திராவிடர் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திராவிடர் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 மார்ச், 2019

பெரியார் பெருந்தொண்டர் – சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மாநாடு

அகரமுதல


பெரியார் பெருந்தொண்டர் – சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மாநாடு


மாசி 19,2050 ஞாயிறு 03-03-2019, 
மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

இடம்: அண்ணா திடல், அண்ணாசாலை, புதுச்சேரி
மாலை 3.00 மணி
கலைமகள் இயல் இசைப் பட்டறை வழங்கும் பறை இசை
மாலை 4.00 மணி: பரபரப்பான பட்டிமன்றம்
தந்தை பெரியார் தொண்டால் அதிகம் பயன்பெற்றோர் – ஆண்களா? பெண்களா?
நடுவர்: புலவர் கோ. சாரங்கபாணி
ஆண்களே! – முனைவர் அதிரடி அன்பழகன், கவிஞர். எழிலேந்தி
பெண்களே! – பேராசிரியர் மு.சு.கண்மணி, வழக்குரைஞர். ம.வீ. அருள்மொழி

மாலை 5.00 மணி மாநாடு தொடக்கம்

வரவேற்புரை: சிவ. வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகம்)
தலைமையுரை: இரா.கமலக்கண்ணன் (சட்ட மன்ற உறுப்பினர், கல்வி – வேளாண்மைத்துறை அமைச்சர்)
முன்னிலை: இரா.சிவா (தெற்கு மாநில தி.மு.க அமைப்பாளர்)
இரா.விசுவநாதன் (மேனாள் அமைச்சர், மூத்த தலைவர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி)
மாநாட்டைத் தொடக்கி வைப்பவர்

வே.நாராயணசாமி (முதலமைச்சர், புதுவை அரசு)

காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு நிறைவுரை

தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்)

முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
இரவு 7 மணி – தீர்மானங்கள் நிறைவேற்றுதல்
சாதி/மத மறுப்பு திருமணம் செய்து கொண்ட இணையர்களைப் பாராட்டிப் பரிசளிப்பு.

பெரியார் பெருந்தொண்டர்களுக்குக் காரை சி.மு. சிவம் நினைவுப் பரிசு வழங்குதல்.

நன்றியுரை: வீ.அழகரசன்

வியாழன், 28 பிப்ரவரி, 2019

தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 மாலை 3 மணி இடம்: பெரியார் மன்றம், தருமபுரி
தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
அமைப்பு: தருமபுரி, திருப்பத்தூர், ஒசூர், கிருட்டிணகிரி
தலைமை: வீ.சிவாசி (தருமபுரி மண்டலத் தலைவர்)
வரவேற்புரை: கோ.திராவிடமணி (தருமபுரி மண்டலச் செயலாளர்)
முன்னிலை: இளையமாதன் (மாவட்டத் தலைவர், தருமபுரி),
அகிலா எழிலரசன் (மாவட்டத் தலைவர் திருப்பத்தூர்),
பெ.மதிமணியன் (மாவட்டத் தலைவர், கிருட்டிணகிரி),
சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர், ஒசூர்)
தொடக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
கருத்துரை: தஞ்சை பெரியார்செல்வன் (தலைமைக் கழகப் பேச்சாளர்),
ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்),
கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்)
பொருள்: வேலூரில் நடைபெற உள்ள மார்ச்சு 10, 2019 மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு
நன்றியுரை: வண்டி ஆறுமுகம் (மண்டல இளைஞரணிச் செயலாளர்)
ஏற்பாடு: தருமபுரி மண்டலத் திராவிடர்கழகம்.

பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

அகரமுதல

மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 காலை 11 மணி

இடம்: பெருமா அம்மாள் இல்லம், மாரவாடி

பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

தலைமை: ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)

படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை: இளையமாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி),
வீ.சிவாசி (மண்டலத் தலைவர், தருமபுரி),
கோ.திராவிடமணி (மண்டலச் செயலாளர்)
நினைவேந்தல் உரை: வ.முல்லைவேந்தன் (மேனாள் அமைச்சர், திமுக),
 தடங்கம் பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக),
உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்),
கி.கோவேந்தன் (மாநில அமைப்புச் செயலாளர், விசிக),
பி.என்.பி.இன்ப சேகரன் (சட்டமன்ற உறுப்பினர்,திமுக.பென்னாகரம்),
 கோவி.சிற்றரசு (மாவட்டச் செயலாளர், இந்தியத் தேசியக் காங்கிரசு), 
கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்),
எம்.எசு.இராமன் (எ) எழிலன் (மாநிலச் செயற்குழு உறுப்பினர், விசிக),
எசு.தேவராசன் (மாவட்டச் செயலாளர், இ.பொ.க.மா.பொ.க.),
ஏ.குமார் (மாவட்டச் செயலாளர், [இ.பொ.க. (மா.)]
நன்றியுரை: ஊமை. மு.கருணாநிதி (பெங்களூரு)

திங்கள், 19 நவம்பர், 2012

சிறீரங்கத்தில் பிராமணாளும் கிருட்டிண அய்யரும் ஒழிந்ன!

சிறீரங்கத்தில் பிராமணாளும் ஒழிந்தது கிருட்டிண அய்யரும் ஒழிந்தது!

(பிறரும் பின்பற்றட்டும்)

 

14.11.12
சிறீரங்கத்தில் ஒரு திருப்பம்! பிராமணாளும்ஒழிந்தது கிருஷ்ண அய்யரும் ஒழிந்தது!திராவிடர் கழகத்திற்கு அடுத்த கட்ட வெற்றி!

பிராமணாள் என்றும், அய்யர் என்றும் இடம்பெற்றிருந்த பழைய நிலை!
சிறீரங்கத்தில் பிராமணாள் என்று உணவு விடுதி விளம்பரத்தில் எழுதி வைத் திருந்த வருணாசிரம ஆதிக்க உணர்வை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட நட வடிக்கையால் அந்த உணவு விடுதி அந்த இடத்தில் மூடப்பட்ட துடன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் பிராமணாள் என்பதும் கிருஷ்ண அய்யர் என்பதில் உள்ள அய்யரும் நீக்கப்பட்டு விட்டன.
திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த அடுத்த கட்ட வெற்றியாகும் இது.

பிராமணாளும், அய்யரும் நீக்கப்பட்ட நிலையில் இப்போது…
சிறீரங்கம் ரங்கநகர் சாலையில் கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே (ஓட்டல்) என்ற பெயரில் மணி கண்டன் என்ற பார்ப்பனர் நடத்தி வந்தார். திடீ ரென்று பிராமணாள் என்ற சொல்லை விளம்பரப் பலகையில் புகுத்தினார். அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் உள்ள பிராமணாள் என்ற பெயரை அகற்றுமாறு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மணிகண்டன் பார்ப்பனரிடம் வலியுறுத்தப்பட்டது.
மேலும் திருவரங்கம் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத்திற்கு என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் திருவரங்கத்தில் ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டம் நடத்த கழகம் சார்பில் அனுமதி கோரியிருந்தது;
ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது. மூன்று முறை தொடர்ந்து காவல் துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று 4.11.2012 அன்று திருவானைக்காவலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.
போராட்டம் அறிவிப்பு
அப்பொதுக் கூட்டத்தில் பிராமணாள் ஓட் டல் பெயரை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அகற்றுகின்றவரை போராட்ட நடவடிக்கையைக் கழகம் மேற்கொள்ளும். மேலும் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி இப்போராட்டத் திற்கான அறிவிப்பினை வெளியிடுவேன் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருவானைக் காவல் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.
நள்ளிரவில் அகற்றம்
இந்நிலையில் அந்த உணவு விடுதி கட்டடத்தின் உரிமையாளர் (பாவை டவர்ஸ்) ராஜா, மணி கண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து (6.11.2012) நள்ளிரவு திடீரென்று கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே உணவு விடுதியை மணிகண்டன் முழுமையாக கடையை இழுத்து மூடி காலி செய்தார். பிராமணாள் கபே பெயர்ப் பலகையும் அகற்றி எடுத்துச் சென்றார். இப்பொழுது வேறு ஒரு இடத்தில் அவரே உணவு விடுதியைத் திறந்துள்ளார். பெயர்ப் பலகையில் இடம் பெற்றிருந்த பிராமணாள் என்ற பெயரும், கிருஷ்ண அய்யர் என்ற பெயரில் இருந்த அய்யரும் நீக்கப்பட்டு விட்டன. திராவிடர் கழகத் திற்குக் கிடைத்த சிறப்பான வெற்றியாகும் இது.
————————”விடுதலை” 14-11-2012
(பார்வையிட்டவர்கள் 21 பேர்)