புதன், 23 டிசம்பர், 2009

மாநிலங்கள் பிரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்



சென்னை, ​​ டிச.​ 22: ""மாநிலங்கள் பிரியாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்று தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.சென்னை சென்ட்ரல்}​ மங்களூர் விரைவு ரயில் ​(வாரத்தில் 6 நாள்)​ நீட்டிப்பு சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்.இதன்பின் விழா மேடையில் இருந்தவாறு "விடியோ கான்பரன்ஸ்' முறையில்,​​ திருநெல்வேலி}​ பிலாஸ்பூர்,​​ ஜம்முதாவி}மதுரை ரயில் சேவை திருநெல்வேலி வரை நீட்டிப்பு ​(வாரம் இருமுறை)​ மற்றும் ராமேசுவரம்}​ கன்னியாகுமரி ஆகிய ​அதிவிரைவு ரயில் சேவைகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.​ அப்போது அவர் பேசியதாவது:தமிழகத்தில் ரயில் வசதிகள் மேம்படுத்தப்பட்டாலும்,​​ இன்னமும் அதிகமான அளவுக்கு பல ஊர்களுக்கு இந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.இப்போது ஜப்பான்,​​ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தண்டவாளத்தில் ரயில் செல்வது இல்லை.​ அதற்கும் நான்கு விரல் உயரத்துக்கும் மேலே ரயில் போகிறது.​ சில நேரங்களில் நிர்வாகத்துக்கும்,​​ அரசுக்கும் தொடர்பு இல்லாமல் இயங்குவதைப் போல ரயிலும் போகிறது.​ இத்தகைய விஞ்ஞான வளர்ச்சியால் வேகமான,​​ ​எளிதான ரயில் சேவை வசதி வர வேண்டும்.பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் சேர்ந்ததுதான் ஒரு ரயில்.​ நாம் பெட்டியில் ​இருக்கிறோம். ​ நாம் ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்தால் முன்னால் இருக்கும் என்ஜின் இழுத்துச் செல்கிறது.​ இதுதான் ஒரு நாட்டின் அமைப்பு.தில்லி "என்ஜின்'...இந்தியாவைப் பொறுத்தவரை நமக்கு என்ஜினாக இருப்பது தில்லி.​ அது நம்மை இழுத்துச் செல்கிறது.​ அந்த என்ஜினுடன் இணைக்கப்பட்ட பெட்டிகளாகத் தான் மாநிலங்கள் உள்ளன.​ அதில் ஒரு மாநிலம் தான் தமிழகம்.நான் இப்படிச் சொல்லுகிற காரணத்தால்,​​ இந்தப் பெட்டி தனியாக வர வேண்டும் என்பதல்ல.​ சில பெட்டிகளிலே கோளாறு உள்ளது.​ அந்தக் கோளாறை,​​ நீக்கி அந்த பெட்டிகளை தன்னோடு இழுத்துச் செல்லும் லாவகத்தை இந்தியாவை ஆளும் மத்திய அரசு பெற வேண்டும்.அதே நேரத்தில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று கழன்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.​ கழன்றுபோனால் பிறகு இந்தியா என்ற ஒரு தேசிய நிலை நமக்குக் ​கிட்டாமல் போய் விடும்.இந்தியா பெரிய நாடாக வலிமையாக இருப்பதால்தான் வல்லரசுகள் நம்மோடு கைகோர்த்து வருகின்றன.​ நம்மோடு நட்புடன் பழகி,​​ நாம் ஆதரித்தால் தான் உலக நாடுகளில் ஒரு நாடாக மலரும் நிலை உள்ளது.​ இதை மற்ற நாடுகள் உணர்ந்துள்ளன.அந்த பலத்தை,​​ இந்த ரயில் பெட்டிகள் மூலம் நாம் உணர வேண்டும்.​ பெட்டிகளை இழந்தால் என்ஜின் மட்டும் தனியாக போக முடியாது.​ தனியாகப் போகும் என்ஜினில் யாரும் ஏறமாட்டார்கள்.எனவே,​​ பெட்டிகளையும் பாதுகாத்து என்ஜினையும் பாதுகாத்து ரயிலை இயக்க வேண்டும்.​ ரயில் பாதையால் அனைத்து பகுதிகளையும் இணைத்தால் அது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்'' என்றார் முதல்வர் கருணாநிதி.இந்த விழாவில் ரயில்வே இணை அமைச்சர் இ.​ அகமது,​​ மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,​​ கனிமொழி எம்.பி,​​ மாநகர மேயர் மா.​ சுப்பிரமணியன்,​​ தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

நம்மோடு நட்புடன் பழகி,​​ நாம் ஆதரித்தால் தான் உலக நாடுகளில் ஒரு நாடாக மலரும் நிலை உள்ளது.​ ஆனால் நம்முடன் நட்புடன் பழகிய ஈழத் தமிழ் நாட்டைச் சிதைத்தது ஏன்? நாம் ஆதரித்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்ற உண்மையை உரைத்ததற்குப் பாராட்டுகள். ஆனால் நட்பு நாடி வந்தவர்களை விரட்டி யடித்து விட்டு வஞ்சகர்களுடன் கைகோத்துக் கொத்துக் கொத்தாகவும் எரி குண்டுகள் மூலமும் வஞ்சகச் செயல்கள் மூலமும், வெண்கொடி ஏந்தி வரச் செய்தும் அழித்தொழிததது ஏன்? மனச் சான்று எட்டிப பார்ப்பதால் காங்கிரசுடன் உறவு முறியும் பொழுது உண்மை வெளிவரும். ஆனால் உயிரிழந்த நம்மவர்கள் மீண்டு வருவார்களா? உடலுறுப்புகளை இழந்தோரும் உடைமைகளை இழந்தோரும மீள் நிலைக்குத் திரும்புவார்களா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/23/2009 3:21:00 AM

பெட்டிகளில் பயணம் செய்யப் பதிவு செய்தோர் மிகுதியாக இருக்கும் பொழுது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதில்லையா? அது போல் சூழலுக்கேற்பத்தான் முடிவெடுக்க வேண்டும். உவமைகள் செய்தியைப் புரிந்து கொள்ள உதவலாமே தவிர உண்மையாகிவிடாது. தமிழ் நாட்டைப் பிரிக்கலாமா அல்லது வேண்டாவா எனக் கூறும் உரிமை நமக்கு உண்டு. பிற மாநிலங்களைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலத்தவர்தான் முடிவெடுக்க வேண்டும். தலையிடும் உரிமை பிற மாநிலத்தவருக்குக் கிடையாது. 1947க்குப் பின்னர்ப் புதிய மாநிலங்கள் பல உருவாகியிருக்கும் பொழுது மேலும் மாநிலங்கள் பிரிக்கப்படுவது கொலைபாதகச் செயலன்று. அதேநேரம் பிரித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமுமன்று. எனவே, உரிய மாநிலததவர் அமைதியான வழீயில் அணுகி உரிய தீர்வுகளை எட்ட வேண்டும். பிற மாநிலத்தவர் தலையிடுவதற்கான உரிமையைத் தரக் கூடாது. மாநிலங்களைப் பிரிக்கக் கூடாது என்றால்தான் இந்தியன் என்ற தேசப்பற்று முத்திரை கிடைக்கும் என எண்ணுவது அறியாமை அல்லவா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/23/2009 3:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக