செவ்வாய், 1 மே, 2012

விருப்பத்துடன் உழைத்தால் வெற்றி உறுதி.


இஷ்டப்பட்டு செய்யுங்கள்!

மின்னணு பொறியியல் துறையில் பி.இ., பட்டம் பெற்று, மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சதீஷ்குமார்:வங்கிக் கடன் பெற்று மின்னணு பொறியியல் படித்தேன். படிப்பு முடிந்தவுடன் வேலை தேடி சென்னையை வலம் வந்தேன். இரண்டு மாதங்கள் தேடியும் வேலை கிடைக்காததால், மனம் சோர்ந்து போனேன். ஒரு நாள் மெரீனா கடற்கரைக்குச் சென்று விட்டு திரும்பும் வழியில், மீன் இறக்குமதி வணிகத்தைக் கண்டேன். இருளில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கைப் பயணத்தில், ஒரு ஒளியைக் காட்டியது போல் நடந்தது அந்நிகழ்வு. இன்று என் வாழ்க்கையையே அது, வெளிச்சத்தின் பாதையில் வழி நடத்துகிறது.என் சொந்த ஊரான ராமேஸ்வரம் கடல் சார்ந்த பகுதியாக இருப்பதால், அங்கு மீன் பிடித் தொழில் தான் முதன்மைத் தொழில். எனவே, ராமேஸ்வரத்தில் இருந்து மீன்களை வாங்கி, சென்னையில் விற்கலாம் என நினைத்தேன். முதலீடே இல்லாமல், மீன் விற்பனைத் தொழிலைத் தொடங்கியதும், அதில் காலூன்ற கடுமையாக உழைக்க வேண்டி வந்தது. மாலை, 4.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் மீன்களை ஏற்றிச் சென்று, அதிகாலை, 6.30 மணிக்கெல்லாம், சென்னை எழும்பூரை அடைவேன்.பின், அங்கிருந்து லைட்ஹவுஸ் வரை சென்று, மீன் விற்பனையை முடித்து விட்டு, மீண்டும் மாலை, 5 மணிக்கு, சென்னையில் இருந்து ரயிலில் ஏறி, அதிகாலை, 5.30 மணிக்கு ராமேஸ்வரம் அடைவேன். என் தூக்கம் முழுவதும் ரயில் பயணங்களில் தான். மூன்று மாத கடுமையான உழைப்பிற்குப் பின், தற்போது நான் சொந்தமாக ஒரு டெம்போ வாங்கியுள்ளேன். இந்த டெம்போ, என் தொழிலுக்கு சற்று உதவியாக உள்ளது. தற்போது, நான் ஒரு பொறியாளர் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்கிறேன்.வேலையில் நல்ல வேலை, கெட்ட வேலை என, கவுரவம் பார்த்தால், நிச்சயம் நல்ல நிலைக்கு வர முடியாது. எந்த வேலையானாலும், இஷ்டப்பட்டும், கடின உழைப்புடனும் செயல்பட்டால், வெற்றி நிச்சய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக