poem லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
poem லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 நவம்பர், 2012

பேராசான் இலக்குவனாரே !

பேராசான் இலக்குவனாரே !

பதிவு செய்த நாள் : 17/11/2012
நட்பு இணைய இதழ்

அய்யா.வணக்கம்.
” நம் செந்தமிழைச் சிறை பிடிப்பதை விடுத்து
என்னைச் சிறை பிடியுங்கள் ; அதுவே நான் பெறும்
பேறு ஆகும் ” எனக்கூறி சிறைஏகிய மொழிப் போராளி
டாக்டர் இலக்குவனாரின் பிறந்தநாள் நாளை (17)அவர்
பற்றிய கவிதை ஒன்று தங்களுக்கும் நண்பர்களுக்கும்
அனுப்பியுள்ளேன்.
அவரைச் சிறை பிடித்தபோது புலவர் மணி
இளங்குமரனார் ” கன்னித் தமிழ் காக்க கால்நடைப்
பயணம் செய்தால் தமிழ்ப் புலவர் காலை வெயில் சுட்டு
விடும். பட்டுப் போகும் ஆட்சி எனச்சிறை பிடித்து
விட்டனரோ?” என்னும் பொருளில் எழுதியது என்
நினைவுக்கு வருகிறது.
பெ. ஆ. 134 தொ. ஆ. 2877 தி. ஆ. 2043
நளி ( கார்த்திகை ) 02 ( 17 – 11 – ‘ 12 )
நெஞ்சம் நினைக்கிறது !
சீர்பெற் றிலங்கும்நம் செந்தமிழ் வளர்ச்சிக்கு
வேர்ஆக இருந்தபன் னூறு அறிஞர்களில்
தூர்ஆக விருந்து துலங்கச் செய்தாரில்ஆணி
வேர்ஆக விளங்கிமொழிப் போராளி ஆனார்!
வாய்மை மேடு வளர்ந்த தூய்மையாளர்
காய்(மை )க் கருத்தைக் கனவிலும் நினையார்
பொய்மை மனத்தாரை புறமொதுக்கும் மெய்மையாளர்
தாய்மை குணம் தாங்கும் தகைமையாளர்!
வாழும்தம் வாழ்க்கை கீழ்ஆயினும் தாழார்
சூழும்புகழ்த் தமிழுக்கு சூழும் தாழ்வையோ
ஆழக்குழி புதைக்க வேழமென விளங்குவார்
தாழாத் தமிழ்க்குருதி பாலாகப் பாய்வதால்!
தொங்கிச் சுழலுமிப் பூ நிலத்தில்
தங்கி வாழும் மங்காத் தமிழர்பேசிய
இங்கித மானமுதன் இன்மொழி தமிழேஎன
மங்கிய அறிவுடையோர் மனதில் பதியவைத்தார்!
காசுக்காக இத்ழ்நடத்தும் காரிகை மனத்தாரிடையே
கூசாமல் நடத்தினாரே குறள் நெறியிதழ்
ஏசாமல் ஏசினர் ஏத்திபபிழைப் போர்சிலர்
காசு பெரிதல்ல கனித்தமிழே பெரிதென்றாரே !
இருநான்கு ஆண்டுகள்அப் பெருமகனுடன் நெருக்கம்
இருக்க மாயிருந்த இன்தமிழ் உணர்வைப்
பெருக்க வைத்தார்: பெருக்கிடச் சொன்னார்
உருக்கமுடன் அன்னார் உரைத்ததை மறவேன் !
எத்தனையோ அறிஞர்கள் சத்தனைய புத்தகங்கள்
மொத்தமாக எழுதினும் சித்தம் ஈர்க்கும்
சத்தானதொல் காப்பியத்தை சரிமொழி யாக்கம்
முத்தமிழ்ப் பேராசான் முழுதாய்ந்து எழுதினாரே !
” ஏல்”பல்கலைக் கழகத்திற்கே ஒல்காப்புகழ் நம்அண்ணா
தொல்கிழவன் காப்பியத்தை இல்கிழவன் படைத்தையே
நல்கி அவர்தம் நல்லறிவு பெருக்கவும்நம்
நந்தமிழ் வரலாற்றை நன்குணர வைத்தாரே !
நூறோடு ஈராண்டு நிறைவுற்ற பிறந்தநாள்
வேர்ஆக விருந்து விளங்குகின்றார் யார்?தமிழ்ப்
போராளி யாகவாழ்ந்து சீராகததமிழ் நெஞ்சக்குருதி
நீராகஇலங்கி ஓடும் பேராசான் இலக்குவனாரே !
என்றும் நினைக்கும் நெஞ்சம்
மா. கந்தையா – செயம்
மதுரை .

திங்கள், 11 ஜூன், 2012

ஈழத் தமிழனும் இந்தியத் தமிழனும் ,மணிமுத்து திங்கள், 26 செப்டம்பர் 2011 05:05

ஈழத் தமிழனும் இந்தியத் தமிழனும் ,மணிமுத்து திங்கள், 26 செப்டம்பர் 2011 05:05

K.Ramesh vinnarasuramesh@gmail.com




எங்கள்
இரத்தத்தின் இரத்ததங்களின் மீது
கொத்துக் குண்டுகளை
வீசினார்களாமே..!
என்ன சொல்கிறீர்கள்?
எங்களுக்கென்ன தெரியும்
தலைவனின் பிறந்த நாள்
மட்டைப் பந்துவெற்றி
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்
தீபாவளியன்றுதானே
நாங்கள் வெடிச்சத்தம்
கேட்டிருக்கிறோம்...
எங்களது உடன்பிறந்தாள்களை
வன்புணர்ந்தார்களாமே
ஐயோ,
என்னசொல்கிறீர்கள்
எங்களுக்கென்ன தெரியும்
எங்களது எல்லா கதாநாயகர்களும்
காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்களே
கயவர்களால் கதறியழும் கன்னியர்களை
எங்கள் இல்லத்தொலைக்காட்சிகளில்
நாங்கள் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோமே...
முலைகள் பிய்த்தெறியப்பட்ட
பிரேதத்தின் அருகில் அமர்ந்து
அழுகிறதாமே பாலுக்கேங்கும் பிள்ளைகள்
என்ன சொல்கிறீர்கள்?
எங்களுக்கென்ன தெரியும்
எங்கள் மண்ணில்
நாங்கள் பதாகைகளுக்கும் பால் வார்ப்போமே...!
வாழ்ந்த மண்ணை விட்டு
சொந்த உறவைத் தொலைத்து
நாடுவிட்டு நாடு செல்கிறார்களாமே!
என்ன சொல்கிறீர்கள்!
எங்கள் வாழ்வின் இலட்சியமே அதுதானே
அதற்காகத்தானே காத்துக் கிடக்கிறோம்
கடவுச் சீட்டு அலுவலகத்தில்...
என்ன சொல்கிறீர்கள்
தமிழ் இ(ஈ)னமானத் தலைவர்களின் ஆட்சியில்
அம்மணமாகவே வாழ்ந்து பழகிய
எங்களுக்கென்ன தெரியும்
ஆடை பற்றி..!





புதன், 4 ஜனவரி, 2012

New year greetings, All the days are ours:எல்லா நாளும் நம் நாளே

எல்லா நாளும் நம் நாளே

என்றும் நமக்கு நன்னாளே!

| December 31, 2011 | 0 Comments
ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம்
எல்லா நாளும் சிறந்திடுவோம்!
வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே
வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது போராட்ட மானால்
போரில் கலந்து வென்றிடுவோம்!
வாழ்க்கை என்பது விளையாட் டெனில்
ஆடி வாகை சூடிடுவோம்! 
வாழ்க்கை என்பது பயண மாயின்
இனிதே இலக்கை அடைந்திடுவோம்! வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால்
பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது கணக்கு என்வே
கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது வரலா றாகச்
செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்!
வாழ நாமும் பிறந்து விட்டோம்
வாழ்ந்தேதான் காட்டிடுவோம்!
எத்தனைத் தடைகள் வந்தாலும்
அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம்!
மெல்ல மெல்ல நாம் உயர்ந்தே
நல்ல வாழ்வை அடைந்திடுவோம்!
நாம் வாழ்வோம் பிறர் வாழ
நாமும் நலமாய் வாழ்ந்திடுவோம்!
நாம் உயர வீடு உயரும்
வீடு உயர நாடு உயரும்!
நாடு உயர உலகு உயரும்
உலக உயர்வில் நாம் மகிழ்வோம்!
எல்லா நாளும் நம் நாளே
என்றும் நமக்கு நன்னாளே!
- வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

என்றும் நமக்கு நன்னாளே!~நட்பு இணைய இதழ்

சனி, 22 அக்டோபர், 2011

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா

தாயகக் கனவுடன் சாவினைத்
தழுவியசந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் – உங்கள்

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் – உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

thamizhk katamaikal 92-95 : தமிழ்க்கடமைகள் 92=95

http://literaturte.blogspot.com/2011/09/thamizhk-katamaikal-93-93.html

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ்க்கடமைகள் 

94. தாயன்பும் தாய்த்தமிழும்

 http://literaturte.blogspot.com/2011/09/thamizhk-katamaikal-94-94.html
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ்க்கடமைகள் 

95. கடவுள்தரும் தமிழே

http://literaturte.blogspot.com/2011/09/thamizhk-katamaikal-95-95.html




வியாழன், 27 ஆகஸ்ட், 2009


கொத்துக் கொத்தாக கொன்றொழிக்திட்டார்!
நித்தமெம் தமிழர் செத்தழிகின்றார்!
சத்தமின்றி சுத்துதம்மா வெற்றுப் பூமி!
பித்தமேறி களிக்கிறது பௌத்தசேனையங்கே!
வஞ்சமறியாப் பிஞ்சுகளை வஞ்சனையாய்க்கொன்றுவிட்டு
வெஞ்சினப்பகை முடித்தோமென கொக்கரிக்கும் சிங்களம் பார்!

செத்துப் போன புத்தருமே
செத்துப்போன பௌத்தமெண்ணி
குருதிகொட்டுகின்றார் விழியோரம்!
ஊறு உயிர்க்கு நேரா நெறி தந்த பௌத்தம்
நரபலியெடுத்துக் குருதி குடிக்கக்கண்டு
கண்மூடிகிடக்கின்றார் விழிதிறக்க விரும்பாமல்!

“பித்தர் கூட்டமாய் அழுது புலம்பியே
உலக வீதியெங்கும் கத்தித் திரியும்
சொத்தைத் தமிழன் என்ன செய்வான்
நாதியற்ற ஈழத்தமிழரின் உயிரை
சத்தமின்றி நாமிங்கு பறிக்கின்?”
கிள்ளுக்கீரைகளாய் கிள்ளியள்ளி வீசுகின்றான்
கேட்கவிங்கு யாருமின்றி!
மெத்ததுணிவுகொண்டே எம் இனமழிக்கின்றார்;!
செத்தான் தமிழன் என களியாட்டமாடுகின்றான்!


சொந்தச் சகோதரர்கள் சாதல் கண்டும்
சிந்தை இரங்கான் தமிழன் என
கனவுகண்டோரே..
ஈழத்தில் நீரிட்ட தீ
தமிழகத்திலும் ஜெனிவாவிலும்
உன் முகத்திரை கிழித்துக் காட்ட
எரியுண்ட தமிழரில் தெரிந்ததை மறந்தீரோ?

நான்கு சுவருக்குள் நசுக்கிட
நாதியற்றவனா தமிழன்?
அற்பப் புழுவென
அடித்து நொருக்க
வேடிக்கைப் பார்த்திருக்கும்
ஈனச்சாதியரோ நாம்?
எட்டுக்கோடியாய் திக்கெட்டும்
உள்ளவர் நாம்!
வாய் திறவா சர்வதேசம் பற்றி கவலை எமக்கில்லை
சர்வதேசமாகவே நாம் உள்ளோம்
நம்மவர்க்காய் குரல் கொடுக்க!

வீதிதோறும் இறங்குகிறோம்…
விதியை மாற்ற எழுகின்றோம்..
வடியும் கண்ணீரை எம் புறங்கைகள் துடைக்கட்டும்!
விடியும் பொழுதுக்காய் எம் தோள்கள் புடைக்கட்டும்
இணைந்த கைகள் ஒன்றாக
நீண்டுநிற்கும் மனிதச்சங்கிலி பார்..
தனி தமிழன் இனி இல்லை!
தோப்பாய் திரண்டெழுவர் தேசங்கள் தோறும்
செந்தமிழர் உயிர்காக்க!


புறப்படு தமிழா புறப்படு!
புதுவிதி எழுத புறப்படு!
“வீதிநாம் வந்தும் வந்தாரில்லை
விழுதுநாம் அழுதும் கைதந்தாரில்லை
மனிதம் விழித்தெழ நினைக்குதுமில்லை
இனிநாம் வாழ வழியெதுமில்லை”
வீடுகளுக்குள் முடங்கி
அழுது வடிப்போரே..
போதும் போதும்…
வெற்றுக்கதை பேசி செயலிழந்து நின்றது போதுமினி!


சோர்வில் துவண்டு
செத்தொழிந்ததும் போதும்!
சாவிலும் வாழும் மறத்தழிழர் நாமாவோம்!
சாகும் வரை போராடும் தற்துணிவு கொள்வோம்!
மனிதம் தாள் திறக்கும் வரை
மானுடத்தின் குரலெழுப்பி
மனசாட்சிகளின் கதவுகளை தட்டிப்பார்ப்போம்
திறவாத கதவுகள் மூடியேகிடக்கட்டும்!
திரைகள் திறந்து நீதி சிறையுடைக்கட்டும்!
கொட்டமிடும் அநீதியின் முன் நீதிக்கே இறுதி வெற்றி!

காலம் காலமாக சொல்லிச் சென்றன
உலகசரிதங்கள்....
நீதி நிச்சயமாய் வெல்லும்
அதுவரை
உறங்காமல் உழைத்திடுவோம்..
சத்தியராய் வாழும் சரித்திரநாயகரின்
வீரச்சாவுகள் உயரிய பொருள் சொல்பவை!
சித்திபெறச்செய்வோம் நித்தியநாயகர்
சிந்தை நிறை கனவுகளை..
சத்தியம் செய்வோம் நீதியை
வென்றெடுக்க
நித்தம் உழைப்போமென்று!


வீழ்வது நாமாயினும் வாழட்டும் நம்மினமிங்கு
வாழ வழி தேடி மடிவிலும் வாழும்
ஈழவர் வாழ விடியலுக்காய்; நாம் உழைப்போம்!
விழி துடைத்துப் புறப்படுடா தமிழா
வுழிகாண புறப்படு!
உறங்கிக் கிடந்தது போதுமினி
உறவைக்காக்க புறப்படு!
தலை நிமிர்ந்த தமிழனாய்
விடுதலைக்காக குரல்கொடு!
விடியலும் ஒரு நாள் வருமென நம்பு
துயரம் துடைத்து நிமிர்வோம் நம்பு
அழ அழ நாம் அழ அழுந்தமிழன்றோ?
எழு எழு நீ எழு எழும்தமிழினமாய்!

தமிழ்மகள்
சிவவதனி.பி

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஜூலை 2009


கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்
தாமரை

ஏ மிலேச்ச நாடே!
எத்தனை கொடுமைகள்
செய்து விட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு....
எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்த்தாயிற்று...
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று
மிச்சம் உண்டு என்னிடம்...
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
கலைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்...
கண்ணகி மண்ணிலிருந்து
ஒரு கருஞ்சாபம்!
குறள்நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்து விட்டாய்!
இனி நீ வேறு, நான் வேறு!
ஏ மிச்ச நாடே!
ஆயுதம் கொடுத்து, வேவுவிமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போட வைத்த உன்தலை
சுக்குநூறாகச் சிதறட்டும்!
ஒரு சொட்டுத் தண்ணீருக்காக விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப்பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒருபிடிச் சோற்றுக்கு எங்களை ஓட வைத்தாய்...
இனி உன் காடு கழனிகளெல்லாம்
கருகிப் போகட்டும்!
தானியங்களெல்லாம் தவிட்டுக் குப்பைகளாக
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களைத் துரத்தினீர்கள்
உங்கள் மலைகளெல்லாம்
எரிமலைக் குழம்புகளைக் கக்கி
சாம்பல் மேடாகட்டும்!
இரக்கமின்றி ரசாயனக் குண்டுகள்
வீசிய அரக்கர்களே...
உங்கள் ரத்தமெல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து எந்நேரமும்
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்களெல்லாம் குண்டு வெடித்து
சிதறிய உடம்புகளோடு
சுடுகாட்டு மேடாகட்டும்!
போர்நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்று வைக்கட்டும்!
வாய்திறந்தாலே ரத்தவாந்தி கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகளின் மீது
ஏறி அமர்ந்து அரசாட்சி செய்தவர்களே...
உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள் தூளாகாட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்!
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
நிர்வாணமாக எங்களை நடக்கவிட்டவர்களே...
உங்கள் தாய்தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடை கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில்
பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதறசீரழிந்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடிநரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல்பூண்டு முளைக்காது போகட்டும்...
அலைபேரலை பொங்கியெழுந்து அத்தனையும்
கடல்கொண்டு போகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
...................
...................
பின்குறிப்பு :
உங்கள் குழந்தைகளை மட்டும்
சபிக்க மாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்
குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!
எம் குழந்தைகள் அழுதாலும்
உம் குழந்தைகள் சிரிக்கட்டும்!
உம் குழந்தைகள் சிரிக்கட்டும்!



வியாழன், 23 ஜூலை, 2009

எப்படி ஆனது தாயே உன்னால் மட்டும் இப்படி ஒரு கரும்புலிப் பிள்ளையை வளர்க்க… (கவிதை)

ltte_black_tigersஎப்படி இப்படி வளர்த்தீர்கள் இவரை… பலரைப் போல் இல்லையம்மா உன்பிள்ளை..

மலரைப்போல் மென்மையாக பேசிய உன் பிள்ளையா எரிமலையாக எதிரிமேல் பாய்ந்தாள்…
தாயே.. கருக்கல் கண்டு பயந்து சேலைத் தலைப்பைக் கையில் முடிந்து வந்தவனா மறவனாக உயர்ந்தான்.. அம்மா நீ முருகனை ஈன்ற உமையா… வீரமகளைப் பெற்ற தமிழா.. அன்னையே உன்னை வாழ்த்தி.. உறுகண் பகை துரத்தி உன் மறுகண்ணாயிருந்து மலர்ந்த மாவீரப் பிள்ளைகளை வணங்குகின்றேன்.

சொற்படி வைத்துச் சொல்ல முடியாத கவிதைகளை எப்படி வளர்த்தீர்கள்.. இப்படி ஒரு வீரக்கரும் புலிப்; பிள்ளையை.. அப்டி இப்படி என்று எனை வளர்த்த என் தாயிடம் என்ன குறை.. இப்படி இவரைப்போல். நானும் அவரணியில் சேர முடியாது போனது எப்படி.. இது தப்படி என்று வாசல்ப்படி தாண்ட விடாத தமிழினத்தில்.. எப்படி உன் மடிப்பிள்ளை மட்டும் கடல் அடியுள் சென்று வெடித்தாள்.. தாயே செப்படி அந்த வி;த்தையை தமிழினம் அறிய.. மெத்தையில் படுத்து நாசமாப் போகுது எமது வாழ்க்கை..

அம்மா உன் கருவில் இருந்த நின் மகவின் வளர்ச்சிக்கு தமிழ் உணர்வை எப்படிக் கொடுத்தாய்…

அரும்பாக துளிரும் பொழுதே அவர் இரும்பாக இருப்பதற்கு எதனைச் செய்தீர்கள்..

வீரக் கதைகள் சொன்னீரா.. தமிழ் கலந்து.. பாலூட்டி வளர்த்தீரா.. எதிர் கொள்ள அஞ்சும் பெரும் பட்டைத்தளத்தை அறுத்துக் குறுக்கும் திறன் அவர் பெற எதைக் கற்றார் உம்மிடத்தில்..

கிளித்தட்டுப் பாயினும் புலிஎன பாயச் சொன்னீர்களா. அயலவர்க்கு விரைந்து உதவியளித்திடப் பயிற்சி கொடுத்தீரா.. பசி கொண்ட நாய்கள் உடனிருந்து கடிக்கும்.. பழந்தமிழர் பெருமையை மங்கும் வகை செய்யும்.. அந் நரிகளை துரத்தி தலைவன் கொண்ட கொள்கை வழுவாது வாழ என்ன பயிற்சி தந்தீர்கள்..

ஓரிடத்தில் இரு என்று உச்சி வகுந்திடும்போது நெற்றியில் முத்தமிட்டு வீரத்திலகம் இது எனச் சொன்னீரா.. எப்படி உங்கள் பிள்ளைகள் மட்டும் இப்படி உயர்ந்தார்கள்…

தமிழ் பாருக்கு வேராக எப்படி நின்றனர்.. நேருக்கு நேராக நின்று தன் சாவுக்கு நாள் குறித்து.. உடலோடு குண்டணைத்து வெடிக்கும் முன் இறுதியாக உனைப் பார்க்க வந்ததுவாம் உன் பிள்ளை.. என் மன வேருக்குள் இத்துணிவு இல்லையே அம்மா..

எப்படி இருந்தார் அவர் எங்கேனும் ஒரு துளிக் கண்ணீர் விட்டழுதாரா.. சத்தியமாக சொல்கின்றேன் என்னால் முடியாது.. ஒப்பாரி வைத்து ஓவென்று கதறி ஊரையே கூட்டிடுவேன்.. உணர்ச்சி வசப்பட்ட பிண்டங்கள் நாங்கள்.. கண்டங்கள் கடந்துவந்து விடுதலை பேசும் முண்டங்கள் நாங்கள்..

தந்தையே… ஈசனுக்கு இணையானவரே.. அவரை தோளில் சுமக்கும் போது அவர் மனதில் தேசத்தை சுமக்கும் வலு எப்படிச் சேர்த்தீர்.. நடை பயிற்றும் போதுகூட வேங்கைபோல் நட எனச் சொன்னீரா..

குவளையிலே நெய் எடுத்து அவர் மேனி பூசயிலே சூரியனைக்காட்டி எரிமலைபோல் வெடிக்க கற்றுக்கொடுத்தீரா.. வேகுந் தளத்தில் பாதம் நோகும் யாகம் செய் எனச் சொன்னீரா..

புகழ் மிகுந்து தேசம் இந்நாள் அடிமையில் கிடக்குதடா மகனே.. தாயின் உவாதை நீக்க கட்டளை இட்டீரா.. அடிமை நீக்கிவாழ் இம்மண்ணில் நீ உயர்வாய் என்றீரா.. நாமார்க்கும் அஞ்சோம் காலனைக் காலால் உதைக்கச் சொன்னீரா.. அழிவைச் செய்யும் மதமொழி பேதப் பேயை வீழச் சுட புலியாகி புறப்பட செய்தீரா.. வீரவாக்குப் பெற்றீரா.. எப்படி இந்த வீரத்தமிழ் தோள்களை உயரச்செய்தீர்…

நான்கிலொரு பிள்ளை பிரிய தசரதன் மாய்ந்தான்.. நான்கு பிள்ளையையும் தமிழுக்கு தந்த பின்னும் இன்னுமொரு பிள்ளையிருந்தாலும் தலைவன் வழி செல் எனச் சொல்ல எப்படி உங்கள் மனம் இப்படி உறுதிhயக செய்தீர்கள்…

அக்காளின் கைபிடித்து அமைதியாக வந்தவனாம்.. அண்ணாவிடம் கொய்யா பழம் பிடுங்கி தாவென நின்றவாளம்.. தம்பியோடு தாவணியில் தமிழ்படிக்க நடந்தவளாம்.. அம்மாக்கு இயலாத போது அடுக்களையில் வேலை சுமந்த மூத்தவளாம்… தோளுக்கு மேல் வளர்ந்து தந்தைக்கு துணையாக நின்றவனாம்.. தரணியிலே பிறரைப்போல் தாமும் வாழும் ஆசை கொண்டவராம்.. இத்தனையும் மறந்துவிட்டா இவர் கரும்புலியாகி வெடித்தார்…

பாசப் பறவைகளின் கூட்டை உடைத்ததொரு வேடரினம்.. தமிழ்த் தேசத்தின் எல்லை தாண்டி எங்கள் வேரறுக்க வந்த பேரினவாதப் பேயினம்.. நன் புனல்ப் பொய்கையும்.. மாசு படித்திடச் செய்திடும்; குண்டுகள் வீசிக் காடுகளனி யழித்திடும் கொடும் நெருப்பில் வாடிய எம்மின வேதனை தாளாது வெடித்து அக்கினிக் குஞ்சுகளாய் எங்கள் உறவின் பலம் தலைவன் பாசறையில் பயின்றது புலியின் குணம்..

கனக்குது என்மனது உனக்கது புரியாது உலகே.. உன் இனத்துக்கென ஒரு இழிவு வரும் அன்று உன் மென் மனதுக்குள் ஒரு கோபம் வரும்… அந்நிலை உனக்கும் கரும் புலிவீரனாகும்; ஞானம் தரும்..

மணிவண்ணன்