சொல்கிறார்கள் http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93
பலவீனம்,பயம்வேண்டாம்!
சங்கர், சமூக ஆர்வலர் - சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம்: வாழ வேண்டும் என்பதற்கு, 10 காரணங்கள் இருந்தாலும், சாக வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து விட்டால், மனம் அந்த ஒற்றை முடிவைத் தான் நோக்கும். இரட்டை மன நிலை, நொடிப் பொழுது முடிவு, வழி தேடாத குறுகிய பார்வை... இப்படியான சூழல்கள் தான், இந்த ஒற்றை முடிவை தீர்மானிக்கின்றன.இவற்றை, இளம் பருவத்தினர் கடந்து போகக் கூடிய வாய்ப்பை, அவர்களை சார்ந்தவர்கள் விதைக்க வேண்டும்.ஆண்களில், 30 - 45 வயதுக்கு உள் ளானவர்கள் தான், அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு, வருமானம், வேலை மாற்றம், குடும்பம், கடன் என, தற்கொலைத் தூண்டுதலுக்கான சில பொதுவான காரணங்கள் அமைகின்றன.அதுவே, பெண்களில், 15 - 29 வயது வரையிலானவர்களே அதிகம். பருவ மாற்றம், படிப்பு, காதல், திருமணம், உறவுமுறை, குடும்பப் பொறுப்பு, குழந்தை வளர்ப்பு என்று, அந்த இடைப்பட்ட வயதுக்குள், அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புகள் ஏராளம்.தொடர் பரிமாணங்களால், அந்தச் சூழலில், ஒரு பெண் பகிர்வையும், அதன் வழியே தன்னை பலப்படுத்திக் கொள்ளவுமே முயற்சிக்க வேண்டியிருக்கும்.இத்தகைய சூழலில், அவர்களை பலவீனப்படுத்துவது, பயத்துக்கு ஆளாக்குவது போன்ற செயல்களில், யாரும் ஈடுபடக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக