bharathi vizhaa லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
bharathi vizhaa லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 31 மே, 2012
கொழும்பு பாரதி விழாவைப் புறக்கணிப்பீர் – தமிழ்ப் படைப்பாளிகள்.
கொழும்பு பாரதி விழாவைப் புறக்கணிப்பீர் – தமிழ்ப் படைப்பாளிகள்.
கொழும்பு
தமிழ்ச்சங்கமும் சென்னை பாரதியார் சங்கமும் கொழும்பு நகரில் நடத்தவுள்ள
பாரதியார் விழா தொடர்பான தமிழ்ப் படைப்பாளிகளின் எதிர்ப்பை
தெரிவித்துள்ளார்கள்.
கொழும்பில் பாரதியார் விழா நடத்துவதாக
கொழும்பு தமிழ்ச் சங்கமும் சென்னை பாரதியார் சங்கமும் அறிவித்துள்ளன.
இந்தியத் தூதரக உயர் அதிகாரி ஒருவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது
இந்த விழா குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ராஜபட்சே அரசின் திட்டமிட்ட தமிழினப்
படுகொலையையும் தமிழர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளையும் பெரும்பாலான
உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. இலங்கையைக் காப்பாற்ற இந்தியா தொடர்ந்து
முயன்றாலும் உலக அரங்கில் இலங்கையின் கொலைவெறிக்கு எதிராக வலுவான எதிர்ப்பு
அலை எழுந்துள்ளது. இந்த நிலையில் ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச்
செய்வோம்’ என்கிற முழக்கத்துடன் கொலைகார ராஜபட்சேக்களின் தலைநகரில் இந்திய
அதிகாரிகளை வைத்துக்கொண்டு விழா எடுப்பது பாரதி என்கிற போராளிக் கவிஞனின்
புகழுக்கும் பெருமைக்கும் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும். இனவெறி
இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது போன்ற
ஒரு மாயத் தோற்றத்தை உலக அரங்கில் ஏற்படுத்துவதைத் தவிர இந்த விழா வேறெந்த
விளைவையும் ஏற்படுத்தாது. பாரதி அன்பர்கள் இதை உணரவேண்டும்.
முள்ளிவாய்க்காலில் துடிக்கத் துடிக்கக்
கொன்று குவிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் மரண ஓலத்தை
உலகின் கவனத்துக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வரும்
நிலையில் தேமதுரத் தமிழோசையைப் பரப்பப் புறப்படுவது பொருத்தமற்றது
என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
பாரதி வெறும் கவிஞனில்லை. வீர சுதந்திரம்
வேண்டி நின்ற விடுதலைப் போராளி. அச்சம் தவிர் ஆண்மை தவறேல் – என்று
தமிழினத்துக்குத் துணிச்சலைப் போதித்தவன். கொடுங்கோலரசுக்கு ஒருபோதும்
அடிபணியாதவன். ஒன்றரை லட்சம் தமிழரைக் கொன்று குவித்ததைக் கொண்டாடிக்
கொண்டிருக்கும் கொழும்பைக் காப்பாற்ற அந்த மகாகவியின் பெயர் பயன்படுத்தப்
படுவதை எந்தப் படைப்பாளியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கொழும்பில் போய் விழா நடத்தி அங்கே நடந்த
இனப்படுகொலை குறித்து அச்சம் தவிர்த்து ஆண்மையோடு ஒரு கண்டனத் தீர்மானம்
நிறைவேற்றும் சூழலும் அங்கே இல்லை என்பதைப் புரிந்துகொண்டு இந்த விழாவைக்
கைவிட பாரதி அன்பர்கள் முன்வரவேண்டும். எப்படியாவது இந்த விழாவை நடத்த
இலங்கை அரசு முயன்றால் விழாவை அடியோடு புறக்கணிக்கவேண்டும். அதன்மூலம்
கொல்லப்பட்ட எம் சொந்தங்களுக்கு தாய்த்தமிழகம் ஒருபோதும் துரோகம் செய்யாது
என்பதை பாரதி அன்பர்கள் நிரூபிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்
கொள்கிறோம்.
கூட்டறிக்கையில் கையொப்பமிட்ட படைப்பாளிகள்:
புலவர் புலமைப்பித்தன் இயக்குநர்
ஆர்.சி.சக்தி கவிஞர் காசி ஆனந்தன் தமிழருவி மணியன் கவிஞர் இன்குலாப்
அறிவுமதி தாமரை எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஓவியர் வீரசந்தானம் டிராட்ஸ்கி
மருது இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்ட 50 படைப்பாளிகள் கைஒப்பம்
இட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், 29 மே, 2012
பாரதி பெயரில் போலி நாடகம்; கொழும்புக்குச் செல்லாதீர்! வைகோ வேண்டுகோள்!
பாரதி பெயரில் போலி நாடகம்; கொழும்புக்குச் செல்லாதீர்! வைகோ வேண்டுகோள்!
[தமிழ்க்காப்புக்கழக வேண்டுகோள்பரவுகிறது]
கொழும்பு
தமிழ்ச் சங்கமும், சென்னை பாரதி சங்கமும் இணைந்து, ஜூன் 1 ஆம் தேதியன்று,
கொழும்பில் பாரதி விழா நடத்துவதாகவும், தமிழகத்தில் இருந்து
பேராசிரியர்களும், சொற்பொழிவாளர்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும்
அறிகிறேன். இதனுடைய கருப்பொருள், ‘தேமதுரத் தமிழ் ஓசை, உலகெலாம் பரவச்
செய்வோம்’ என்று அறிவித்து உள்ளனர்.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், தமிழர் தாயகத்தில் சிங்களமயமாக்கலும்,
பௌத்த மயமாக்கலும் வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழர் பகுதிகளில், சிங்கள
இராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு, தமிழ் ஈழமே ஒரு அடக்குமுறைச்
சிறைக்கூடமாக ஆக்கப்பட்டு இருக்கின்றது. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள்
தாக்கப்படுகின்றன. திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களின் சிலைகளை
எல்லாம் உடைத்து எறிந்து விட்டனர். பாரதியாரின் அனைத்து நூல்களும் இடம்
பெற்று இருந்த யாழ் நூலகத்தையும் அன்று சிங்களவர்கள் எரித்தனர்.
தமிழர்களின் ஊர்ப் பெயர்கள் அனைத்தையும் மாற்றி, சிங்களப் பெயர்களாக ஆக்கி
விட்டனர். இலங்கைத் தீவில், தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் அழிவதையே
தடுக்க முடியாதவர்கள், உலகெங்கும் தமிழோசைப் பரப்பப் போவதாகக் கூறுவது,
உலகத்தை ஏமாற்ற சிங்கள அரசுக்குத் துணை போகும் செயல் ஆகும்.
ஈழத்தமிழர் படுகொலை குறித்த உண்மைகளை, இப்பொழுதுதான் அனைத்து உலக நாடுகள்
உணரத் தொடங்கி இருக்கின்றன. ஆனால், படுகொலைகளை மூடி மறைக்க, அங்கு அமைதி
ஏற்பட்டு உள்ளது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த, சிங்கள அரசும், இந்திய
அரசும் திட்டமிட்டுப் பல போலி நாடகங்களை நடத்தி வருகின்றன. இப்போது ஒன்றாம்
தேதி நடைபெறுவதாக உள்ள நிகழ்ச்சியில், கொழும்பில் உள்ள இந்தியத்
தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் ஜஸ்டின் மோகன் கலந்து கொள்ள இருப்பதாகத்
தெரிகிறது.
பூமிப்பந்தின் கீழ்ப்புறத்துள்ள தீவுகளில் தமிழர்கள் தாக்கப்படுவதை எண்ணி
நெஞ்சம் வெடித்து, தன் துயரத்தை எரிமலைச் சிதறலாய்க் கவிதை ஆக்கியவன்
பாரதி.
‘விதியே, விதியே என் தமிழச் சாதியை என் செய நினைத்தாயோ?
பூமிப்பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவினும் பரவி
இவ்வெளிய தமிழ்ச்சாதி,
தடி உதையுண்டும் காலுதை உண்டும், கயிற்றடியுண்டும்
வருந்திடுஞ் செய்தியும், மாய்ந்திடும் செய்தியும்
இதெல்லாம் கேட்டும் எனது உளம் அழிந்திலேன்’
என்று, நெஞ்சம் வெடித்துக் குமுறும் கவிதை தந்தவன் பாரதி.
பூமிப்பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவினும் பரவி
இவ்வெளிய தமிழ்ச்சாதி,
தடி உதையுண்டும் காலுதை உண்டும், கயிற்றடியுண்டும்
வருந்திடுஞ் செய்தியும், மாய்ந்திடும் செய்தியும்
இதெல்லாம் கேட்டும் எனது உளம் அழிந்திலேன்’
என்று, நெஞ்சம் வெடித்துக் குமுறும் கவிதை தந்தவன் பாரதி.
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, சிங்களப் பேரினவாத அரசு ஈவு இரக்கம் இன்றிக்
கொடூரமாகப் படுகொலை செய்தது. துடிதுடித்து மாண்ட நம் குழந்தைகள்,
தாய்மார்களுக்காக, வெகுண்டெழுந்து சிங்களரைக் கண்டனம் செய்ய வேண்டிய
தமிழ்ச்சங்கம், உண்மையை மூடி மறைக்க, இப்படி நிகழ்ச்சி நடத்துவது மிகவும்
வேதனை அளிக்கின்றது.
பாரதி இன்று இருந்திருந்தால், சிங்களரைச் சபித்து அறம் பாடி இருப்பார். ஊழிக்கூத்தென நெருப்புக் கவிதை தந்து இருப்பார்.
எனவே, கொழும்பு நகரில் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற
நிகழ்ச்சியில் பங்கு எடுக்க வேண்டாம் என சென்னை பாரதி சங்க
நிர்வாகிகளையும், பேராசிரியர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
28.05.2012 மறுமலர்ச்சி தி.மு.க
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
28.05.2012 மறுமலர்ச்சி தி.மு.க
புதன், 26 மே, 2010
Last Updated :
மதுரை, மே 25: மதுரையில் கம்பன் கழக அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் பாரதி விழா நடத்துவதற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளார். இதன் மூலம் பாரதியார் குறித்த பேச்சு, கவிதைப் போட்டிகள் பெண்களுக்கு நடத்தப்பட்டு பரிசு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை கம்பன் கழக அறக்கட்டளை சார்பில் ஏழாம் ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய கம்பன் கழகத் தலைவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது மேடைப் பேச்சின் பொன்விழாவைக் குறிக்கும் வகையிலும் (50 ஆண்டுகள்), தனது தமிழ்ப் பணிக்குத் தூண்டுதலாக இருந்த பாரதிக்கு காணிக்கை செலுத்தும் வகையிலும் பாரதி விழாவை ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடத்திட ரூ.1 லட்சம் நிதி தனது சொந்தப் பொறுப்பில் அளிப்பதாக அறிவித்தார். அதற்கான காசோலையை கம்பன் கழக அறக்கட்டளைத் துணைத் தலைவர் சங்கர சீத்தாராமன், செயலர் ஆர்.சொக்கலிங்கம், பொருளாளர் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் ஆகியோரிடம் வழங்கினார். பாரதி விழா நடத்தும் திட்டத்தில் பிற அமைப்புகளும் பங்கேற்கலாம் என்று பேராசிரியர் சாலமன் பாப்பையா தெரிவித்தார். இதையடுத்து இத்திட்டத்தில் விஸ்வாஸ் கலைப் பண்பாட்டு அறக்கட்டளை தன்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறது என அறக்கட்டளை அறங்காவலர் சங்கர சீத்தாராமன் அறிவித்தார். ஆண்டுதோறும் டிசம்பரில் நடத்தப்பட உள்ள பாரதி விழாவை முன்னிட்டு பெண்களுக்கான இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதல் பரிசு பெறுவோருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அளிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் பேராசிரியர் சாலமன் பாப்பையா கூறினார். மதுரை கம்பன் அறக்கட்டளை ஏழாம் ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் மாதம்தோறும் இலக்கிய விழாக்கள் நடத்தப்பட வேண்டும், அதற்கு தினமணி துணை நிற்கும் எனக் கூறியிருந்தார். இந் நிலையில், கம்பன் கழக நிறைவு விழாவில் பேசிய சாலமன் பாப்பையா பாரதி விழாவைத் தொடர்ந்து ஒளவையார், இளங்கோவடிகள் எனத் தமிழ் விழாக்கள் தொடர்ந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்
பாராட்டுகள்! தொண்டு தொடர வாழ்த்துகள்! பாரதிதாசனுக்கும் சங்கப் புலவர்களுக்கும் தொல்காப்பியருக்கும் திருவள்ளுவருக்கும் விழாக்கள் நடத்திட வேண்டுகிறேன். திங்கள் ஒரு புலவர் விழா என நடத்தித் தமிழ்ப்பரப்புதலுக்கும் காத்தலுக்கும் துணை நிற்க வேண்டுகிறேன். பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 2:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 5/26/2010 2:37:00 AM
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
