கீழமை நீதிமன்றங்களிலேயே தமிழ் முழுமையாக வழக்காடு மொழியாகாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி என்பது எப்படி சாத்தியம்? இதனால் ஏற்படும் குழப்பங்களால் பாதிக்கப்பட இருப்பது வழக்கறிஞர்களோ, அரசியல்வாதிகளோ அல்ல. பொதுமக்கள்தான். நீதித்துறையில் அரசியலைப் புகுத்தாதீர்கள். பொய்வாதம் எல்லா நேரங்களிலும் எடுபடுவதில்லை. அப்படியே பொய்வாதம் வெற்றி பெற்றால், தோல்வியடைவது நீதி என்பதை மறந்துவிடக்கூடாது. உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி என்பது பொய்வாதம்!

ஞாயிறு, 4 ஜூலை, 2010

பிழையான கரும்புலிகள் நாள் அறிக்கை தொடர்பானது

LTTE
அன்புள்ள ஊடகத்தினருக்கு,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் சார்பில் கரும்புலிகள் நாளுக்குரிய அறிக்கையொன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறோம். சில வலைத்தளங்கள் அவ்வறிக்கையை வெளியிட்டுமுள்ளன. அவ்வறிக்கை விடுதலைப் புலிகளின் தலைமைச் செயகலத்தால் அனுப்பப்படவில்லை என்பதை அறியத் தருகிறோம். வழமையாக எமது அறிக்கைகள் அனுப்பப்படும் மின்னஞ்சல் முகவரியின்றி புதிய மின்னஞ்சல் முகவரியூடாக (viduthalipulikalmediagroup@gmail.com) வந்த இவ்வறிக்கையை வெளியிட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இன்னும் சிறிது நேரத்தில் எமது தலைமைச் செயகலத்தின் கரும்புலிகள் நாளுக்குரிய அறிக்கை தலைமைச் செயலக இணைப்பாளரின் கையொப்பத்துடன் ஊடகங்களுக்கு வெளியிடப்படும். எமது அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலில் அவ்வறிக்கை ஒலிபரப்பப்படுவதுடன் விடுதலைப்புலிகள் வலைத்தளத்திலும் அது வெளியிடப்படும்.
மக்களிடையே குழப்பங்களைத் தவிர்க்கும் பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. எனவே பொறுப்புணர்வோடு ஊடகங்கள் செயற்பட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
ஊடகப்பிரிவு சார்பாக,
ஆ.அன்பரசன்.
media@viduthalaipulikal.n

 

முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது !

nn
Black Tigers என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.
ஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.
மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.
வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான்.
பிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்;தையும் பெற்று கொண்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் வண்டியை, அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர்.
திட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனேன்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்;கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும். வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுபெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும். சரியான நேரம் நெரிங்கியதும் எம்தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்
கமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான். பயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிளக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது.
மட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான். அவன் அங்கு பணியாற்றிய காலத்தில் ஒரு பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப் பெண்ணுடைய வீட்டுக்கு கமல் செல்வது வழக்கம். ஆரம்ப காலங்களில் நாட்டின் விடுதலைக்காக கமல் தன் உயிரை வைத்து பணியாற்றியது கமலின் பால் அந்தப் பெண்ணின் கவனத்தை ஈர்த்தது. கமல் வீட்டிக்குப் போகும் சமயங்களில் எல்லாம் அன்பாக உபசரித்து கமலுக்கு ஆதரவழித்து, அன்பு செலுத்தினாள். நாட்கள் நகர நகர இருவரும் அன்பால் இறுகப் பிணைக்கப்பட்டனர். ஒருவரை ஒருவர் மனமார நேசித்தனர். உலக வழக்கப்படி கூறினால் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு இருந்தனர். அப் பெண் கமலின் உயிர் வாழ்வுக்காக எப்பொதும் கடவுளைப் பிரார்த்தித்து வந்தாள். ஆனால் ஒருபோதும் கமலின் தீவிரமான போராட்டத்திற்கு தடையாக இருந்ததில்லை.
மட்டக்களப்பில் இருந்து யாழ்பாணம் வந்திருந்த வேளையிலே நெல்லியடி முகாம் மீதான தாக்குதலில் பங்குபற்ற முன்வந்தாள். முதல் நாள் கமலும் திலீபனும் ஒன்றாக இருந்த வேளையிலே திலீபனிடம் ஓர் வேண்டுதல் விடுத்தான். கமல் நான் சில வேளை இத்தாக்குதலில் சாவடைந்தால் என்னை நேசிப்பவளுக்கு அதை உடனடியாக தெரிவித்து விடு என்பதாகும். என்ன சத்தியமான வார்த்தைகள் ஏதோ தன் இறப்ளை தான் அறிந்து வைத்திருந்தது போல் கூறியிருக்;கிறான். தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை. கவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்;லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான்.
அன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்;டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். கமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர்.
பொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிககப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். மில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான்.
முகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன. தான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் து}க்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது. கமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். ‘தடைகள் அகற்றப்டட்டு விட்டது” ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு.
மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது. அதைக் கேட்ட மில்லர்
‘பிரபா பரவாயில்;லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்.” என்றான்.
மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப் பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா.
மில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. ‘பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன். எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்;தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான். கமல் தன்னுடைய வோக்;கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிந்தின. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது.
மில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான்.
வண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான்.பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது. மில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து ‘மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு” மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..
வண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இ;டத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது.
தோழர்கள் மீண்டும் முகாமை; நோக்;கி முன்னேறினார்கள். இராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கன்.
மில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்;தின் அதிர்வலைகனோடு சங்கமாகி அதிர்வலையோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான்
‘என்ர மகன்
நாட்டுக்காகத்தானே
செத்தவன்
நினைக்க பெருமையாக
இருக்கு”
மில்லரின் அம்மா
‘என்ர மகன் எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்கிறது என்ர நம்பிக்கை தம்பி. அதனால நான் அவன்ர போக்குகளைப் பற்றி பெரிசா யோசிக்கிறதில்லை.” மில்லரின் அம்மா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையோடு கூறிக் கொண்டு இருந்தாள்.
அவன் ஒரு துடியாட்டமான பொடியன். ஒரு இடத்தில் ஆறுதால இருக்கிறதைக் காணவே ஏலாது. ஏதாவது ஒண்டு செய்து கொண்டுதான் இருப்பான். மண்ணைக் கிண்டுவான். பற்றறியைபும் வயரையும் வைச்சு முடிஞ்சு கொண்டிருப்பான். அல்லது அப்பாவின்ரை கார் பெனட்டை திறந்து போட்டு அதற்குள்ள ஏதாவது கழட்டிப் பூட்டி கொண்டிருப்பான்…….” அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். ;மற்ற ஆட்களுக்கு உதவி செய்யிற பழக்கம் அவனிட்ட சின்னனில் இருந்தே இருந்தது. ஆர் என்ன உதவி கேட்டாலும் உடனே போய் செய்து கொடுப்பான்… முயற்சியும் இரக்;கமும் அவன் பிறக்கும்போதே அவனோட கூடப் பிறந்ததுகள் தம்பி” மில்லர் சிறுவனாக இருந்த நாட்களில் அப்பா கார் ஒட்டும் போது அருகில் இருந்து அவதானித்து கொண்டிருப்வன், அப்பா இல்லாத நேரங்களில் அதையே திரும்ப செய்து பார்க்கத் துவங்கினான். அடிக்கடி நின்ற இடத்திலேயே இயங்கிய கார் பின்பு மெல்ல உருளத் துவங்கியது. நாட் செல்லச் செல்ல அகலமான வீட்டு முற்றத்தில் முன்னுக்கும் பின்னுக்கும் போய் வந்தது. ஒரு நாள் அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்த போது, கார் வீதியிலே ஏறி விக்கி விக்கி ஓடத் துவங்கிவிட்டது. அம்மாவைப் பயம் பற்றிக் கொள்ள வீதியிலே ஒடிவந்து பார்த்தாள்.
இப்படித்தான் இன்னும் ஒரு நாள்…….
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் தீர்ந்து போனதால் வீட்டுக்கு முன்னால் நின்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்கோ இருந்து வீட்டுக்குத் திரும்பக் கொண்டிருந்த மில்லர், அவர்களிடம் விடயத்தைக் கேட்டறிந்தான். வீட்டுக்குள் வந்தவன், மெதுவாக ஒளித்து ஒளித்து பின்னால் போய், கார் ஷராங்கிற்குள் குழாயைச் செலுத்தி, வாயால் இழுத்துப் பெற்றோல் எடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு அசல் அப்பாவியைப் போல அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றான். நடந்ததைக் கண்ட போதும் அம்மா அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மாவுக்கும் அது பிழை மாதிரித் தெரியவில்லை.
தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காகவே செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அதனால் அவனது செய்கைகளைப் பற்றி அம்மா கவலைப் படுவதில்லை.
காலச்சக்கரம் தன்பாட்டில் உருண்டு சென்றது. இப்போது 1984 இன் ஆரம்பம். எங்கள் தேசத்தில் அடிக்கடி வெடியோசை கேட்கத் தொடங்கியது. எங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிய பொழுது, அது மில்லர் வீட்டிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. மில்லரின் போக்கும் மாறிவிட்டது.
முன்புபோல், பழைய நண்பர்களுடன், மாந்தோப்பில் விளையாடுவது நின்றுபோனது. இப்போது புதிய நண்பர்களுடன் வெளியில் திரியத் தொடங்கினான். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்த தம்பி சொன்னான். ‘ அம்மா அம்மா அண்ணா சந்தியடியில் நோட்டீசு கொடுத்து கொண்டு நிக்கிறான்.”
அம்மாவுக்கு உள்@ரப் பயம்தான். ஆனாலும் அம்மா அவனைப் புரிந்து கொண்டாள்.
அவனின் புதிய நண்பர்கள் அவனைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். மில்லர் அவர்களோடு புறப்பட்டு போவான். இப்படி செல்கிறவன் சில நேரங்களில் ஒரு சில இரவுகள் கழித்தும் வருவான். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு தருவாள். எல்லோரும் சிரித்து கதைத்து சந்தோரமாக சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப் படுவாள். இது வழமையாகிப் போனது.
இப்படித்தான் ஒருநாள் அந்த நண்பர்களோடு புறப்பட்டுப் போனவன் திரும்பி வரவில்லை. ‘பயிற்சி முகாமில் நிக்கின்றான்” என நண்பன் ஒருவன் வந்;து சொன்னான். வீட்டில் எல்லோரும் அழுதார்கள். அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் அழுதாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.
தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அந்தத் தாய் இறுதி நாளை நினைத்துப் பார்க்கிறாள்.
‘அது ஒபறேசன் லிபறேசன் காலம் அந்த நேரம் இங்க எல்லா இடத்திலையும் ஆமி, அதனால இரவில நாங்கள் நேரத்தோடையே படுத்திடுவம். அண்டைக்கும் நாங்கள் படுத்திட்டம்….” ‘திடிரென வீடேல்லாம் அதிர பெரும் குண்டுச் சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்பிச்சுது. கொஞ்ச நேரம் சண்டை நடக்கிறதைப் போல சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகெல்லாம் அமைதியாகிவிட்டது.
பொடியள் நெல்லியடிப்பக்கம் ஆமிக்கு நல்லா அடி குடுத்திருக்கிறாங்கள் போல கிடக்கு என்று எங்களுக்கை கதைச்சுப் போட்டு நாங்கள் படுத்திட்டம்.
அடுத்த நாள் காலையில் நெல்லியடிப் பக்கம் இருந்து வந்த ஒருதர் சொல்லி உருக்குள்ள சொல்லி அந்தக் கதை மெல்ல மெல்ல என்ர காதுக்க வந்த போதுதான் தெரியும்….
முதல் நாள் உலுக்கி என்ர நித்திரையால் திடுக்கிட வைத்த அந்தக் குண்டு சத்தம்…. என்ர பிள்ளையும்…..
அப்ப அழவும் ஏலாது. எல்லாப் பக்கத்திiயும் ஆமி… அறைக்குள்ள போயிருத்து எனக்குள்ள மட்டும் குமுறிக்குமுறி அழுதன். றோட்டால ஆமி வாகனங்கள் வாற சத்தம் உறுமிக் கொண்டு கேட்கும்.. மெதுவாக பின்பக்கத்தால் வீட்டை வந்த சனங்கள் கலைஞ்சு போய்விடுவினம்…… பிறகு வருவினம்..”
ம்…..ம்….. என்ர மகன் செத்திட்டான் என்கிறது எனக்கு கவலைதான். ஆனால் அவன் நாட்டுக்காத்தானே செத்தவன்……..
‘அதை நினைக்க பெருமையாத்தான் இருக்கு”
}

You can leave a respon

பல ஆயிரம் வருடங்கள் தாம் வாழ்ந்த பூமியில் சுயஅதிகாரம் கேட்கும் தமிழ் மக்களே படுகொலை செய்யப்படுகின்றனர்: த இந்தியா டெய்லி

chanal4_1
பல ஆயிரம் வருடங்கள் தாம் வாழ்ந்த பூமியில் தமக்கு சுயஅதிகாரம் வேண்டும் என தமிழ் மக்கள் கேட்கின்றனர் ஆனால் உலகின் கவனக்குறைவாலே அப்பாவி தமிழ் மக்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்துள்ளது என த இந்தியா டெய்லி ஊடகம் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட போர்க்குற்றங்களை மேற்கொண்ட சிறீலங்கா மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா? இந்த போர்க்குற்றவாளிகள் தமிழ் மக்களை படுகொலை செய்ததை இந்தியா ஏன் அனுமதித்தது? அமெரிக்கா ஏன் மௌனமாக உள்ளது? நாசிகளை போல சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் வன்முறைகளை ஏன் உலகம் அனுமதித்தது?
ஐக்கிய நாடுகள் சபை அதன் ஆலோசனைக்குழுவை கலைக்கும் வரை கொழும்பில் உள்ள ஐ.நா அதிகாரிகளை பணயக்கைதிகளாக பிடிக்குமறு சிறீலங்கா அமைச்சர் விமல் வீரவன்சா தெரிவித்துள்ள கருத்து சிறீலங்கா அரசு மனித உரிமை மீறல்களை எவ்வாறு மேற்கொள்கின்றது என்பதை தெளிவாக காண்பித்துள்ளது.
சிறீலங்கா அரசு எதனை கூறினாலும் அது தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளது என்பது உண்மையானது. யூதர்களுக்கு எதிராக கிட்லர் மேற்கொண்ட வன்முறைகளுக்கு பின்னர் சிறீலங்கா மேற்கொண்டுள்ள வன்முறைகள் ஒரு இனஅழிப்பாகும்.
srilankan_army_kills_tamil01குழந்தைகளையும், பெண்களையும் கூட இரக்கம் பார்க்காது சிறீலங்கா படையினர் படுகொலை செய்துள்ளது சில இந்திய தலைவர்களை சிக்கலில் தள்ளியுள்ளது. தமிழ் மக்கள் மீதான படுகொலையை தூண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு போர்க்குற்றவாளி என அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை (1) தெரிவித்துள்ளார்.
கருணாநிதியும் போர்க்குற்றவாளியே என்பதற்கான ஆதாரங்களை ஐ.நாவின் குழுவினர் சிறீலங்கா செல்லும் போது தாம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், சிறீலங்கா படையினரால் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காக இதனை நாம் செய்யவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பை இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தடுத்து நிறுத்த முன்வரவில்லை. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கான பழிவாங்கலாகவே காங்கிரஸ் கட்சியினர் அதனை மேற்கொண்டுள்ளர். ராஜீவ் காந்தி என்ற தனிப்பட்ட நபரின் மரணத்திற்கு ஒரு இனத்தை அழித்தது தவறானது.
சிறீலங்கா அரசின் இந்த வன்முறைகளை ஜோர்ச் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகம் தடுக்க தவறியது ஏன்? சிறீலங்கா படையினர் அப்பாவி மக்களை படுகொலை செய்ததை ஏன் உலகம் அனுமதித்தது?
பல ஆயிரம் வருடங்கள் தாம் வாழ்ந்த பூமியில் தமக்கு சுயஅதிகாரம் வேண்டும் என தமிழ் மக்கள் கேட்கின்றனர். உலகின் கவனக்குறைவாலே அப்பாவி தமிழ் மக்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்துள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ் (www.eelamenews.com)
}
கருப்பு நாளல்ல! (உரைவீச்சு) : நாக.இளங்கோவன் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

on 15-05-2010 19:11

Favoured : 10

Published in : இலக்கியம், கவிதை

ஆரியமும் காந்தியமும்
ஆளுக்கொரு கையை
பின்னால் நின்று பிடித்துக் கொள்ள
சீனத்தின் சதிக்கண்கள்
சீரிளைமையில் குறிவைக்க
சிங்களத்தின் கத்தி பல
குத்திக் குத்திக் கிழிக்கின்றது அவளை
திராவிடத்தின்
உச்சிப் பொழுது உமிழ்கின்ற ஒளியில்.

காப்பியமாம் மணிமுடியும்
கலைந்து சரியச் சரிய
காலணிந்த சிலம்போடு
சங்கிலிகள் தளையத் தளைய
வளையாத வளையின்று
நெரிய நெரிய
நெற்றிச் சூடுமணி
எற்றி அலைய அலைய
சிந்தாமணிகள்
சிதறச் சிதற
சிந்துகின்ற குடர்க்கீழே
மேகலையோ மறைய மறைய

ஓலமிட்டுக் கதறுகிறாள்
ஓடிவரக் கூவுகிறாள்
நாதியில்லை நானிலத்தில்

பாரெங்கும் விண்ணெங்கும் பார்த்து நிற்கும்
ஊரெங்கும் பார்த்துப் பார்த்து அலறுகிறாள்
பேதையவள் தேம்பித் தேம்பி அழுகின்றாள்Image

சுற்றிச் சுற்றிச் சுழல்கின்றாள்
சுட்டுவிழி கொட்டக் கொட்டப்
பெற்றுவிட்ட பிள்ளைகளை
உற்று உற்றுப் பார்க்கின்றாள்.

ஓட்டைத் துலாவோடு ஊத்தை பேசும் பிள்ளைகள்
சாட்டையொன்றும் தருகின்ற தறிதலைப் பிள்ளைகள்
எந்தச் சாதிக்காரியோ ஏனிங்கு எனுங்கூட்டம்
எந்தன் மதம் இவளோவென்று எட்டிப் பார்க்க வருங்கூட்டம்
வெந்ததெல்லாம் தின்றலையும் வேடிக்கைப் பெருங்கூட்டம்
சிந்தையிலே மந்தி வளர் செந்தமிழர் இவரிங்கு
சந்தமொடு பேசிப் பேசி சாகசங்கள் செய்கின்றார்
பந்தமென படுபாவி இன்னுமவள் நினைக்கின்றாள்!

சொந்தப்பிள்ளை மந்தங்கண்டு அவளை மேலும்
சிந்தச் சிந்தக் குத்துதடி சிங்களமும்
கத்தி தீட்டித் தீட்டிக் கொடுக்குதடி காந்தியமும்
நித்தஞ் செத்துச் செத்துக் குறைகின்றாள் - மைந்தர்மேல்
பித்தம் மிகை வைத்துவிட்டப் பாவிமகள்;
பித்தர்களைப் பெற்றுவிட்டப் பெண்பாவி;
எத்தர்களை வார்த்ததனால் ஏங்கி ஏங்கி
நித்தமிவள் சாகின்றாள் பெயர் தமிழன்னை!
மொத்தமாகச் சாநாளும் ஆமாவோ? அம்மவோ
கருப்பு நாள் இல்லையடி சொல்வார்போல் - அந்த
இருண்ட காலமே மீண்டதடி! அண்டத்து
இருட்டையெல்லாம் திரட்டி வந்து சூழ்ந்ததடி!
இருள் சூழ்ந்ததடி! பேரிருள் சூழ்ந்ததடி!

கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட என் குலத்திற்குக் கண்ணீர் அஞ்சலிகள்
- நாக.இளங்கோவன்
ஏனிந்த அவசர மாநாடு? : பரதேசி PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 

on 27-06-2010 21:38  
Favoured : 3
தமிழா! தமிழா!!
உனக்கும் எனக்கும்தான்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு
தமிழ்! தமிழ்!! தமிழ்!!!
என்றவர்களுக்கெல்லாம்....
உலகத்தமிழ்ச் 'செமத்தியான' மாநாடு
தமிழன்னை எங்கே?
தமிழ்ச் சான்றோர் வாரிசுகளெங்கே?
வந்த விருந்தினரின் உரையிலும்
வழி நடத்துபவரின் உரையிலும்
ஆங்கில ஆதிக்கமேனோ?
மொழிபெயர்ப்புக்கு வழி தோன்றாததேனோ?
'கவிக்கோ' அரங்கிலும்
'கவிப்பேரரசு' அரங்கிலும்
'கொடநாடு, கோமளவள்ளியைத் தவிர்த்து
கவிதைபாடத் தமிழில் ஏதுமில்லையோ?
Image
திடீரெனத் தமிழ்மீது பாசம்
தமிழ்மொழியின்பால் கரிசனம்
தமிழில் 'கலப்பின'த் தூசியை தட்டத்தான் முயற்சியோ?
இல்லை தமிழைத்தேடித் தேடித் தூர் வாறும் துர்பாக்கிய நிலையோ?
முதல் வகுப்பிலிருந்து முதுகலைவரை
தமிழ் படித்த தமிழ்க் காதலர்களுக்கு தரப்படுமா வேலை?
விடும் மூச்சில்கூடத் தமிழ் வாசம்
தளைக்கச்செய்யும் தமிழறிஞர்கட்கு தருவீரா அங்கீகாரம்?
தமிழக அரசே!
தமிழில் அரசாணை எங்கே?
தமிழாட்சி மொழி வெறும் கனவுதானா?
தமிழெழுத்துக்களால் கோப்புகள் நகருமா?
தமிழில் வழக்காட வாய்ப்பில்லையிது தகுமா?
தமிழகம் கட்டாயத் தமிழுக்கு தகுதி பெறுமா?
கணினித் தமிழ் கை கொடுக்குமா?
தமிழில் பெயர்ப்பலகை எங்கே?
தமிழில் வர்த்தகம் வளருமா?
தமிழனில் ஒற்றுமை ஓங்குமா?
தமிழினம் ஓரினமாகுமா?
தமிழனை தலை தெறிக்க விரட்டும்
தரம் கெட்டவன் தண்டிக்கப்படுவானா?
தமிழர்களைத் தாக்கியவர்களை...
தமிழ்த்தாயை கற்பழிக்கத் துடிக்கம் துரோகிகளை...
தமிழர்களை சிறையிலிட்டு குதூகளிக்கும் பாசிச வெறியர்களை....
தண்டிக்க வக்கில்லை தமிழர்க்கு!
கைகுலுக்கி, கட்டியணைத்து வரவேற்கும்
தமிழ்த் துரோகிகளே!
ஏனிந்த அவசர மாநாடு?
ஆதியில்
தமிழர்கள் புலம் பெயர்ந்தனர்
தமிழர்கள் தடம் மாறினர்
இடையில் தமிழ் மொழியா? ம்..ஹீ..ம்
மறுக்கிறார்கள்.... தமிழையே வெறுக்கிறார்கள்...
உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில்
உலகத்தமிழினமே ஒய்யாரமாய் ஒன்றானீரே...
உயர் தமிழுக்கு உரம் சேர்ப்பீரா?
ஒரே கூடாரத்தில் ஒன்றுபட்ட ஆய்வாளர்களே
உழவனுக்கு உபயோகமா இம்மாநாடு? - இல்லை
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?
தமிழா! தமிழா!!
உனக்கும் எனக்கும்தான்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு
தமிழ்... தமிழன்... தமிழினம்... தமிழர்களுக்காக...
என்போருக்கும், அவர்தம் உற்றார் உறவினர்க்கும்
இது ஊர் சுற்றும் மாநாடு!
- பரதேசி

பள்ளி, கல்லூரிகளில் தமிழ்ச் செம்மொழிப் பாடம்

First Published : 04 Jul 2010 01:19:09 AM IST


சென்னை, ஜூலை 3: தமிழகத்தின் பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில், "தமிழ்ச் செம்மொழி' என்ற தலைப்பு இடம்பெறச் செய்யும் பணியை விரைந்து மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக் கொள்ளப்பட்டார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மீது மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தின் விவரம்: சிறந்த மென்பொருளுக்கு ஒரு லட்சம் பரிசு:தமிழ் மென்பொருள்களுக்குள் சிறந்த மென்பொருள் ஒன்றை தேர்வு செய்து, அதை உருவாக்கியவருக்கு "கணியன் பூங்குன்றனார்' பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுவது ஆண்டுதோறும் தொடரும் என்ற முடிவினையொட்டி, இந்த ஆண்டும் அதற்கான கருத்துரு பெற்று அறிவிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.பள்ளி, கல்லூரிகளில் தமிழ்ச் செம்மொழி பாடம்:தமிழகத்தின் பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில், "தமிழ்ச் செம்மொழி' என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம்பெறுவதற்கு ஆவன செய்யப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக பேசப்பட்டது. அதுபற்றி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆலோசனைகளையும், இதுகுறித்து கேட்டுப் பெறுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கம்:மதுரையில் தொடங்கப்படவுள்ள "தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்' நிறைவேற்றவுள்ள பொறுப்புகள் குறித்த தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை எப்படி நடத்துவது, எங்கு நடத்துவது என்ற திட்டங்களையும், திராவிடர் மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி ஒன்றை அமைத்தல், ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்கி பராமரித்தல், தனித்தனி தீவுகளைப் போல சிதறுண்டு கிடக்கும் தமிழராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை செயல்படுத்த உரிய திட்டத்தினை தயாரித்து, அதற்கான செலவினம் குறித்தும் அறிக்கை அளித்திட தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை கேட்டு கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.கோவையில் ரூ.100 கோடியில் மேம்பாலப் பணி:கோவை காந்திபுரத்தில் அமையவுள்ள செம்மொழிப் பூங்கா பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் களைய சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஒரு மேம்பாலம் அமைக்கப்படும் என்ற முடிவு குறித்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய, ஆசிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடவும், பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்திடவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்கு தேவையான நூல்களை பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்திடவும் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது.இதற்கென ஒரு வல்லுநர் குழுவை அமைப்பதென்றும், மொழி பெயர்ப்பு பயிற்சி அளித்திட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.தமிழ் வளர்ச்சிக்கு ரூ.100 கோடியில் சிறப்பு நிதியம்:தமிழ் வளர்ச்சிக்கென்றே தனியாக தமிழக அரசின் சார்பில் ரூ.100 கோடியில் சிறப்பு நிதியம் உருவாக்கப்பட்டு உரிய முறைகளை வகுத்து கொண்டு செயல்படுத்தப்படும் என்ற முடிவு குறித்து விவாதிக்கப்பட்டு, விரைவில் இந்த நிதியத்தை உருவாக்கி அறிவிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.அயல்நாட்டு தமிழர்களுக்கென தனித்துறை:இறுதியாக அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழர்கள் நலன் காக்கவும், அயல்நாடுகளில் தேவைப்படும் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிடவும் தனித்துறை ஒன்றை உருவாக்கிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
தொடர் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகள்.அயல்வாழ் தமிழர் துறை வேண்டுமென்பது நீண்ட நாள் வேண்டுகோள். உடனடியாக அத்துறையை உருவாக்க வேண்டும். தமிழ்நலம் நாடும் தமிழர்களுக்குப் பொறுப்புகள் வழங்க வேண்டும். தமிழர்கள் வாழும் நாடுகளுக்குத் தமிழர்களையே தூதரக அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். தமிழ்ச் செம்மொழி குறித்த பாடங்கள் ஆங்கிலம் முதலான பிற மொழிப் பாடங்களிலும் இடம் பெற வேண்டும. தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கத்திற்குத் தமிழாய்ந்த தமிழர்களையே அனைத்துப் பொறுப்புகளிலும் அமர்த்தல் வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/4/2010 3:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்