grandham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
grandham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 மார்ச், 2011

Con.plan for siranjeevi election propoganda in thamizhnaadu: சிரஞ்சீவியைத் தமிழகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்த காங்கிரசு திட்டம்

சிரஞ்சீவி என்பதைக் கிரந்த எழுத்தில் எழுதுவதைத் தவறு எனச்சுட்டிக் காட்டிக் கருத்து எழுதியிருந்தேன்.
அதனை ஏற்றுக் கொண்டு தமிழிலேயே எழுதிஉள்ள தினமணிக்குப் பாராட்டுகள். பிற இடங்களிலும் அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும் தவிர்த்துத் தினமணி தமிழ் மணியாகத் திகழ வேண்டும் என வேண்டுகின்றேன். 
அன்புடன் இலக்குவனார்திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /


சிரஞ்சீவியை தமிழக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் திட்டம்


ஹைதராபாத், மார்ச்.20: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை தில்லியில் அடுத்த 2 நாட்களில் சந்திக்க உள்ளார்.சோனியாவை சந்திக்குமாறு சோனியாவின் அரசியல் செயலர் அகமது படேல் சிரஞ்சீவியை தில்லிக்கு அழைத்துள்ளார்.தமிழக பேரவைத் தேர்தலில் நட்சத்திர பேச்சாளராக சிரஞ்சீவியை பயன்படுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தெலுங்கு திரை உலகில் செல்வாக்கு உள்ள சிரஞ்சீவிக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். எனவே தெலுங்கு மக்கள் அதிகமாக வசிக்கும் சென்னை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் சிரஞ்சீவி பிரசாரம் செய்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி காங்கிரஸுடன் அடுத்தமாதம் முறைப்படி இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
F

புதன், 16 மார்ச், 2011

Why grantham in writing Siranjeevi? : சிரஞ்ஜீவியின் மருமகனுக்கு எதிராக விசாரணை தொடக்கம்


கிரந்தத் திணிப்பு  ஏன்? சிரஞ்சீவி என எழுதாமல் சிரஞ்ஜீவி என எழுதுவது ஏன்?  இதைத்தான் அப்பொழுதே குறிப்பிட்டோம். அப்படி எல்லாம் இல்லை என்றார்கள் கிரந்தக் காதலர்கள். தினமணி செய்தியாளர்களுக்குத் தக்க அறிவுரை வழங்கவும். தமிழ்க் கொலை புரிய வேண்டா.  வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /

சிரஞ்ஜீவியின் மருமகனுக்கு எதிராக விசாரணை தொடக்கம்


ஹைதராபாத், மார்ச்.16: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மருமகனுக்கு எதிரான வரதட்சணை புகார் குறித்து ஹைதராபாத் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீஸ் துணை கமிஷனர் சத்யநாராயணா தெரிவித்தார்.கணவர் ஷிரிஷ் பரத்வாஜூம் அவரது தாயார் சூர்யமணியும் கூடுதலாக ரூ 50 லட்சம் வரதட்சணை கேட்டு கடந்த 1 வருடமாக கொடுமைப்படுத்தி வந்தனர் என சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா செவ்வாய்க்கிழமை போலீசில் புகார் அளித்திருந்தார்.அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் இருவருக்கு எதிராகவும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா, தனது குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாக 2007-ல் ஷிரிஷை திருமணம் செய்துகொண்டார். தனது குடும்பத்தினரிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பின்னர் நீதிமன்றத்தை அணுகி இருந்தது குறிப்பிடத்தக்கது

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

Seminar on grantham at Senchi: கணிணி ஒருங்குகுறியில் கிரந்த எழுத்துத் திணிப்பு ஏன்? செஞ்சியில் கருத்தரங்கம்

உலகத்தாய்மொழி நாளை முன்னிட்டு (பிப்.21) நடைபெறும்
                                  கணிணி ஒருங்குகுறியில் 
                   கிரந்த எழுத்துத் திணிப்பு ஏன்?
நாள்: மாசி 8, தி.பி.2042 ***  பிப் 2, கி.பி. 2011 
ஞாயிறு  பிற்பகல்  3.00 மணி

இடம்:ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்)

தலைமை பூ.ஆறுமுகம்

கருத்தரங்கம்

தமிழும் கிரந்த எழுத்தும் -  இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழில் அயல்மொழி - மா.பூங்குன்றன்
மொழிப்போர் வரலாறு - மு.கந்தசாமி
தாய் மொழி நாள் - அரங்க நாடன்
தாய்மொழியும் தற்சார்பும் - அ.சி.சின்னப்பத்தமிழர்
 நூல்வெளியீடு :
1. இராவணன் நாடு
2. மன்னர் வழியா? மார்க்சிய வழியா?

இங்ஙனம்
தமிழ் மீட்புப் படைப்பாளர், பதிப்பாளர் கூட்டியக்கம்
99411 41894
94447 31611
9840490042

வெள்ளி, 28 ஜனவரி, 2011

Seemaan against grantham: செந்தமிழைக் கலப்பு மொழியாக்க முயன்றால் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கிப் போராடும்! – சீமான் அறிக்கை

செந்தமிழைக் கலப்பு மொழியாக்க முயன்றால் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கிப் போராடும்! – சீமான் அறிக்கை

கணினித் தமிழ் பயன்பாடு – என்கிற போர்வையில், செந்தமிழ் மொழியில் கணினியில் சமக்கிருத ஒலிகளுக்கான தனி எழுத்து வடிவைத் திணிக்க நடக்கும் சதியை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையில் கலப்பினம் தான் இருக்கமுடியும் என்கிற இனவெறியன் ராசபட்சேவின் பாசிசக் கருத்துக்கும், கணினியில் கலப்பு மொழி அவசியம் என்கிற  குழப்பவாதிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று நாம் தமிழர் குற்றஞ்சாட்டுகிறது. உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் உள்ள எல்லா ஒலிகளையும் உள்ளடக்கிய எழுத்து வடிவம், எந்த மொழியிலும் இல்லை. தங்கள் மொழியில் இல்லாத ஒலிகளுக்கான எழுத்துவடிவைத் தங்கள் மொழியில் உள்ள எழுத்துக்களைக் கொண்டே ஈடுசெய்வது என்பது உலகெங்கும் உள்ள வழக்கம். எடுத்துக்காட்டாக, தமிழிலுள்ள சிற்ப்பு ஒலியையே எடுத்துக் கொள்ளலாம். தமிழின் சிறப்பு ஒலியான ‘ழ’கரத்தை ஈடுசெய்ய  ஆங்கிலத்தில் கூடுதல் எழுத்தைச் சேர்க்கவில்லை. இசட் – என்கிற ஆங்கில எழுத்து ‘ழ’கரத்தைச் சுட்டப் பயன்படுத்தப் படுகிறது. தமிழில் இவ்வளவு வேறுபாடுகூட இல்லை. எந்த மொழியிலிருக்கும் எந்த தனித்த ஒலியையும் தெளிவாகச் சுட்டத் தேவையான எழுத்துக்கள் தமிழில் உள்ளன. அதற்கு ஓர் உதாரணம் தான் – இசட்.
இந்த உலக நடைமுறையை மறந்துவிட்டு, வழக்கிழந்து போன சமக்கிருத ஒலிகளுக்காக தமிழில் கூடுதல் எழுத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது இந்தியாவிலுள்ள தேசிய இனங்களின் தனித்தன்மைக்கு உலை வைக்கும் முயற்சி. இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பொதுவான கிரந்தத்தை – எழுத்துருவை உருவாக்கும் எந்த முயற்சியும், இந்திய தேசிய இனங்களின் மீதும் மொழிகளின் மீதும் தொடுக்கப்படும் மறைமுகப் போர். இந்தியாவின் பெருமைக்குரிய பன்முகத் தன்மையை இது சீரழித்துவிடும்.
சமக்கிருதம் என்பது வழக்கழிந்துவிட்ட ஒரு மொழி. தேவ பாசை – என்று அதைக் குறிப்பிடுவதிலிருந்தே, அது வாழும் மனிதர்களுக்கான மொழியல்ல என்பது தெளிவாகிறது.   உலக வழக்கிலிருந்து அழிந்து ஒழிந்து சிதைந்தது சமக்கிருதம் – என்பதைத் தன்னுடைய தமிழ்த் தாய் வாழ்த்தில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. இந்தி எதிர்ப்பைக் காட்டியே ஆட்சியைப் பிடித்த திராவிட இயக்கம் அந்த வரியை நீக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்த்தது. சமக்கிருதத்துக்கு சாமரம் வீசும் அப்படியொரு வேலையில் இனிமேல் எவரும் இறங்கவேண்டாம், தமிழைக் கலப்பு மொழியாக்க முயலவேண்டாம் என்று பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம். வேதங்களைத் தமிழில் படிக்க விரும்புவோருக்காக தனி எழுத்துரு தேவை என்று வாதிடுவது அபத்தமானது. சமக்கிருத மொழி வேதங்களைப் படிக்க விரும்புபவர்கள் அந்த மொழியைக் கற்று அவற்றைப் படிப்பதுதான், அந்த மொழிக்கு செய்கிற மரியாதையாகவும் இருக்கும்.
தனித்த சில ஆங்கில ஒலிகளுக்கு நிகராக தமிழில் சிறப்பு எழுத்து வடிவம் தேவை என்கிற வாதம், 60 ஆண்டுகளுக்கு முன், எழுந்த வேகத்திலேயே அடங்கிவிட்டது. இப்போது கணினியை முன்னிறுத்தி வைக்கப்படும் இந்த வரட்டு வாதமும் விரைவில் அடங்கிவிடும் என்று நம்புகிறோம். முன் வாயில் வழியாக முறைப்படி நுழைய முடியாத நிலையில், பின்வாயில் வழியாக அதை நுழைக்க எவர் முயன்றாலும் நாம் தமிழர் கட்சி உறுதியுடன் எதிர்த்துப் போராடும். ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அவர்கள் பேசும் மொழியை முதலில் அழித்துவிடு – என்பது இனவெறியர்களின் கொள்கையாகக் குறிப்பிடப்படுவதுண்டு. தமிழருக்கோ இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கிறது. கண்ணெதிரில் இனமும் அழிக்கப் படுகிறது, மறைமுகமாக மொழியையும் அழிக்க முயற்சி நடக்கிறது. இதை எல்லா நிலையிலும் கடுமையாக எதிர்ப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
சீமான்
நாம்தமிழர் கட்சி.

சனி, 25 டிசம்பர், 2010

seminar on save thamizh from grandha unicode : யுனிகோட் தமிழைக் காக்க டிசம்பரில் கருத்தரங்கம்

யுனிகோட்  தமிழைக் காக்க டிசம்பரில் 

கருத்தரங்கம்


Vote this article
Up (0)
Down (0)
சென்னை: தமிழ் யுனிகோட் எழுத்துருவில் தமிழையும், கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழைக் கெடுக்க நடக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி டிசம்பர் மாதம் கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கணிணி மூலமாக ஒருங்குறியில் தமிழையும் கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழுக்குக் கேடு விளைவிக்க மேற்கொண்டு வரும் சிலரின் முயற்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதன் பொருட்டுத் தமிழக அரசு அமைக்க இருக்கும் குழுவிற்கு உரிய பரிந்துரைகளை அளிக்கவும் தமிழ்க்காப்பு அமைப்புகள் திசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் தமிழ்க்காப்பு அரங்கம் நிகழ உள்ளது.

இதில் பங்கேற்க ஒருங்குறியில் தமிழ்க்காப்பு என்னும் பொதுத் தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல் நவம்பர் 25 ஆம் நாளுக்குள் கட்டுரை அளிக்க வேண்டுகின்றோம். கட்டுரையாளர்களும் பார்வையாளர்களும் உடனே

thamizhkkaappu@gmail.com என்ற மின்முகவரிக்குத் தங்கள் பெயர், முகவரி, பேசி எண், கட்டுரைத் தலைப்பு முதலிய விவரங்களை அளிக்க வேண்டுகிறோம். நேரில் பங்கேற்க இயலாதோர் கட்டுரையை அனுப்பி உதவலாம். நாளும் இடமும் முடிவான பின்னர்த் தெரிவிக்கப்பெறும்.

தொடர்பிற்கான பேசி எண்கள்:

98844 81652 (இலக்குவனார் திருவள்ளுவன்)
94452 37754 (அன்றில் பா.இறையெழிலன்) என்று அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்தவர்: Aravamuthan
பதிவு செய்தது: 14 Nov 2010 8:11 am
ஆங்கில அறிஞர்கள் கண்டிப்பாக உதைக்க வரமாட்டார்கள். ழ என்பதை zha என்று எழுதுவது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முறை. தமிழ் சொற்களை துல்லியமாக உச்சரிக்க, ஆங்கிலத்தில் transliteration வழிமுறை 100 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது என்பதை தமிழ் பற்றிய ஆங்கில நூல்களைப்படித்து அறிந்துகொள்ளுங்கள். அதற்கு மாறாக, ga, dha, za, fa என்பவற்றை தமிழ் எழுத்து மூலமாகவோ, கூடுதல் குறியீடுகள் மூலமாகவோ தெரிவிக்கும் முறை இங்கு இல்லை. எதிர்கால தேவையைக் கருத்தில்கொண்டால், திரு ரமண சர்மாவின் முயற்சி நன்மை தரும்.


பதிவு செய்தவர்: இராமசாமி
பதிவு செய்தது: 13 Nov 2010 9:51 pm
தமிழில் உள்ள ‘ழ’ எனும் எழுத்தினை ஆங்கிலத்தில் எழுதவேண்டி 27ஆவது எழுத்தாக ஒரு எழுத்தை சேர்க்க வேண்டும் என்றால் ஒப்புக் கொள்வார்களா ஆங்கில அறிஞர்கள்? உதைக்க வர மாட்டார்கள்? அது போலத்தான் (உண்மையான) தமிழர்களும் இந்த கிரந்த எழுத்து திணிப்பினை ஏற்க மாட்டார்கள்.

[ கருத்தை எழுதுங்கள் ]

பதிவு செய்தவர்: sgk
பதிவு செய்தது: 13 Nov 2010 8:01 am
குறுகிய மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டுகிறோம். உலகத்தில் உள்ள இடங்களின் பெயர்கள், கண்டுபிடிப்புகள், பொருட்களின் பெயர்கள், ஏன், முஸ்லிம் கிருத்துவ நண்பர்களின் பெயர்களையும் சரியாக எழுதுவதற்கு தொல்காப்பியரின் எழுத்துகள் போதாது. இலக்கியத் தமிழுக்கு இவை வேண்டாம்தான். ஆனால், நடைமுறைத் தமிழுக்கு முன்னேற்றம் கருதி இவை தேவையாகும். மற்ற திராவிட மொழிகளில் இவை உண்டு. செல்பேசி வேண்டும், பற்பசை வேண்டும், கார் வேண்டும்,.. நவீன வாழ்க்கைக்கு, உலகத்துடன் ஒத்து வாழ புதிய எழுத்துகளும் தேவைதாம்.


பதிவு செய்தவர்: காதிர்
பதிவு செய்தது: 13 Nov 2010 2:58 am
தமிழகம் விரைந்து செயல் பட வேண்டிய நேரம்.


பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 13 Nov 2010 2:49 am
முதலில் தமிழ் நாட்டில் ஒழுங்காக தமிழைப்பேசுங்கள்

செவ்வாய், 14 டிசம்பர், 2010

பிராமி எழுத்து முறையிலிருந்து சிங்கள, திபேத்திய, பர்மிய, தாய் எழுத்துகளோடு, தமிழ் உள்ளிட்ட பெரும்பான்மையான இந்திய மொழிகளின் எழுத்துகள் தோன்றியது போல 
எனச் சொல்லும் பொழுதே பேராசியர் அறிந்ததை மறைத்தோ அறியாமையாலோ சொல்கிறார் என்பது புரிகின்றது. தமிழின் தூய்மை கெட்டதற்கு அறிஞர்கள் பலர் பல சான்றுகளை அளித்திருந்தும் ஆதாரம் இல்லை என நெஞ்சறிந்த பொய் ஏன் என்றும் புரியவில்லை. நல்ல ஆராய்ச்சி அறிஞர் ஏன் தடம்புரள்கிறார் என்று தெரியவில்லை. மதிப்பிற்குரிய பெரியண்ணன் அவர்களும் செல்வா அவர்களும் மறுத்தமைக்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 13

E.Annamalaiபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
கணேசனின் கேள்வி:
கிரந்த எழுத்துகளை ஒருங்குறியில் (Unicode) சேர்ப்பது பற்றி அரசு தலையிடும் அளவுக்குச் சர்ச்சை எழுந்துள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:
பிராமி எழுத்து முறையிலிருந்து சிங்கள, திபேத்திய, பர்மிய, தாய் எழுத்துகளோடு, தமிழ் உள்ளிட்ட பெரும்பான்மையான இந்திய மொழிகளின் எழுத்துகள் தோன்றியது போல கிரந்த எழுத்துகளும் தோன்றின. தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் சமஸ்கிருதத்தை எழுதவும் சமஸ்கிருதம் மிகைபடக் கலந்த மணிப்பிரவாளத் தமிழ் நடையை எழுதவும் கிரந்த எழுத்துகள் பயன்பட்டன. இன்று தமிழில் ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதும் (இது கடன் சொற்களைச் சேர்த்து எழுதுவதிலிருந்து வேறுபட்டது) சிலர் அந்தச் சொற்களை ஆங்கில எழுத்துகளிலேயே எழுதுவது போன்றது இந்தப் பழக்கம்). தமிழ்க் கல்வெட்டு ஆவணங்களிலும் கிரந்த எழுத்துகளை மிகுதியாகப் பார்க்கலாம்.
தமிழ் இலக்கியத்தில், தொல்காப்பியரும் பின்வந்த இலக்கண ஆசிரியர்களும் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்ற சொற்களைத் தமிழில் தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுத விதித்த நெறிமுறையைப் பின்பற்றி, பதினெட்டாம் நூற்றாண்டு வரை, கிரந்த எழுத்துகள் இடம் பெறவில்லை. பின்னால் ஐந்து கிரந்த எழுத்துகள் (ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ) தமிழ் அரிச்சுவடியின் விரிவாக இடம் பெற்றன. கவிதை உட்பட இன்றைய நவீனத் தமிழ் இலக்கியத்தில் இந்தக் கிரந்த எழுத்துகள் தயக்கமின்றிப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எழுத்துகள் பல, தமிழர்களின் பெயர்களில் உள்ளன, முன்னாள், வருநாள் முதல் அமைச்சர்களின் பெயர்கள் உட்பட. தமிழ்ச் சொற்களிலும் தமிழர் பெயர்களிலும் இடம் பெற்றுள்ள இந்த ஐந்து கிரந்த எழுத்துகளுக்கும் (இன்னும் இரண்டு குறியீடுகளுக்கும்), பழைய தமிழ் எண்களைப் போலவே, ஒருங்குறியில் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், தமிழ் எழுத்துகளின் குறியீட்டு எண்களின் (code points) தொடர்ச்சியாக, இடம் தரப்பட்டிருக்கிறது. இந்த ஏற்பாடு தொடர்ந்து இருக்கும்; இருப்பது தேவை.
ஒருங்குறி, உலக மொழிகள் எல்லாவற்றின் எழுத்துகளுக்கும் இடம் தருகிறது. உலக வழக்கிலிருந்து போய்விட்ட எழுத்துமுறைகளுக்கும் இடம் தருகிறது. ஏனென்றால் அந்த எழுத்துகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் ஆய்வுலகிற்கு முக்கியம். அந்த முறையில் கிரந்த எழுத்துகளுக்கும் தேவை உள்ளது. அதை ஏற்று, இந்திய அரசு ஒருங்குறி ஆணையத்திற்கு எழுதியிருக்கிறது. தமிழைப் பொறுத்த வரை, மணிப்பிரவாள நடையில் உள்ள வைணவ உரைகளையும் பல கல்வெட்டு ஆவணங்களையும் எண்வயமாக்கி (digitize) ஆய்வுக்குப் பயன்படுத்த இந்த முடிவு உதவும். இதிலும் சர்ச்சை இருக்க முடியாது.
சர்ச்சை கிளம்பியிருப்பது கிரந்த எழுத்துக்களைப் பற்றி, உலகளாவிய ஒருங்குறி ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள புதிய வரைவுத் திட்டத்தைப் பற்றித்தான். இதை எழுதி அனுப்பியிருப்பவர் டாக்டர் ஸ்ரீரமண சர்மா என்பவர். இவர் காஞ்சி சங்கர மடத்தோடு தொடர்புடையவர் என்று சொல்லப்படுகிறது. இந்த வரைவுத் திட்டம் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டதா, அல்லது ஒரு நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வரைவுத் திட்டத்தை http://www.tamilnet.com/img/publish/2010/11/20100710-extended-tamil-proposal.pdf என்ற பக்கத்தில் பார்க்கலாம். இது, சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளில் எழுத உதவும் பொருட்டுத் தயாரிக்கப்பட்டது. தமிழ் எழுத்துகளில் வடிக்க முடியாத சமஸ்கிருத ஒலிகள் உண்டு என்பது பலரும் அறிந்த உண்மை. அவற்றில் வல்லினத்தின் வர்க்க எழுத்துகளும், உயிர்ப்பொலி ஏறிய (vocalic) ரகர, லகரமும் அடங்கும். சமஸ்கிருத எழுத்துகளில் – அதாவது தேவநாகரி எழுத்து முறையில் – வடிக்க முடியாத தமிழ் ஒலிகளும் உண்டு. அவை எ, ஒ, ழ, ற, ன.
இந்த ஐந்து எழுத்து வடிவங்களையும் கிரந்த எழுத்துகளோடு சேர்க்கும்படி சர்மா பரிந்துரைத்திருக்கிறார், அப்படிச் சேர்ப்பது தமிழுக்கு ஆபத்து என்பதே சர்ச்சையின் சாராம்சம். இணைப்பில் உள்ள அவருடைய வரைவுத் திட்டத்தில் இந்தப் பரிந்துரை இல்லை. மேலே சொன்ன கிரந்த எழுத்துகளுக்கு ஒருங்குறியில் தனி இடமும் குறியீட்டு எண்ணும் தர வேண்டும் என்ற இந்திய அரசின் பரிந்துரையின் திருத்தமாக, கிரந்த எழுத்துகளோடு மேலே சொன்ன ஐந்து தமிழ் எழுத்துகளையும் சேர்க்க வேண்டும் என்று அவர் வேறு இடத்தில் சொல்லியிருக்கலாம்; அல்லது வேறு யாராவது சொல்லியிருக்கலாம். அது பற்றி எனக்குத் தெரியவில்லை.
தமிழைக் கிரந்த எழுத்துகளில் எழுதுவதற்கு இந்தப் பரிந்துரை உதவும்; சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளில் எழுத, இந்தப் பரிந்துரை தேவை இல்லை. ஏனென்றால், சமஸ்கிருதத்தில் இந்த எழுத்துகள் குறிக்கும் ஐந்து ஒலிகளும் இல்லை. இந்தப் பரிந்துரை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. அதைப் பார்க்காமல் ஊகமாகத்தான் பதில் சொல்ல முடியும். தமிழைக் கிரந்த எழுத்துகளில் எழுத, எந்த நடைமுறைத் தேவையும் இல்லை. இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு வரிவடிவத்தை உருவாக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மொழிக்கும் உரிய தனி ஒலிகளுக்கான எழுத்துகள் பொது வரிவடிவில் இடம் பெற வேண்டும். தமிழில் தனி ஒலிகளுக்கான எழுத்துகள் மட்டும் இடம் பெற்றால் போதாது. மேலும், பொது வரிவடிவுக்குச் சிலர் தேவநாகரி எழுத்துமுறையையும் சிலர் ரோமன் எழுத்துமுறையையும் அவ்வப்போது பரிந்துரைத்திருக்கிறார்கள். அவையே ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கும்போது, கிரந்த எழுத்துமுறையில் அமைந்த பொது வரிவடிவம், தேவை இல்லாத ஒன்று. இதைத் தேவையற்றது என்ற அடிப்படையிலேயே ஒருங்குறி ஆணையம் ஏற்றுக்கொள்ளாது என்று நினைக்கிறேன். தமிழை அழிக்கும் சதி என்றெல்லாம்  குரலெழுப்பத் தேவை இல்லை.
ஒருங்குறி ஆணையத்திற்குச் சர்மா அனுப்பியுள்ள வரைவுத் திட்டம், ஒருங்குறியில் தமிழ்ப் பகுதியில் சில கிரந்த எழுத்துகளை விரிவாக்கிய தமிழ் (Extended Tamil) என்று சேர்ப்பதன் அவசியத்தையும் கிரந்த எழுத்துகளை எப்படி வடிவமைக்கலாம் என்பது பற்றியும் பேசுகிறது. நடைமுறைப் பிரச்சினை சார்ந்த இரண்டாவதைப் பற்றி இங்கே நான் பேசவில்லை. எழுத்து வடிவின் அழகு, எழுதும் எளிமை முதலான எண்ணங்களின் அடிப்படையில் எது உகந்தது என்று தனியே எழுதப்பட வேண்டியது அது. முதலாவது கொள்கை சார்ந்தது; நோக்கம் சார்ந்தது. கிரந்த எழுத்துகளின் அவசியத்திற்குச் சர்மா இரண்டு காரணங்கள் தருகிறார். ஒன்று, சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளில் எழுத, கிரந்த எழுத்துகள் வேண்டும். உயர் சாதிகளில் நாமகரணம் போன்ற சடங்குகளில் சமஸ்கிருத சுலோகங்களைத் தமிழ் எழுத்துகளில் எழுதிப் படிக்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி முதலான மொழிகளைத் தமிழ் எழுத்திலேயே படிக்கும் முறையும் இருக்கிறது.
இரண்டு, தமிழ்நாட்டில் வழங்கும் சௌராஷ்டிரம் போன்ற மொழிகளுக்குத் தமிழ் எழுத்துகளோடு கிரந்த எழுத்துகளைச் சேர்த்து ஒரு எழுத்துமுறை உருவாக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை எழுத வழங்கும் ரோமன், தேவநாகரி ஆகிய எழுத்துமுறைகளுக்கு ஒருங்குறியில் விரிவாக்கப்பட்ட எழுத்துகள் உண்டு.
சர்மா சொல்லவில்லை என்றாலும், தமிழ் எழுத்துமுறையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் வழங்கும் பழங்குடி மொழிகளுக்கும் பிற மொழிகளுக்கும் எழுத்துமுறை அமைக்கும்போது கிரந்த எழுத்துகள் தேவைப்படும். தமிழ்நாட்டில் பேசும் மொழிகளைத் தமிழ் எழுத்துமுறையை ஒட்டி எழுதுவதைத் தமிழர்கள் ஒப்புக்கொள்வார்கள். அந்த மொழிகளை தேவநாகரி, ரோமன் எழுத்துமுறைகளில் எழுதுவதை விட, தமிழ் எழுத்துமுறையில் எழுதுவதைத் தமிழர்கள் விரும்புவார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் தமிழ் எழுத்துகளோடு சில கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும். தமிழின் தூய்மையைக் காப்பதும் தமிழ் எழுத்துமுறையைப் பரப்புவதும் ஒருசேர நடக்க முடியாது.
கிரந்த எழுத்துகளால் தமிழுக்கு ஆபத்து என்ற வாதம் ஏன் முன்வைக்கப்படுகிறது? கிரந்த எழுத்துகள், தமிழர்கள் சமஸ்கிருதத்திலிருந்தும் பிற மொழிகளிலிருந்தும் சொற்களைக் கடன் வாங்குவதை ஊக்குவிக்கும்; தமிழின் தூய்மை கெடும் என்பது ஒரு வாதம். இந்த பயத்திற்கு ஆதாரம் இல்லை. எழுத வசதி இருக்கிறது என்பதால் எந்த மொழியும் அதிகமாகச் சொற்களைக் கடன் வாங்குவதில்லை. ஒரு மொழி பேசுபவர்கள் பிற மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்குவதற்கு கலாச்சார – அரசியல் அதிகாரம், சமூக மாற்றத்தின் தேவைகள், புதிய சிந்தனைகள், பொருள்கள் முதலான பல காரணங்கள் இருக்கின்றன. எழுதும் வசதி, அவற்றில் ஒன்று அல்ல.
தமிழில் உள்ள சொற்களையே கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுவது அதிகமாகும் என்பது மற்றொரு வாதம். பள்ளி ஆசிரியர், இதழாசிரியர், பதிப்பாளர் போன்ற தமிழை மேலாண்மை செய்வோரின் இடையீடு இல்லாமல், இணையத்தளம், வலைப்பூ போன்ற புதிய ஊடகங்களில் தமிழர்கள் எழுதும்போது பாயஸம், ஸன் டிவி என்று எழுதுவதைப் பார்க்கலாம். புதிய கிரந்த எழுத்துகள் ஒரு சொடுக்கில் கிடைத்தால், அவை தமிழ்ச் சொற்களில் வருவது அதிகமாகலாம். இது ப்ரியம், பத்ரிக்கை என்று இரண்டு மெய்யெழுத்துகளை இடையில் உயிரெழுத்து இல்லாமல் எழுதுவது போன்றது; இதற்கும் கிரந்த எழுத்து கைக்குக் கிடைப்பதற்கும் சம்பந்தம் இல்லை. இப்படி எழுதுவது தமிழைப் பற்றிய ஒரு மனநிலை; மரபை மீறும் மனநிலை. கல்லூரியில் படிக்கும் மகள், பையன்களோடு கைபேசியில் பேசுகிறாள் என்று அந்தச் சாதனத்தைக் கைக்குக் கிடைக்காமல் செய்தால், மனநிலை மாறப் போவதில்லை. தமிழ் தன் சனாதனத்தைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்து, மரபை நெகிழ்ச்சியாக்கி, அதன் ஈர்ப்புத்தன்மையைக் கூட்ட வேண்டும்.
ஒருங்குறியில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பதைத் தடுத்துவிட்டாலும், தமிழ்ச் சொற்களில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பதைத் தடுக்க முடியாது. ஒருங்குறியில் தனிப் பகுதியில் கிரந்த எழுத்து இருக்கப் போகிறது. தமிழ், ஆங்கில எழுத்துகளைப் போல, தமிழ், கிரந்த எழுத்துகளை ஒருத்தி தன் கணினியில் இறக்கிவைத்துக்கொண்டால், கிரந்த எழுத்துகளை வேண்டும்போது விசைப் பலகையை மாற்றும் சொடுக்கை உபயோகித்து எழுதலாம். தொழில்நுட்பம் மொழியின் மீது சமூகம் செலுத்தும் கட்டுப்பாட்டில் கீறல் ஏற்படுத்துகிறது. இது உலக நியதி.
தமிழின் முன் உள்ள ஒரு முக்கியமான கேள்வி இது. இலங்கைத் தமிழர்களையும் சேர்த்து, இன்று தமிழர்கள் உலகின் பல நாடுகளில் வாழ்கிறார்கள். அங்குள்ள சுற்றுச்சூழலில் உள்ளவற்றையும் உள்ளவர்களையும் அங்குள்ள வாழ்க்கை அனுபவங்களையும் தமிழில் தரத் தமிழ் எழுத்துமுறைக்கு நெகிழ்ச்சி தேவைப்படுகிறது. வெளிநாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் மீது நம்பிக்கை வர வேண்டுமென்றால் இந்த நெகிழ்ச்சி மிகவும் தேவை. இல்லையென்றால், அவர்களுடைய வாழ்க்கைக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு நைந்துபோகும். தமிழ்நாட்டிலேயே தமிழர்களுக்கு பொருளாதாரக் காரணங்களால் உலகத் தொடர்பு கூடக் கூட, அந்த வாழ்க்கை முறைக்குத் தமிழைப் பொருத்தத் தமிழுக்கு நெகிழ்ச்சி தேவைப்படும்.
தமிழ் எழுத்துக்கும் உச்சரிப்புக்கும் இடையே வேறுபாடு கூடிவருகிறது. பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இங்கே கூறவில்லை. தமிழ்ச் சொற்களிலேயே – இவை கடன் சொற்கள் மட்டுமல்ல – வல்லெழுத்துகளில் ஒலிப்புள்ள (voiced) உச்சரிப்பு இருக்கிறது. குரு, தோசை, பூரி ஆகிய சொற்கள் சில உதாரணங்களே. இந்த உச்சரிப்பு, படித்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த மாதிரி புதிய உச்சரிப்புகளைத் தமிழை எழுதும் முறையில் காட்டப் புது வரிவடிவங்கள் தேவை. எப்படிக் காட்ட வேண்டும் என்பது வேறு கேள்வி. காட்ட வேண்டுமா என்ற கேள்வியை ஒருங்குறியில் கிரந்த எழுத்துகள் பற்றிய சர்ச்சையில் எழுப்பி விவாதித்தால் அது தமிழுக்கு நல்லது. இந்த விவாதத்தைத் தமிழைப் பாதுகாக்கும் அரசியல் விவாதமாக ஆக்காமல், தமிழின் வன்மையைப் பெருக்கும் அறிவு விவாதமாக மாற்றினால், அது உலகமயமான அறிவுச் சமுதாயத்தின் புதிய சவால்களைச் சமாளிக்கத் தமிழ் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள உதவும்.
இந்தச் சர்ச்சை இன்னொன்றையும் வெளிக்கொணருகிறது. தமிழ் வளரும் பாதை, அரசிடமிருந்தும் பழைய சமூக நிறுவனங்களிலிருந்தும் விலகி, தமிழ்ச் சமூகத்திற்கு அப்பால் இயங்கும் தொழில்நுட்பம், அவற்றைக் கையாளும் உலகம் சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றின் பாதையில் சேரும் போக்கு தோன்றியிருக்கிறது.
===============================================
(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)
Popularity: 3% [?]
Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

2 Responses

  1. அண்ணாமலை சொல்கிறார்: “வெளிநாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் மீது நம்பிக்கை வர வேண்டுமென்றால் இந்த நெகிழ்ச்சி மிகவும் தேவை. இல்லையென்றால், அவர்களுடைய வாழ்க்கைக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு நைந்துபோகும்.”
    இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. யான் 22 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்கிறேன். என்னவோ இதுவரை இந்த அயல்நாட்டுப் பிள்ளைகள் இன்றைய எழுத்துகள் அனுமதிக்கும் வரம்புவரை மலை மலையாகத் தமிழ்மொழியில் எழுதிக் குவித்திருப்பதாகவும், இன்னும் நுணுக்கமாகத் தங்கள் அயல்நாட்டுச் சூழலைத் தெரிவிக்க இந்தச் சில கூடுதல் ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் கிட்டாததால் அவர்கள் தமிழ்மொழியில் இனிமேல் குவிக்கும் படைப்புகள் உடனே குன்றிப் போகும் நிலை இருப்பதாகவும் ஒரு மாயத் தேவையைத் தோற்றுவிக்கிறார். தமிழ் மொழிக்கு அப்படி ஒரு நெருக்கடி ஏற்படும் அளவு ஒன்றும் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்குத் தமிழில் பயிற்சியில்லை. பெற்றவர்களுக்கும் அக்கறையில்லை. கடவுளைப் போற்றும் வடமொழிச் செய்யுள்களைத் தப்பும் தவறுமாகப் பாடக் காட்டும் அக்கறைகூட இதில் இல்லை. வீட்டுப் பேச்சையே பிள்ளைகள் பலர் ஊமைகள் போல் பேசுகிறார்கள். அவர்களுக்கு இன்றைய எழுத்துகள் கொண்டு என்ன எழுத முடியுமோ அதை எழுதக் கோடியிலொரு பங்கும் திறமையில்லை. எனவே திரு.அண்ணாமலை இப்படி ஒரு மாயைப் பேச்சுப் பேச அடிப்படையில்லை. இவர் தாம் நினைக்கும் ஆய்வக நோக்கத்திற்காக மொழியில் விளையாட நினைக்கிறார். மேலும் சமுதாயப் பிடியில் தமிழ் மொழி சிக்கியிருப்பதாகப் பேசுவதும் உண்மையில்லை.
    - பெரியண்ணன் சந்திரசேகரன். அற்றலான்றா
  2. பேராசிரியர் அவர்களுடைய பல கருத்துகளுக்குத் தக்க சான்றுகளோ பின்புலமோ இருப்பதாகத் தெரியவில்லை.
    எடுத்துக்காட்டாக,
    //கிரந்த எழுத்துகளால் தமிழுக்கு ஆபத்து என்ற வாதம் ஏன் முன்வைக்கப்படுகிறது? கிரந்த எழுத்துகள், தமிழர்கள் சமஸ்கிருதத்திலிருந்தும் பிற மொழிகளிலிருந்தும் சொற்களைக் கடன் வாங்குவதை ஊக்குவிக்கும்; தமிழின் தூய்மை கெடும் என்பது ஒரு வாதம். இந்த பயத்திற்கு ஆதாரம் இல்லை. எழுத வசதி இருக்கிறது என்பதால் எந்த மொழியும் அதிகமாகச் சொற்களைக் கடன் வாங்குவதில்லை.//
    இதற்கு ஏதேனும் அடிப்படை உள்ளதா? ( இந்த பயத்திற்கு ஆதாரம் இல்லை. எழுத வசதி இருக்கிறது என்பதால் எந்த மொழியும் அதிகமாகச் சொற்களைக் கடன் வாங்குவதில்லை). எஞ்சின் என்று கடன்வாங்கி எழுத வசதி இருக்கும் பொழுதே வேண்டுமென்றே என்ஜின் என்று எழுதுகின்றன சில புகழ்பெற்ற ஊடகங்கள். கட்டுரையில் பொறியியல் என்று பல முறை எழுதும் ஊடகம் வேண்டுமென்றே இன்ஜினீயரிங் (இஞ்சினீரிங் கூட இல்லை).
    பஞ்சு என்னும் தமிழ்ச்சொல்லை பன்ஜு என்றும் காட்சி என்னும் தமிழ்ச்சொல்லைக் காக்ஷி என்றும் வலிந்து எழுதும் மக்களும் உள்ளனர். எடுத்துக் கூறினாலும் வேண்டுமென்றே கிரந்தம் கலந்தே கலந்து எழுதுகின்றனர்.
    இவை எழுத்துப்பிழை இல்லை என்பதைப் பல கோணங்களில்
    நிறுவ முடியும்.
    உலகத்தில் உள்ள அத்தனை மொழியையும்,, மொழி நுணுக்கங்களையும் தமிழ் எழுத்தின் அடிப்படையாக எழுதி
    அலச வேண்டும் என்று எண்ணுபவன் நான். ஆனால் இதற்காகத் தமிழின் நெடுங்கணக்கை மாற்ற வேண்டும் என்பது அறிவுடைமை ஆகாது என்று கூறுவேன்.
    பல கருத்துகளோடு ஒப்ப முடியவில்லை!!
  3. Your comment is awaiting moderation.
    <> எனச் சொல்லும் பொழுதே பேராசியர் அறிந்ததை மறைத்தோ அறியாமையாலோ சொல்கிறார் என்பது புரிகின்றது. தமிழின் தூய்மை கெட்டதற்கு அறிஞர்கள் பலர் பல சான்றுகளை அளித்திருந்தும் ஆதாரம் இல்லை என நெஞ்சறிந்த பொய் ஏன் என்றும் புரியவில்லை. நல்ல ஆராய்ச்சி அறிஞர் ஏன் தடம்புரள்கிறார் என்று தெரியவில்லை. மதிப்பிற்குரிய பெரியண்ணன் அவர்களும் செல்வா அவர்களும் மறுத்தமைக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன

வெள்ளி, 19 நவம்பர், 2010

கிரந்தம் வடிவில் வரும் எமன்: - தமிழக அரசியல்




‘என்றும் உள தென்தமிழ்’ எனக் கம்பன் பாடிய தமிழுக்குக் காலம் தோறும் தமிழ்ப் பகைவர்கள் கேடு செய்து வருகின்றனர். இப்பொழுது தமிழுக்கு எதிராக அவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டது கணிணியை. கணிணியில் கிரந்தப் பயன்பாடு வேண்டும் என்ற போர்வையில், தமிழ் ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதனை நம்மில் பலர் உணரவில்லை. இதுபற்றி, தனது ஆய்வுக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இருபது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துச் சிதைவை எதிர்த்துப் போராடிவரும் ஆட்சித் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவன்.

கணிணியச்சிடுவதற்குப் பயன்படுத்தும் அதே எழுத்துரு மற்றவர் கணிணியில் இருந்தால்தான் நாம் அனுப்புவனவற்றை அடுத்தவர் படிக்க முடியும். இந்தக் குறையைப் போக்க, தகவல் மாற்றமைப்பிற்கான இந்தியத் தரக்குறியீட்டு முறையும் (ISCII - Indian Standard Code for Information Interchange) தமிழ்த்தரக் குறியீட்டுமுறையும் (TSCII - Tamil Standard Code for Information Interchange) அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அடோப், ஆப்பிள், ஐ.பி.எம்., கூகுள், மைக்ரோசாப்டு முதலிய பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டிணைவான ஒருங்குறி அவையம்

(Unicode Consortium) அறிமுகப்-படுத்திய ஒருங்கீட்டு முறை மேலாதிக்கம் செலுத்தி-யமையால் நம் நாட்டு முறைகள் பின்தங்கின.

இப்பொழுது, உலக-மொழிகளின் கணிணிப் பயன்பாட்டிற்கு இந்த அமைப்பின் ஒதுக்கீடே அடிப்படை என்னும் நிலை வந்துவிட்டது. இந்த அமைப்பின் மூலம் கிரந்த எழுத்துகளைக் கணிணியில் பயன்படுத்த ஒதுக்கீடு வேண்டும்பொழுதுதான் தமிழுக்கு எதிரான சதி தெரியவந்திருக்கிறது.

கிரந்தம் என்றால் என்ன?

சமசுகிருத எழுத்துகளைத் தமிழ் முதலான மொழிகளில் எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட எழுத்துவகைதான் கிரந்தம். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அயல் மொழி எழுத்துகளை நீக்கி எழுத வேண்டும் என்று வரையறுத்துள்ளார். ஆனால், நாம் கிரந்தத்தைப் பயன்படுத்தியதால் எண்ணற்ற சமசுகிருதச் சொற்களும், பின்னர் அரபு, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களும் தமிழில் கலந்து தமிழைச் சிதைத்தன.

இந்த நிலையில்... மணிப்பிரவாள நடைக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடு, கிரந்தத்திற்கு ஒருங்குறியில் இடம் வேண்டி மத்திய அரசு 2 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தது. அதற்கிணங்க, மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை பல கூட்டங்களுக்குப் பின் செப்டம்பர் 2010&ல் இறுதிக் கூட்டம் கூட்டி முடிவெடுத்து, ஒருங்குறி அவையத்திற்கு 18.10.2010 அன்று பரிந்துரைத்துள்ளது. அதனை ஏற்பதற்கான முடிவெடுப்பு 06.11.2010 அன்று நடந்த ஒருங்குறி அவையத்தில் நடைபெறுவதாக இருந்தது.

அவ்வாறு அன்று அந்த முடிவை ஏற்றிருந்தால், பின் எந்த நாடு சொன்னாலும் அதனை அவ்வமைப்பு திரும்பப் பெற்றிருக்காது. நல்ல வேளையாகத் தமிழ்க் காப்பு அமைப்புகள் சார்பில் 2.11.2010 அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாயிலாக, அப்போதைய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசாவிடம் முறையிட்டதன் தொடர்ச்சியாக இந்த முடிவெடுப்பு 26.02.2011 அன்று நடைபெற உள்ள கூட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சுருக்கமாகக் கூறுவதாயின், மணிப்பிரவாள நடைக்காக, தமிழ் எழுத்துகளில்
1 2 3 4 என்பதுபோல் 26 கிரந்த எழுத்துகளைப் புகுத்த முதலில் திட்டமிட்டனர். பின் எ, ஒ, ழ, ற, ன ஆகிய தமிழ் எழுத்துகளையும் தமிழ் எண்களையும் கிரந்தத்தில் சேர்த்து 89 குறியீடுகளுக்காகக் கருத்துரு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ், விரிவாக்கத் தமிழாக வளர்ச்சி பெறுவதாகக் கதையும் கூறப்பட்டது. மேலும், தமிழ் எழுத்துகளையும் கிரந்தத்தில் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் அனைத்து மொழிகளையும் கிரந்த எழுத்து கொண்டே எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ‘இந்தியா ஒரே நாடாக விளங்க அனைத்து மொழிகளையும் எழுதக் கூடிய கிரந்த எழுத்துகளைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என்ற முறையை அறிமுகப் படுத்துவதுதானே இதன் உள்நோக்கம்?

இதை வீண் கவலை என்று ஒதுக்கிட முடியாது. செந்தமிழ் வழங்கிய சேரநாட்டில் கிரந்த எழுத்துகளின் செல்வாக்கைப் புகுத்தியதால்தான் தமிழ், மலையாளம் ஆயிற்று. ஆக, மீண்டும் ஒரு மலையாள மொழி தமிழ்நாட்டில் தோன்ற வேண்டும் என்ற அவலத்திற்கு வித்திடத்தானே கிரந்தத்தைப் புகுத்துகின்றனர். ஆனால், இதைத் தடுத்திட நாம் என்ன செய்தோம்? ஒருங்குறி அவையத்தில் தமிழ்நாடும் உறுப்பினராக இருந்தது. ஆனால், உறுப்பினர் கட்டணம் அமெரிக்கப் பணத்தில் 12,000 செலுத்தத் தவறியமையால், உறுப்பினர் தகுதியைத் தமிழ்நாடு இழந்து விட்டது. பல நூறு கோடி ரூபாய் செலவழித்துச் செம்மொழி மாநாட்டை நடத்திய நமக்கு இந்தத் தொகை பெரிதா?

மத்திய அரசின் மனித மையக் கணிணிப் பிரிவு (Human Centered Computer Division)இயக்குநர் சொர்ணலதா 2008&லிருந்து நடத்திய கூட்டங்களில், தமிழ்நாடு சார்பில் யாரும் பங்கேற்காததன் காரணம் என்ன? அப்படிப்பட்ட சூழலிலும் கூட்ட விவரத்தைத் தெரிவித்துக் கருத்து கேட்டுள்ளது மத்திய அரசு. உரிய காலத்தில் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் தமிழ் இணையப் பல்கலைக்கழக (தமிழ் இணையக் கல்விக் கழக) இயக்குநர் மறுமொழி அளித்துள்ளார். அதற்கு முன்னரே, தமிழ் இணைய வளர்ச்சிக்கு என அமைக்கப்பட்ட உத்தமம் (INFITT) சார்பிலும் ஒருங்குறி அவையத்திற்கு மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள கணிணி அறிஞர்களும் தமிழார்வலர்களும் இது குறித்து எச்சரித்தும்... தமிழக அரசு கவனத்திற்கும் பொது மக்களின் கவனத்திற்கும் முன்னரே இதை ‘உத்தமம்’ ஏன் கொண்டுசெல்லவில்லை? முதலமைச்சர் கவனத்-திற்குப் பிறரால் இது குறித்த தகவல்கள் கொண்டு செல்லப்பட்ட பொழுது 4.11.2010 அன்று ஒரு கூட்டம் கூட்டியுள்ளார். ஆனால், ஒத்தி வைக்க வேண்டும் என்ற ஒரு பக்க மடலை, மத்திய அரசிற்கு உடனே அனுப்பாமல், ஒருங்குறி அவையம் அமெரிக்காவில் கூடும் நாளான 6.11.2010 அன்று காலத்தாழ்ச்சியாக அனுப்பியது ஏன்?

ஒருவேளை, முன்பே இது தொடர்பான முடிவெடுப்பு ஒத்தி வைத்திருக்காவிட்டால் கிரந்தத்துடன் தமிழைக் கணிணி எழுத்துருப் பட்டியலில் ஒருங்குறிக்காக இணைக்கும் அவலம் அரங்-கேறியிருக்கும். தமிழாய்ந்த தமிழர்கள் முதல்வர் அருகே இருக்கும் பொழுதே இந்த நிலை!

இப்பொழுது கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதால், பஸ், ஜாமீன், மிக்ஸி, ஜாம், ஷவர், முதலான அயற்சொற்கள் நம்மிடையே புகுந்து விட்டன.

எனவே தமிழ் நிலைப்பதற்கு, நாம் இப்பொழுது உடனடியாக தமிழ்ப் பாடநூல்களில் இருந்து கிரந்த எழுத்துகளை அடியோடு நீக்க வேண்டும். கிரந்தம் அறியாத தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். இலங்கையில் அறிவியல் அகராதிகளில்கூடக் கிரந்த எழுத்துகள் இல்லையே! நம்மால் ஏன் முடியாது?

அடுத்த கூட்டம் அடுத்த ஆண்டுதான் என்று அமைதி காக்காமல், உடனே தமிழறிஞர்களையும் கலந்து பேசிச் சரியான கருத்துருவை அனுப்பி கிரந்தம் தொடர்பான முன்மொழிவைத் திரும்பப் பெற வேண்டும். இதைத்தான் உலகமெங்கும் உள்ள தமிழன்பர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

தமிழ்ப் பகைவர்கள் விழிப்புடன் இருக்கையில் தமிழ், தமிழ் என முழங்கிக் கொண்டிருப்பவர்கள் உறங்குவது ஏன்? தமிழக அரசு ஆவன செய்யுமா? கணிணி உருவில் வரும் இடரிலிருந்து கன்னித் தமிழைக் காப்பாற்றுமா தமிழக அரசு?



--நன்றி: தமிழக அரசியல்(25.11.2010) [பக்: 2-3]

வியாழன், 11 நவம்பர், 2010

"ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' அல்ல பிரச்னை...!


கணினி பயன்பாட்டில் தமிழ்மொழியின் வரிவடிவங்களை உலகம் முழுவதும் சிரமம் இல்லாமல் எழுதவும், படிக்கவும் வகைசெய்யும் டேஸ் 16 ((Tamil All Ch​ar​a​cter En​coding 16) மென்பொருளைப் பயன்படுத்த அனுமதி தந்த தமிழக அரசு, தற்போது அந்தப் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளது'' என்கிற தவறான கருத்து, பிரச்னையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் பரப்பப்படுகிறது. தமிழ் ஒருங்குறியின் "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' என்கிற ஐந்து எழுத்துகளும் முன்பே உள்ளன. இவை அல்லாமல், மேலும் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று இரமண சர்மா என்பவர் ஒருங்குறி ஆணையத்துக்கும் இந்திய அரசுக்கும் கடிதம் எழுதியதன் விளைவுதான் இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சைக்கே காரணம். தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கடிதம் எழுதியது "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ'  எனும் ஐந்து கிரந்த எழுத்துகள் தமிழில் இடம்பெறலாமா, கூடாதா  என்பது பற்றியன்று. ஒருங்குறி (ன்ய்ண்ஸ்ரீர்க்ங்) அட்டவணையில் புதிதாகச் சேர்க்கக் கருதும் கிரந்த எழுத்துப் பட்டியலில் தமிழுக்கே உரியதான "எ,ஒ,ழ,ற,ன' ஆகிய எழுத்தொலி வடிவங்களையும் சேர்ப்பது பற்றியதுதான்.  எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, முடிவை ஒத்திவைக்க வேண்டுமென்றுதான் முதல்வர் எழுதியுள்ளார். ஒருங்குறி ஆணையம் (ன்ய்ண்ஸ்ரீர்க்ங் ஸ்ரீர்ய்ள்ர்ழ்ற்ண்ன்ம்) உலக மொழிகளுக்கான எழுத்து வடிவங்களை எல்லைகள் கடந்து அனைவரும் கணினியில் கட்டுப்பாடற்றுப் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யும் ஓர் அமைப்பாகும். இதில் பல நாடுகளும் தனி நபர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை வாக்குரிமை பெற்ற உறுப்பினராக உள்ளது. இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்பளிப்புப் பெற்றுள்ள 22 மொழிகளின் எழுத்து வடிவங்களும் ஒருங்குறி ஆணையத்தின் அட்டவணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. வழக்கில் இல்லாத மரபுசார்ந்த வேதகால சம்ஸ்கிருதம், கிரந்த எழுத்துகள் ஆகியன ஒருங்குறி ஆணைய அட்டவணையில் இடம்பெற வேண்டுமென்று கருதப்பட்டன. கடந்த செப்டம்பர் 6-ம் நாள் கிரந்தப்புலமை மிக்கவர்களைக் கொண்டு நடத்தப்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைப் பரிந்துரையாக  ஒருங்குறி ஆணையத்துக்கு இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அனுப்பியுள்ளது. கிரந்தம் என்பது ஒரு தனிப்பட்ட மொழியன்று. வடமொழிக்குத்  தமிழர்கள் கண்ட எழுத்து வடிவம். கி.பி. 4-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்த எழுத்துமுறை. தேவநாகரி எழுத்து, பயன்பாட்டுக்கு வரத்தொடங்கிய பின்னர் கிரந்தத்தில் எழுதுவது மறைந்து போயிருக்கிறது. கிரந்த எழுத்துகளைக் கொண்ட ஏராளமான கல்வெட்டுகளும் செப்பேடுகளும் ஓலைச்சுவடிகளும் உள்ளன. வரலாற்றாவணங்கள் மட்டுமன்றித் திவ்வியபிரபந்தம் போன்ற தமிழ் நூல்களுக்கான ஈடு உரைகளும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளன.வடமொழி ஒலிவடிவங்களுக்குக் கண்டெடுக்கப்பட்ட கிரந்த எழுத்து வடிவங்களைக் கொண்டே தமிழ் நூல்களை எழுதிக்கொள்ளும் நடைமுறையும் உருவானது. அப்போது வடமொழிக்கென்று உருவாக்கப்பட்ட கிரந்த எழுத்தில் இடம்பெறாத தமிழ் ஒலிக்கான வரிவடிவங்களைச் சேர்த்துக்கொண்டு எழுதும் முறை, அதாவது கிரந்தமும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடை உருவானது.கிரந்த எழுத்துகளை ஒருங்குறி ஆணைய அட்டவணையில் இடம்பெறச் செய்வதன் வழி, பழைய எழுத்துமுறை பாதுகாக்கப்படலாம். பாதுகாப்பதன் வழியாக பழைய, இலக்கிய வரலாற்று ஆவணங்களைப் புரிந்துகொள்ளவும் தரவுகளாக்கிப் பயன்படுத்திக் கொள்ளவும் இயலும். எனவே ஒருங்குறி ஆணைய அட்டவணையில் பழைய கிரந்த எழுத்துகள் இடம் பெறுவதில் யாருக்கும் மறுப்பில்லை. ஆனால், பழைய கிரந்த எழுத்துப்பட்டியலில் இதுவரை இடம் பெறாத தமிழுக்கே உரிய எ,ஒ,ழ,ற,ன எனும் ஐந்து வடிவங்களை அப்படியே சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பயன்களும் விளைவுகளும் யாவை என்பதைப்பற்றி ஆய்ந்து பார்க்கக் காலம் தேவைப்படும் என்பதால்  தற்போதைக்கு முடிவை ஒத்திவைக்க வேண்டுமென்று கடிதம் எழுதப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் 6-ம் நாள் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கிரந்தப் புலவர்கள் 14 பேர்களில் முனைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, ரமண சர்மா (காஞ்சி சங்கரமடம்) ஆகிய இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழறிஞர்களோ, கல்வெட்டுத் தொல்லியல் அறிஞர்களோ இக்குழுக்கூட்டத்தில் இடம்பெறவில்லை. கிரந்தத்தில் தமிழ் எழுத்துகள் தேவை என்று கருதும் ஆதரவாளர்கள் முன்வைக்கும் வாதம் இதுதான்- ""கிரந்தம் தென்னிந்திய மொழிகளுக்கு மட்டுமன்றி வடமொழிகளுக்கும் உரிய எழுத்தாகப் பயன்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் இந்திய மொழிகள் அனைத்துக்குமான எழுத்தாகக் கிரந்த எழுத்துகளை வளர்த்தெடுத்துக் கொண்டால், ஒரே வரிவடிவத்தைக் கொண்டு பல இந்திய மொழிகளையும் படிக்கமுடியும். தமிழுக்கே உரிய தனி ஒலி வடிவங்களான ஐந்தும் தற்போது கிரந்தத்தில் இடம்பெறவில்லை என்பதால் தமிழைப் படிக்க முடியாது. எனவே தமிழுக்குரிய ஐந்து ஒலிவடிவங்களைக் ("எ,ஒ,ழ,ற,ன') கிரந்த எழுத்துப்பட்டியலில் புதிதாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் வளம் சேர்க்கும்.இனிவரும் காலங்களில் மின்-அஞ்சல், இணைய வலைப்பக்கம், மின்-இதழ்கள், இணைய நாளேடுகள் ஆகியவை, புதிதாக உருவாகும் கிரந்த எழுத்துகளிலேயே கணினியில் இடம்பெற வாய்ப்பு அமையும்''.  இந்த வாதம் நமக்கு ஏற்புடைத்தன்று.தமிழில் புது கிரந்தம் வேண்டாம் என்பதைப் போலவே கிரந்தத்திலும் புதிதாகத் தமிழ் எழுத்துகளைச் சேர்க்க வேண்டாம் என்பதுதான் நமது கருத்து.கடந்த காலத்து இலக்கிய வரலாற்று ஆவணங்களைப் படித்துப் பயன்படுத்திக் கொள்ளக் கடந்த காலத்துக் கிரந்த எழுத்துகளே போதுமானவை.புதிதாகக் கிரந்தத்தில் தமிழ் எழுத்துகள் ஐந்து சேர்க்கப்படுவதால் தமிழின் கடந்த கால நூல்களும், வரும் கால நூல்களும், இதழ்களும், பத்திரிகைகளும் தமிழ் கலந்த கிரந்த எழுத்திலேயே அமையும் நிலை ஏற்பட்டு, மீண்டும் மணிப்பிரவாள நடைக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும்.மற்ற தமிழ் எழுத்துகள்  பயன்படாமல் மறைந்து போகும். வரிவடிவம் என்பதும் ஒலிவடிவம் போன்றே மக்கள் மனநிலை உளவியல் சார்ந்தது. செயற்கையாகச் செய்யப்படும் மாற்றங்கள் காலைவெட்டிக் கொள்வது போன்றதாகும்.பிறமொழி ஒலிவடிவங்களுக்கு  உருவாக்கப்பட்ட வரி வடிவங்களைக் கொண்டு உருவாக்கியவர்களின் சொந்த வரிவடிவங்களைச் செயலிழக்கச் செய்யலாமா?எல்லாவற்றுக்கும் மேலாக, உலகில் பேச்சு மொழிகளாக உள்ள எல்லா மொழிகளுக்குமான ஒரே எழுத்துவடிவம் (ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் டட்ர்ய்ங்ற்ண்ஸ்ரீ அப்ல்ட்ஹக்ஷங்ற் (ஐடஅ) என்பதாகும். ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் டட்ர்ய்ங்ற்ண்ஸ்ரீ அள்ள்ர்ஸ்ரீண்ஹற்ண்ர்ய் 1897 முதல் மேற்கொண்ட முயற்சியின் தொடர்ச்சியாக 2005-ல் இவ்வடிவம் இறுதியாக்கப்பட்டுள்ளது. ஆங்கில எழுத்துகளைக் கொண்டே அமைக்கப்பட்ட இந்த வரிவடிவத்தை  ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் ஸ்ரீப்ண்ய்ண்ஸ்ரீஹப் டட்ர்ய்ங்ற்ண்ஸ்ரீள் ஹய்க் கண்ய்ஞ்ன்ண்ள்ற்ண்ஸ்ரீள் அள்ள்ர்ஸ்ரீண்ஹற்ண்ர்ய்  ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றைக்கு உலக மொழிகள் அனைத்துக்குமான ஒரே வரிவடிவமாக ஐடஅ  உருவாகிப் பயன்பாட்டில் உள்ளது. இதன் வழி உலகின் எந்த மொழி நூலையும் ஐடஅ  வரி வடிவத்தில் எழுதலாம். அவ்வாறு எழுதப்பட்ட வரிவடிவத்தை உலகின் எந்த மொழியின் வரிவடிவத்துக்கும் மாற்றிக் கொள்ளலாம்.இப்படியான இன்றைய வளர்ச்சி நிலையில் தென்னிந்திய மொழிகளுக்கென்று தனி எழுத்து வடிவம், இந்திய மொழிகளுக்கென்று தனி எழுத்து வடிவம் தேவை இல்லை.மேலும் ஒருங்குறி ஆணைய அட்டவணையில் ஒரே எழுத்துக்கு இரண்டு இடங்களில் இட ஒதுக்கீடும் தேவையற்றது. க,உ போன்ற எண்கள் தமிழ் எழுத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் கிரந்த எழுத்துப்பட்டியலில் இடம் பெறவேண்டாம் என்று எடுக்கப்படும் முடிவு, எழுத்துகளுக்கும் பொருந்துமே.எனவே உலகெங்கும் வாழும் தமிழர்களில் கணினியிலும் இணையத்திலும் புழக்கத்திலிருக்கும் தமிழர்களும், அமைப்புகளும் எழுப்பிய கருத்து வேறுபாடுகளைக் கருதிப் பார்த்துத்தான் முடிவை ஒத்திவைக்க மத்திய அரசுக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.இவை குறித்து, அறிஞர்களின் கருத்தறிய 3.11.2010 அன்று மாலை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், 17 பேர் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவைப் பேராசிரியர் ஆனந்தகிருட்டிணனிடம் 4.11.2010 அன்று மாலை 4.30 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரும் இதற்கு உடன்படவே, முதல்வரிடம் 4.11.2010 அன்று மாலை 5 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அன்றே (4.11.2010 தீபாவளி இரவு 8 மணி முதல் 9.30 வரை) முதல்வர் தலைமையில் புதிய தலைமைச் செயலகத்தில் முனைவர் வா.செ.குழந்தைசாமி, முனைவர் ஆனந்தகிருட்டிணன் முதலியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுத முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. முதல்வரும் கடிதம் எழுதியிருக்கிறார்.அண்மையில் நடைபெற்ற ஒருங்குறி ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படாமல் இப்பொருண்மை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. ஒருங்குறி அட்டவணையில் "ண,ன, ற' போன்ற தமிழ் எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளோடு தனி இடத்தில் உள்ளீடு செய்வது என்பதும் ஆபத்தானது. ஒருங்குறியில் இப்போது தமிழ்ப் பகுதியில் உள்ள எழுத்துகளைக் கணிப்பொறியில், இணையத்தில் பயன்படுத்துவதில் அது குழப்பத்தை ஏற்படுத்தும். "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' ஆகிய ஐந்து எழுத்துகளும் ஒருங்குறியும், தமிழ்ப் பகுதியும் ஏற்கெனவே தமிழ் எழுத்துகளோடு உள்ளீடு செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பிரச்னை "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' பற்றியதல்ல. ஒருங்குறி அட்டவணையில் புதிதாகச் சேர்க்கக் கருதும் கிரந்த எழுத்துப் பட்டியலில் தமிழுக்கே உரித்தான "எ,ஒ,ழ,ற,ன' ஆகிய ஐந்து எழுத்துகளைச் சேர்ப்பது பற்றியதுதான். தமிழுக்கு நல்லது செய்ய நினைத்த முதல்வரை வம்புக்கு இழுத்து சர்ச்சைக்கு உள்படுத்துவது நியாயமல்ல!(கட்டுரையாளர்: துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்).
கருத்துகள்

மிக நன்கு விளக்கியுள்ளார் முனைவர் ம.இரா.. இப்பொழுதாவது தினமணிக்குப் புரிந்திருக்குமா? அல்லது ஏற்கெனவே புரிந்துதான் திசை திருப்பினோம். எனவே, இது குறித்துக் கவலை இல்லை என எண்ணுகிறதா? 2.இதில் குறிப்பிட்டுள்ள ஆண்டு 1897ஆ 1987 ஆ? 3. கடந்த செப்.6 இல் மத்தியத் தகவல் தொழில் நுட்பத் துறை இது தொடர்பில் கூடி முடிவெடுத்த பின்னும் இவர்கள் தூ்ங்கியது ஏன்? 4. 3.11.10 இல் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (கல்வியியல் கழகம்) கூட இரு்ந்த கூட்டம்தான் த.ப. கூட்டமாக மாற்றப்பட்டது. 5. 3.11.10 இல் தமிழ்க்காப்பு அமைப்புகள் இது தொடர்பில் கூடடம் நடததியது. ஆனால் அதற்கு முன்னரே இவ்வமைப்பு (இச்செய்தியை ஊடகம் வழியாக வெளியே கொணர்நத) திரு வீரமணி மூலம் மத்திய அமைச்சர் திரு ஆ.இராசா அவர்களிடம் முறையிட்டு 6.11.10 இல் நடைபெறும் ஒருங்குறி அவையக் கூட்டத்தில் இருந்த இப் பொருண்மையை 26.2.2011 அன்று நடைபெறும் கூட்டததிற்கு ஒத்தி ‌வைத்ததது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
11/11/2010 3:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

புதன், 10 நவம்பர், 2010

கிறுகிறுக்கும் கிரந்த சர்ச்சை!

கிறுகிறுக்கும் கிரந்த சர்ச்சை!

தமிழா... தனித்தமிழா!

தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை... புதிய தலைமைச் செயலகத்தில் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் கருணாநிதி.
''இணையத்தில் தமிழை அனைவரும் எளிதில் தட்டச்சு செய்யவும் படிக்கவும் ஒரே
மாதிரியான ஒருங்குறி (யூனிகோட்) முறையில், தமிழ் எழுத்துருக்களுடன் தமிழில் இல்லாத உச்சரிப்பைப் பயன்படுத்துவதற்காக, கிரந்த எழுத்துகளை புதிதாக (உதாரணமாக தமிழில் 'க' என ஒரே எழுத்து, உச்சரிப்புதான் உள்ளது. ஆனால், நான்கு வகை 'க' உச்சரிப்புக்கான கிரந்த எழுத்துகள் உண்டு) சேர்க்கவேண்டும். மேலும் கிரந்த எழுத்துகளுக்குக் கூடுதலாக இடம் ஒதுக்குவதுடன், 'எ, ஒ, ழ, ற, ன' ஆகிய தமிழ் எழுத்துகளையும் சேர்க்கவேண்டும்'' என்று முன்வைக்கப்பட்ட கருத்தை மத்திய அரசு ஏற்று, கன்சார்ட்டியத்துக்கு அனுப்பியது. இதனை ஆய்வு செய்வதற்காகவே இந்தக் கூட்டம். அதையடுத்து, இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் உள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஒரு கடிதமும் அனுப்பினார், முதல்வர்.
கணினித் தமிழ் அறிஞர்கள் சிலர், ''வெவ்வேறு எழுத்துருக்களை பயன்படுத்துவது மாறி, யூனிகோட் எழுத்துருவின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அந்த முறையைக் காலத்துக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த 'யூனிகோட் கன்சார்ட்டியம்' அமைப்பு செயல்படுகிறது. யூனிகோட் முறையில் தமிழுக்கான இடத்தை அதிகரிப்பது தொடர்பாக, கடந்த 6-ம் தேதி நடக்க இருந்த கன்சார்ட்டியத்தின் கூட்டத்தில் முடிவெடுக்க இருந்தனர். இதற்காக, மத்திய அரசு அனுப்பிய கருத்துதான் பிரச்னைக்குக் காரணம். யூனிகோடைப் பொறுத்தவரையில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழிகளின் எழுத்துருக்களுக்கு ஏற்கெனவே தனித்தனியான இடங்கள் உள்ளன. அப்படியிருக்க, சம்ஸ்கிருதம் கலந்த உச்சரிப்புக்காக கிரந்த எழுத்துகளுக்குத் தனி இடம் ஒதுக்குவதும், தமிழுக்கான இடத்தில் இவற்றுக்கு இடம் கேட்பதும் சரியல்ல. தனித்தன்மை மிக்க தமிழின் தூய்மையைக் கெடுக்க இப்படியரு முயற்சி நடக்கிறது. இதைவிட்டால், தமிழ் மட்டும் அல்ல, பிற திராவிட மொழிகளையும் விட கிரந்தம் மேல்நிலைக்கு வந்து, திராவிட மொழிகள் அதன் துணைமொழிகள் போன்று ஆகிவிடும். தமிழகத்தைப் பொறுத்தவரை நாளைக்கு தமிங்கிலத்தை மனதில் கொண்டும் தனி எழுத்துகள் உருவாகும் அபாயமும் ஏற்படும்...'' என்றனர் கொதிப்பாக.
தமிழுக்கு எதிரானதாகக் கூறப்படும் 'கிரந்தக்கலப்பு' கருத்துருவை, மூன்று மாதங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார்கள். சம்பந்தப்பட்ட துறையை கவனிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் கவனத்துக்கு இது போகவில்லையா? இப்போது அவசர அவசரமாகக் கூட்டம் போடும் தமிழக அரசு, முன்பே தமிழ் அறிஞர்கள் சுட்டிக்காட்டியும் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்? காலம் கடந்த காலத்தில் முதல்வர் கூட்டிய கூட்டத்திலும் தகுதியான இணையத் தமிழ் அறிஞர்களை அழைக்காதது ஏன்? தி.மு.க. எம்.பி. கனிமொழி, அவரின் கணவர் அரவிந்தன் ஆகியோர் கணினித் தமிழ் துறையில் செய்த பங்களிப்புதான் என்ன? செம்மொழி தமிழுக்கு மாநாடு நடத்தியதாக மார்தட்டிக்கொள்பவர்களுக்கு இதுதான் அழகா? என்றெல்லாம் வரிசையாகக் கேள்விகளை அடுக்குகிறார்கள், தமிழ் அறிஞர்கள். இதற்கிடையில், யூனிகோடில் தமிழுக்கான கூடுதல் இடம் பற்றிய முடிவு, வரும் பிப்ரவரிக்குத் தள்ளிவைப்பதாக கடந்த 2-ம் தேதியன்று கன்சார்ட்டியம் அமைப்பு அறிவித்துள்ளது.
- இரா.தமிழ்க்கனல்    
     
 

மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் தினமணி

மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் தினமணி தவறான செய்தியின் அடிப்படையில் இந்த ஆசிரியவுரையை அமைத்துள்ளது. இணையப் பக்கத்தில் இத்தவறு பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் முனைவர் பா.வளனரசு , முனைவர் பா.இறையரசன். முனைவர் தில்லைக்குமரன். முனைவர் நக்கீரன். முனைவர் அருள் நடராசன் என எண்ணற்றோர் தினமணிக்கும் தனியாக மடல்கள் அனுப்பியுள்ளனர். எனவே, தினமணி தன்னுடைய தவறான செய்தியை உணர்ந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். திரு வைத்தியநாதன் பைத்தியநாதன் போல் எழுத மாட்டார்.எனவே, எழுதியவர் மூலமே வருத்தம் தெரிவித்தல் சிறப்பாகும். தற்போது பாட நூல்களிலும் ஒருங்குறி தொடர்பான ஆணையிலும் உள்ள கிரந்த எழுத்துகளு்ம் அகற்றப்பட வேண்டும் என்னும் உணர்வை ஏற்படுத்திய வகையில் ஆசிரியவுரைக்கு நன்றி. தமிழ்க்காப்பு அமைப்புகள் சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2010 1:46:00 AM

செவ்வாய், 9 நவம்பர், 2010

தலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ?

தலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ?


கணினி பயன்பாட்டில் தமிழ்மொழியின் வரிவடிவங்களை உலகம் முழுவதும் சிரமம் இல்லாமல் எழுதவும், படிக்கவும் வகை செய்யும் டேஸ் 16 (TA​M​IL ALL CH​A​R​A​C​T​ER EN​C​O​D​I​NG​ 16) மென்பொருளைப் பயன்படுத்த அனுமதி தந்த தமிழக அரசு, தற்போது அந்தப் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி இக் கடிதத்தை எழுதியிருப்பதோடு, தன் கடிதத்தின் மீது தகவல் தொழில்நுட்பத் துறை மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை குறித்து தமக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் அறிஞர்களின் குழுவை அமைத்து, கலந்து ஆலோசித்து, பின்னர் இது தொடர்பான வேறு பரிந்துரை அனுப்பப்படும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் முதல்வர்.உலகம் முழுவதும் மின்அஞ்சல், குறுந்தகவல், தமிழ்ப் பதிப்புத்துறைக்குப் பயன்படும் இந்த ஒருங்குறி (யுனிகோட்) மென்பொருளைப் பரிந்துரைத்ததில் அப்படி என்ன இமாலயத் தவறு நேர்ந்துவிட்டது? ஒரு தவறும் இல்லை. இதில் பிரச்னை வெறும் ஐந்து எழுத்துகளின் வரிவடிவம்தான். அவை-ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ. இந்த ஐந்தெழுத்துகளும் சம்ஸ்கிருத வார்த்தைகள் என்பதாக முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சிலர் எழுப்பிய பிரச்னையின் காரணமாகத்தான் இப்போது இந்த டேஸ் 16 மென்பொருளுக்கான தமிழக அரசின் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு கூறுகிறார் முதல்வர்.இந்த ஐந்து வரிவடிவங்களும் தமிழர்களால் தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட வரிவடிவங்கள். தமிழில் சம்ஸ்கிருத வார்த்தைகள் மலிந்து மணிப்பிரவாளம் புழங்கிய காலத்தில், சம்ஸ்கிருதத்தில் இருந்த, ஆனால் தமிழில் இல்லாத ஒலிப்புகளுக்கான வரிவடிவம்தான் இவை. இந்த வரிவடிவம் வேறு எந்த வடமொழியிலும், அல்லது திராவிட மொழிக் குடும்பத்திலும்கூட கிடையாது. தமிழில்தான் இந்த ஐந்து எழுத்துகளும் துல்லியமான ஒலிப்புமுறைக்காக வரிவடிவம் தரப்பட்டன.இன்றைய நடைமுறையை உதாரணமாகச் சொல்வதென்றால், ஆங்கில எழுத்து ஊ-ல் தொடங்கும் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும்போது இப்போது நாம் முன்னொற்றாகப்  ஃ பயன்படுத்தி ஃபெயில், ஃபெலோஷிப், ஃபிரன்ட்ஸ் என்று எழுதுவதைப் போன்ற ஒரு வசதிக்காக உருவாக்கப்பட்டதுதான் மேற்சொன்ன 5 வரிவடிவங்களும். "பஸ் மோதி பசு மரணம்' என்பதை "பசு மோதி பசு மரணம்' என்று எழுதினால் எத்தனை பொருள் மாறுபாடு ஏற்படும்? அக்காரணம் கருதி, தமிழர் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவைதான் இந்த வரிவடிவம். சம்ஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்த அவசியமில்லாத ஒரு தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவது வரவேற்கத்தக்கதுதான். பாராட்டுக்குரியதுதான். தமிழ் உணர்வு உள்ளவர்கள் செய்ய வேண்டிய செயல்தான். இன்றைய நாளில் "பேருந்து மோதி பசு மரணம்' என்று எழுதவும் அதைப் பாமரரும் புரிந்துகொள்ளவும்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.  "காமாக்ஷியம்மன் கோயில்' என்பதுபோய், இப்போது "அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம்'  என்று எழுதும் நிலை உருவாகியுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த சம்ஸ்கிருத ஒலிப்புக்கான தமிழ் வரிவடிவங்கள்  தானே வழக்கொழிந்துபோகும் நிலை உருவாகலாம். ஆனால், இந்த வரிவடிவங்களுக்காகத் தமிழ் மொழியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நிறுத்திவைப்பது எந்த வகையில் சரியானது? மேலும், தமிழில் பஞ்சாங்கம், ஜோதிடநூல்கள் அச்சிடுவோர் இந்தச் சொற்களை, வரிவடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, இவை கணினியில் இடம்பெறாமல் தடுப்பது முறையாகுமா?மேலும், முந்தைய தலைமுறையின் மிகச்சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளை செம்பதிப்பாக வெளியிட வேண்டுமானால், அவர்கள் பயன்படுத்தியுள்ள இந்த வரிவடிவங்களை நீக்கிவிட்டு வெளியிடுதல் சரியானதாக இருக்குமா? ஒரு படைப்பில் "ஜன்மபூமி' என்றிருந்தால் அதை "சன்மபூமி' என்றும், "அருட்பெரும்ஜோதி' என்பதை "அருட்பெரும்சோதி' என்றும் வெளியிட்டால் அது செம்பதிப்பு ஆகுமா? ஜெயலலிதாவை செயலலிதா என்று எழுத முடியுமா? ஸ்டாலினை ச்டாலின் என்று அழைப்பதா? ரஜினி காந்தை ரசினி காந்த் என்றும், ஐஸ்வர்யா ராயை ஐசுவர்யா ராய் என்றும் அச்சிடுவதா? சம்ஸ்கிருத ஒலிப்பே இடம்பெறாத தமிழ்ச் சூழலை உருவாக்குதல் நன்று. ஆனால், தானே மெல்ல வழக்கொழிந்துவரும் 5 வரிவடிவங்களுக்காக உலகம் முழுவதும் இணைய தளத்தில் ஒன்றுபோல அனைத்துத் தமிழருக்கும் பயன்தரக்கூடிய மென்பொருளையே நிறுத்தி வைப்பது சரியல்ல. பெருவாரியான தமிழ் ஆர்வலர்களின் பேரக்குழந்தைகளின் பெயர்களை ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ இல்லாமல் உச்சரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது முதல்வருக்குத் தெரியாதா என்ன? தேவையில்லாத சர்ச்சைகளை தேவையே இல்லாத வேளையில் கிளப்பி, மக்களின் பார்வையைத் திசை திருப்புவது என்பது அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. இதுவும் அந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது மட்டும் தெரிகிறது. கண்ணெதிரில் தமிழை விழுங்கும் ஆங்கிலத்தைத் தமிழக அரசும், தமிழ்ச் சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் செத்துப்போன மொழியின், செத்தஉடலாக இற்றுக்கொண்டுவரும் 5 வரிவடிவங்களுக்காகத் தமிழக அரசு வேட்டியை வரிந்துகட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிறது. இதனால் யாருக்கு லாபம்?
கருத்துகள்

