திங்கள், 30 ஏப்ரல், 2012

அறநெறிப் பாடல் பயிற்சிப்பட்டறை


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரும் ஓம்பப் படும்

தமிழ்க்காப்புக்கழகம்

அறநெறிப் பாடல் பயிற்சிப்பட்டறை

சித்திரை 21 முதல் வைகாசி 5 முடிய,  2043
மே 3 முதல் மே 18 முடிய, 2012
காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை
இடம் : சாந்தோம் மேனிலைப்பள்ளி, மயிலாப்பூர்,சென்னை 600 004



சிறுவர்களிடம் ஒழுக்கஉணர்வு ஓங்கவும்
நினைவாற்றல் பெருகவும்
கல்வித்திறன் மேம்படவும்

 திருக்குறள் முதலான நீதி நூல்களில் உள்ள பாடல் அடிகள்
 12 அகவை (வயது) வரை உள்ள  சிறுவர் சிறுமியருக்குப் பயிற்றுவிக்கப்படும்.
தமிழ் எழுதப்படிக்கத் தெரியாதவர்களும் பங்கு பெறலாம்.
 பயிற்சிக்குக் கட்டணமில்லை.
எனினும் பதிவுக் கட்டணம் உரூபாய் 25/மட்டும்
பயிற்சி நிறைவில் அனைவருக்கும் மேடை வாய்ப்பு வழங்கிச் சான்றிதழ்கள் வழஙகப் பெறும்.
 பதிவு மே 3 அன்று காலை 7.30 மணிக்குச் சாந்தோம் பள்ளியில் மேற்கொள்ளப் பெறும்.
முன்பதிவு :   ஒருங்கிணைப்பாளர் திரு நா.மோகன்ராசு ; பேசி 95970 03596

சிறுவர் சிறுமியர் அறவாணர்களாகவும் அறிஞர்களாகவும் திகழ
அறநெறிப்பாடல் பயிற்சிப் பட்டறைக்கு அனுப்பி வைக்குமாறு
பெற்றோர்களையும் ஆசிரியப் பெருமக்களையும் அன்புடன் வேண்டுகின்றோம்.

அரு.வள்ளியப்பன்                                           இலக்குவனார் திருவள்ளுவன்
செயலர்                                                      தலைவர்
(பேசி 98840 07711)                                            (பேசி 98844 81652)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக