unicode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
unicode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜனவரி, 2011

தமிழ் மொழி மற்றும் கிரந்த எழுத்துக்களை
கணினி வழிப் பயன்பாட்டிற்காக ஒருங்குறி அட்டவணையில் அமைப்பது குறித்து
அனைத்துக் கருத்துகளையும் ஆய்வு செய்திட

ஒய்வு பெற்ற நீதியரசர் திரு. மோகன் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்து
முதலமைச்சர் கலைஞர் ஆணை!

மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் 4-11-2010 அன்று நடைபெற்ற
அமைச்சர் பெருமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் -
தமிழ் மொழி எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் ஆகியவற்றைக் கணினி வழிப்
பயன்பாட்டிற்காக, யூனிகோட் சேர்த்தியம் (Unicode consortium) என்னும் நிறுவனம்
ஒருங்குறி அட்டவணையில் அமைப்பது குறித்து விரிவான விவாதம் தேவை எனவும், அதனை
விரிவாக விவாதித்து அரசுக்குப் பரிந்துரை செய்யும் பொருட்டு உயர் மட்டக் குழு
அமைக்கலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், அனைத்துக் கருத்துக்களையும் ஆய்வு செய்திட, ஓய்வு
பெற்ற நீதியரசர் திரு. ச. மோகன் அவர்கள் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றினை அமைத்து, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர்
அவர்கள் இன்று (18-1-2011) ஆணையிட்டுள்ளார்கள்:-
1. பேராசிரியர் ம. இராசேந்திரன்,
துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
2. முனைவர் வா.செ. குழந்தைசாமி, முன்னாள் துணை வேந்தர்,
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைவர், தமிழ் இணையக் கல்விக் கழகம்.
3. பேராசிரியர் மு. ஆனந்தகிருட்டிணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர் (அறிவியல்
நகரம், சென்னை)
4. பேராசிரியர் பொன். கோதண்டராமன் (பொற்கோ)
5. முனைவர் ஐராவதம் மகாதேவன், இ.ஆ.ப., (ஓய்வு)
6. பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
7. பேராசிரியர் கே. நாச்சிமுத்து, உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர்
பேரவை
8. பேராசிரியர் அ.அ. மணவாளன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
9. முனைவர் ப.அர. நக்கீரன், இயக்குநர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை
10. முனைவர் மு. பொன்னவைக்கோ, முதன்மைக் கல்வி அதிகாரி, எசு.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.
11. திரு. வைரமுத்து, தமிழ் அறிஞர் மற்றும் கவிஞர்
12. திரு. அரவிந்தன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சிங்கப்பூர்
13. திரு. மணி மணிவண்ணன், முதுநிலை இயக்குநர் (கணினி), சீமேன்டெக்
கழகம், சென்னை.
14. முனைவர் ந. தெய்வசுந்தரம், சென்னை.

மேற்காணும் பொருள் தொடர்பாக ஆய்வு செய்து, தமிழக அரசின் நிலையை மத்திய அரசுக்குத் தெரிவிப்பதற்கு ஏதுவாக, இக்குழு தனது அறிக்கையை விரைவில் வழங்கும்.

· * * * *

வெளியீடு: - இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், செ-9.

இக்குழுவினர் ஒத்துப் போதல் விட்டுக் கொடுத்தல் முதலான நிலைப்பாடுகளை எடுக்காமல் தமிழைக் காக்கும் எண்ணத்திலேயே
செயல்பட வாழ்த்துகள்.
தோழமையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
--

சனி, 25 டிசம்பர், 2010

seminar on save thamizh from grandha unicode : யுனிகோட் தமிழைக் காக்க டிசம்பரில் கருத்தரங்கம்

யுனிகோட்  தமிழைக் காக்க டிசம்பரில் 

கருத்தரங்கம்


Vote this article
Up (0)
Down (0)
சென்னை: தமிழ் யுனிகோட் எழுத்துருவில் தமிழையும், கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழைக் கெடுக்க நடக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி டிசம்பர் மாதம் கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கணிணி மூலமாக ஒருங்குறியில் தமிழையும் கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழுக்குக் கேடு விளைவிக்க மேற்கொண்டு வரும் சிலரின் முயற்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதன் பொருட்டுத் தமிழக அரசு அமைக்க இருக்கும் குழுவிற்கு உரிய பரிந்துரைகளை அளிக்கவும் தமிழ்க்காப்பு அமைப்புகள் திசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் தமிழ்க்காப்பு அரங்கம் நிகழ உள்ளது.

இதில் பங்கேற்க ஒருங்குறியில் தமிழ்க்காப்பு என்னும் பொதுத் தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல் நவம்பர் 25 ஆம் நாளுக்குள் கட்டுரை அளிக்க வேண்டுகின்றோம். கட்டுரையாளர்களும் பார்வையாளர்களும் உடனே

thamizhkkaappu@gmail.com என்ற மின்முகவரிக்குத் தங்கள் பெயர், முகவரி, பேசி எண், கட்டுரைத் தலைப்பு முதலிய விவரங்களை அளிக்க வேண்டுகிறோம். நேரில் பங்கேற்க இயலாதோர் கட்டுரையை அனுப்பி உதவலாம். நாளும் இடமும் முடிவான பின்னர்த் தெரிவிக்கப்பெறும்.

தொடர்பிற்கான பேசி எண்கள்:

98844 81652 (இலக்குவனார் திருவள்ளுவன்)
94452 37754 (அன்றில் பா.இறையெழிலன்) என்று அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்தவர்: Aravamuthan
பதிவு செய்தது: 14 Nov 2010 8:11 am
ஆங்கில அறிஞர்கள் கண்டிப்பாக உதைக்க வரமாட்டார்கள். ழ என்பதை zha என்று எழுதுவது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முறை. தமிழ் சொற்களை துல்லியமாக உச்சரிக்க, ஆங்கிலத்தில் transliteration வழிமுறை 100 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது என்பதை தமிழ் பற்றிய ஆங்கில நூல்களைப்படித்து அறிந்துகொள்ளுங்கள். அதற்கு மாறாக, ga, dha, za, fa என்பவற்றை தமிழ் எழுத்து மூலமாகவோ, கூடுதல் குறியீடுகள் மூலமாகவோ தெரிவிக்கும் முறை இங்கு இல்லை. எதிர்கால தேவையைக் கருத்தில்கொண்டால், திரு ரமண சர்மாவின் முயற்சி நன்மை தரும்.


பதிவு செய்தவர்: இராமசாமி
பதிவு செய்தது: 13 Nov 2010 9:51 pm
தமிழில் உள்ள ‘ழ’ எனும் எழுத்தினை ஆங்கிலத்தில் எழுதவேண்டி 27ஆவது எழுத்தாக ஒரு எழுத்தை சேர்க்க வேண்டும் என்றால் ஒப்புக் கொள்வார்களா ஆங்கில அறிஞர்கள்? உதைக்க வர மாட்டார்கள்? அது போலத்தான் (உண்மையான) தமிழர்களும் இந்த கிரந்த எழுத்து திணிப்பினை ஏற்க மாட்டார்கள்.

[ கருத்தை எழுதுங்கள் ]

பதிவு செய்தவர்: sgk
பதிவு செய்தது: 13 Nov 2010 8:01 am
குறுகிய மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டுகிறோம். உலகத்தில் உள்ள இடங்களின் பெயர்கள், கண்டுபிடிப்புகள், பொருட்களின் பெயர்கள், ஏன், முஸ்லிம் கிருத்துவ நண்பர்களின் பெயர்களையும் சரியாக எழுதுவதற்கு தொல்காப்பியரின் எழுத்துகள் போதாது. இலக்கியத் தமிழுக்கு இவை வேண்டாம்தான். ஆனால், நடைமுறைத் தமிழுக்கு முன்னேற்றம் கருதி இவை தேவையாகும். மற்ற திராவிட மொழிகளில் இவை உண்டு. செல்பேசி வேண்டும், பற்பசை வேண்டும், கார் வேண்டும்,.. நவீன வாழ்க்கைக்கு, உலகத்துடன் ஒத்து வாழ புதிய எழுத்துகளும் தேவைதாம்.


பதிவு செய்தவர்: காதிர்
பதிவு செய்தது: 13 Nov 2010 2:58 am
தமிழகம் விரைந்து செயல் பட வேண்டிய நேரம்.


பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 13 Nov 2010 2:49 am
முதலில் தமிழ் நாட்டில் ஒழுங்காக தமிழைப்பேசுங்கள்

செவ்வாய், 23 நவம்பர், 2010

மீனகம் தளம் : தமிழ் ஒருங்குறிக் காப்பு நிகழ்வின் காணொளிகள்

மீனகம் தளம்


தமிழ் ஒருங்குறி காப்பு நிகழ்வின் காணொளிகள்

tamil
சென்னை, மேடவாக்கத்தில் பாவலரேறு தமிழ்க்களத்தில் தென்மொழி அவையம்  ஏற்பாட்டில்  நடைபெற்ற  தமிழ், கிரந்தம் ஒருங்குறிக் கருத்தரங்க நிகழ்வின் காணொளிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.



ஒளிப்பதிவு: எல்லாளன்

அறிஞர் உரை 1: இலக்குவனார்  திருவள்ளுவன்
அறிஞர் உரை 2: பூங்குன்றன்,  பொன்னவைக்கோ ........
அறிஞர் உரை 3: முனைவர் பொன்னவைக்கோ தொடர்ச்சி
அறிஞர் உரை 4: முனைவர் இராமகி..........
அறிஞர் உரை 5: முனைவர் இராமகி தொடர்ச்சி
அறிஞர் உரை 6:  தென்னன் மெய்ம்மன்
அறிஞர் உரை 7:  முனைவர் பா.இறையரசன்


வெள்ளி, 19 நவம்பர், 2010

கிரந்தம் வடிவில் வரும் எமன்: - தமிழக அரசியல்




‘என்றும் உள தென்தமிழ்’ எனக் கம்பன் பாடிய தமிழுக்குக் காலம் தோறும் தமிழ்ப் பகைவர்கள் கேடு செய்து வருகின்றனர். இப்பொழுது தமிழுக்கு எதிராக அவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டது கணிணியை. கணிணியில் கிரந்தப் பயன்பாடு வேண்டும் என்ற போர்வையில், தமிழ் ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதனை நம்மில் பலர் உணரவில்லை. இதுபற்றி, தனது ஆய்வுக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இருபது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துச் சிதைவை எதிர்த்துப் போராடிவரும் ஆட்சித் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவன்.

கணிணியச்சிடுவதற்குப் பயன்படுத்தும் அதே எழுத்துரு மற்றவர் கணிணியில் இருந்தால்தான் நாம் அனுப்புவனவற்றை அடுத்தவர் படிக்க முடியும். இந்தக் குறையைப் போக்க, தகவல் மாற்றமைப்பிற்கான இந்தியத் தரக்குறியீட்டு முறையும் (ISCII - Indian Standard Code for Information Interchange) தமிழ்த்தரக் குறியீட்டுமுறையும் (TSCII - Tamil Standard Code for Information Interchange) அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அடோப், ஆப்பிள், ஐ.பி.எம்., கூகுள், மைக்ரோசாப்டு முதலிய பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டிணைவான ஒருங்குறி அவையம்

(Unicode Consortium) அறிமுகப்-படுத்திய ஒருங்கீட்டு முறை மேலாதிக்கம் செலுத்தி-யமையால் நம் நாட்டு முறைகள் பின்தங்கின.

இப்பொழுது, உலக-மொழிகளின் கணிணிப் பயன்பாட்டிற்கு இந்த அமைப்பின் ஒதுக்கீடே அடிப்படை என்னும் நிலை வந்துவிட்டது. இந்த அமைப்பின் மூலம் கிரந்த எழுத்துகளைக் கணிணியில் பயன்படுத்த ஒதுக்கீடு வேண்டும்பொழுதுதான் தமிழுக்கு எதிரான சதி தெரியவந்திருக்கிறது.

கிரந்தம் என்றால் என்ன?

சமசுகிருத எழுத்துகளைத் தமிழ் முதலான மொழிகளில் எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட எழுத்துவகைதான் கிரந்தம். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அயல் மொழி எழுத்துகளை நீக்கி எழுத வேண்டும் என்று வரையறுத்துள்ளார். ஆனால், நாம் கிரந்தத்தைப் பயன்படுத்தியதால் எண்ணற்ற சமசுகிருதச் சொற்களும், பின்னர் அரபு, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களும் தமிழில் கலந்து தமிழைச் சிதைத்தன.

இந்த நிலையில்... மணிப்பிரவாள நடைக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடு, கிரந்தத்திற்கு ஒருங்குறியில் இடம் வேண்டி மத்திய அரசு 2 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தது. அதற்கிணங்க, மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை பல கூட்டங்களுக்குப் பின் செப்டம்பர் 2010&ல் இறுதிக் கூட்டம் கூட்டி முடிவெடுத்து, ஒருங்குறி அவையத்திற்கு 18.10.2010 அன்று பரிந்துரைத்துள்ளது. அதனை ஏற்பதற்கான முடிவெடுப்பு 06.11.2010 அன்று நடந்த ஒருங்குறி அவையத்தில் நடைபெறுவதாக இருந்தது.

அவ்வாறு அன்று அந்த முடிவை ஏற்றிருந்தால், பின் எந்த நாடு சொன்னாலும் அதனை அவ்வமைப்பு திரும்பப் பெற்றிருக்காது. நல்ல வேளையாகத் தமிழ்க் காப்பு அமைப்புகள் சார்பில் 2.11.2010 அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாயிலாக, அப்போதைய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசாவிடம் முறையிட்டதன் தொடர்ச்சியாக இந்த முடிவெடுப்பு 26.02.2011 அன்று நடைபெற உள்ள கூட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சுருக்கமாகக் கூறுவதாயின், மணிப்பிரவாள நடைக்காக, தமிழ் எழுத்துகளில்
க1 க2 க3 க4 என்பதுபோல் 26 கிரந்த எழுத்துகளைப் புகுத்த முதலில் திட்டமிட்டனர். பின் எ, ஒ, ழ, ற, ன ஆகிய தமிழ் எழுத்துகளையும் தமிழ் எண்களையும் கிரந்தத்தில் சேர்த்து 89 குறியீடுகளுக்காகக் கருத்துரு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ், விரிவாக்கத் தமிழாக வளர்ச்சி பெறுவதாகக் கதையும் கூறப்பட்டது. மேலும், தமிழ் எழுத்துகளையும் கிரந்தத்தில் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் அனைத்து மொழிகளையும் கிரந்த எழுத்து கொண்டே எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ‘இந்தியா ஒரே நாடாக விளங்க அனைத்து மொழிகளையும் எழுதக் கூடிய கிரந்த எழுத்துகளைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என்ற முறையை அறிமுகப் படுத்துவதுதானே இதன் உள்நோக்கம்?

இதை வீண் கவலை என்று ஒதுக்கிட முடியாது. செந்தமிழ் வழங்கிய சேரநாட்டில் கிரந்த எழுத்துகளின் செல்வாக்கைப் புகுத்தியதால்தான் தமிழ், மலையாளம் ஆயிற்று. ஆக, மீண்டும் ஒரு மலையாள மொழி தமிழ்நாட்டில் தோன்ற வேண்டும் என்ற அவலத்திற்கு வித்திடத்தானே கிரந்தத்தைப் புகுத்துகின்றனர். ஆனால், இதைத் தடுத்திட நாம் என்ன செய்தோம்? ஒருங்குறி அவையத்தில் தமிழ்நாடும் உறுப்பினராக இருந்தது. ஆனால், உறுப்பினர் கட்டணம் அமெரிக்கப் பணத்தில் 12,000 செலுத்தத் தவறியமையால், உறுப்பினர் தகுதியைத் தமிழ்நாடு இழந்து விட்டது. பல நூறு கோடி ரூபாய் செலவழித்துச் செம்மொழி மாநாட்டை நடத்திய நமக்கு இந்தத் தொகை பெரிதா?

மத்திய அரசின் மனித மையக் கணிணிப் பிரிவு (Human Centered Computer Division)இயக்குநர் சொர்ணலதா 2008&லிருந்து நடத்திய கூட்டங்களில், தமிழ்நாடு சார்பில் யாரும் பங்கேற்காததன் காரணம் என்ன? அப்படிப்பட்ட சூழலிலும் கூட்ட விவரத்தைத் தெரிவித்துக் கருத்து கேட்டுள்ளது மத்திய அரசு. உரிய காலத்தில் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் தமிழ் இணையப் பல்கலைக்கழக (தமிழ் இணையக் கல்விக் கழக) இயக்குநர் மறுமொழி அளித்துள்ளார். அதற்கு முன்னரே, தமிழ் இணைய வளர்ச்சிக்கு என அமைக்கப்பட்ட உத்தமம் (INFITT) சார்பிலும் ஒருங்குறி அவையத்திற்கு மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள கணிணி அறிஞர்களும் தமிழார்வலர்களும் இது குறித்து எச்சரித்தும்... தமிழக அரசு கவனத்திற்கும் பொது மக்களின் கவனத்திற்கும் முன்னரே இதை ‘உத்தமம்’ ஏன் கொண்டுசெல்லவில்லை? முதலமைச்சர் கவனத்-திற்குப் பிறரால் இது குறித்த தகவல்கள் கொண்டு செல்லப்பட்ட பொழுது 4.11.2010 அன்று ஒரு கூட்டம் கூட்டியுள்ளார். ஆனால், ஒத்தி வைக்க வேண்டும் என்ற ஒரு பக்க மடலை, மத்திய அரசிற்கு உடனே அனுப்பாமல், ஒருங்குறி அவையம் அமெரிக்காவில் கூடும் நாளான 6.11.2010 அன்று காலத்தாழ்ச்சியாக அனுப்பியது ஏன்?

ஒருவேளை, முன்பே இது தொடர்பான முடிவெடுப்பு ஒத்தி வைத்திருக்காவிட்டால் கிரந்தத்துடன் தமிழைக் கணிணி எழுத்துருப் பட்டியலில் ஒருங்குறிக்காக இணைக்கும் அவலம் அரங்-கேறியிருக்கும். தமிழாய்ந்த தமிழர்கள் முதல்வர் அருகே இருக்கும் பொழுதே இந்த நிலை!

இப்பொழுது கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதால், பஸ், ஜாமீன், மிக்ஸி, ஜாம், ஷவர், முதலான அயற்சொற்கள் நம்மிடையே புகுந்து விட்டன.

எனவே தமிழ் நிலைப்பதற்கு, நாம் இப்பொழுது உடனடியாக தமிழ்ப் பாடநூல்களில் இருந்து கிரந்த எழுத்துகளை அடியோடு நீக்க வேண்டும். கிரந்தம் அறியாத தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். இலங்கையில் அறிவியல் அகராதிகளில்கூடக் கிரந்த எழுத்துகள் இல்லையே! நம்மால் ஏன் முடியாது?

அடுத்த கூட்டம் அடுத்த ஆண்டுதான் என்று அமைதி காக்காமல், உடனே தமிழறிஞர்களையும் கலந்து பேசிச் சரியான கருத்துருவை அனுப்பி கிரந்தம் தொடர்பான முன்மொழிவைத் திரும்பப் பெற வேண்டும். இதைத்தான் உலகமெங்கும் உள்ள தமிழன்பர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

தமிழ்ப் பகைவர்கள் விழிப்புடன் இருக்கையில் தமிழ், தமிழ் என முழங்கிக் கொண்டிருப்பவர்கள் உறங்குவது ஏன்? தமிழக அரசு ஆவன செய்யுமா? கணிணி உருவில் வரும் இடரிலிருந்து கன்னித் தமிழைக் காப்பாற்றுமா தமிழக அரசு?



--நன்றி: தமிழக அரசியல்(25.11.2010) [பக்: 2-3]

வியாழன், 11 நவம்பர், 2010

"ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' அல்ல பிரச்னை...!


கணினி பயன்பாட்டில் தமிழ்மொழியின் வரிவடிவங்களை உலகம் முழுவதும் சிரமம் இல்லாமல் எழுதவும், படிக்கவும் வகைசெய்யும் டேஸ் 16 ((Tamil All Ch​ar​a​cter En​coding 16) மென்பொருளைப் பயன்படுத்த அனுமதி தந்த தமிழக அரசு, தற்போது அந்தப் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளது'' என்கிற தவறான கருத்து, பிரச்னையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் பரப்பப்படுகிறது. தமிழ் ஒருங்குறியின் "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' என்கிற ஐந்து எழுத்துகளும் முன்பே உள்ளன. இவை அல்லாமல், மேலும் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று இரமண சர்மா என்பவர் ஒருங்குறி ஆணையத்துக்கும் இந்திய அரசுக்கும் கடிதம் எழுதியதன் விளைவுதான் இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சைக்கே காரணம். தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கடிதம் எழுதியது "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ'  எனும் ஐந்து கிரந்த எழுத்துகள் தமிழில் இடம்பெறலாமா, கூடாதா  என்பது பற்றியன்று. ஒருங்குறி (ன்ய்ண்ஸ்ரீர்க்ங்) அட்டவணையில் புதிதாகச் சேர்க்கக் கருதும் கிரந்த எழுத்துப் பட்டியலில் தமிழுக்கே உரியதான "எ,ஒ,ழ,ற,ன' ஆகிய எழுத்தொலி வடிவங்களையும் சேர்ப்பது பற்றியதுதான்.  எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, முடிவை ஒத்திவைக்க வேண்டுமென்றுதான் முதல்வர் எழுதியுள்ளார். ஒருங்குறி ஆணையம் (ன்ய்ண்ஸ்ரீர்க்ங் ஸ்ரீர்ய்ள்ர்ழ்ற்ண்ன்ம்) உலக மொழிகளுக்கான எழுத்து வடிவங்களை எல்லைகள் கடந்து அனைவரும் கணினியில் கட்டுப்பாடற்றுப் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யும் ஓர் அமைப்பாகும். இதில் பல நாடுகளும் தனி நபர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை வாக்குரிமை பெற்ற உறுப்பினராக உள்ளது. இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்பளிப்புப் பெற்றுள்ள 22 மொழிகளின் எழுத்து வடிவங்களும் ஒருங்குறி ஆணையத்தின் அட்டவணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. வழக்கில் இல்லாத மரபுசார்ந்த வேதகால சம்ஸ்கிருதம், கிரந்த எழுத்துகள் ஆகியன ஒருங்குறி ஆணைய அட்டவணையில் இடம்பெற வேண்டுமென்று கருதப்பட்டன. கடந்த செப்டம்பர் 6-ம் நாள் கிரந்தப்புலமை மிக்கவர்களைக் கொண்டு நடத்தப்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைப் பரிந்துரையாக  ஒருங்குறி ஆணையத்துக்கு இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அனுப்பியுள்ளது. கிரந்தம் என்பது ஒரு தனிப்பட்ட மொழியன்று. வடமொழிக்குத்  தமிழர்கள் கண்ட எழுத்து வடிவம். கி.பி. 4-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்த எழுத்துமுறை. தேவநாகரி எழுத்து, பயன்பாட்டுக்கு வரத்தொடங்கிய பின்னர் கிரந்தத்தில் எழுதுவது மறைந்து போயிருக்கிறது. கிரந்த எழுத்துகளைக் கொண்ட ஏராளமான கல்வெட்டுகளும் செப்பேடுகளும் ஓலைச்சுவடிகளும் உள்ளன. வரலாற்றாவணங்கள் மட்டுமன்றித் திவ்வியபிரபந்தம் போன்ற தமிழ் நூல்களுக்கான ஈடு உரைகளும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளன.வடமொழி ஒலிவடிவங்களுக்குக் கண்டெடுக்கப்பட்ட கிரந்த எழுத்து வடிவங்களைக் கொண்டே தமிழ் நூல்களை எழுதிக்கொள்ளும் நடைமுறையும் உருவானது. அப்போது வடமொழிக்கென்று உருவாக்கப்பட்ட கிரந்த எழுத்தில் இடம்பெறாத தமிழ் ஒலிக்கான வரிவடிவங்களைச் சேர்த்துக்கொண்டு எழுதும் முறை, அதாவது கிரந்தமும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடை உருவானது.கிரந்த எழுத்துகளை ஒருங்குறி ஆணைய அட்டவணையில் இடம்பெறச் செய்வதன் வழி, பழைய எழுத்துமுறை பாதுகாக்கப்படலாம். பாதுகாப்பதன் வழியாக பழைய, இலக்கிய வரலாற்று ஆவணங்களைப் புரிந்துகொள்ளவும் தரவுகளாக்கிப் பயன்படுத்திக் கொள்ளவும் இயலும். எனவே ஒருங்குறி ஆணைய அட்டவணையில் பழைய கிரந்த எழுத்துகள் இடம் பெறுவதில் யாருக்கும் மறுப்பில்லை. ஆனால், பழைய கிரந்த எழுத்துப்பட்டியலில் இதுவரை இடம் பெறாத தமிழுக்கே உரிய எ,ஒ,ழ,ற,ன எனும் ஐந்து வடிவங்களை அப்படியே சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பயன்களும் விளைவுகளும் யாவை என்பதைப்பற்றி ஆய்ந்து பார்க்கக் காலம் தேவைப்படும் என்பதால்  தற்போதைக்கு முடிவை ஒத்திவைக்க வேண்டுமென்று கடிதம் எழுதப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் 6-ம் நாள் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கிரந்தப் புலவர்கள் 14 பேர்களில் முனைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, ரமண சர்மா (காஞ்சி சங்கரமடம்) ஆகிய இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழறிஞர்களோ, கல்வெட்டுத் தொல்லியல் அறிஞர்களோ இக்குழுக்கூட்டத்தில் இடம்பெறவில்லை. கிரந்தத்தில் தமிழ் எழுத்துகள் தேவை என்று கருதும் ஆதரவாளர்கள் முன்வைக்கும் வாதம் இதுதான்- ""கிரந்தம் தென்னிந்திய மொழிகளுக்கு மட்டுமன்றி வடமொழிகளுக்கும் உரிய எழுத்தாகப் பயன்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் இந்திய மொழிகள் அனைத்துக்குமான எழுத்தாகக் கிரந்த எழுத்துகளை வளர்த்தெடுத்துக் கொண்டால், ஒரே வரிவடிவத்தைக் கொண்டு பல இந்திய மொழிகளையும் படிக்கமுடியும். தமிழுக்கே உரிய தனி ஒலி வடிவங்களான ஐந்தும் தற்போது கிரந்தத்தில் இடம்பெறவில்லை என்பதால் தமிழைப் படிக்க முடியாது. எனவே தமிழுக்குரிய ஐந்து ஒலிவடிவங்களைக் ("எ,ஒ,ழ,ற,ன') கிரந்த எழுத்துப்பட்டியலில் புதிதாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் வளம் சேர்க்கும்.இனிவரும் காலங்களில் மின்-அஞ்சல், இணைய வலைப்பக்கம், மின்-இதழ்கள், இணைய நாளேடுகள் ஆகியவை, புதிதாக உருவாகும் கிரந்த எழுத்துகளிலேயே கணினியில் இடம்பெற வாய்ப்பு அமையும்''.  இந்த வாதம் நமக்கு ஏற்புடைத்தன்று.தமிழில் புது கிரந்தம் வேண்டாம் என்பதைப் போலவே கிரந்தத்திலும் புதிதாகத் தமிழ் எழுத்துகளைச் சேர்க்க வேண்டாம் என்பதுதான் நமது கருத்து.கடந்த காலத்து இலக்கிய வரலாற்று ஆவணங்களைப் படித்துப் பயன்படுத்திக் கொள்ளக் கடந்த காலத்துக் கிரந்த எழுத்துகளே போதுமானவை.புதிதாகக் கிரந்தத்தில் தமிழ் எழுத்துகள் ஐந்து சேர்க்கப்படுவதால் தமிழின் கடந்த கால நூல்களும், வரும் கால நூல்களும், இதழ்களும், பத்திரிகைகளும் தமிழ் கலந்த கிரந்த எழுத்திலேயே அமையும் நிலை ஏற்பட்டு, மீண்டும் மணிப்பிரவாள நடைக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும்.மற்ற தமிழ் எழுத்துகள்  பயன்படாமல் மறைந்து போகும். வரிவடிவம் என்பதும் ஒலிவடிவம் போன்றே மக்கள் மனநிலை உளவியல் சார்ந்தது. செயற்கையாகச் செய்யப்படும் மாற்றங்கள் காலைவெட்டிக் கொள்வது போன்றதாகும்.பிறமொழி ஒலிவடிவங்களுக்கு  உருவாக்கப்பட்ட வரி வடிவங்களைக் கொண்டு உருவாக்கியவர்களின் சொந்த வரிவடிவங்களைச் செயலிழக்கச் செய்யலாமா?எல்லாவற்றுக்கும் மேலாக, உலகில் பேச்சு மொழிகளாக உள்ள எல்லா மொழிகளுக்குமான ஒரே எழுத்துவடிவம் (ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் டட்ர்ய்ங்ற்ண்ஸ்ரீ அப்ல்ட்ஹக்ஷங்ற் (ஐடஅ) என்பதாகும். ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் டட்ர்ய்ங்ற்ண்ஸ்ரீ அள்ள்ர்ஸ்ரீண்ஹற்ண்ர்ய் 1897 முதல் மேற்கொண்ட முயற்சியின் தொடர்ச்சியாக 2005-ல் இவ்வடிவம் இறுதியாக்கப்பட்டுள்ளது. ஆங்கில எழுத்துகளைக் கொண்டே அமைக்கப்பட்ட இந்த வரிவடிவத்தை  ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் ஸ்ரீப்ண்ய்ண்ஸ்ரீஹப் டட்ர்ய்ங்ற்ண்ஸ்ரீள் ஹய்க் கண்ய்ஞ்ன்ண்ள்ற்ண்ஸ்ரீள் அள்ள்ர்ஸ்ரீண்ஹற்ண்ர்ய்  ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றைக்கு உலக மொழிகள் அனைத்துக்குமான ஒரே வரிவடிவமாக ஐடஅ  உருவாகிப் பயன்பாட்டில் உள்ளது. இதன் வழி உலகின் எந்த மொழி நூலையும் ஐடஅ  வரி வடிவத்தில் எழுதலாம். அவ்வாறு எழுதப்பட்ட வரிவடிவத்தை உலகின் எந்த மொழியின் வரிவடிவத்துக்கும் மாற்றிக் கொள்ளலாம்.இப்படியான இன்றைய வளர்ச்சி நிலையில் தென்னிந்திய மொழிகளுக்கென்று தனி எழுத்து வடிவம், இந்திய மொழிகளுக்கென்று தனி எழுத்து வடிவம் தேவை இல்லை.மேலும் ஒருங்குறி ஆணைய அட்டவணையில் ஒரே எழுத்துக்கு இரண்டு இடங்களில் இட ஒதுக்கீடும் தேவையற்றது. க,உ போன்ற எண்கள் தமிழ் எழுத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் கிரந்த எழுத்துப்பட்டியலில் இடம் பெறவேண்டாம் என்று எடுக்கப்படும் முடிவு, எழுத்துகளுக்கும் பொருந்துமே.எனவே உலகெங்கும் வாழும் தமிழர்களில் கணினியிலும் இணையத்திலும் புழக்கத்திலிருக்கும் தமிழர்களும், அமைப்புகளும் எழுப்பிய கருத்து வேறுபாடுகளைக் கருதிப் பார்த்துத்தான் முடிவை ஒத்திவைக்க மத்திய அரசுக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.இவை குறித்து, அறிஞர்களின் கருத்தறிய 3.11.2010 அன்று மாலை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், 17 பேர் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவைப் பேராசிரியர் ஆனந்தகிருட்டிணனிடம் 4.11.2010 அன்று மாலை 4.30 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரும் இதற்கு உடன்படவே, முதல்வரிடம் 4.11.2010 அன்று மாலை 5 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அன்றே (4.11.2010 தீபாவளி இரவு 8 மணி முதல் 9.30 வரை) முதல்வர் தலைமையில் புதிய தலைமைச் செயலகத்தில் முனைவர் வா.செ.குழந்தைசாமி, முனைவர் ஆனந்தகிருட்டிணன் முதலியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுத முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. முதல்வரும் கடிதம் எழுதியிருக்கிறார்.அண்மையில் நடைபெற்ற ஒருங்குறி ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படாமல் இப்பொருண்மை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. ஒருங்குறி அட்டவணையில் "ண,ன, ற' போன்ற தமிழ் எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளோடு தனி இடத்தில் உள்ளீடு செய்வது என்பதும் ஆபத்தானது. ஒருங்குறியில் இப்போது தமிழ்ப் பகுதியில் உள்ள எழுத்துகளைக் கணிப்பொறியில், இணையத்தில் பயன்படுத்துவதில் அது குழப்பத்தை ஏற்படுத்தும். "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' ஆகிய ஐந்து எழுத்துகளும் ஒருங்குறியும், தமிழ்ப் பகுதியும் ஏற்கெனவே தமிழ் எழுத்துகளோடு உள்ளீடு செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பிரச்னை "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' பற்றியதல்ல. ஒருங்குறி அட்டவணையில் புதிதாகச் சேர்க்கக் கருதும் கிரந்த எழுத்துப் பட்டியலில் தமிழுக்கே உரித்தான "எ,ஒ,ழ,ற,ன' ஆகிய ஐந்து எழுத்துகளைச் சேர்ப்பது பற்றியதுதான். தமிழுக்கு நல்லது செய்ய நினைத்த முதல்வரை வம்புக்கு இழுத்து சர்ச்சைக்கு உள்படுத்துவது நியாயமல்ல!(கட்டுரையாளர்: துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்).
கருத்துகள்

மிக நன்கு விளக்கியுள்ளார் முனைவர் ம.இரா.. இப்பொழுதாவது தினமணிக்குப் புரிந்திருக்குமா? அல்லது ஏற்கெனவே புரிந்துதான் திசை திருப்பினோம். எனவே, இது குறித்துக் கவலை இல்லை என எண்ணுகிறதா? 2.இதில் குறிப்பிட்டுள்ள ஆண்டு 1897ஆ 1987 ஆ? 3. கடந்த செப்.6 இல் மத்தியத் தகவல் தொழில் நுட்பத் துறை இது தொடர்பில் கூடி முடிவெடுத்த பின்னும் இவர்கள் தூ்ங்கியது ஏன்? 4. 3.11.10 இல் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (கல்வியியல் கழகம்) கூட இரு்ந்த கூட்டம்தான் த.ப. கூட்டமாக மாற்றப்பட்டது. 5. 3.11.10 இல் தமிழ்க்காப்பு அமைப்புகள் இது தொடர்பில் கூடடம் நடததியது. ஆனால் அதற்கு முன்னரே இவ்வமைப்பு (இச்செய்தியை ஊடகம் வழியாக வெளியே கொணர்நத) திரு வீரமணி மூலம் மத்திய அமைச்சர் திரு ஆ.இராசா அவர்களிடம் முறையிட்டு 6.11.10 இல் நடைபெறும் ஒருங்குறி அவையக் கூட்டத்தில் இருந்த இப் பொருண்மையை 26.2.2011 அன்று நடைபெறும் கூட்டததிற்கு ஒத்தி ‌வைத்ததது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
11/11/2010 3:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

புதன், 10 நவம்பர், 2010

கிறுகிறுக்கும் கிரந்த சர்ச்சை!

கிறுகிறுக்கும் கிரந்த சர்ச்சை!

தமிழா... தனித்தமிழா!

தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை... புதிய தலைமைச் செயலகத்தில் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் கருணாநிதி.
''இணையத்தில் தமிழை அனைவரும் எளிதில் தட்டச்சு செய்யவும் படிக்கவும் ஒரே
மாதிரியான ஒருங்குறி (யூனிகோட்) முறையில், தமிழ் எழுத்துருக்களுடன் தமிழில் இல்லாத உச்சரிப்பைப் பயன்படுத்துவதற்காக, கிரந்த எழுத்துகளை புதிதாக (உதாரணமாக தமிழில் 'க' என ஒரே எழுத்து, உச்சரிப்புதான் உள்ளது. ஆனால், நான்கு வகை 'க' உச்சரிப்புக்கான கிரந்த எழுத்துகள் உண்டு) சேர்க்கவேண்டும். மேலும் கிரந்த எழுத்துகளுக்குக் கூடுதலாக இடம் ஒதுக்குவதுடன், 'எ, ஒ, ழ, ற, ன' ஆகிய தமிழ் எழுத்துகளையும் சேர்க்கவேண்டும்'' என்று முன்வைக்கப்பட்ட கருத்தை மத்திய அரசு ஏற்று, கன்சார்ட்டியத்துக்கு அனுப்பியது. இதனை ஆய்வு செய்வதற்காகவே இந்தக் கூட்டம். அதையடுத்து, இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் உள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஒரு கடிதமும் அனுப்பினார், முதல்வர்.
கணினித் தமிழ் அறிஞர்கள் சிலர், ''வெவ்வேறு எழுத்துருக்களை பயன்படுத்துவது மாறி, யூனிகோட் எழுத்துருவின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அந்த முறையைக் காலத்துக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த 'யூனிகோட் கன்சார்ட்டியம்' அமைப்பு செயல்படுகிறது. யூனிகோட் முறையில் தமிழுக்கான இடத்தை அதிகரிப்பது தொடர்பாக, கடந்த 6-ம் தேதி நடக்க இருந்த கன்சார்ட்டியத்தின் கூட்டத்தில் முடிவெடுக்க இருந்தனர். இதற்காக, மத்திய அரசு அனுப்பிய கருத்துதான் பிரச்னைக்குக் காரணம். யூனிகோடைப் பொறுத்தவரையில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழிகளின் எழுத்துருக்களுக்கு ஏற்கெனவே தனித்தனியான இடங்கள் உள்ளன. அப்படியிருக்க, சம்ஸ்கிருதம் கலந்த உச்சரிப்புக்காக கிரந்த எழுத்துகளுக்குத் தனி இடம் ஒதுக்குவதும், தமிழுக்கான இடத்தில் இவற்றுக்கு இடம் கேட்பதும் சரியல்ல. தனித்தன்மை மிக்க தமிழின் தூய்மையைக் கெடுக்க இப்படியரு முயற்சி நடக்கிறது. இதைவிட்டால், தமிழ் மட்டும் அல்ல, பிற திராவிட மொழிகளையும் விட கிரந்தம் மேல்நிலைக்கு வந்து, திராவிட மொழிகள் அதன் துணைமொழிகள் போன்று ஆகிவிடும். தமிழகத்தைப் பொறுத்தவரை நாளைக்கு தமிங்கிலத்தை மனதில் கொண்டும் தனி எழுத்துகள் உருவாகும் அபாயமும் ஏற்படும்...'' என்றனர் கொதிப்பாக.
தமிழுக்கு எதிரானதாகக் கூறப்படும் 'கிரந்தக்கலப்பு' கருத்துருவை, மூன்று மாதங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார்கள். சம்பந்தப்பட்ட துறையை கவனிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் கவனத்துக்கு இது போகவில்லையா? இப்போது அவசர அவசரமாகக் கூட்டம் போடும் தமிழக அரசு, முன்பே தமிழ் அறிஞர்கள் சுட்டிக்காட்டியும் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்? காலம் கடந்த காலத்தில் முதல்வர் கூட்டிய கூட்டத்திலும் தகுதியான இணையத் தமிழ் அறிஞர்களை அழைக்காதது ஏன்? தி.மு.க. எம்.பி. கனிமொழி, அவரின் கணவர் அரவிந்தன் ஆகியோர் கணினித் தமிழ் துறையில் செய்த பங்களிப்புதான் என்ன? செம்மொழி தமிழுக்கு மாநாடு நடத்தியதாக மார்தட்டிக்கொள்பவர்களுக்கு இதுதான் அழகா? என்றெல்லாம் வரிசையாகக் கேள்விகளை அடுக்குகிறார்கள், தமிழ் அறிஞர்கள். இதற்கிடையில், யூனிகோடில் தமிழுக்கான கூடுதல் இடம் பற்றிய முடிவு, வரும் பிப்ரவரிக்குத் தள்ளிவைப்பதாக கடந்த 2-ம் தேதியன்று கன்சார்ட்டியம் அமைப்பு அறிவித்துள்ளது.
- இரா.தமிழ்க்கனல்    
     
 

மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் தினமணி

மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் தினமணி தவறான செய்தியின் அடிப்படையில் இந்த ஆசிரியவுரையை அமைத்துள்ளது. இணையப் பக்கத்தில் இத்தவறு பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் முனைவர் பா.வளனரசு , முனைவர் பா.இறையரசன். முனைவர் தில்லைக்குமரன். முனைவர் நக்கீரன். முனைவர் அருள் நடராசன் என எண்ணற்றோர் தினமணிக்கும் தனியாக மடல்கள் அனுப்பியுள்ளனர். எனவே, தினமணி தன்னுடைய தவறான செய்தியை உணர்ந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். திரு வைத்தியநாதன் பைத்தியநாதன் போல் எழுத மாட்டார்.எனவே, எழுதியவர் மூலமே வருத்தம் தெரிவித்தல் சிறப்பாகும். தற்போது பாட நூல்களிலும் ஒருங்குறி தொடர்பான ஆணையிலும் உள்ள கிரந்த எழுத்துகளு்ம் அகற்றப்பட வேண்டும் என்னும் உணர்வை ஏற்படுத்திய வகையில் ஆசிரியவுரைக்கு நன்றி. தமிழ்க்காப்பு அமைப்புகள் சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2010 1:46:00 AM

செவ்வாய், 9 நவம்பர், 2010

தலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ?

தலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ?


கணினி பயன்பாட்டில் தமிழ்மொழியின் வரிவடிவங்களை உலகம் முழுவதும் சிரமம் இல்லாமல் எழுதவும், படிக்கவும் வகை செய்யும் டேஸ் 16 (TA​M​IL ALL CH​A​R​A​C​T​ER EN​C​O​D​I​NG​ 16) மென்பொருளைப் பயன்படுத்த அனுமதி தந்த தமிழக அரசு, தற்போது அந்தப் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி இக் கடிதத்தை எழுதியிருப்பதோடு, தன் கடிதத்தின் மீது தகவல் தொழில்நுட்பத் துறை மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை குறித்து தமக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் அறிஞர்களின் குழுவை அமைத்து, கலந்து ஆலோசித்து, பின்னர் இது தொடர்பான வேறு பரிந்துரை அனுப்பப்படும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் முதல்வர்.உலகம் முழுவதும் மின்அஞ்சல், குறுந்தகவல், தமிழ்ப் பதிப்புத்துறைக்குப் பயன்படும் இந்த ஒருங்குறி (யுனிகோட்) மென்பொருளைப் பரிந்துரைத்ததில் அப்படி என்ன இமாலயத் தவறு நேர்ந்துவிட்டது? ஒரு தவறும் இல்லை. இதில் பிரச்னை வெறும் ஐந்து எழுத்துகளின் வரிவடிவம்தான். அவை-ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ. இந்த ஐந்தெழுத்துகளும் சம்ஸ்கிருத வார்த்தைகள் என்பதாக முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சிலர் எழுப்பிய பிரச்னையின் காரணமாகத்தான் இப்போது இந்த டேஸ் 16 மென்பொருளுக்கான தமிழக அரசின் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு கூறுகிறார் முதல்வர்.இந்த ஐந்து வரிவடிவங்களும் தமிழர்களால் தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட வரிவடிவங்கள். தமிழில் சம்ஸ்கிருத வார்த்தைகள் மலிந்து மணிப்பிரவாளம் புழங்கிய காலத்தில், சம்ஸ்கிருதத்தில் இருந்த, ஆனால் தமிழில் இல்லாத ஒலிப்புகளுக்கான வரிவடிவம்தான் இவை. இந்த வரிவடிவம் வேறு எந்த வடமொழியிலும், அல்லது திராவிட மொழிக் குடும்பத்திலும்கூட கிடையாது. தமிழில்தான் இந்த ஐந்து எழுத்துகளும் துல்லியமான ஒலிப்புமுறைக்காக வரிவடிவம் தரப்பட்டன.இன்றைய நடைமுறையை உதாரணமாகச் சொல்வதென்றால், ஆங்கில எழுத்து ஊ-ல் தொடங்கும் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும்போது இப்போது நாம் முன்னொற்றாகப்  ஃ பயன்படுத்தி ஃபெயில், ஃபெலோஷிப், ஃபிரன்ட்ஸ் என்று எழுதுவதைப் போன்ற ஒரு வசதிக்காக உருவாக்கப்பட்டதுதான் மேற்சொன்ன 5 வரிவடிவங்களும். "பஸ் மோதி பசு மரணம்' என்பதை "பசு மோதி பசு மரணம்' என்று எழுதினால் எத்தனை பொருள் மாறுபாடு ஏற்படும்? அக்காரணம் கருதி, தமிழர் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவைதான் இந்த வரிவடிவம். சம்ஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்த அவசியமில்லாத ஒரு தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவது வரவேற்கத்தக்கதுதான். பாராட்டுக்குரியதுதான். தமிழ் உணர்வு உள்ளவர்கள் செய்ய வேண்டிய செயல்தான். இன்றைய நாளில் "பேருந்து மோதி பசு மரணம்' என்று எழுதவும் அதைப் பாமரரும் புரிந்துகொள்ளவும்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.  "காமாக்ஷியம்மன் கோயில்' என்பதுபோய், இப்போது "அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம்'  என்று எழுதும் நிலை உருவாகியுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த சம்ஸ்கிருத ஒலிப்புக்கான தமிழ் வரிவடிவங்கள்  தானே வழக்கொழிந்துபோகும் நிலை உருவாகலாம். ஆனால், இந்த வரிவடிவங்களுக்காகத் தமிழ் மொழியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நிறுத்திவைப்பது எந்த வகையில் சரியானது? மேலும், தமிழில் பஞ்சாங்கம், ஜோதிடநூல்கள் அச்சிடுவோர் இந்தச் சொற்களை, வரிவடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, இவை கணினியில் இடம்பெறாமல் தடுப்பது முறையாகுமா?மேலும், முந்தைய தலைமுறையின் மிகச்சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளை செம்பதிப்பாக வெளியிட வேண்டுமானால், அவர்கள் பயன்படுத்தியுள்ள இந்த வரிவடிவங்களை நீக்கிவிட்டு வெளியிடுதல் சரியானதாக இருக்குமா? ஒரு படைப்பில் "ஜன்மபூமி' என்றிருந்தால் அதை "சன்மபூமி' என்றும், "அருட்பெரும்ஜோதி' என்பதை "அருட்பெரும்சோதி' என்றும் வெளியிட்டால் அது செம்பதிப்பு ஆகுமா? ஜெயலலிதாவை செயலலிதா என்று எழுத முடியுமா? ஸ்டாலினை ச்டாலின் என்று அழைப்பதா? ரஜினி காந்தை ரசினி காந்த் என்றும், ஐஸ்வர்யா ராயை ஐசுவர்யா ராய் என்றும் அச்சிடுவதா? சம்ஸ்கிருத ஒலிப்பே இடம்பெறாத தமிழ்ச் சூழலை உருவாக்குதல் நன்று. ஆனால், தானே மெல்ல வழக்கொழிந்துவரும் 5 வரிவடிவங்களுக்காக உலகம் முழுவதும் இணைய தளத்தில் ஒன்றுபோல அனைத்துத் தமிழருக்கும் பயன்தரக்கூடிய மென்பொருளையே நிறுத்தி வைப்பது சரியல்ல. பெருவாரியான தமிழ் ஆர்வலர்களின் பேரக்குழந்தைகளின் பெயர்களை ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ இல்லாமல் உச்சரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது முதல்வருக்குத் தெரியாதா என்ன? தேவையில்லாத சர்ச்சைகளை தேவையே இல்லாத வேளையில் கிளப்பி, மக்களின் பார்வையைத் திசை திருப்புவது என்பது அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. இதுவும் அந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது மட்டும் தெரிகிறது. கண்ணெதிரில் தமிழை விழுங்கும் ஆங்கிலத்தைத் தமிழக அரசும், தமிழ்ச் சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் செத்துப்போன மொழியின், செத்தஉடலாக இற்றுக்கொண்டுவரும் 5 வரிவடிவங்களுக்காகத் தமிழக அரசு வேட்டியை வரிந்துகட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிறது. இதனால் யாருக்கு லாபம்?
கருத்துகள்

தமிழில் மேலும் கிரந்தத்தைப் புகுத்துவதையும் கிரந்தத்தில் தமிழச் சேர்த்துத் தமிழ் எழுத்துகளைக் கிரந்தமாகக் காட்டுவதையும்தான் உலகத்தமிழறிஞர்கள் எதிர்க்கின்றனர். அதற்கேற்ப முதல்வர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். நீங்களே குறிப்பிடும செத்துப் போன மொழியின் செத்த வடிவங்களுக்காக நீங்கள் ஏன் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்க வேண்டும் என விளக்குங்களேன். தமிழரின் தலையெழுத்து என்னவெனில் தமிழ் தொடர்பான பணிகளில் தமிழ்ப் பகைவர்களை அல்லது தமிழறியாதவர்களை அமர்த்துவது. எனவே, முதல்வர் அமைக்க இருக்கும்வல்லுநர் குழுவில் உங்களுக்கும் இடம் உண்டு என்று தெரிகிறது. தமிழே! நீ இன்னும் எத்தனைக்காலம்தான் பகைவர்களால் தாக்கப்பட்டுக் கொண்டே இருப்பாயோ! தினமணியில் இப்படி ஓர் உரையா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 3:22:00 AM
தினமணி புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு இவ்வாறு எழுதியுள்ளது. ஆனால், தினமணி தன் ஆரியப் புததியைக் காட்டி விட்டது எனப்பழிச் சொல் வரும். பிற மொழிச் சொற்களைக் கையாள வேண்டிய கட்டாய நேர்வு வரும் பொழுது அயலெழுத்துகளை நீக்கி நம் மொழியில் எழுத வேண்டும் என்ற தொல்காப்பியனாரின் கட்டளையை மீறியதால்தான் கிரந்த எழுத்துகள் உருவாகிப பல அயற்சொற்கள் புகுந்து தமிழ் சிதைந்து புதுமொழியாக உருவாகி அதனால் தமிழ் பேசும் பரப்பு குறைந்து புதிய மொழியினரும் அதைப் பேசுநரும் தமிழைப் பகையாகக் கருதும் இழிநிலையும் ஏற்ப்ட்டது. அந்த எழுத்துகளையே வரும் தலைமுறையினருக்குக் கற்பிக்காத சூழல் ஏற்பட்டால்தான் தமிழ் வளரும்; வாழும். கிரந்தத்திற்குத் தனியாக எழுத்துரு இருப்பதை எதிர்க்கவில்லை. தமிழில் மேலும் கிரந்தத்தைப் புகுத்துவதையும் கிரந்தத்தில் தமிழச் சேர்த்துத் தமிழ் எழுத்துகளைக் கிரந்தமாகக் காட்டுவதையும்தான் உலகத்தமிழறிஞர்கள் எதிர்க்கின்றனர். அதற்கேற்ப முதல்வர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். நீங்களே குறிப்பிடும செத்துப் போன மொழியின் செத்த வடிவங்களுக்காக நீங்கள் ஏன் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்க வேண்டும் என விளக்குங்க
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 3:17:00 AM
  இந்தத் தலையங்கம் மூலம் தினமணியின் இரண்டு ஆசைகள் நன்றாகத் தெரிகிறது ஒன்று, சமசுகிருதம் அழிந்துவிடகூடாது என்பது அடுத்து இந்தியை எதிர்த்துப் போராடிய தமிழர்கள் இன்னும் கிணற்றுத் தவளைகள்போல்  உள்ளார்களே என்ற கவலை
By ரிஜி.கரியாப்பட்டினம்
11/9/2010 3:15:00 AM
(continuation-2) Tamil language was well developed by then ruled great kings like Pandias or Cholas, who were true lovers of Tamil language. Those kings greatly respected saints and true scholars, who were also expert in Sanskrit language/grammar, to promote Tamil literature. This is preciously why Tamil literature is enormously enunciated with pure divinity and Manu Neidhi (Sanskrit words that depict true social justice). Therefore, Sanskrit is not so called ‘Annia (or Vada) Mozhi” but our true “Annai (or Thaai) Mozhi” – that is, with no doubt, Sanskrit is the mother language of all our Indian languages including Tamil. Therefore, respecting Sanskrit is just like respecting our own mother. Hope our great CM will also consider organizing a Maa-Nadu” (or in Sanskrit called Maha-Melana) for Sanskrit in Tamilnadu before other States take the credit.
By av
11/9/2010 3:14:00 AM
(continuation) If we carefully go through thousands of words in either Tamil or any other Indian language, we could sense the influence of Sanskrit. For example, “Karunanidhi” is a Sanskrit word. Similarly, “Dravida Munnetra Kazhagam” – the word “Dravida” itself is a Sanskrit word, which means south, This party’s symbol was emanated from Aryan symbol – that is “Udhaya Suryan” - two Sanskrit words. Both (Periyar) Ramasamy and Annadurai not only had their names in Sanskrit but also they belonged to Aryan race – (Mudaliars/Nayakars were Aryans who took administrative nature of work in a number ancient kingdoms. Tholkappiar, who wrote Grammar for Tamil language, was an Aryan. Without his great work, Tamil language would not have been compared with other classical language. Tamil language was well developed by then ruled great kings like Pandias or Cholas, who were true lovers of Tamil language. Those kings greatly respected saints and true scholars, who were also expert in Sanskrit
By av
11/9/2010 3:11:00 AM
Some researches well indicate that many Indian languages including Tamil, Marathi, Punjabi, Bengali or other such ancient languages were once spoken by different small groups of tribal then lived all over Indian subcontinent. Like English has influence in our day-to-day use (for example, words such as “bus”, “paper”, “road”, “bench”), several centuries back, Sanskrit language and associated culture had great influence with all our Indian languages and our way of life. Sanskrit is NOT a dead language. It is the source language of all Indo-European languages including contemporary Dravidian languages. If we carefully go through thousands of words in either Tamil or any other Indian language, we could sense the influence of Sanskrit. For example, “Karunanidhi” is a Sanskrit word. Similarly, “Dravida Munnetra Kazhagam” – the word “Dravida” itself is a Sanskrit word, which means south, This party’s symbol was emanated from Aryan symbol – that is “Udhaya Suryan” - two Sanskrit words. Both
By av
11/9/2010 3:09:00 AM
தலையங்கம் எழுதிய தமிழ் தெரியாத மதிப்பிற்குரிய ஆசிரியரே, அருட்பெருஞ்சோதி எப்பொழுது அருட்பெரும்ஜோதி ஆனது?
By Thenramizh Irumporrai
11/9/2010 1:46:00 AM
உங்கள் தலையங்கம் மிகவும் ஏற்புடையதே!. மொழி வளர, பிற மொழிச்சொல்கழையும் உள வாங்குதல் உரம் சேர்க்கும். ஆங்கிலத்தில் இல்லாத பிற மொழிச்சொற்களா? சில, உச்சரிப்புகளை இப்போது உள்ள தமிழ் எழுத்துகளால் கொண்டுவர இயலாது. என்னை பொறுத்த வரை இவ்வைந்து எழுத்துகளுடன், எஃப் உச்சரிக்க கூடிய ஒரு வரிவடிவமும் உருவாக்குவது தமிழை செழுமைப்படுத்த உதவும்.
By Suresh M
11/9/2010 1:15:00 AM
Tholkappiyar accepted these words. Pure Tamil does not require these words .But in today world it is necessary as we have to express many other Tamilized Words. Let us Tamilize these words . we make hue and cry for small compromise but English words have already replaced Tamil words in day to day life. Even in villages people go for " condolence " not YELAVU. words like FUNCTION, Tiffen,Rice, Water, DOOR, DAY,NIGHT are used by Tamils instead of original tamil words.T
By krishnan
11/9/2010 12:51:00 AM
தினமணி கூறுவதுபோல் நாளடைவில் வழக்கழிந்து போகும் இந்த 5 எழுத்துகர்ளூக்காக தமிழுக்கு ஏற்படும் சிற்ப்பை தடுக்கலாமா முதல்வர். ஷ்பெக்ர்ம் மறைக்க காமன்வெல்த் ஊழல் போல் வருகின்ற சட்டசபை தேதலுக்காக முதல்வர் நடத்தும் நாடகமே இது. புரிந்து கொள்வானா தமிழன்?
By Pa.Tha.Velan
11/8/2010 11:51:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English v

திங்கள், 8 நவம்பர், 2010

ஒருங்குறி அவையத்திற்கு முதல்வர் மடல்

1. இதனை ஏன் இணையப் பக்கத்தில் வெளியிடவில்லை. 2. இப்பொருண்மையில் 3.11.2010 அன்று கூட்டம் நடத்துவதற்கு முன்பு தமிழ்க்காப்பு அமைப்புகள் திரு வீரமணி அவர்களைச் சந்தித்து முறையிட்டு இக் கருத்துருவை நிறுத்துமாறு பலரும் கோரி வருவதற்கு மாறாக தமிழக அரசு அறிஞர்கள் கருத்தை அறிந்து தெரிவிப்பதற்கு வாய்ப்பாக ஒத்தி வைக்கச் சொல்ல வேண்டும் என வேண்டியதற்கேற்ப அவரும் அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம் தெரிவிக்க 2.11.10 அன்றே ஒருங்குறி  அவையத்தின் கூட்டப் பொருண்மைகளில் இருந்து இப் பொருண்மை 26.2.2011 கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஒருங்குறி அவையத்தின் உறுப்புக் கட்டணத்தைச் செலுத்தாமல் கருத்து தெரிவிக்கும் உரிமையைப் பறிகொடுக்கச் செய்த தமிழக அரசு கூட்ட நாளான 6.11.10 அன்றுதான் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது வருத்தத்திற்குரிய செயல். அணுகுதற்கு எளிமையும்
புரிந்து கொண்டால் விரைந்து செயலாற்றும் திறனும் கொண்ட கலைஞர் இருக்கும்பொழுதே உரியவர்கள் உறங்குகிறார்கள் எனில், என் சொல்வது? முதல்வர் தன் அருகே இருப்போரை நம்பாமல் உண்மையான ஈடுபாட்டாளர்களுடன் கலந்து பேசி நிலையாக இத்தீங்கு களையப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++
ùN u û], SY. 6: R ª ¯ p ¡ W kR GÝ j Õ L û[ f úN o dL A ° d L l T h Ó s[ T ¬ k Õ ûW ùR ôP o T ôL Ø ¥ Ü GÓ l T ûR J j § ûY dL úY i Ó m G uß ØR p Y o LÚ Q ô ¨ § Y# Ù ß j § Ù s [ ô o.
C Õ ùR ô P o T ôL, U j § V RL Y p ùR ô ¯ p Ö hT A ûU f N o B. W ôN ô Ü dÏ AY o N ² d ¡ Z ûU GÝ § Ù s[ L ¥ R ® Y W m: C k § V ô ® u ùR ô u ûU V ô] GÝ j Õ L û[ ( N m v ¡ Ú R m, ¡ W k R m) Ù ² úL ô h Ø û\ « p U ô t ß Y R tÏ U j § V RL Y p ùR ô ¯ p Ö hT A ûU f N L m, A Õ ùR ô P o T ô] A ûU l × dÏ T ¬ k Õ ûW ùN• Õ s [ R ô L j ùR ¬ ¡ \ Õ. C k R l T ¬ k Õ ûW EX L m ØÝ Y Õ m E s[ R ª Z o L ° ûP úV LY ûX ûV H t T Ó j § Ù s [ Õ. R ª r A ± O o L ° ûP úV LX k Õ B úX ô £ d L ô U p C k R l T ¬ k Õ ûW NU o l © d L l T h Ó s [ R ôL AY o L s ùR ¬ ® d ¡ u \ ] o.
Ï ± l T ôL, I k Õ ¡ W kR GÝ j Õ L s R ª r ùU ô ¯ « p úN o d L l T h Ó s [ R tÏ AY o L s G § o l × ùR ¬ ® d ¡ u \ ] o ( N m v ¡ Ú R j ûR GÝR ùR u ² k § V ô ® p TV u T Ó j R l T hÓ Y kR GÝ j Õ Ø û\ ¡ W k R m BÏ m) . C Õ ùR ô P o T ôL, U ô ¨ X ¨ § A ûU f N o L. A u T Z L u, EV o L p ® j Õ û\ A ûU f N o L. ùT ô u Ø ¥ E s ° hP ê jR A ûU f N o L Þ m, § W ô ® P o LZ L j R ûX Y o ¡ . ÅW U ¦ , A iQ ô T p L ûX d L ZL Ø u ] ô s Õ ûQ úY k R o ÏZ k ûR N ô ª , L ô u é o I. I. ¥ . « u R ûX Y o Ø. A] k R ¡ Ú x Q u, L ® O o ûYW Ø j Õ, U ô ¨ X e L [ ûY Eß l © ] o L ² ùU ô ¯ , GÝ j R ô [ o U t ß m N h P l úT W ûY Eß l © ] o W ® d Ï U ô o, R g ûN R ª r l T p L ûX d L ZL Õ ûQ úY k R o G m. W ô ú_ k § W u, RL Y p ùR ô ¯ p Ö hT Y p Û S o AW ® k R u E s ° h úP ô o T e úL t\ á h P j ûR ® V ô Z ] uß S ô u á h ¥ ú] u.
C k R d á h P j § p, U j § V AW £ u T ¬ k Õ ûW ûV Cß § ùN• Y R tÏ Ø u T ôL, úUÛ m ® ¬ Y ô] ® Y ô R m úR ûY G u\ LÚ j ûR A û] Y Ú m ùY ° « h P ] o. C Õ ùR ô P o T ôL, B úX ô N û] SP jR EV o ¨ ûX d ÏÝ ûY R ª ZL AWÑ A ûU dL E s [ Õ. A û] j Õ j RW l © ] ¬ P Ø m LX k Õ B úX ô £ d L l TP E s [ Õ. A Õ Y ûW, U j § V AW £ u T ¬ k Õ ûW ùR ôP o T ôL Ø ¥ Ü GÓ l T ûR J j § l úT ôP úY i Ó m G uß Ù ² úL ô h A ûU l ûT U j § V RL Y p ùR ô ¯ p Ö hT A ûU f N L m Y# Ù ß jR úY i Ó m G uß L ¥ R j § p Y# Ù ß j § Ù s [ ô o ØR p Y o LÚ Q ô ¨ § .


வெள்ளி, 5 நவம்பர், 2010

தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண்டனம்

தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண்டனம்


-கருத்துக்கள்‎(1)‎
 
வெளியிடு
தமிழ்க்காப்பு அமைப்பு நிறைவேற்றியுள்ள தீர்மானங்களைப் பிற அமைப்புகளும் நிறைவேற்ற வேண்டும். தமிழ்க்காப்பு அமைப்புகளின் முயற்சியால் 6.11.2010 அன்று நடைபெறும் ஒருங்குறி அவையத்தில் முடிவெடுக்கப்பட இருந்த இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட கிரந்தஒருங்குறிப் புகுத்தல் ஒத்தி வைக்கப்பட்டது என்றும் அடுத்து வரும் ஆண்டில் பிப்.26 நடைபெறும் கூட்டத்தில்தான் முடிவெடுக்கப்படும் என்று அறிந்தேன். தொடங்கும் பொழுதே வெற்றியுடன் தொடங்கியுள்ள தமிழ்க்காப்பு அமைப்புகள் தொடர்ந்து முயன்று நிலையான தீர்வைக் காண வேண்டும்.
ஈழக்கதிர் தி 11/5 இந்த இடுகையை நீக்கு பதிலளி

« முந்தைய  அடுத்து »

வியாழன், 29 அக்டோபர், 2009

யுனிகோட் முறையையே பொதுவானதாக அறிவிக்க கோரிக்கை



எட்டாவது "தமிழ் இணைய மாநாடு 2009 ஜெர்மனியின் கொலோன் நகரில் கடந்த 3நாட்களாக நடைபெற்று முடிவடைந்தது. இந்தமாநாட்டில் ஒருங்குறி (யுனிகோட்) முறைத் தரத்தையே தரமாக அறிவிக்க அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இதுவிபரமாவது:-மூன்று நாட்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேலான பேராளர்கள் கலந்துகொண்ட இந்தமாநாட்டில் மொத்தம் 17 தொழில்நுட்பக் கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்குகளுக்கு லண்டன் பல்கலை பேராசிரியர்.சிவாபிள்ளை,மலேசியா முரசு அஞ்சல் முத்துநெடுமாறன், வாசு ரெங்கநாதன், முருகையன், கணேசன், சுபாசினி, அச்சுதமேனன், சீதாலட்சுமி, நக்கீரன், ராஜேந்திரன், பாலசந்திரன், அருண்மகிழ்நன், இராமகிருஷ்ணன், இனியநேரு, ஜீன் செவில்லார்ட், பாலசுந்தரராமன் ஆகியோர் தலைமையில் அமர்வுகள்நடைபெற்றது. இந்த அமர்வுகளில் பல்வேறு தலைப்புகளில் தங்கள் ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்துப் பேசினர்.மாநாட்டைச் சிறப்பாக நடத்த உதவிய ஜெர்மனி, கொலோன் பல்கலைக்கழக‌ நிர்வாகத்துக்கும், அதன் தமிழ்துறை தலைவர் பேராசிரியை.உல்ரிக்கி நிக்கலஸ் அவர்களுக்கும் உத்தமம்(உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்)நிர்வாகிகள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். தமிழ் இணைய மாநாட்டின் நிறைவாக உத்த‌ம‌த்தின் உறுப்பின‌ர் குழு த‌மிழ்நாடு,இல‌ங்கை, சிங்க‌ப்பூர்,ம‌லேசியா ம‌ற்றும் மொரிசிய‌சு அர‌சாங்க‌ங்க‌ளை கோரும் வ‌கையில் ஒரும‌ன‌தான‌ தீர்மான‌ங்க‌ளை நிறைவேற்றிய‌து. இந்த‌ ப‌ரிந்துரைத் தீர்மான விப‌ர‌ங்க‌ளாவ‌து: அடுத்த‌ த‌மிழிணைய‌மாநாடு 1.2010 த‌மிழ் இணைய‌ மாநாட்டைத் த‌மிழ் நாட்டில் ந‌ட‌த்துவ‌த‌ற்குப் ப‌ரிந்துரைக்கிற‌து. மாநாட்டை ந‌ட‌த்துவ‌த‌ற்கு த‌மிழ்நாடு அர‌சு ம‌ற்றும் வ‌ணிக‌ நோக்க‌ம‌ற்ற‌ க‌ல்விக்க‌ழ‌க‌ங்க‌ள், த‌னியார் மைய‌ங்க‌ள், த‌ங்க‌ளுடைய‌ ஆர்வ‌த்தை உத்த‌ம‌த்திட‌ம் தெரிவிக்க‌கோருத‌ல். ஒருங்குறி(யுனிகோட்)2.ஒருங்குறி(யுனிக்கோட்) முறை த‌ற்பொழுது மின்னிய‌ல் ஊட‌க‌ங்க‌ளில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌த‌னால், உத்த‌ம‌ம் உத்த‌ம‌ம் ஒருங்குறி முறைத் த‌ர‌த்தையே த‌ர‌மாக‌, அறிவிக்குமாறு த‌மிழ்நாடு,இல‌ங்கை, சிங்க‌ப்பூர், ம‌லேசியா ம‌ற்றும் மொரிசிய‌சு அர‌சாங்க‌ங்க‌ளை கேட்டுக்கொள்கிற‌து. த‌க‌வ‌ல் தொழில் நுட்ப‌ இத‌ழ்3. த‌மிழில் ப‌ன்னாட்டுத் த‌ர‌த்திற்கேற்ற‌ த‌க‌வ‌ல் தொழில் நுட்ப‌ இத‌ழ் இல்லாமையின் தேவையை உண‌ர்ந்தும், த‌மிழ்த் த‌க‌வ‌ல் தொழில் தொழில் நுட்ப‌ அறிஞ‌ர்க‌ளின் வேண்டுகோளை ஏற்றும், உத்த‌ம‌ம் ஒரு த‌மிழ்த் த‌க‌வ‌ல் தொழில் நுட்ப‌ இத‌ழினைத் தொட‌ங்க‌ முன்வ‌ந்துள்ள‌து. இவ்வித‌ழைப் ப‌திப்பிப்ப‌த‌ற்கும், அதை மேலும் முன் எடுத்துச் செல்வ‌த‌ற்கும் முத‌லீட்டைத் த‌ந்துத‌வுமாறு, த‌மிழ்நாடு,இல‌ங்கை,சிங்க‌ப்பூர்,ம‌லேசியா ம‌ற்றும் மொரீசியஸ் அர‌சாங்க‌ங்க‌ளைக் கேட்டுக்கொள்கிற‌து. உத்த‌ம‌த்தின் செய‌ல‌க‌ம் 4. உத்த‌ம‌த்தின் செய‌ல‌க‌ம் 2004 வ‌ரை, சிங்க‌ப்பூர் அர‌சு உத‌வியுட‌ன் சிங்க‌ப்பூரில் செய‌ல்ப‌ட்டுவ‌ந்த‌து. மூன்றுவ‌ருட‌ சிங்க‌ப்பூர் அர‌சு உத‌வி முடிந்த‌தின் கார‌ண‌மாக‌ செய‌ல‌க‌ உத‌வியின்றி செய‌ல‌க‌ம் செய‌ல்ப‌ட்டுவ‌ருகின்ற‌து. உத்த‌ம‌த்தின் ப‌ணிக‌ளுக்கு ஏதுவாக‌ இச்செய‌ல‌க‌ உத‌வியை த‌மிழ்நாட்டில் நிறுவுவ‌த‌ற்கு த‌மிழ்நாட்டு அர‌சிட‌ம் கேட்டுக்கொள்கிற‌து. இச்செய‌ல‌க‌ம் சிங்க‌ப்பூரில் அமைத்திருந்த‌ உத்த‌ம‌த்தின் செய‌ல‌க‌ அமைப்பினை ஒத்திருக்கும். இச்செய‌ல‌க‌ம் உத்த‌ம‌த்தின் இய‌க்குந‌ரின் கீழ் செய‌ல்ப‌டும். விருதுக‌ள்5. த‌மிழ்த் த‌க‌வ‌ல் நுட்ப‌ முன்னோடிக‌ளின் வ‌ணிக‌ நோக்க‌ம‌ற்ற‌ சேவையைக் க‌ருத்திற் கொண்டு அவ‌ர்க‌ளைக் கெள‌ர‌விக்கும் வ‌கையில் விருதுக‌ள் வ‌ழ‌ங்குவ‌து அவ‌சிய‌ம் என‌ மாநாட்டில் அப்ங்குபெற்ற‌ அறிஞ‌ர்க‌ள் உத்த‌ம‌த்திற்குப் ப‌ரிந்துரைத்துள்ள‌ன‌ர். உத்த‌மம் த‌மிழ்நாடு,இல‌ங்கை,சிங்க‌ப்பூர்,ம‌லேசியா ம‌ற்றும் ம‌ற்றும் மொரிசிய‌சு அர‌சுக‌ளை இவ்விருது வ‌ழ‌ங்க‌த் தேவையான‌ முத‌லீட்டினையும் த‌ந்து உத‌வுமாறு கேட்டுக்கொள்கிற‌து. புதிய‌ ப‌ணிக் குழுக்கள் 6. 2009 த‌மிழ் இணைய‌ப் பேராள‌ர்க‌ள் உத்த‌ம‌த்திட‌ம் கேட்டுக்கொண்ட‌த‌ற்கிண‌ங்க‌த் த‌மிழ்த் த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ வ‌ள‌ர்ச்சிக்கு ஏற்ற‌ புதிய‌ ப‌ணிக் குழுக்க‌ளை அமைக்க‌ பூர்வாங்க‌ப் ப‌ணிக‌ளை ஏற்றுக் கொண்டுள்ள‌து. 1.மொழியாக்க‌க்(Transliteration) குழு, 2.ப‌ன்னாட்டு இணைய‌ முகவ‌ரிக்குழு, 3.த‌மிழ்க‌ற்றல், க‌ற்பித்த‌ல் த‌ர‌க்குழு, 4.த‌மிழ் உருப‌னிய‌ல் குழு ஆகிய‌ நான்கு ப‌ணிக்குழுக்க‌ளை உருவாக்க‌/உயிர்ப்பிக்க‌ ப‌ரிந்துரைக்கிற‌து. உல‌க‌ம‌யமாக்க‌ சிந்த‌னைக‌ளின் தொட‌ர்பாக‌வும், புதிய‌வ‌ழிச் சிந்த‌னைக‌ளை தூண்டும் முக‌மாக‌வும் ப‌ணிக்குழுப் ப‌ரிந்துரைக‌ளை உத்த‌ம‌ம் ஏற்று அவ‌ற்றை உருவாக்க‌/உயிர்ப்பிக்க‌ முய‌ற்சிக‌ளை உத்த‌ம‌ம் மேற்கொண்டுள்ள‌து. ஆகிய‌ ஆறு தீர்மான‌ங்க‌ளையும் உத்த‌ம‌த்தின் உறுப்பின‌ர் குழு ஏக‌ம‌ன‌தாக‌ நிறைவேற்றிய‌து. மாநாட்டு கருத்தரங்க அமர்வுகளில்மலேசியாவைச் சேர்ந்த‌ முத்து நெடுமாறன் மூன்றாம் தலைமுறையினர்கையடக்கக் கருவிகளில் தமிழில் எழுதவும் படிக்கவும் முடியும் என்பதைவிளக்கிக் காட்டினார், ஐபோன், அன்ட்ரோய்ட், நோக்கியா போன்ற கைத்தொலைபேசிகளில் தமிழ் பென்பொருளைக் கையாளமுடியும் என்பதை மிக விளக்கமாக எடுத்துரைத்ததும்,பெங்களூரு இந்திய அறிவியல் ஆய்வுக்கழகப் பேராசிரியர் தகவல் தொழில்நுட்பம் வழி படிப்பறிவு இல்லாதவர்கள் மற்றும் பார்வையற்றோர் ஆகியவர்களின் வாழ்க்கையில் பெரும்மாற்றத்தைக் கொண்டுவரத்தக்க தொழில்நுட்பத்தை விளக்கியதையும், தமிழ் நூல் வாசகத்தை ஒலி வடிவமாக மாற்றிப் பிழையின்றிப் படிக்கும் கணினியை அவர் காட்டியதும் பேராளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சர்வதேச பேராளர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு அரசு குழுவின் தலைவருமான அனந்தகிருஷ்ணன், க‌ணித்த‌மிழ் ச‌ங்க‌ த‌லைவ‌ர் ஆண்டோ பீட்ட‌ர்,வெங்கட்ரங்கன்,சிங்க‌ப்பூர் ம‌ணிய‌ம்,கிருஷ்ண‌ன்,பேரா.க‌லைம‌ணி,சிவ‌க்குமார்,அமெரிக்கா வாசுரெங்க‌னாத‌ன், க‌ணேச‌ன்,க‌விய‌ர‌ச‌ன், ல‌ண்ட‌ன் ப‌ல்க‌லை பேராசிரிய‌ர்.சிவாபிள்ளை, சுவிட்சர்லாந்து பேரா.கல்யாணசுந்தரம் உட்ப‌ட‌ நூற்றுக்கும் அதிக‌மானோர் க‌ல‌ந்துகொண்ட‌ன‌ர்.கொலோன் ப‌ல்க‌லை த‌மிழ் துறைத‌லைவ‌ர் பேராசிரியை உல்ரிக்கி நிக்க‌ல‌ஸ் இந்த‌மாநாட்டில் முழுக்க‌முழுக்க‌ த‌மிழில் உரையாற்றிய‌து வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ளை விய‌க்க‌வைத்த‌து. த‌க‌வல் மற்றும் படங்கள் : (ஜெர்ம‌னி கொலோன் ந‌க‌ரிலிருந்து) உத்த‌ம‌ம் செய‌ற்குழு உறுப்பின‌ர் சிங்க‌ப்பூர் ம‌ணிய‌ம்.