நீக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 செப்டம்பர், 2013

நளினி மீதான வழக்கை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

நளினி மீதான வழக்கை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை குற்றவாளியான நளினியின் அறையில் கடந்த 2010ம் ஆண்டு மொபைல் போன் கைப்பற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை ரத்துசெய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனுவை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

இளைஞர் காங்கிரசு தலைவர் பதவியிலிருந்து யுவராசு நீக்கம்

கருத்து
Sunday, February 24,2013 11:39 AM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி.ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் அடங்கித்தானே ஆக வேண்டும். இனியேனும் ஒழுக்கமாகவும் நாவடக்கத்துடனும் தமிழ் உணர்வுடனும் நடந்து கொண்டால் அவருக்கு நல்லது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
Sunday, February 24,2013 09:43 AM, jayakumar said: 3 5
இந்த சின்ன பையன் கலைஞர் , ஜெயலலிதா கூட அரசியல் பண்ண முடயுமா அந்த சின்ன பையன் ராகுல் - க்கு என்ன தெரியும் .
Sunday, February 24,2013 09:15 AM, காத்தவராயன் said: 3 6
அதுக்கெல்லாம் கார்த்திக் தான் சரிப்பட்டு வருவார்
 
இளைஞர் காங்கிரசு தலைவர் பதவியிலிருந்து யுவராசு  நீக்கம்
இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து யுவராஜ் சஸ்பெண்டு
மாலை மலர் -சென்னை, பிப்.24:-

இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வகித்து வருபவர் யுவராஜ். ஈரோட்டை சேர்ந்த இவர் திடீரென இன்று அப்பதவியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது. கட்சிப் பணிகளை சரிவர ஆற்றவில்லை என்ற காரணத்தால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர் காங்கிரஸ் பதவி வகித்து வரும் யுவராஜ் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் பிரமுகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சஸ்பெண்டு செய்யப்பட்ட யுவராஜ் கடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
++++++++++++
 

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

குடியரசுத் தலைவர் இணையத் தள ம் - கருணை மனுப் பிரிவே நீக்கம்!

குடியரசுத் தலைவர் இணைய த் தளத்தில் இருந்து கருணை மனு ப்  பிரிவே நீக்கம்!


குடியரசுத் தலைவரின் அதிகார பூர்வ இணையதளத்தில் இருந்து, கருணை மனு போடக்கூடிய பிரிவே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான பொதுத்தகவல் வழங்கும் விவகாரம், இனி மத்திய உள்துறை அமைச்சகத்தின் எண்ணப்படி செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் இதுவரை குடியரசுத் தலைவர் முன் காத்திருக்கும் கருணை மனுக்கள் குறித்த விவரங்கள், அவற்றை கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எப்போது சரிபார்த்து கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்ட உடனே, இந்தப் பிரிவு குடியரசுத் தலைவரின் அதிகார பூர்வ இணையப் பக்கத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில், இந்தப் பிரிவு காணாமல் போனது குறித்து கேட்டதற்கு, குடியரசுத் தலைவர் மாளிகை அளித்த விளக்கத்தில், “கருணை மனு விவகாரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதால், இந்தப் பிரிவை பொதுவில் வைப்பதைத் தவிர்க்கலாம் என்று யோசனை கூறப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தப் பிரிவுப் பக்கம் நீக்கப்பட்டது. கருணை மனு குறித்த பிரிவையும் எதிர்காலத்தில் உள்துறை அமைச்சகமே கையாளும்” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 11ம் தேதி இது குடியரசுத் தலைவரின் அதிகார பூர்வ இணையதளத்தின் ஒரு பக்கமாக குடியரசுத் தலைவரின் செயலர் கட்டுப்பாட்டில் உள்ளீடு செய்யப்பட்டிருந்தது. சாய்பன்னா நிங்கப்பா நடிகார் என்ற நபர், தனது மனைவி, மகளைக் கொன்ற விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தகவலுக்குப் பின்னர் கருணை மனு குறித்த பக்கம் இவ்வகையில் இணையதளத்தில் இடம் பெற்றிருந்தது. இருந்தபோதும், பிப்.9ம் தேதி அப்சல் குரு தூக்கில் இடப்பட்ட பிறகு இந்தப் பிரிவு புதுப்பிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் செயலகம் இன்னொரு புதிய பிரிவையும் இந்த இணையதளத்தில் அறிமுகப் படுத்தியுள்ளது. 1958ஆம் ஆண்டுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட நாடுகள், அந்தப் பயணங்களின் போது, அவருடன் பயணம் செய்த பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதுவும், அண்மையில் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது, அவருடன் சென்ற பத்திரிகையாளர்கள் விவரங்களை வெளியிட்டு, அதன் பின்னரே இந்தப் பக்கத்தையும் துவக்கியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த கேள்வியின் அடிப்படையில் இந்தப் பிரிவுப் பக்கம் புதிதாக இணையதளத்தில் ஏற்றப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 22 நவம்பர், 2012

கேட்பார் யாருமில்லையா? புதுச்சேரி தமிழை விலக்குகிறது. பிரெஞ்சையும் இந்தியையும் புகுத்துகிறது.

மூன்றாம் பிரிவில் பிற  மொழி கற்பிக்கும் வாய்ப்பைத் தராமல் தமிழை எடுத்தது  இக்காலத் தலை முறையினருக்கும் வருங்காலத்தினருக்கும்
 இழைக்கும் அறமற்ற செயல். புதுச்ச‌ேரியிலும் காங்கிரசை ஆட்சிப் பீடத்திலிருந்து அறவே  நீக்கினால்தான் தமிழ் அங்கு வாழும்.
"கட்டாய  த் தமிழ்' சட்டத்தில் இருந்து புதுச்சேரிக்கு விலக்கு : கற்பிக்கவும், தேர்வு நடத்தவும் தமிழக அரசு ஒப்புதல்
புதுச்சேரி: கட்டாயமாக தமிழ் பயிலும் சட்டத்திலிருந்து விலக்கு அளித்து, புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளில், இந்தி மற்றும் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவும், தேர்வு நடத்தவும், தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

மொழிப் பாடம் : பள்ளிகளில் கட்டாயமாக தமிழ் பயிலும் சட்டத்தை, 2006 இல், தமிழக அரசு கொண்டு வந்தது. அதன்படி, தமிழ்நாடு இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் மொழியை மட்டுமே கட்டாயமாகப் பயில வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. பாடத் திட்டத்தைப் பொறுத்தவரை, தமிழக அரசின் பாடத் திட்டத்தையே புதுச்சேரி அரசு சார்ந்துள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநிலப் பள்ளிகளில், 2006ல், முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் போது, மொழிப் பாடமாக, தமிழ் மொழியில் தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது.

இந்திய அரசு, பிரெஞ்ச் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பிரெஞ்ச் மொழி கற்பதற்கு ஆவன செய்ய வேண்டும். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பணிபுரிவதால், பள்ளிகளில் இந்தி மொழி கற்பிப்பதும் அவசியமாகிறது.
இத்தகைய காரணங்களால், கட்டாயத் தமிழ் பயிலும் சட்டத்திலிருந்து, புதுச்சேரிக்கு விலக்கு அளிக்குமாறு, தமிழக அரசுக்கு, புதுச்சேரி அரசு வேண்டு கோள் வைத்தது. அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளில், இந்தி மற்றும் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவும், இம்மொழிப் பாடங்களில் தேர்வு நடத்தவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்த, குழந்தைகள் தின விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: கட்டாயத் தமிழ் பயிலும் சட்டத்தால், புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் மொழி தேர்வு மட்டுமே எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நன்றி தெரிவிப்பு : புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று, பள்ளிகளில் இந்தி மற்றும் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவும், தேர்வு நடத்தவும் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதற்காக, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


 

திங்கள், 19 நவம்பர், 2012

சிறீரங்கத்தில் பிராமணாளும் கிருட்டிண அய்யரும் ஒழிந்ன!

சிறீரங்கத்தில் பிராமணாளும் ஒழிந்தது கிருட்டிண அய்யரும் ஒழிந்தது!

(பிறரும் பின்பற்றட்டும்)

 

14.11.12
சிறீரங்கத்தில் ஒரு திருப்பம்! பிராமணாளும்ஒழிந்தது கிருஷ்ண அய்யரும் ஒழிந்தது!திராவிடர் கழகத்திற்கு அடுத்த கட்ட வெற்றி!

பிராமணாள் என்றும், அய்யர் என்றும் இடம்பெற்றிருந்த பழைய நிலை!
சிறீரங்கத்தில் பிராமணாள் என்று உணவு விடுதி விளம்பரத்தில் எழுதி வைத் திருந்த வருணாசிரம ஆதிக்க உணர்வை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட நட வடிக்கையால் அந்த உணவு விடுதி அந்த இடத்தில் மூடப்பட்ட துடன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் பிராமணாள் என்பதும் கிருஷ்ண அய்யர் என்பதில் உள்ள அய்யரும் நீக்கப்பட்டு விட்டன.
திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த அடுத்த கட்ட வெற்றியாகும் இது.

பிராமணாளும், அய்யரும் நீக்கப்பட்ட நிலையில் இப்போது…
சிறீரங்கம் ரங்கநகர் சாலையில் கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே (ஓட்டல்) என்ற பெயரில் மணி கண்டன் என்ற பார்ப்பனர் நடத்தி வந்தார். திடீ ரென்று பிராமணாள் என்ற சொல்லை விளம்பரப் பலகையில் புகுத்தினார். அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் உள்ள பிராமணாள் என்ற பெயரை அகற்றுமாறு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மணிகண்டன் பார்ப்பனரிடம் வலியுறுத்தப்பட்டது.
மேலும் திருவரங்கம் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத்திற்கு என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் திருவரங்கத்தில் ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டம் நடத்த கழகம் சார்பில் அனுமதி கோரியிருந்தது;
ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது. மூன்று முறை தொடர்ந்து காவல் துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று 4.11.2012 அன்று திருவானைக்காவலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.
போராட்டம் அறிவிப்பு
அப்பொதுக் கூட்டத்தில் பிராமணாள் ஓட் டல் பெயரை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அகற்றுகின்றவரை போராட்ட நடவடிக்கையைக் கழகம் மேற்கொள்ளும். மேலும் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி இப்போராட்டத் திற்கான அறிவிப்பினை வெளியிடுவேன் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருவானைக் காவல் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.
நள்ளிரவில் அகற்றம்
இந்நிலையில் அந்த உணவு விடுதி கட்டடத்தின் உரிமையாளர் (பாவை டவர்ஸ்) ராஜா, மணி கண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து (6.11.2012) நள்ளிரவு திடீரென்று கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே உணவு விடுதியை மணிகண்டன் முழுமையாக கடையை இழுத்து மூடி காலி செய்தார். பிராமணாள் கபே பெயர்ப் பலகையும் அகற்றி எடுத்துச் சென்றார். இப்பொழுது வேறு ஒரு இடத்தில் அவரே உணவு விடுதியைத் திறந்துள்ளார். பெயர்ப் பலகையில் இடம் பெற்றிருந்த பிராமணாள் என்ற பெயரும், கிருஷ்ண அய்யர் என்ற பெயரில் இருந்த அய்யரும் நீக்கப்பட்டு விட்டன. திராவிடர் கழகத் திற்குக் கிடைத்த சிறப்பான வெற்றியாகும் இது.
————————”விடுதலை” 14-11-2012
(பார்வையிட்டவர்கள் 21 பேர்)

வியாழன், 26 ஜூலை, 2012

பாடப்பகுதியில் இருந்து தமிழ் வாழ்த்துப் பகுதி நீக்கம்



தினத்தந்தி தஞ்சாவூர் பதிப்பு

பாடப்பகுதியில்  இருந்து தமிழ் வாழ்த்துப் பகுதி நீக்கம்

தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்

சென்னை,  சூலை 25 -
  பாடப் புத்தகத்தில்  இருந்து தமிழ் வாழ்த்துப் பகுதி நீக்கப்பட்டதற்குத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாகத் தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவர்  இலக்குவனார் திருவள்ளுவன்  வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது : -

தமிழ் வாழ்த்துப் பகுதி

 9  ஆம் வகுப்பில் இருந்து தமிழ்ப்பாடநூல்களில் வாழ்த்துப் பகுதியில் முதலில் இறை வாழ்த்தும் அடுத்துத் தமிழ் வாழ்த்தும் இடம் பெறும்.  ஆனால், இப்பொழுது தமிழ்வாழ்த்துப் பகுதி எடுக்கப்பட்டு விட்டது.கருணாநிதியின் செம்மொழிப்பாடல் இடம் பெறுவதற்காகத்தான் இவை எடுக்கப்பட்டன எனப் பாடநூல் குழுவினர் வழி அறிய வருகிறது.

  செம்மொழிப்பாடல், பாடப்புத்தகத்தில் இடம் பெறாத பொழுது  தமிழ் வாழ்த்துப்பகுதியை எடுக்க வேண்டிய தேவையே இல்லை.மேலும், செம்மொழிப்பாடலை எடுத்தபின்பு தமிழ் வாழ்த்தைப் பள்ளிக் கல்வித்துறையினர் ஏன் சேர்க்கவில்லை.

நாட்டுப்பாடல்

  எல்லாப் பாட நூல்களிலும் ‘நீராரும் கடலுடுத்த’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளதே. அது போதாதா என்கின்றனராம் அவர்கள்.சனகனமண என்னும் நாட்டுப்பாடல் எல்லாப் பாடங்களிலும இருந்தாலும் நாடடு வாழ்த்துப்பாடலும இடம் பெறுகிறது. அவ்வாறிருக்க தமிழ் மொழி வாழ்த்தை எடுக்க வேண்டிய தேவை என்ன?

 பள்ளிக்கல்வித்துறை சமச்சீர்க்கல்வி எனக்  கூறிக்கொண்டு பழந்தமிழ் இலக்கியங்கள் கற்பிக்கப்படுவதையும்  குறைத்துள்ளது ஏன்?   சமச்சீர்க்கல்வி அறிமுகப்படுத்துவதற்கு முன்பு 9 ஆம் வகுப்பில்  7 பிரிவுகளில் 24 இலக்கியங்கள் இருந்துள்ளன.  10 ஆம் வகுப்பில் 7 பிரிவுகளில் 28 இலக்கியங்கள் இருந்துள்ளன. ஆனால், சமச்சீர்க்கல்வி அறிமுகத்திற்குப்பின் 9 ஆம் வகுப்பில் 19  இலக்கியங்களும் 10 ஆம் வகுப்பில் 16 இலக்கியங்களும் மட்டுமே உள்ளன. மனப்பாடப்பகுதி வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

சுற்றறிக்கை
  சமச்சீர்க்கல்வி என்ற போர்வையில் தமிழுக்கு எதிரான செயல்பாட்டை மேற்கொண்ட  தமிழ்ப்பகைவர்கள் யார்?  முந்தைய ஆட்சியில் நடந்த தவறு என்று விட்டுவிடாமல் தமிழ்த்தேசிய உணர்விற்கு மதிப்பளிக்கும் இப்போதைய அரசு இதனை உடனே சரி செய்ய வேண்டும். 

  6 ஆம் வகுப்பில் இருந்தே வெவ்வேறு தமிழ் வாழ்த்துப்பாடல்களை ஒவ்வொரு வகுப்பிற்கும் அறிமுகப்படுத்தி அவற்றை மனப்பாடப் பகுதியாகவும் அறிவித்துச் சுற்றறிக்கை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.