தமிழில் மேலும் கிரந்தத்தைப் புகுத்துவதையும் கிரந்தத்தில் தமிழச் சேர்த்துத் தமிழ் எழுத்துகளைக் கிரந்தமாகக் காட்டுவதையும்தான் உலகத்தமிழறிஞர்கள் எதிர்க்கின்றனர். அதற்கேற்ப முதல்வர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். நீங்களே குறிப்பிடும செத்துப் போன மொழியின் செத்த வடிவங்களுக்காக நீங்கள் ஏன் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்க வேண்டும் என விளக்குங்களேன். தமிழரின் தலையெழுத்து என்னவெனில் தமிழ் தொடர்பான பணிகளில் தமிழ்ப் பகைவர்களை அல்லது தமிழறியாதவர்களை அமர்த்துவது. எனவே, முதல்வர் அமைக்க இருக்கும்வல்லுநர் குழுவில் உங்களுக்கும் இடம் உண்டு என்று தெரிகிறது. தமிழே! நீ இன்னும் எத்தனைக்காலம்தான் பகைவர்களால் தாக்கப்பட்டுக் கொண்டே இருப்பாயோ! தினமணியில் இப்படி ஓர் உரையா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 3:22:00 AM
தினமணி புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு இவ்வாறு எழுதியுள்ளது. ஆனால், தினமணி தன் ஆரியப் புததியைக் காட்டி விட்டது எனப்பழிச் சொல் வரும். பிற மொழிச் சொற்களைக் கையாள வேண்டிய கட்டாய நேர்வு வரும் பொழுது அயலெழுத்துகளை நீக்கி நம் மொழியில் எழுத வேண்டும் என்ற தொல்காப்பியனாரின் கட்டளையை மீறியதால்தான் கிரந்த எழுத்துகள் உருவாகிப பல அயற்சொற்கள் புகுந்து தமிழ் சிதைந்து புதுமொழியாக உருவாகி அதனால் தமிழ் பேசும் பரப்பு குறைந்து புதிய மொழியினரும் அதைப் பேசுநரும் தமிழைப் பகையாகக் கருதும் இழிநிலையும் ஏற்ப்ட்டது. அந்த எழுத்துகளையே வரும் தலைமுறையினருக்குக் கற்பிக்காத சூழல் ஏற்பட்டால்தான் தமிழ் வளரும்; வாழும். கிரந்தத்திற்குத் தனியாக எழுத்துரு இருப்பதை எதிர்க்கவில்லை. தமிழில் மேலும் கிரந்தத்தைப் புகுத்துவதையும் கிரந்தத்தில் தமிழச் சேர்த்துத் தமிழ் எழுத்துகளைக் கிரந்தமாகக் காட்டுவதையும்தான் உலகத்தமிழறிஞர்கள் எதிர்க்கின்றனர். அதற்கேற்ப முதல்வர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். நீங்களே குறிப்பிடும செத்துப் போன மொழியின் செத்த வடிவங்களுக்காக நீங்கள் ஏன் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்க வேண்டும் என விளக்குங்க
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 3:17:00 AM
  இந்தத் தலையங்கம் மூலம் தினமணியின் இரண்டு ஆசைகள் நன்றாகத் தெரிகிறது ஒன்று, சமசுகிருதம் அழிந்துவிடகூடாது என்பது அடுத்து இந்தியை எதிர்த்துப் போராடிய தமிழர்கள் இன்னும் கிணற்றுத் தவளைகள்போல்  உள்ளார்களே என்ற கவலை
By ரிஜி.கரியாப்பட்டினம்
11/9/2010 3:15:00 AM
(continuation-2) Tamil language was well developed by then ruled great kings like Pandias or Cholas, who were true lovers of Tamil language. Those kings greatly respected saints and true scholars, who were also expert in Sanskrit language/grammar, to promote Tamil literature. This is preciously why Tamil literature is enormously enunciated with pure divinity and Manu Neidhi (Sanskrit words that depict true social justice). Therefore, Sanskrit is not so called ‘Annia (or Vada) Mozhi” but our true “Annai (or Thaai) Mozhi” – that is, with no doubt, Sanskrit is the mother language of all our Indian languages including Tamil. Therefore, respecting Sanskrit is just like respecting our own mother. Hope our great CM will also consider organizing a Maa-Nadu” (or in Sanskrit called Maha-Melana) for Sanskrit in Tamilnadu before other States take the credit.
By av
11/9/2010 3:14:00 AM
(continuation) If we carefully go through thousands of words in either Tamil or any other Indian language, we could sense the influence of Sanskrit. For example, “Karunanidhi” is a Sanskrit word. Similarly, “Dravida Munnetra Kazhagam” – the word “Dravida” itself is a Sanskrit word, which means south, This party’s symbol was emanated from Aryan symbol – that is “Udhaya Suryan” - two Sanskrit words. Both (Periyar) Ramasamy and Annadurai not only had their names in Sanskrit but also they belonged to Aryan race – (Mudaliars/Nayakars were Aryans who took administrative nature of work in a number ancient kingdoms. Tholkappiar, who wrote Grammar for Tamil language, was an Aryan. Without his great work, Tamil language would not have been compared with other classical language. Tamil language was well developed by then ruled great kings like Pandias or Cholas, who were true lovers of Tamil language. Those kings greatly respected saints and true scholars, who were also expert in Sanskrit
By av
11/9/2010 3:11:00 AM
Some researches well indicate that many Indian languages including Tamil, Marathi, Punjabi, Bengali or other such ancient languages were once spoken by different small groups of tribal then lived all over Indian subcontinent. Like English has influence in our day-to-day use (for example, words such as “bus”, “paper”, “road”, “bench”), several centuries back, Sanskrit language and associated culture had great influence with all our Indian languages and our way of life. Sanskrit is NOT a dead language. It is the source language of all Indo-European languages including contemporary Dravidian languages. If we carefully go through thousands of words in either Tamil or any other Indian language, we could sense the influence of Sanskrit. For example, “Karunanidhi” is a Sanskrit word. Similarly, “Dravida Munnetra Kazhagam” – the word “Dravida” itself is a Sanskrit word, which means south, This party’s symbol was emanated from Aryan symbol – that is “Udhaya Suryan” - two Sanskrit words. Both
By av
11/9/2010 3:09:00 AM
தலையங்கம் எழுதிய தமிழ் தெரியாத மதிப்பிற்குரிய ஆசிரியரே, அருட்பெருஞ்சோதி எப்பொழுது அருட்பெரும்ஜோதி ஆனது?
By Thenramizh Irumporrai
11/9/2010 1:46:00 AM
உங்கள் தலையங்கம் மிகவும் ஏற்புடையதே!. மொழி வளர, பிற மொழிச்சொல்கழையும் உள வாங்குதல் உரம் சேர்க்கும். ஆங்கிலத்தில் இல்லாத பிற மொழிச்சொற்களா? சில, உச்சரிப்புகளை இப்போது உள்ள தமிழ் எழுத்துகளால் கொண்டுவர இயலாது. என்னை பொறுத்த வரை இவ்வைந்து எழுத்துகளுடன், எஃப் உச்சரிக்க கூடிய ஒரு வரிவடிவமும் உருவாக்குவது தமிழை செழுமைப்படுத்த உதவும்.
By Suresh M
11/9/2010 1:15:00 AM
Tholkappiyar accepted these words. Pure Tamil does not require these words .But in today world it is necessary as we have to express many other Tamilized Words. Let us Tamilize these words . we make hue and cry for small compromise but English words have already replaced Tamil words in day to day life. Even in villages people go for " condolence " not YELAVU. words like FUNCTION, Tiffen,Rice, Water, DOOR, DAY,NIGHT are used by Tamils instead of original tamil words.T
By krishnan
11/9/2010 12:51:00 AM
தினமணி கூறுவதுபோல் நாளடைவில் வழக்கழிந்து போகும் இந்த 5 எழுத்துகர்ளூக்காக தமிழுக்கு ஏற்படும் சிற்ப்பை தடுக்கலாமா முதல்வர். ஷ்பெக்ர்ம் மறைக்க காமன்வெல்த் ஊழல் போல் வருகின்ற சட்டசபை தேதலுக்காக முதல்வர் நடத்தும் நாடகமே இது. புரிந்து கொள்வானா தமிழன்?
By Pa.Tha.Velan
11/8/2010 11:51:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English v