houses லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
houses லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 நவம்பர், 2012

உலகத் தரத்தில் 25,00,000 வீடுகள்

http://img.dinamalar.com/data/gallery/gallerye_210425904_584944.jpg


தமிழகத்தில் அடுத்த, 10 ஆண்டுகளில், 25 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்துக்காக, மாவட்டம்தோறும், 100 ஏக்கர் வரை, நிலம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலங்களை தேர்வு செய்யுமாறு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.தமிழகத்தில், "அனைவருக்கும் வீடு' என்ற நோக்கத்துடன், வீட்டு வசதி வாரியம், 1961ம் ஆண்டு துவங்கப்பட்டது. இவ்வாரியத்தின் மூலம் இதுவரை, நான்கு லட்சம் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு, 1.25 லட்சம் குடியிருப்புகளும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு, 93 ஆயிரம் வீடுகளும், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, 72 ஆயிரம் வீடுகளும் இதுவரை ஒதுக்கப் பட்டுள்ளன.
புதிய திட்டம் இல்லை

இருப்பினும், நகர்மயமாதல், மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக, குடியிருப்பு தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், ஆட்சேபகரமான பகுதிகள், நகர்ப்புற பகுதிகளில் அனுமதியில்லாத குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதனால், நகர்ப்புற பகுதிகளில், சமமற்ற சூழல் உருவாகி வருகிறது. வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் திட்டங்கள், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லை.புதிய திட்டங்களை செயல்படுத்த தேவையான நிலம்,
வீட்டு வசதி வாரியத்திடம் இல்லை. இதனால், கடந்த சில ஆண்டுகளாக, பெரிய அளவிலான புதிய வீட்டு வசதி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், நியாயமான விலையில், அனைத்து வசதிகளுடன் வீடு கிடைப்பது, பெரிய சிக்கலாகஉருவாகியுள்ளது.

தொலைநோக்கு திட்டத்தில்...


இந்நிலையில், தமிழக அரசின், "விஷன் - 2023' தொலைநோக்கு திட்டத்தில், அடுத்த, 10 ஆண்டுகளில், உலகத்தரத்தில், 25 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கு தேவையான குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மருத்துவ வசதி போன்ற அனைத்து வசதிகளையும் செய்ய, 75,000 கோடி ரூபாய் முதலீடு பெறப்படும் என, குறிப்பிடப் பட்டுள்ளது.தொலைநோக்கு திட்டத்தில் குறிப்பிடப்பட்ட, திட்டங்களைச் செயல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கலெக்டர்கள் கூட்டம்

இது குறித்து, வீட்டு வசதித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: "விஷன் - 2023' அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, உலகத்தரத்தில், 25 லட்சம்
புதிய வீடுகள் கட்ட, தேவையான நிலங்களை பெறுவது முக்கிய பிரச்னையாக உள்ளது.எனவே, இத்திட்டத்துக்காக மாவட்டம்தோறும், 50 முதல் 100 ஏக்கர் நிலங்களை, தேர்வு செய்து அரசுக்கு தெரிவிக்குமாறு, மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.இவ்வாறு தேர்வு செய்யப்படும் நிலங்களை, கையகப்படுத்தும் நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக, மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. இது தொடர்பான கடிதங்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

-
நமது செய்தியாளர், தினமலர்

வெள்ளி, 12 அக்டோபர், 2012

மின்மாற்றிகளில் தானியங்கி அலகு கணணக்கி : வீடுகளிலும் பொருத்த மின்வாரியம் திட்டம் - automatic reading meter

மின்மாற்றிகளில் தானியங்கி அலகு  கணக்கி :வீடுகளிலும் பொருத்த மின்வாரியம் திட்டம்

ஈரோடு: ஈரோடு மண்டல மின்வாரிய டிரான்ஸ்பார்ம்களில், மின் இழப்பை (லைன் லாஸ்) கணக்கிட, தானியங்கி ரீடிங் மீட்டர் பொருத்தும் பணி துவங்கியது. தமிழகத்தின் மொத்த மின் நுகர்வில், 30 முதல், 40 சதவீதம் வினியோகத்தின் போது, லைன் லாசில் வீணாகிறது. இதை சரி செய்தால் மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளில் மின்வாரியம் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக லைன் லாசை துள்ளியமாக கணக்கிடும் வகையில், மாநிலம் முழுவதும், மின் வினியோகத்துக்கு பயன்படும், டிரான்ஸ்பார்மர்களில், "தானியங்கி ரீடிங் மீட்டர்' பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு, மீட்டர் கொள்முதல் பணிகள் நிறைவடைந்து, பொருத்தும் பணி துவங்கியுள்ளது. ஈரோடு மண்டலத்தில், ஈரோடு, சேலம், கோபி, மேட்டூர், நாமக்கல் ஆகிய மின் பகிர்மான வட்டங்கள் உள்ளன. ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில், 4,000க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்ம்கள் உள்ளன. இவற்றில், தேர்வு செய்யப்பட்ட, 878 டிரான்ஸ்ஃபார்ம்களில் அக்கருவி பொருத்தும் பணி நேற்று துவங்கியது.

