உத்தரவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உத்தரவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 அக்டோபர், 2013

அரசு நிறுவனங்களைத் தற்காலிகமாக மூட அமெரிக்கா உத்தரவு

அரசு நிறுவனங்களை த் தற்காலிகமாக மூட அமெரிக்கா உத்தரவு

Comment (4)   ·   print   ·   T+  
அமெரிக்காவில் அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒபாமா கேர் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஒபாமாவின் சுகாதார நலத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குடியரசுக்கட்சியினர் அதிகமுள்ள பிரதிநிதிகள் சபையில் ஒபாமாவின் இத்திட்டத்திற்கான நிதியை நிறுத்திவைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவும் முடிந்தது. 

17 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன
17 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன
வாஷிங்டன், அக். 1–
பொருளாதார சிக்கல் காரணமாக அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நிறுவனங்கள் மூடப்படுகின்றன.
அமெரிக்காவில் அதிபர் ஒபாமா அரசு 2–வது முறையாக பொறுப்பு ஏற்றதில் இருந்து நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதற்கிடையே வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதன் உச்சகட்டமாக பட்ஜெட்டுக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் நிதி செலவினம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒபாமா புதிய சுகாதார திட்டம் கொண்டு வந்தார். அதன்படி அமெரிக்கர்கள் அனைவருக்கும் தனியார் நிறுவனங்கள் மூலம் சுகாதார இன்சூரன்ஸ் திட்டம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதற்கு அதிக நிதி ஒதுக்கியதால்தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்காததால் ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
இதனால் அரசு நிறுவனங்களை மூட ஒபாமா அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல்கட்டமாக அரசு ஊழியர்களை சம்பளம் இல்லாத விடுமுறையில் செல்ல உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால், 7 லட்சத்து 85 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இவர்களுக்கு இந்த மாத சம்பளம் மட்டும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே அத்தியாவசிய தேவையான சுகாதாரம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பணியில் தொடர்ந்து நீடிப்பார்கள்.
அரசு நிறுவனங்கள் மூடப்படுவதால் வாரத்துக்கு 100 கோடி டாலர் வரை இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற நிலை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு பில் கிளிண்டன் ஆட்சி காலத்தில் ஏற்பட்டது.
அப்போது அரசு நிறுவனங்கள் 21 நாட்கள் மூடிக்கிடந்தன. தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியில் அமெரிக்காவில் தேசிய பூங்கா, தேசிய சரணாலயம், இலவச அருங்காட்சியகம் போன்றவை மூடப்படுகின்றன.
அதே நேரத்தில் பாஸ்போர்ட் அலுவலகம், சுகாதார அலுவலகம், வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அலுவலகம், போலீஸ் நிலையங்கள், கோர்ட்டுகள் மற்றும் விமான நிலையங்கள் தொடர்ந்து இயங்கும்.
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்காக எனது பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் இச்சம்பவத்துக்காக யாருடனும் பேச்சுவார்த்தைக்கு உடன்படமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இந்தியா உள்பட உலக நாடுகளையும், பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

செப்டம்பர்19-இல் நடிகை டி.பி.இராசலட்சுமி நூற்றாண்டு விழா: முதல்வர் உத்தரவு

செப்டம்பர்19-இல் நடிகை டி.பி.இராசலட்சுமி நூற்றாண்டு விழா: முதல்வர்  உத்தரவு

தென்னிந்தியாவின் முதல் நடிகை மற்றும் பெண் இயக்குநர் டி.பி. ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழாவை செப்டம்பர் 19-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் 1911-ஆம் ஆண்டு பிறந்தவர் டி.பி.ராஜலட்சுமி. தனது இளமைக்காலம் முதலே நாடக்குழுவில் நடித்து வந்த ராஜலட்சுமி, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "பவளக்கொடி', "கோவலன்' ஆகிய நாடகங்களில் கதாநாயகியாக நடித்து பேரும் புகழும் பெற்றார். தனது 18-ஆம் வயதில்  "கோவலன்' என்னும் திரைப்படத்தில் மாதவி வேடத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் முதன் முதலாக கால் பதித்தார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான "காளிதாஸ்' திரைப்படத்தில் டி.பி.ராஜலட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜம் டாக்கீஸ் என்ற தனது சொந்த பட நிறுவனம் மூலம் "மிஸ் கமலா' என்ற திரைப்படத்தை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
தன்னுடன் திரைப்படங்களில் நடித்த டி.வி.சுந்தரம் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 20 ஆண்டுகாலம் திரைப்படத்துறையில் புகழ் பெற்று விளங்கிய இவர் 1964- ஆம் ஆண்டு காலமானார். ஒரு நடிகையாக மட்டுமின்றி இயக்குநர், எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரராக விளங்கும் டி.பி.ராஜலட்சுமிக்கு செப்டம்பர் 19-ஆம் தேதி நூற்றாண்டு விழா நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

புதன், 11 செப்டம்பர், 2013

நளினி மீதான வழக்கை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

நளினி மீதான வழக்கை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை குற்றவாளியான நளினியின் அறையில் கடந்த 2010ம் ஆண்டு மொபைல் போன் கைப்பற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை ரத்துசெய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனுவை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

மிதியூர்திகளுக்குப் புதிய கட்டணம் : முதல்வர்

இதைவிட  ஒப்பு நோக்கில், வாடகை ஊர்திகளின் கட்டணம் குறைவாகவே உள்ளது. அழைப்பூர்திகளை வாடகைக்கு அமர்த்தும் பொழுது 5 நிமையத்திற்கு உரூ.4 வீதம், மணிக்கு 48 உரூ. மட்டும் வாங்குகின்றனர்.

பொதுவாக இக்கட்டண விகிதத்தைப் பின்பற்றினாலே ஊர்திகள் வசதி வாய்ப்பின் அடிப்படையில் குறைவாக உள்ளமையால், கை வண்டி, குதிரை  வண்டிகளை ஒழித்ததுபோல்  மிதியூர்திகளை  ஒழித்து விட்டு ஊர்தி வசதிகளையே ஏற்படுத்தித் தரலாம்.  அல்லது ஒருவருக்கு ஒன்றுக்குமேல் மிதியூர்தி உரிமம் தருவதில்லை என அரசு கடைப்பிடித்தால், இப்பொழுது வரையறுத்துள்ளதைவிடக் குறைந்த கட்டணத்திலேயே வாடகை மிதியூர்திகள் கிடைக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



