புதுச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 மார்ச், 2025

இலக்குவனார் திருவள்ளுவன் முதலானவர்க்கு நூற்பரிசு வழங்கு விழா, புதுச்சேரி

 

இலக்குவனார் திருவள்ளுவன் முதலானவர்க்கு நூற்பரிசு வழங்கு விழா







புதன், 11 அக்டோபர், 2023

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளையின் ஓவியப்போட்டி

 




புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை

தமிழறிஞர் மன்னர்மன்னன் 96 ஆவது பிறந்த நாள்

மாணவர்களுக்கான ஓவியப்போட்டி


புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மைந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்மாமணி மன்னர் மன்னன் ( கோபதி) அவர்களின் 96 ஆவது பிறந்த நாள் வரும் 03/11/2023 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டுப் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் பங்கேற்கும் ஓவியப்போட்டி நடைபெற ஏற்பாடு ஆகியுள்ளது.
தலைப்பு : கலைகள் வளர்த்திடுவோம்!
( மன்னர் மன்னன் அவர்களின் கவிதை வரி )
எவ்வகை ஓவியமாகவும் இருக்கலாம்.
ஓவியம் வரைய வேண்டிய பொருட்களை மாணவர்கள் கொண்டு வரவேண்டும்.
போட்டியில் பங்கேற்க என்ற 9486748522 புலன எண்ணில் (வாட்சு அப் ) வரும் 18/10/2023 நாளுக்குள் பெயர், வயது, கல்வி, கல்வி நிறுவன விவரம் இவற்றுடன் புலன எண் ( வாட்சுஅப் ) உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்கள்- கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.
75 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.முதலில் பதிவு செய்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டிதழ் வழங்கப்படும்.
பரிசு விவரம்:-
மொத்த பரிசுத்தொகை உரூபாய் 5000/-
(தேர்வு பெறும் பத்து ஓவியங்களை வரைந்த பள்ளி மாணவர் ஏழுபேர்  கல்லூரி மாணவர் மூன்று பேர் என ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500/- வழங்கப்படும் .)

நிகழ்விடம்:
பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம்,
115, பெருமாள் கோயில் தெரு,புதுச்சேரி -605001.

நாள் : ஐப்பசி 17, 2054 – 03/11/2023  வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் 12.00 வரை

தொடர்புக்கு
கலைமாமணி முனைவர் கோ. பாரதி
தலைவர்,
பாரதிதாசன் அறக்கட்டளை, புதுச்சேரி
பேசி : 86676 09521.
பங்கேற்க வருக.

திங்கள், 4 ஜனவரி, 2021

புதுச்சேரியில் பறையிசை ஆட்ட பயிற்சிப் பட்டறையும் அரங்கேற்றமும்

     04 January 2021      No Comment



புதுச்சேரியில் பறையிசை ஆட்ட பயிற்சிப்

பட்டறையும் அரங்கேற்றமும்!

புதுச்சேரியில் பள்ளி மாணவ மாணவியருக்கான இரண்டு நாள் பறை இசைப் பயிற்சி முகாம், மார்கழி 18, 2051 / 02.01.2021 அன்று  அரங்கேற்றத்துடன் நிறைவு பெற்றது.

பெண்ணாடம் – திருவள்ளுவர் கலைக்குழு, புதுச்சேரி திருக்குறள் மன்றம் ஆகிய இரு அமைப்புகளின் சார்பில். தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் திரு. இரா.வேல்சாமி தலைமையில் புதுச்சேரி வேலுராம்பட்டு அறிவர் பள்ளியில்  நடைபெற்ற இந்த இரண்டு நாள் முகாமை பெண்ணாடம் – திருவள்ளுவர் கலைக்குழு தோழர்கள் இரண்டு நாட்கள் இங்கேயே தங்கி நடத்தி வைத்தனர்.

திருவள்ளுவர் கலைக்குழு தலைவர் தோழர் தே. இளநிலா தலைமையில் கடந்த 01.01.2020 அன்று காலை தொடங்கிய பயிற்சியைத் திருவாட்டி தெய்சி, திருவாட்டி செல்வி காமராசு ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.

 தொடர்ந்து நேற்று (02.01.2020) இரண்டாம் நாளாகப் பயிற்சி தொடர்ந்து நிலையில், மாலையில் அரங்கேற்ற விழாவுடன் பயிற்சி முகாம் நிறைவுற்றது.

அரங்கேற்ற விழாவில், தமிழ்த்தேசியப்  பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், தொழில் முனைவர் ப. தமிழ்முத்து பராங்குசம், இலட்சுமி உணவளிப்புப் பணியக உரிமையாளர் திரு. முத்துராமன், “குரலற்றவர்களின் குரல்” நிருவாகி திரு. அசோக்குராசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று, பறை இசைப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினர்.

 இரு நாட்கள் பயிற்சி பெற்ற மாணவர்களின் அரங்கேற்றப் பறையிசை ஆட்டத்தைக் கண்டு சிறப்பு விருந்தினர்களும் பொதுமக்களும் பெற்றோர்களும் வியந்து பாராட்டினார்கள். சிறப்பான பயிற்சி அளித்த திருவள்ளுவர் கலைக்குழுவின் தலைவர் தே.இளநிலா, செயலாளர் தி.சின்னமணி, பொருளாளர் சி. பிரபாகரன், செ. செந்தமிழ், எ. ஆதித்தியன் முதலான கலைக்குழு உறுப்பினர்களுக்குச் சிறப்பு விருந்தினர்கள் நூலாடைப் போர்த்திப் பாராட்டினர்.

 பயிற்சிக்கு இடமளித்து உதவிய அறிவர் பள்ளி முதல்வர்  சரோ சா பாபு அவர்களுக்கு நூலாடைப் போர்த்தியும், திருவள்ளுவர் படம் பதித்த நினைவுப்பரிசு  வழங்கியும் திருவள்ளுவர் கலைக்குழு தோழர்கள் பாராட்டினர். நிறைவில், திருவள்ளுவர் கலைக்குழுவின் செயலாளர் திரு. தி. சின்னமணி நன்றி கூறினார்.

 இப்பயிற்சி தொடக்கம்தான் என்றும், தொடர்ந்து புதுச்சேரியில் வாரம் ஒருமுறை பறை இசைப் பயிற்சி வழங்கும் வகையில் தொடர் பயிலரங்கம் நடத்தத் திட்டமிடப்படும் எனறும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு. இரா. வேல்சாமி தெரிவித்துள்ளார்

(பேச – 93454 85214).

 

திருவள்ளுவர் கலைக்குழு=

தொடர்புக்கு : 9629206998 புலனம் : 7639573579

முகநூல் : www.fb.com/Thiruvalluvarkalaikuzhu

காணொலிகள் : youtube.com/ Thiruvalluvarkalaikuzhu

 









சனி, 24 ஆகஸ்ட், 2019

இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு, புதுச்சேரி


அகரமுதல

ஆவணி 14, 2050 சனிக்கிழமை, 31.8.2019 
மாலை 6.00 மணி

இயக்க நுால் (டைனமிக்) அரங்கம்,
துாய தெரேசா (செயிண்ட்தெரேசா ) தெரு, புதுச்சேரி

இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு- எண் 18
போர்க்காண்டத்தின் சில படலங்கள்
தொடர் பொழிவாளர்: முனைவர் க.தமிழமல்லன்
தலைமை :
பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் இரஞ்சித்துக் குமார்
வரவேற்புரை: செயலாளர் நெ.நடராசன்
பாட்டரங்கம் : பாவலர்கள் 
அ.உசேன்,
இரா.வேலாயுதம்,
நெய்தல் நாடன்,
இளவரசிசங்கர்
நன்றியுரை: இரா.சத்தியராசு
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம்-பகுத்தறிவு ஆசிரியரணி

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம், புதுச்சேரி

 அகரமுதல

ஆவணி 04, 2050 புதன்கிழமை 21.8.2019 மாலை 5.00

இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி

பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம்

வரவேற்புரை: இர.இராசு (மண்டலத் தலைவர்) 
தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்) 
முன்னிலை: இரா.சிவா (மாநிலத் திமுக அமைப்பாளர் தெற்கு, புதுச்சேரி)
தலைப்பு : திராவிடம் – நேற்று, இன்று, நாளை – வழக்குரைஞர் இள.புகழேந்தி(திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்) 
தலைப்பு: நிகழ்கால அரசியலில் பெரியாரின் தேவை – முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) 
உரையாற்றுவோர்: அ.மு.சலீம் (மாநிலச் செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, புதுச்சேரி),
இரா. இராசாங்கம் (செயலாளர், மா.பொ.க., புதுச்சேரி), 
தேவ. பொழிலன், முதன்மைச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதுச்சேரி) 
அ.கபிரியேல் (அமைப்பாளர், ம.தி.மு.க., புதுச்சேரி),
அ.பசீர் அகமது (தலைவர், மனித நேய மக்கள் கட்சி, புதுச்சேரி), 
இரா.மங்கையர் செல்வன் (தலைவர், மீனவர் விடுதலை வேங்கைகள், புதுச்சேரி) 
கி.அறிவழகன் (மண்டலச் செயலாளர்), 
இரா.சடகோபன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம், புதுச்சேரி), 
வீர.இளங்கோவன் (மண்டலத் துணைத்தலைவர் திராவிடர் கழகம், புதுச்சேரி), 
அ.எழிலரசி (தலைவர், மகளிரணி, திராவிடர் கழகம், புதுச்சேரி), சிவகாமி சிவக்குமார் (தலைவர், திராவிடர் மகளிர் பாசறை, புதுச்சேரி), 
கு.இரஞ்சித்குமார் (பட்டயக் கணக்காயர், தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி), 
நெ.நடராசன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி),
கி.வ.இராசன் (அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி, புதுச்சேரி)
மாலை 4.30 மணிக்கு இசை நிகழ்ச்சி: புதுவை கே.குமார் வழங்கும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி
நன்றியுரை: ஆ.சிவராசன் (அமைப்பாளர், உழவர்கரை நகராட்சி திராவிடர் கழகம்) 
* குறிப்பு: புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி அவர்களின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத்
தந்தை பெரியார் சிலைக்கு மாலை 4 மணிக்கு மாலை அணிவிக்கப்படும்.

அனைவரும் வருகவருக!

சனி, 13 ஜூலை, 2019

தோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா, புதுச்சேரி

 அகரமுதல

ஆனி 28, 2050 சனி 13.07.2019

மாலை 6.15 மணி

 புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி-11

தோழர் சிங்காரவேலர் பற்றி

மார்க்சிய சிந்தனையாளர்

தோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா

மொழி வாழ்த்து : செல்வி. பிரார்த்தனா கல்யாணி
வரவேற்புரை: திரு.இரா.குமரன் (நிறுவுநர், சம தருமப் புரட்சியாளர் சிங்காரவேலர் சமூக சேவை இயக்கம்.)
முன்னிலை: கோ.சந்திரன், சா.ந.நித்தியானந்தம்
தலைமையுரை: ஏ.சாமிக்கண்ணு (நிறுவுநர், தலைவர், பருவதராச மீனவர் பொது அறக்கட்டளை, விழுப்புரம்.)

சிறப்புரை: இரா.விசுவநாதன் (முன்னாள் அமைச்சர், புதுச்சேரி மாநிலம்)

வாழ்த்துரை: தா.முருகன் (புதுச்சேரி மாநில மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி.),
சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகம்),
பேராசிரியர் முனைவர் செ.பெரியாண்டி

நூல்ஆய்வுரை: முனைவர் அ.பகத்சிங்கு (புதுவைப் பல்கலைக் கழகம்)

ஏற்புரை : பா.வீரமணி (நூலாசிரியர், சென்னை, தமிழக அரசின் சிங்காரவேலர், திருவள்ளுவர் விருதுகளைப் பெற்றவர்)
நிகழ்ச்சித் தொகுப்பு: கலைமாமணி அசோகாசுப்பிரமணியன்
நன்றியுரை : முனைவர் செ.செல்வக்குமாரி

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

உலகத் தமிழ்க்கவிஞர்களின் சங்கமம் 2019, புதுச்சேரி

அகரமுதல


ஆடி 19, 2050 – 04.08.2019

உலக உத்தமர் காந்தியடிகள்

தமிழ்க்கவிஞர்களின் கவிதாஞ்சலி

கல்லாடனார் கல்விக் கழகம், புதுச்சேரி

பங்களிப்புக் கட்டணம் உரூ.500/-
கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் மு.கலைவேந்தன்
நிறுவனர் – தலைவர், உலகத் தமிழ்க்கவிஞர்கள் மா மன்றம்
153, வடக்கு வீதி,  திருவையாறு 613 204, தஞ்சாவூர் மாவட்டம்

வெள்ளி, 1 மார்ச், 2019

பெரியார் பெருந்தொண்டர் – சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மாநாடு

அகரமுதல


பெரியார் பெருந்தொண்டர் – சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மாநாடு


மாசி 19,2050 ஞாயிறு 03-03-2019, 
மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

இடம்: அண்ணா திடல், அண்ணாசாலை, புதுச்சேரி
மாலை 3.00 மணி
கலைமகள் இயல் இசைப் பட்டறை வழங்கும் பறை இசை
மாலை 4.00 மணி: பரபரப்பான பட்டிமன்றம்
தந்தை பெரியார் தொண்டால் அதிகம் பயன்பெற்றோர் – ஆண்களா? பெண்களா?
நடுவர்: புலவர் கோ. சாரங்கபாணி
ஆண்களே! – முனைவர் அதிரடி அன்பழகன், கவிஞர். எழிலேந்தி
பெண்களே! – பேராசிரியர் மு.சு.கண்மணி, வழக்குரைஞர். ம.வீ. அருள்மொழி

மாலை 5.00 மணி மாநாடு தொடக்கம்

வரவேற்புரை: சிவ. வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகம்)
தலைமையுரை: இரா.கமலக்கண்ணன் (சட்ட மன்ற உறுப்பினர், கல்வி – வேளாண்மைத்துறை அமைச்சர்)
முன்னிலை: இரா.சிவா (தெற்கு மாநில தி.மு.க அமைப்பாளர்)
இரா.விசுவநாதன் (மேனாள் அமைச்சர், மூத்த தலைவர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி)
மாநாட்டைத் தொடக்கி வைப்பவர்

வே.நாராயணசாமி (முதலமைச்சர், புதுவை அரசு)

காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு நிறைவுரை

தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்)

முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
இரவு 7 மணி – தீர்மானங்கள் நிறைவேற்றுதல்
சாதி/மத மறுப்பு திருமணம் செய்து கொண்ட இணையர்களைப் பாராட்டிப் பரிசளிப்பு.

பெரியார் பெருந்தொண்டர்களுக்குக் காரை சி.மு. சிவம் நினைவுப் பரிசு வழங்குதல்.

நன்றியுரை: வீ.அழகரசன்