டிரான்ஸ்பார்மின் ஒரு பகுதியில், மீட்டரை பொருத்திவிடுகின்றனர். டிரான்ஸ்பார்மரில் இருந்து வினியோகிக்கப்படும் மின்சாரத்தின் அளவு மீட்டரில் பதிவாகும். இந்த ரீடிங் பதிவுகளை வழக்கம் போல, ஆட்கள் நேரில் சென்று குறிப்பெடுக்காமல், நேரடியாக மின்வாரிய அலுவலக கணினிக்கு வருவது போல, மீட்டரில், "சிப்' ஒன்றை பொருத்தி கட்டுப்படுத்தும் தானியங்கி அமைப்பையும் ஏற்படுத்துகின்றனர். டிரான்ஸ்பார்ம் ரீடிங்கையும், வீடுகளிலுள்ள மீட்டரில் வழக்கமாக எடுக்கும் ரீடிங் அளவையும், ஒப்பிட்டுப் பார்த்து, "லைன் லாஸ்' அளவை துள்ளியமாக தெரிந்துகொள்வர். அதன்பின், தொழில்நுட்ப ரீதியாக லாஸை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், முதற்கட்ட டிரான்ஸ்பார்ம்களில் ரிமோட் கன்ட்ரோல் ரீடிங் எடுக்கப்படுகிறது. ஈரோடு மட்டுமின்றி, இம்மண்டலத்திலுள்ள, பிற மின் பகிர்மான வட்டங்களிலும் டிரான்ஸ்பார்மர்களில், "தானியங்கி ரீடிங் மீட்டர்' பொருத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்த பின், வீடுகளிலுள்ள மின்வாரிய மீட்டர்களிலும், "சிப்' பொருத்தி, தானியங்கி ரீடிங் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: முதற்கட்டமாக டிரான்ஸ்பார்ம்களில், தானியங்கி ரிடிங் மீட்டர் பொருத்தி, "லைன் லாஸ்' கணக்கி பணி துவங்கியுள்ளது. இப்பணிகள் முழுமைப் பெற்று, தானியங்கி ரீடிங் முறை சிறப்பாக நடந்தால், வீடுகளிலுள்ள மீட்டர்களிலும், "சிப்' பொருத்தி, தானியங்கி ரீடிங் செய்யப்படும். இதற்கு, இன்னும் ஆறு மாதம் ஆகலாம். இதன்மூலம் நேரடியாக சென்று ரீடிங் எடுக்க வேண்டியதில்லை. ஊழியர் பற்றாக்குறை பிரச்னையும் இருக்காது. ஓரிரு ஆண்டுக்கு பின்பே அனைத்து வீடுகளிலுள்ள மீட்டர்களை தானியங்கி ரீடிங் வசதியை செய்யலாம் என்றனர்.


திங்கள், 27 ஆகஸ்ட், 2012

இருப்புப் பாதைகள் அருகே வீடுகள் கட்டித்தர திட்டம்







இருப்புப் பாதைகள் அருகேயுள்ள குடிசைவாசிகளுக்கு வீடுகள் கட்டித்தர தொடரி அமைச்சகம் திட்டம்
புதுடில்லி:ரயில் பாதைகள் அருகேயுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, குடிசைவாசிகளுக்காக, மும்பை, டில்லி மற்றும் திருச்சியில், குறைந்த செலவில் வீடுகளை கட்ட, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, டில்லி யில், ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில் பல இடங்களில், ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், 1.34 லட்சம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதாவது, ரயில்வேக்கு சொந்தமான மொத்த நிலங்களில், 981 எக்டேர் நிலங்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.வடக்கு ரயில்வே மண்டலத்தில், 220 எக்டேரும், வடகிழக்கு எல்லை ரயில்வே பகுதியில், 167 எக்டேரும், தென் கிழக்கு மண்டல ரயில்வே பகுதியில், 162 எக்டேர் நிலங்களும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளன.சீரான மற்றும் விரைவான ரயில் போக்குவரத்திற்கு தடையாக, ரயில் பாதைகளை ஒட்டியே, இந்த ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்றவும், அந்த இடங்களில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு, மாற்றிடமாக, குறைந்த செலவில் வீடுகளை கட்டிக் கொடுக்கவும், ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கு, "சுகி கிரஹா' என, பெயரிடப்பட்டு, டில்லி, மும்பை நகரங்களில் இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. மும்பை நகரில், 22 கோடி ரூபாய் செலவிலும், டில்லியில், 11 கோடி ரூபாய் செலவிலும், குறைந்த செலவிலான வீடுகள் கட்டப்பட உள்ளன.இந்த திட்டமானது, 2011-12ம் ஆண்டு, ரயில்வே பட்ஜெட்டிலேயே, அப்போதைய, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்டது. இந்த வீடு கட்டும் திட்டம், நாட்டில் முதல் கட்டமாக, டில்லி, மும்பை, திருச்சி, சீல்தாக் மற்றும் சிலிகுரி ஆகிய ஐந்து இடங்களில் செயல்படுத்தப்படும்.

இதுதவிர, இந்த ரயில் பாதைகளை ஒட்டிய ஆக்கிரமிப்பு பிரச்னை, மத்திய நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குடிசை வாசிகளை மாற்ற, மாநில அரசுகளுடன் இணைந்து, மேற்கொள் ளப் படும், "ராஜிவ் அவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழும், ரயில் பாதைகளுக்கு அருகே வசிப்பவர்களுக்கு வீடுகள் தர வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.- தினமலர்