++++++++++

சென்னையில் மிதியூர்திகளுக்குப் புதிய கட்டணம்  நடைமுறை: முதல்வர் உத்தரவு


சென்னையில் ஆட்டோகளுக்கான குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோமீட்டருக்கு ரூ.25 எனவும், ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.12 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட கட்டண விகிதம் ஞாயிற்றுக்கிழமையே (ஆக.25) அமலுக்கு வந்துள்ளது. புதிய கட்டண விகிதத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்டோபர் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னையில் உள்ள 77 ஆயிரம் ஆட்டோக்களுக்கும் ஜி.பி.எஸ். வசதி, டிஜிட்டல் பிரிண்ட்டருடன் கூடிய மீட்டர்கள் ரூ.80 கோடியில் இலவசமாகப் பொருத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோக்களில் பயணிப்போர் கூடுதலாக 50 சதவீத கட்டணத்தை இரவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். காத்திருப்புக் கட்டணம் 5 நிமிஷங்களுக்கு ரூ.3.50 என்ற வீதத்தில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. இதில் சென்னை நகரத்தில் மட்டும் 71 ஆயிரத்து 470 ஆட்டோக்கள் உள்ளன. இந்த ஆட்டோக்களுக்கான கட்டணம் 2007-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது.
எரிபொருள் விலை, உதிரி பாகங்கள் விலை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சம்பளம் ஆகியவை பல மடங்கு உயர்ந்துவிட்டதால் இந்தக் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களும், நுகர்வோர் அமைப்புகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது.
இதற்கிடையில், ஆட்டோக்களுக்கான கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான அனைத்து காரணங்களையும் பரிசீலித்து முடிவு எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, போக்குவரத்து அமைச்சர் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள், நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் சென்னையில் ஆகஸ்ட் 10-ல் கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஆக.22-ம் தேதி நடைபற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் விரிவான விவாதத்துக்குப் பிறகு பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பயனடையும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கான புதிய கட்டண நிர்ணயம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகித அட்டையை செப்டம்பர் 15-க்குள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது அந்த அலுவலகத்தால் நடத்தப்படும் சிறப்பு முகாம் மையத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
பயணிகளுக்கு ரசீது: சென்னையில் இயங்கி வரும் ஆட்டோக்களில் இடத்தைக் காட்டும் கருவிகள், அதாவது, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய டிஜிட்டல் பிரிண்ட்டர்கள் பொருத்தப்பட்ட ஆட்டோ மீட்டர்கள் ரூ.80 கோடி செலவில் இலவசமாகப் பொருத்தப்படும். இதன் மூலம் பயணித்த தூரம் மற்றும் அதற்கான கட்டணம் அடங்கிய ரசீது பயணிகளுக்கு வழங்கப்படுவதோடு மட்டுமில்லாமல், பயணிகளிடமிருந்து சரியான கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதிசெய்யப்படும். மேலும், ஆட்டோக்களின் இயக்ககங்களின் கண்காணிக்கவும் வழிவகை செய்யப்படும்.
ஆபத்துகால பட்டன்: ஆட்டோ மீட்டரில் புதிய பட்டனும் பொருத்தப்படும். ஆட்டோவில் பயணிப்போருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால், ஆட்டோ மீட்டருடன் பட்டனை (டஹய்ண்ஸ்ரீ ஆன்ற்ற்ர்ய்) பயணிகள் அழுத்தலாம். இதன்மூலம், பயணிகள் ஆபத்தில் இருப்பது கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவந்து, அதனடிப்படையில் காவல்துறையினர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம், வாகன அனுமதி ரத்து: ஆட்டோக்களின் இயக்கங்களை போக்குவரத்துத் துறையும், காவல்துறையும் தீவிரமாகக் கண்காணிக்கும். மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். இதுதவிர, வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமில்லாமல், அதன் இயக்கம் முடக்கப்பட்டு, அனுமதி ரத்து செய்யப்படும்.
பொதுவான புகார் எண்: ஆட்டோவில் பயணிப்போர் புகார் அளிக்க ஏதுவாக, பொதுவான புகார் எண் உருவாக்கப்பட்டு, அந்த தொலைபேசி எண் ஒவ்வொரு ஆட்டோவிலும் பிரதானமாக எழுதப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
புதிய கட்டண விவரம்...
முதல் 1.8 கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ.25 - ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.12
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோக்களில் பயணிப்போர் இரவுக் கட்டணமாக கூடுதலாக 50 சதவீதத்தைச் செலுத்த வேண்டும்.
காத்திருப்புக் கட்டணம் ஒவ்வொரு 5 நிமிஷத்துக்கு ரூ.3.50-- ஒரு மணி நேரத்துக்கு ரூ.42
புதிய கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்.15 வரை அவகாசம்.
ஆட்டோ பயணிகளுக்கான பொதுவான புகார் தொலைபேசி எண் உருவாக்கப்படும்
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆட்டோ ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதோடு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அனுமதி ரத்து செய்யப்படும்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

இந்து என்றால் திருடன்: கருணாநிதி விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவு

ஒரு சொல் காலமாற்றத்தில் மேம்பட்ட பொருளையோ கீழான பொருளையோ அடைவதே  உலக மொழிகளின் இயற்கை. தாசி என்றால் தொண்டு புரியும் பெண்ணைக்குறித்து, அடுத்துப் பணிமகளைக் குறித்தது. இன்று விலை மகளைக் குறிக்கிறது. இன்று, பழம் பொருள் அடிப்படையில் ஒருவர், தன் வீட்டுப்  பணிப்பெண்ணைத் தாசி என்று கூறிவிட முடியாது. இந்து என்பதற்குக் கரி, கரடி, சந்திரன் ; கருப்பூரமரம் ; மிருகசீரிடம் ; இந்துப்பு ; சிந்துநதி ; இந்து மதத்தான், கௌரி பாடாணம் ; எட்டி  எனப் பல பொருள்கள் இன்றும் உள்ளன. ஆனால், இந்து என்ற பெயர்க்காரணம் திருடன் என்ற பொருளில் வந்ததாகவே பழம் நூல்கள் கூறுகின்றன. கழக வெளியீட்டின் வினா-விடை நூல் ஒன்றிலும் அவ்வாறுதான் குறிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று உண்மையைக் கலைஞர் சொல்லியிருந்தால் தப்பில்லை. ஆனால், இதன் அடிப்படையில் இந்துக்கள் அனைவரும் திருடர்கள் என்று சொல்லியிருந்தால் குற்றம்தான். இந்துக்களிடையே வாழ்ந்து கொண்டு அவ்வாறு சொல்லியிருக்க மாட்டார் என எண்ணுகிறேன்..

இந்து என்றால் திருடன் என்று இழிவாகப் பேசிய கருணாநிதி 4 நாட்களுக்குள் விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவு

இந்து என்றால் திருடன் என்று இந்துக்களை இழிவாகப் பேசிய திமுக தலைவர் இன்னும் 4 நாட்களுக்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு தனிப்பட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் வேத அறிவியல் மையத்தின் சார்பில் பி.ஆர்.கௌதமன் ஒரு மனுவை தாக்கல் செய்தார். கடந்த 24.10.2002 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்து என்றால் திருடன் என்று கருணாநிதி பேசியிருந்தார். இது இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் படி இருக்கிறது என்று, இதற்கு தகுந்த நடவடிக்கை கோரி மறுநாள் 25.10.2002 அன்று மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. மேலும், இது குறித்து மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகியபோது, உயர் நீதிமன்ற உத்தரவின் படி 6.1.2006இல் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரின் அடிப்படையில் அவரை அழைத்து விசாரிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ காவல் துறையினர் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
எனவே உயர்நீதிமன்ற உத்தரவின்படி பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரின் படி கருணாநிதியிடம் விளக்கம் கேட்கவும், அவர் மீதான விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் தனது மறு மனுவில் கௌதமன் கூறியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது இன்று காவல் துறைக்கு (காவல்துறை ஆணையர், மாம்பலம் காவல் துறை ஆய்வாளர் ஆகியோருக்கும்)நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கருணாநிதிக்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கலாம் என்றும் உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான அடுத்த விசாரணையை வரும் செவ்வாய்க் கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால், வரும் 4 நாட்களுக்குள் கருணாநிதி உரிய விளக்கம் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

வியாழன், 10 ஜனவரி, 2013

தருமபுரி கலவர வழக்கு :உரூ.7.32 கோடி தர உத்தரவு

தருமபுரிக் கலவர வழக்கு : உரூ.7.32 கோடி இடைக்காலப் பொருளுதவி தர உத்தரவு



தருமபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.7.32 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 7ம் தேதி காதல் திருமணத்தால் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து 3 கிராமங்களில் உள்ள 326 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 326 குடும்பங்களுக்கு 2 வாரங்களில் நிவாரண நிதி அளிக்க வேண்டும். அதன்படி, மொத்தம் ரூ.7.32 கோடியை இடைக்கால நிவாரணமாக அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
வழக்குரைஞர் செங்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நலன் மனுவில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், தருமபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனு நீதிபதிகள் எலிபி தர்மாராவ், அருணா ஜெகதீசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர்கள் அளித்த உத்தரவில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அமைப்புகள் மதிப்பிட்டதன் அடிப்படையில் 326 குடும்பங்களுக்கு ரூ.7  கோடியே 32 லட்ச ரூபாயை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இடைக்கால நிவாரணமாக அளிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் தவிர, மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவை அமைத்து 2 வார காலத்துக்குள் இடைக்கால நிவாரணத் தொகையை 326 குடும்பங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், அடுத்த வழக்கு விசாரணை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதன், 5 டிசம்பர், 2012

10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடக் கருநாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடக் கருநாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கர்நாடக அரசு காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக அரசு காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றிலிருந்து ஞாயிறு வரை பத்தாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட வேண்டும்.
நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக கர்நாடக தரப்பு இணைந்த காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்.
தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு எவ்வளவு நீர் தேவைப்படும் என்று கணக்கிட்டு இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
இந்த முடிவை திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவினை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட எத்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்
- இவ்வாறு உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதன், 14 நவம்பர், 2012

தீவரவாதி என அவதூறு செய்தி: இளைஞருக்கு க் , கூகுள் நிறுவனம் உரூ. 1 கோடி வழங்க உத்தரவு

தீவரவாதி என அவதூறு செய்தி: இளைஞருக்கு க் , கூகுள் நிறுவனம் உரூ. 1 கோடி வழங்க உத்தரவு
தீவரவாதி என அவதூறு செய்தி: வாலிபருக்கு, கூகுள் நிறுவனம்
ரூ. 1 கோடி வழங்க உத்தரவு
சிட்னி, நவ. 14-

தீவிரவாதி என அவதூறாக செய்தி வெளியிட்டதால் வாலிபருக்கு 'கூகுள்' நிறுவனம் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் மிலோரத் டிரிகுல்ஜா. இவர் கேளிக்கை மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவருக்கு மெல்போர்ன் நகரில் உள்ள தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு 'கூகுள்' இணைய தள நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதனால் அவரது தொழில் முடங்கியது.

இதை எதிர்த்து அவர் விக்டோரியாவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடைபெற்றபோது, ஏதோ தவறுதலாக இது போன்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இது வெளியிடப்படவில்லை என கூகுள் நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் அதை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மறுத்து விட்டார். அவதூறு செய்தி வெளியிட்டதற்காக மிலோரட் டிரிகுல் ஜாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தர விட்டார்.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

அரசின் மதுக் கடைகளை மூட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- Tamac : supreme court verdict

அரசின் மதுக் கடைகளை மூட முடியாது:  உச்ச நீதிமன்றம்  அதிரடி உத்தரவு
 தினமலர்

புதுடில்லி : தமிழக அரசு நடத்தும், "டாஸ்மாக்' மதுபான கடைகளை மூட வலியுறுத்தி, "டிராபிக்' ராமசாமி தொடர்ந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் நேற்று, தள்ளுபடி செய்தது.

சென்னையைச் சேர்ந்த, "டிராபிக்' ராமசாமி, சென்னை ஐகோர்ட்டில், ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "தமிழக அரசே, "டாஸ்மாக்' என்ற பெயரில், மதுபான கடைகளைத் திறந்து, பொதுமக்களுக்கு, மதுபானங்களை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்' என, கோரியிருந்தார்.அந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், அவர், பொதுநலன் கோரும் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு, நீதிபதிகள், டி.கே.ஜெயின் மற்றும் மதன் லோகர், ஆகியோர் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், எம்.என்.கிருஷ்ணமணி மற்றும் ராஜா ராமன் ஆஜராகினர்.

மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: அரசியல் அமைப்புச் சட்டத்தின், பிரிவு 47ஐ மேற்கோள் காட்டி, "டிராபிக்' ராமசாமி தொடர்ந்துள்ள வழக்கு, தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசின் கொள்கைக்கு எதிராக, பொதுமக்களின் உடல் நலத்தைக் கெடுக்கும் விதத்தில், அரசே, கடையைத் திறந்து, மதுபானம் விற்கிறது என்பது மனுதாரரின் வாதம்.அரசின் கொள்கை படி, நாம் சென்றால், அரசு ஊழியர்கள் ஒருவர் கூட, மதுபானம் அருந்தக் கூடாது. அவ்வாறு செய்ய முடியுமா? அந்த விதிமுறைகள், பின்பற்ற வேண்டியவற்றைக் கூறுகின்றன; மது விலக்கு பற்றி கூறவில்லை.

அரசு ஊழியர்கள் யாரும் மதுபானம் அருந்தக் கூடாது என்ற விதியை, நடைமுறை படுத்த முடியுமா? அவ்வாறு செய்தால், பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படத் தான் முடியுமா? ஆகவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.மதுபானம் அருந்துவதால், ஏராளமானோர் இறப்பதாக, மனுதாரர் கூறுகிறார். அதை விட, தினமும், சாலைகளில் நடக்கும் விபத்துகளில் ஏராளமானோர் இறக்கின்றனர். அவர்கள் மீது மனுதாரர் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.


சனி, 20 நவம்பர், 2010

வருவாய் அலுவலர்களுக்கு வாகன எரிபொருள் அளவு அதிகரிப்பு:

பிற துறையினருடன் ஒப்பிடுகையில் வருவாய்த்துறையினருக்கு மிகுதியான பதவி உயர்வுகள் குறைந்தகால அளவிலலேயே கிடைக்கின்றன. பதவிப் பெயரை மாற்றுவதன் மூலம் தனித்துவம் உள்ளதாகக் கூறி ஊதிய அளவீட்டில் உயர்வு போன்ற நன்மைகள்  இத்துறைக்கு மட்டும் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. பதவிப் பெயர் மாற்றம் தவறானது. அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
வருவாய் அலுவலர்களுக்கு வாகன எரிபொருள் அளவு அதிகரிப்பு: கருணாநிதி உத்தரவு

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=334426&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%u0bb5%u0bb0%u0bc1%u0bb5%u0bbe%u0baf%u0bcd+%u0b85%u0bb2%u0bc1%u0bb5%u0bb2%u0bb0%u0bcd%u0b95%u0bb3%u0bc1%u0b95%u0bcd%u0b95%u0bc1+%u0bb5%u0bbe%u0b95%u0ba9+%u0b8e%u0bb0%u0bbf%u0baa%u0bca%u0bb0%u0bc1%u0bb3%u0bcd+%u0b85%u0bb3%u0bb5%u0bc1+%u0b85%u0ba4%u0bbf%u0b95%u0bb0%u0bbf%u0baa%u0bcd%u0baa%u0bc1%3a+%u0b95%u0bb0%u0bc1%u0ba3%u0bbe%u0ba8%u0bbf%u0ba4%u0bbf+%u0b89%u0ba4%u0bcd%u0ba4%u0bb0%u0bb5%u0bc1ன்னை, நவ. 19: வருவாய்த் துறை அலுவலர்களுக்கு வாகன எரிபொருள் அளவை அதிகரித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:வருவாய்த் துறையில் பணியாற்றும் வருவாய்க் கோட்டாட்சியரின் வாகனத்துக்கு இப்போது மாதந்தோறும் 115 லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. இது, 165 லிட்டராக உயர்த்தப்படுகிறது. மேலும், வட்டாட்சியரின் வாகனத்துக்கு இப்போது 90 லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. அது, 140 லிட்டராக அதிகரிக்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு  1.25 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.உதவியாளர்கள்: வருவாய்த் துறையில் பணிபுரியும் ""இளநிலை உதவியாளர்'' பதவியின் பெயர், இனி ""இளநிலை வருவாய் உதவியாளர்'' என்றும், ""உதவியாளர்'' என்ற பதவியின் பெயர் ""வருவாய் உதவியாளர்'' என்றும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்றும் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.